எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அரசு மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் அறைகூவல் - உறுதி ஏற்பு

ஜெய்ப்பூர், அக். 10 -ராஜஸ்தான் மாநிலத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த மாநில அரசு ஊழியர்களும், போக்குவரத்து ஊழியர்களும் பாஜக அல்லாத ராஜஸ் தானை ஏற்படுத்துவோம் என்ற உறுதி ஏற் றுள்ளனர்.

7- ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்; காலிப் பணியிடங் களை நிரப்ப வேண்டும்; ஓய்வூதியப் பயன் பாடுகளை அமல்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். மக்களின் பொதுப் போக்குவரத்துக்கு புதியபேருந்துகளைவாங்கவேண்டும்,ஊழி யர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண் டும் என்று சாலைப் போக்குவரத்து ஊழியர் களும் வேலை நிறுத்தம் செய்து வந்தனர்.

இதனிடையே, ராஜஸ்தான் மாநிலச் சட்டமன்றத்திற்கு டிசம்பர் 7-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு, மாநிலத்தில் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்ததால், தங்களின் போராட்டத்தை விலக்கிக்கொண்ட அரசு ஊழியர்களும், போக்குவரத்து ஊழியர்களும், தேர்தல் அறிவிக்கப்பட இருப்பது நன்கு தெரிந்தும், வேண்டுமென்றே தங்கள் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் இழுத்தடிப்பில் ஈடு பட்டதாக வசுந்தரா ராஜே அரசைக் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து, புதிதாக அமரவிருக்கும் அரசாங்கம் முடிவு செய்யும்; வேலை நிறுத்தக் காலம் அதீத விடுப்பாக  கருதப்படும் என்று பாஜக அரசாங்கம் அறிவித்திருப்பதையும் வன் மையாக கண்டித்துள்ளனர்.

ராஜஸ்தான்மாநிலஅரசுஊழியர்சங் கங்களின் சம்மேளனத் தலைவர் மனோஜ் சக்சேனா செய்தியாளர்களிடையே கூறுகை யில், போராடிய பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்களும், அவர்தம் குடும்பத்தாரும் பாஜக-விற்கு எதிராக வாக்களிப்பார்கள்; அத்துடன், 2013 -ஆம் ஆண்டு தேர்தல் அறிக் கையில், மக்களுக்கு அளித்த உறுதிமொழி களுக்கு எவ்வாறெல்லாம் பாஜக துரோகம் இழைத்துள்ளது என்று மக்கள் மத்தியில் நாங்கள் பிரச்சாரம் செய்வோம் என்று தெரி வித்துள்ளார்.

நாங்கள் பாஜக அல்லாத ராஜஸ் தானை அமைத்திட உறுதிமொழி எடுத்தி ருக்கிறோம் என்றும் மனோஜ் சக்சேனா குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner