எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அஜ்மீர், அக்.9  ராஜஸ்தான் மாநிலத்தில், பா.ஜ.க, தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடந்த இடத்திற்கு அருகே, அம்மாநில அமைச்சர், திறந்த வெளியில் சிறுநீர் கழித்ததுடன், அதை நியாயப்படுத்தி பேசியதும், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில், விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. சமீபத்தில், ஆளும் கட்சியான, பா.ஜ., சார்பில், அஜ்மீர் பகுதியில், தேர்தல் பிரச்சார கூட்டம் நடந்தது. அப்போது, அந்த இடத்திற்கு அருகே, திறந்த வெளியில், அம்மாநில அமைச்சர், ஷாம்பு சிங் கடேசர், சிறுநீர் கழித்தார்.

அந்த இடத்தில், பிரதமர் நரேந்திர மோடி, ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் படம் அச்சடிக்கப்பட்ட, தூய்மை இந்தியா திட்டம் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன. இது தொடர்பான புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பா.ஜ.,வுக்கு பெரும் இக்கட்டினை ஏற்படுத்தி உள்ளன.

இது குறித்து, அமைச்சர் ஷாம்பு சிங் கடேசர் கூறியதாவது: திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பது, பல ஆண்டுகளாக நாம் பின்பற்றி வரும் பழக்கம். திறந்த வெளியில் மலம் கழித்தல் என்பதும், சிறுநீர் கழித்தல் என்பதும், வெவ்வேறு விஷயங்கள். மலம் கழித்தலால், பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. ஆனால், மறைவான இடத்தில் சிறுநீர் கழித்தல் என்பது, அப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தாது. பிரச்சாரக் கூட்டம் நடந்த இடத்துக்கு அருகே, கழிப்பறை வசதியே இல்லை. அதனால் தான், திறந்த வெளியில் சிறுநீர் கழித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner