எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நதி நீர் ஆர்வலர் ராஜேந்திரசிங் குற்றச்சாட்டு

கொல்கத்தா, ஜன.11 - 2014 மக்களவைத் தேர்தலில், பாஜக அளித்த வாக்குறுதிகளில், கங்கை நதியை தூய்மைப் படுத்துவோம் என்பது முக்கியமானது. அதற்கேற்பவே ஆட்சிக்கு வந்ததும் நமாமி கங்காஎன்ற பெயரில் ரூ. 20 ஆயிரம் கோடி அளவிற்கு நிதி ஒதுக் கீடு அறிவிப்பையும் அந்த கட்சி செய்தது.

ஆனால், பாஜக ஆட்சியே முடிவடையப் போகும் நிலை யிலும், கங்கையைத் தூய்மைப் படுத்த இதுவரை உருப்படியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை என்று நதி நீர் ஆர்வலரான ராஜேந்திர சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

கங்கை ஆறு பாயும் 11 மாநிலங்களில், சுமார் 2250 கி.மீ. தூரத்திற்கு, கங்கா சத் பவன யாத்திரை ஒன்றை ராஜேந்திர சிங் நடத்தியுள்ளார். அதன் முடிவிலேயே இந்த குற்றச்சாட்டை அவர் முன் வைத்துள்ளார்.பிரதமர் மற் றும் அவரின் ஆதரவாளர்கள், கங்கை ஆற்றை, இந்துக் களுக்கு சொந்தமானது என்ற அடிப்படையிலேயே அணுகு கின்றனர்.

இது பிரித்தாளும் அரசிய லுக்கு மட்டுமே உதவும்.கங்கை என்பது அனைத்து மதத்தினருக்கும் பொதுவான தாகும். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பிரதமர் மோடி தன்னை கங்கையின் மைந் தன்என்று கூறினார். 3 மாதங்களில் கங்கையை சுத்தப்படுத்துவேன் என்றார். ஆனால், கங்கையை மாசு படுத்தும் வகையில் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் 4 அணை களின் கட்டுமானத் தைக் கூட அவர் நிறுத்தவில்லை. மேலும், கங்கை மேம் பாட்டுக்கு என்று ஒரு அமைச் சகத்தை அமைத்து, அதன் மூலம் பல கோடி ரூபாய் ஊழ லுக்குத்தான் வழி வகுத்துள் ளார். மோடியோடு ஒப்பிட்டால், 60 சதவிகித அளவிற்கு முடிந்த 3 அணைகளின் கட்டுமானப் பணிகளை நிறுத்தி, நதிநீர் பாதுகாப்பு கோரிக்கைக்கு மதிப்பளித்த மன்மோகன் சிங்கை எவ்வளவோ பா ராட்டலாம் என்று ராஜேந் திரசிங் குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner