எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, செப்.7 உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசுப் பணியாளர் போட்டித் தேர்வுகளில் வினாத்தாளை கசிய விடுப வர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

அரசின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்ததாவது:

போட்டித் தேர்வுகளின்போது வினாத்தாளை கசிய விடுபவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத் தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் படும். இதுபோன்ற காரியங்களில் ஈடுபடும் அமைப்புகளும் கண்ட றியப்பட்டு, அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும். தேர்வுகள் வெளிப் படைத் தன்மையுடனும், ஊழல் இன்றியும் நடத்தப்பட வேண் டும். இளைஞர்களின் எதிர்காலத் தோடு விளையாட நினைப்பவர் களை அரசு பொறுத்துக் கொள் ளாது. தேர்வு நடவடிக்கைகளை மாசுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என்றார்கள்.

உத்தரப் பிரதேச துணைநிலை தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்பட்ட தேர்வுக்கான வினாத்தாள்களை கசிய விட்ட தாக 11 நபர்களை மாநில அதிர டிப்படையினர் கடந்த வாரம் கைது செய்தனர். முன்னதாக, கடந்த ஜூலை 29-ஆம் தேதி, துணை ஆசிரியர் பணியிடங் களுக்கு தேர்வு நடைபெற்றபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக மாநிலமெங்கிலும் 51 நபர்களை காவல் துறையினர் கைது செய் தனர். இதுபோன்று அடிக்கடி முறைகேடு புகார்கள் எழுவதால், அவற்றை தடுக்கும் நோக்கில், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

அதே சமயம், கட்டுப்பாடு களை மீறி வினாத்தாள் கசியும் பட்சத்தில், தேர்வுகளை ஒத்தி வைக்காமல் திட்டமிட்டபடி நடத்துவதற்கு ஏதுவாக இரண்டு வகையான வினாத்தாள்களை தயாரிப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக உத்தரப் பிரதேச தேர்வாணைய தலைவர் சி.பி.பாலிவால் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner