எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, செப்.6 கருநாடக மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசு -ஜே.டி.எஸ். கூட்டணி பெரும் பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்ட மாக இந்த தேர்தல் பார்க்கப் பட்டதால் பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த தேர்தல் முடிவு குறித்து கருநாடக முதல் அமைச்சர் குமார சாமி கூறியதாவது:-

வழக்கமாக நகர் பகுதி களில் பாரதிய ஜனதா தான் அதிக இடங்களில் வெற்றி பெறும். ஆனால் இந்த தேர் தலில் அதிக இடங்களில் காங் கிரசு -ஜே.டி.எஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

காங்கிரசு மற்றும் ஜே.டி.எஸ். கூட்டணி மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது என் பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 2013ஆ-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசு 1960 இடங்களில் வெற்றி பெற் றது. பாரதிய ஜனதா மற்றும் ஜே.டி.எஸ். கட்சிகள் தலா 905 இடங்களில் வெற்றி பெற்றன.

தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசு கட்சி 982 இடங்களையும், பாரதிய ஜனதா 929 இடங்களையும், ஜே.டி.எஸ். கட்சி 373 இடங் களையும் பிடித்துள்ளன.

சுயேட்சை வேட்பாளர்கள் 329 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் காங்கிரசு - & ஜே.டி.எஸ். கூட்டணி ஒட்டு மொத்தமாக 1357 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner