எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லக்னோ, செப்.9 கோரக்பூர் மருத்துவமனையிலிருந்து அடுத்தடுத்து மருத்துவர்கள்  வருவதாகவும், தற்போது 25 மருத்துவர் பணியிடங்கள் இந்த மருத்துவமனையில் காலி யாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 83-க்கும் மேற் பட்ட குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத் திணறி இறந்தன. மருத்துவம னைக்கு ஆக்சிஜன் சப்ளை செய்த நிறுவனத்துக்கு, நிலு வைத் தொகையை செலுத்தாத காரணத்தால், ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளையை அந்த நிறுவனம் நிறுத்தியதே, குழந் தைகளின் இறப்புக்கு காரணம் என்று கூறப்பட்டது.

எனினும், அப்போது குழந் தைகள் பிரிவில் பணியாற்றிய மருத்துவர் கபீல் கான் தனது சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி ஏரா ளமான குழந்தைகளின் உயி ரைக் காப்பாற்றினார். ஆனால், உத்தரப்பிரதேச பாஜக அரசோ, குழந்தைகள் இறப்புக்கு மருத் துவர் கபீல்கானையே பொறுப் பாக்கி அவரைச் சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தி யது. இது, மருத்துவர் கபீல் கானுடன் பணியாற்றிய மற்ற மருத்துவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கபீலுக்கு நேர்ந் தது நாளை நமக்கும் நேரலாம் என்று அவர்கள் ஒவ்வொருவ ராக தங்களின் வேலையிலிருந்து விலக துவங்கினர். தற்போது குழந்தைகள் இறந்து ஓராண்டு முடிந்துவிட்ட நிலையில், இந்தக் காலத்தில் 20-க்கும் மேற்பட்டோர் பதவி விலகியுள்ளனர். பிஆர்டி மருத் துவக்கல்லூரி மருத்துவமனை யில் 100 மருத்துவப் படிப்பு இடங்களும், 68 மருத்துவப் பட்டமேற்படிப்பு இடங்களும் உள்ளன. அத்துடன் இங்கு 124 மருத்துவர்கள் இருக்க வேண் டும். ஆனால், தற்போது 101 மருத்துவர்கள் மட்டுமே இருக் கின்றனர். உத்தரப்பிரதேச பாஜக அரசின் அலட்சியமும், அச்சுறுத்தலுமே மருத்துவர் களின் பதவி விலகலுக்கு கார ணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner