எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பார்மர், செப்.6  இராஜஸ்தான் மாநில பா.ஜ.க. முதல்வர் வசுந்தரா ராஜ சிந்தியாவை எதிர்த்து அவரது கட்சிக்குள்ளேயே பெரும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. மத்திய பா.ஜ.க. ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சின்காவின் மகனும், தற்சமயம் சியோ சட்டமன்ற பா.ஜ.க. உறுப்பினருமான மன்வேந்திரசிங் பா.ஜ.க. முதல்வரை எதிர்த்து போர்க்கொடி தூக்கியுள்ளார். வரவிருக்கின்ற சட்டமன்ற பொது தேர்தலுக்கு முன்னர் முதலமைச்சர் வசுந்தரா ராஜ சிந்தியா தொடங்கவுள்ள ராஜஸ்தான் கவுரவ யாத்திரை'யில் மன்வேந்திரசிங் கலந்து கொள்வதை தவிர்த்து விட்டார். அதற்குப்பதிலாக செப்டம்பர் 22இல் சுவாபிமான் ரேலி' (சுயமரியாதைப் பேரணி) நடத்திட உள்ளதாக தெரிவித்து உள்ளார். இராஜஸ்தான் மாநிலத்தில் ராஜபுத்திரர்களின் ஆதரவினை, சுயமரியாதைப் பேரணிக்குப் பெற்றிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ராஜபுத்திர சமுதாயத்தினர் மாநிலத்தை ஆளும் பா.ஜ.க.வின் மீது பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் நகரில் நடைபெறவுள்ள சுயமரியாதைப் பேரணிக்கு பெரும் ஆதரவு திரட்டப்பட்டு வரு கிறது. பேரணியினை விளம்பரப் படுத்திடும் பதாகைகளில், சுவரொட்டிகளில், எங்களது சுயமரியாதையினை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்' எனும் வாசகம் இடம் பெற்றுள்ளது. சுய மரியாதைப் பேரணி நடைபெற்றவுடன் மன்வேந்திரசிங் பா.ஜ. கட்சியினை விட்டு விலகிவிடுவார் என்ற கருத்தும் நிலவுகிறது.


மாணவி சோபியா கைது

நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளது: காங்கிரசு கண்டனம்

புதுடில்லி, செப்.6 தூத்துக்குடி விமானத்தில் பாரதீய ஜன தாவுக்கு எதிராக முழக்கமிட்டு, அந்தக் கட்சியின் தமிழக தலைவர் தமிழிசையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவி சோபியா கைது செய்யப்பட்ட விவகாரம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதை காங்கிரசு கட்சி, நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை இருப்பதாக கூறி கடுமையாக சாடியது.

இதுபற்றி அந்த கட்சியின் மூத்த தலைவர் மணிஷ் திவாரி, டில்லியில் நேற்று கருத்து தெரிவிக்கையில், இது அறிவிக்கப்படாத அவசர நிலை இல்லை என்றால், இந்த சூழ்நிலையை நீங்கள் என்னவென்று அடையாளப்படுத்துவீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

மேலும் அவர் கூறும்போது, தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற விமானத்தில் நடந்து இருப்பது, கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்தும் உரிமை மீதான தாக்குதல் மட்டுமல்ல; நமது அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதலும் மட்டுமல்ல. இது இந்திய அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல்; ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும் குறிப்பிட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner