எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அயோத்தி பிரச்சினை

சென்னை, ஏப்.13  அயோத்தியில் சர்ச்சைக்குட்படாத பகுதியில் உள்ள கோயில்களில் மத வழிபாடுகளை மேற்கொள்வதற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை வெள் ளிக்கிழமை தள்ளுபடி செய்த உச்சநீதி மன்றம், நாட்டை அமைதியாக இருக்க விடமாட்டீர்களா என்று கேள்வியெ ழுப்பியது.

அயோத்தி நில விவகாரத்தில் சுமுக தீர்வு காண்பதற்காக, சம்பந்தப்பட்ட தரப்புகளிடையே மத்தியஸ்த பணிகள் நடைபெற்று வரும் சூழலில், இப்பிரச் சினையில் தலையிட வேண்டாம் என்று மனுதாரரான பண்டிட் அமர் நாத் மிஸ் ராவுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

முன்னதாக, அயோத்தியில் சர்ச்சைக் குட்படாத பகுதியில் உள்ள பழமை வாய்ந்த 9 கோயில்களில் மத நடவடிக் கைகளில் அனுமதி கோரி அவர் தாக்கல் செய்த மனுவை, அலாகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இதை யடுத்து, உச்சநீதிமன்றத்தில் அவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய் தார். இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அயோத்தி விவ காரத்தில் ஏதோவொன்று நடைபெற்றுக் கொண்டே இருப்பது ஏன்? நாட்டை அமைதியாக இருக்க விடமாட்டீர்களா? என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தர விட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner