எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் காசிவிஷ்வநாதர் கோவிலின் புதிய நுழைவுவாயில் கட்டும் பணியை துவக்கி வைக்க மோடி வருகை தந்த போது அப் பகுதியில் உள்ள பட்டியலினமக்கள் வாழும் குடியி ருப்புகள் உத்தரப்பிரதேச நிர்வாகத்தால் சீலிடப்பட்டது. மேலும் அப்பகுதியில் இருந்துயாரும் வெளியே பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாதவாறு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது  மிகவும் பழமையான கோவில் என்று கருதப்படும் காசி விஷ்வநாதர் கோவிலுக்கு மிகவும் நெருக்கடி மிகுந்த சிறிய சந்தின் மூலமே கோவிலுக்குச்செல்ல முடியும், இதற்கான சாலைகளை அகலப்படுத்தி கோவிலி லிருந்து நேரடியாக ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கங்கை நதிக்கரைக்கு பாதை ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

ஆட்சிக்கு வந்து அய்ந்து ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நெருங்கும் நேரத்தில் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்ட வாரணாசி வருகை புரிந்தார்.   அவரது வாரணாசி வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டது, முக்கியமாக வாரணாசியில் மோடி வருகை தரும்பகுதியில் உள்ள பட்டியல் இன மக்கள் குடியிருப்பு முழுவதும் சீல் வைக்கப்பட்டது, மேலும் அவர்கள் விழா நடைபெறும்போது வீடுகளில் இருந்து வெளியே வரவும் தடைசெய்யப்பட்டது, அவர்களுக்கு அருகில் உள்ள குடியிருப்பு மக்களை எல்லாம் கங்கை நதிக்கரையில் விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதித்த உத்தரப்பிரதேச மாநில அரசு நிர்வாகம் பட்டியலினமக்கள் மட்டும் வெளியே வர தடைவிதித்தது. தங்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம் தொடர்பாக அப்பகுதியில் வீட்டிற்குள் அடைபட்டிருந்த விஷால் என்ற பட்டியல் இனத்தவர் கூறும் போது 'நாங்கள் மோடியால் மிகவும் அவமானப்படுத்தப் பட்டோம், உண்மையில் இது மனித உரிமை மீறல் ஆகும்.

இதுதான் மோடி கொடுத்த வாக்குறுதியின் உண்மை முகம். இவர் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு வாக்கு சேகரிக்க இங்குவந்த போது வாரணாசி முக்கியமாக காசிவிஷ்வநாதர் கோவில் பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கு சிறப்பு சலுகைகள் கொடுக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட திட்டங்கள் வகுக்கப்படும் என்று கூறினார், ஆனால் அதைச் செய்யவில்லை, மாறாக எங்களது ஜாதியை சுட்டிக்காட்டி நாங்கள் விழாக்காலங்களில் அப்பகுதியில் சென்றால் தீட்டு ஏற்படும் என்று கூறி எங்களை வீட்டைவிட்டு வெளியே வரவிடாமல் தடுத்தனர்! இதுதான் மோடி எங்களுக்கு செய்த மாபெரும் துரோகம் ஆகும்' என்று கூறினார். வாரணாசியில் ஜலசென் காட் எனப்படும் கங்கை நதிக்கரைப் படித்துறைக்கு அருகில் 40-க்கும் மேற்பட்ட பட்டியலினக்குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இதற்கு அருகில் தான் மோடிக்கு மிகவும்பிடித்த மணிகர்ணிக்கா காட் எனப்படும் படித்துறை உள்ளது.

அந்த படித்துறைப்பகுதியைத்தான் அடிக்கடி தூய்மை இந்தியா என்ற திட்டத்தின் கீழ் மோடி அங்குவந்து சுத்தம் செய்துவிட்டுச்செல்வார். இந்த படித்துறையை ஊடகங்கள் அதிகம் படம் பிடிக்கும் - ஆனால் இதன் அருகில் உள்ள பட்டியலினமக்கள் வசிக்கும் இடமான ஜலசென் படித்துறை, ஊடகம் மற்றும் உத்தரப்பிரதேச அரசால் தீண்டத்தகாத பகுதியாகவே பார்க்கப்படுகிறது. அப்பகுதியில் நூற்றாண்டுகாலமாகவே பட்டியலின மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ்கின்றனர். இது குறித்து அப்பகுதியில் உள்ள உயர்ஜாதியினர் குறிப்பிடும் போது  கங்கைக்கு அருகில் போகாத அழுக்குகள் உள்ளது என்று கூறுவார்கள். மேலும் அங்கு உள்ளகுடியிருப்புகளுக்கு சிகே.-10/35 என்ற ஒரே ஒரு முகவரிதான் உள்ளது இது ஒரு குறிப்பிட்ட வகுப்பார் வசிக்கும் பகுதி என்பதைக் குறிப்பதாகும். இக்குடியிருப்புகள் குறித்து அப்பகுதி உயர்ஜாதியினர் குறிப்பிடும் போது அது நாகரீகமற்ற மக்கள் வாழும் பகுதி என்று குறிப்பிடுவார்கள்.

இவர்கள் அங்கு எப்போதிருந்து வசிக்கின்றார்கள் என்று தெரியாது, அப்பகுதி குடியிருப்பு வாசி ஒருவர் கூறும் போது கங்கை நதி பாயும் காலத்திலிருந்து எங்கள் மூதாதையர் இங்கு வசித்து வருகின்றனர் என்று கூறினார், இப்பகுதியில் உள்ள பட்டியல் இனமக்கள் குடியிருப்பு பற்றி ஆங்கிலேயர்களின் ஆவணங்களில் குறிப்புகள் உள்ளன. கங்கை கரையின் அப்பகுதியில் சில குடியிரு ப்புகள் உள்ளன. அவர்கள் பெரும்பாலும் கோவிலுக்குச் செல்லும் மக்களை படகில் அழைத்துச் சென்று இக்கரையில் இருந்து அக்கரைக்கு கொண்டு செல்ல உதவினார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் தான் கோவிலிலிருந்து நேரடியாக கங்கை கரைக்கு வரும் பாதை அமைக்கப்பட உள்ளது, ஆகவே இவர்கள் அங்கிருந்து செல்ல வேண் டுமென்று அரசு கூறியுள்ளது. இதுதொடர்பாக விஷால் என்பவரின் தாயார் கூறும் போது தலைமுறை தலைமுறையாக கங்கை கரையில் நாங்கள் வாழ்ந்து வருகிறோம் எங்களை இங்கிருந்து அகற்றச் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறினார்.  பாதை அமைக்கும் வழியில் உள்ள பல குடியிருப்புகள் அரசினால் நல்ல தொகை வழங்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து அகன்றுவிட்டனர்.

இன்னும் தொகை பெறாத ஒரு சில குடியிருப்புகள் அந்த கட்டுமானப்பாதையில் உள்ளன, தினசரி கட்டிட இடிப்பு வேலை நடைபெறுவதால் அங்குள்ள சில வீடுகள் தூசி மற்றும் கட்டிட குப்பைகளால் நிறைந்துவிடுகிறது. மேலும் அவர்கள் வேலைக்கு செல்லும் போது பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது, இதே நிலை தான் பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளில் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் அங்குவந்து மோடி வருகை புரியவிருக்கிறார். நீங்கள் எல்லாம் சில நாட்கள் இந்த இடத்தைவிட்டு வேறு பகுதிக்குச்செல்லவேண்டும் என்று கூறினார்கள்.

அதற்கு அங்கிருந்த பெண்கள் வீட்டில் ஆண்கள் இல்லை அவர்கள் வேலைக்குச்சென்றுள்ளனர். அவர்கள் வந்த பிறகு நாங்கள் இது குறித்து பேசுகிறோம் என்றனர், ஆனால் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அவர்களை வெளியே தள்ளினர். இதில் மூன்று பெண்கள் படுகாயமடைந்தனர். இந்த நிகழ்வுகள் அனைத்தையும் அங்குள்ளவர்கள் மொபைல் போனில் படமாக பிடித்துள்ளனர். அங்குள்ள பட்டியலினமக்கள் கோவில் நிர்வாகத் தால் பல ஆண்டுகளாக தொடர்ந்து  அவமானப் படுத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இத்தாலியில் இருந்து திரும்பிய பட்டியல் இன இளைஞர்  விவேக் என்பவர் கூறும் போது "நான் சமீபத்தில் தான் இத்தாலியில் இருந்து திரும்பினேன், எனது மனைவி இத்தாலி நாட்டவர்.

இங்கு வந்து பார்த்தால் எனது வசிப்பிடம் பறிபோகும் சூழல் நிலவுகிறது, எங்கள் பகுதி முழுவதுமே கட்டிட இடிபாடுகள் மற்றும் தூசியால் நிரம்பி உள்ளது, நாங்களும் எங்கள் உறவினர்களும் இந்த இடத்தை காலிசெய்து செல்லச்சொன்னால் எங்கு சென்று வசிக்க முடியும் என்ற குழப்பத்தில் உள்ளனர். அரசு மற்றவர்களுக்குப் போல் எங்களுக்கு இழப்பீடு தர மறுக்கிறது, வெற்றுக்காகிதத்தில் கையொப்பமிடச் சொல்கிறார்கள். எப்போதும் நாங்கள் தூக்கி வீசப்படு வோம்" என்று கூறினார்.  மற்றொரு பட்டியலின இளைஞர் பிரகாஷ் என்பவர் கூறும் போது நான் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு எனதுவீட்டிற்கு அருகில் நிலம்வாங்கி கடை ஒன்றை கட்டினேன், இப்போது அக்கடையை காலி செய்யச் சொல்லி தாக்கீது விட்டிருகிறார்கள்.

இங்கிருந்து வேறு எங்கு சென்று கடை போட்டாலும் யாரும் வாங்கமாட்டார்கள். ஏற்கனவே எங்கள் பகுதியில் குடியிருப்பு வாசிகளுடன் பிற மக்கள் சகோதரத் துவத்துடன் பழகுவதில்லை.  அரசுப்பணியாளர்கள் அங்கிருந்து அம்பேத்கர் படம் மற்றும் இதர அடையாளங்களை அகற்றி வருகின்றனர். இது தொடர்பாக போராட்டம் நடத் தினார்கள். இதை ஊடகங்கள் படம் பிடித்தும் வெளி யிடவில்லை. சமீபத்தில் மோடி வருகையின் போது அங்குவந்த மீடியாவினரை அந்த மக்கள் எங்களது உரிமைகளை அரசு பறித்துக் கொண்டு இருக்கும் போது வேடிக்கை பார்த்த நீங்கள் இப்போது ஏன் இங்கு வருகிறீர்கள் என்று கூறி ஊடகவியலாளர்கள் மீது குற்றம் சுமத்தினார்கள்

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, "மோடிவந்து கால்களைக் கழுவுவதால் எந்த ஒரு பயனும் ஏற்படாது, தினசரி சமூக விரோதிகள், காவல் துறையினர், இதர அரசு அதிகாரிகள் என்ற பெயரில் வீட்டிற்கு வந்து மிரட்டுகின்றனர். எங்களுக்கு இதுவரை அரசு எந்த ஒரு இழப்பீடும்கொடுக்கவில்லை. ஏற்கனவே காலிசெய்து சென்ற எங்கள் உறவினர் களுக்கும் இதுவரை எந்த ஒரு இழப்பீட்டுத்தொகையும் கொடுக்கவில்லை. ஆனால் இங்கே குடியிருக்கும் இதர மேல்ஜாதி மக்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்துவிட்டு அவர்களை இடம் பெயர கூறுகின்றனர்" என்று கூறினர்.

எங்களது வசிப்பிடங்களை இடிப்பது குறித்து யாரும் கவலைப்படமாட்டார்கள். மோடியின் தனிப் பட்ட விருப்பமுடன் நடக்கும் இந்த பணிகள் குறித்து யாரும் எதிர்க் கேள்வி கேட்கக் கூடாது என்று மிரட்டுகிறார்கள்  என்று கூறினார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner