எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொல்கத்தா, பிப்.10  மேற்கு வங்கத்தில் சரஸ்வதி பூஜையில் கலந்து கொண்ட திரிணா முல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சத்யஜித் பிஸ்வாஸ் சில நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. நாடியா மாவட்டத்தின் கிருஷ்ணகஞ்ச் தொகுதியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தவர் சத்யஜித் பிஸ்வாஸ். இவர் நேற்று மாலை புல்பரி பகுதியில் உள்ள உள்ளூர் கிளப் ஒன்றில் நடந்த சரஸ்வதி பூஜையில் பங்கேற்க சென்றிருந்தார். விழா மேடையில் இருந்து கீழே இறங்கிய சத்யஜித் பிஸ்வாசை மர்ம நபர்கள் சிலர் திடீரென சூழ்ந்து கொண்டு சரமாரியாக துப் பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடிவிட்டனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த சத்யஜித் பிஸ்வாஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்கு கிடந்த துப்பாக்கியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினரை சுட்டுக்கொன்ற சில நபர்களை பிடிக்க காவல்துறை தனிப்படைகள் அமைக் கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner