எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவனந்தபுரம், ஜன.10- சபரிமலைக்கு செல்லும் பெண் பக்தர்கள் வாவர் மசூதிக்கு வர தடை இல்லை என்று ஜமாத் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சபரிமலைக்கு செல்லும் வழியில் எரிமேலியில் நயினார் மஸ்ஜித் உள்ளது. இதனை வாவர் மசூதி என்றும் அழைப்பார்கள். சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வாவர் மசூதிக்கும் சென்று வழிபட்டுச் செல்வார்கள். சபரிமலையில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பேட்டை துள்ளல் நடத்துபவர்களும் வாவர் மசூதிக்கு செல்வார்கள். பல ஆண்டுகளாக இது நடைபெறுகிறது. அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தும் பணியில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது.

பெண்கள் கோவிலுக்குள் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் சங்பரிவாரங்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பெண்கள் அய்யப்பன் கோவிலுக்குச் சென்றதை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆத்திரமடைந்த இந்து மக்கள் கட்சியின் பெண்கள் உள்பட 9 பேர் எரிமேலி வாவர் மசூதிக்கு செல்ல முயற்சித்தனர். அவர்களை கேரள காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கிடையே எரிமேலி வாவர் மசூதியின் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள்

வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:வாவர் மசூதியில் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் ஆச்சாரங்களில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. வாவர் மசூதிக்கு வயது வித்தியாசமின்றி ஆண் களும், பெண்களும் வருகிறார்கள்.இங்கு வரும் பெண்கள் உள்பட பக் தர்கள் மசூதியை வலம் வந்து பிரார்த்தனை செய்து காணிக்கை செலுத்தி விட்டு சபரிமலைக்கு செல்கிறார்கள். பள்ளி வாசலுக்குள் தொழுகை நடத்தும் இடத்திற்கு பெண்கள் செல்வது கிடையாது. நல்ல எண்ணத்துடன் இங்கு வர யாருக்கும் தடையில்லை என்று தெரிவித்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner