எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பசு குண்டர்களை விளாசிய தொழிலதிபர் ராகுல் பஜாஜ்

மும்பை, ஜன.11- பசுப் பாதுகாப்பு என்று கூப்பாடு போடுபவர்கள், என்றாவது பசுக் களுக்கு பணி விடைகளைச் செய்திருக்கிறார்களா? என்று தொழிலதிபர்ராகுல் பஜாஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் மூத்த தொழிலதிபராக விளங்குபவர் ராகுல் பஜாஜ்.காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமானவர். காந்தியக் கொள்கைகளிலும் நம்பிக்கை கொண்டவர். அவர், மும்பையில் தனது பாட்டியின் சுயசரிதை நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டு உரையாற்றி யுள்ளார். அப்போதுதான் பசுப் பாதுகாப்பு என்று கூறித் திரிவோரை கடுமையாக விமர்சித்துள்ளார்.என் தாத்தா ஜம்னலால் பஜான், குடிலில்தான் வசித்தார். மாடுகளை எல்லாம் அவரே குளிப் பாட்டுவார்.

இதனை பெரிய விஷயமாக அவர் காட்டிக் கொண்டதில்லை. ஆனால், இன்று நம்நாட்டில் மாடுகளுக்காக மனிதர்களைத் தாக்கி கொலை செய்கிறோம்; அந்த அரசியல்வாதிகளின் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை என்று ராகுல் பஜாஜ் கூறியுள்ளார்.

மேலும், பசுவை மாதா என்று கூறுபவர்கள், ஒருநாளாவது பசுவைப் பராமரிக்கும் பணியைச் செய்திருக்கிறார்களா? என்று கேட்டுள்ள அவர், பசுவுக்காக போராடுகிறோம் என்று கூறு பவர்கள்,  நிச்சயமாக அவர்களின் மூதாதையர் மேற்கொண்ட பசு பராமரிப்பில் 5 சதவிகிதத்தைக் கூடசெய்திருக்க மாட்டார்கள் என்றும்குறிப்பிட்டுள்ளார். தொழிலதிபர் ராகுல் பஜாஜின் பேச்சு, பசு குண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

'பொங்கல் விழா'வைக் கொண்டாடி மகிழ்ந்த  மகளிர் கல்லூரி மாணவிகள்!

சென்னை, ஜன.11 சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கல்லூரி வளாகத்தில் நேற்று (10.1.2019) நடைபெற்ற பொங்கல் விழாவில் மாணவிகள் பாரம்பரிய முறையில் மகிழ்ச்சியுடன் பொங் கல் விழாவைக் கொண்டாடினர். மகிழ்ச்சி நிறைந்த இவ்விழாவில் மாணவிகள் நிகழ்த்திய கோலாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற நாட்டுப்புற நடனங்கள் பார்வையாளர்களை ஈர்த்தன. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வேகமாக மாறிவரும் இவ்வுலகில், நம்முடைய மதிப்பு மிகுந்த மரபையும், விழுமியங் களையும் நாம் மறக்காமல் இருப்பது முக்கியம்.

அந்த வகையில் நம்முடைய பண்பாட்டின் வளத்தினையும், பெருமையையும் நம்முடைய இளைய சமுதாயம் உணர்ந்து, அதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கு இவ்வாறான விழாக்கள் பெரிதும் உதவும். இந்த நோக்கத்தை முன்னிறுத்தி நம்முடைய கலாச்சாரத்திற்குப் பெருமை சேர்க்கும் பல்வேறு விழாக்களை தொடர்ந்து நடத்தி வருவதில் எங்கள் கல்லூரி பெருமை கொள்கிறது என்று டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கல்லூரியின் செயலாளர் லதா ராஜேந்திரன் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner