எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

புதுடில்லி, செப்.5 பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசே காரணம் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரசு கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் குற்றம்சாட்டி யுள்ளார்.

இதுகுறித்து சுட்டுரையில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டி ருப்பதாவது:

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பது தவிர்க்க இயலாத ஒன்றாகும். இதற்கு, பெட்ரோல், டீசல் மீதான அதிக வரி விதிப்புகளே காரணமாகும். இந்த வரிகளை குறைத்தால், பெட்ரோல், டீசல் விலை தானாக குறைந்து விடும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் மீது மத்திய அரசு குற்றம்சாட்டுவது, போலியான வாதமாகும். நாட்டில் உள்ள மொத்த மாநிலங்களில், 19 மாநிலங்களில் பாஜகதான் ஆட்சி யில் உள்ளது. இதையே பாஜக மறந்து விட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முடி வுக்கு கட்டுவதில், மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் பெட்ரோல்-டீசலை கொண்டு வர வேண்டும். ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை உடனடியாக கொண்டு வர வேண்டும் என்று காங்கிரசு கட்சி வலியுறுத்துகிறது என்று அந்தப் பதிவுகளில் ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வரு கிறது. அதே நேரத்தில், பன் னாட்டு சந்தையில் கச்சா எண் ணெயின் விலை அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியா வில் பெட்ரோல், -டீசல் விலை முன்னெப் போதும் இல்லாதபடி, வரலாறு காணாத அளவுக்கு தற்போது அதிகரித்துள்ளது.