எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* 2016 ஜனவரியில் மும்பையில் நடைபெற்ற 102 ஆம் இந்திய அறிவியல் விஞ்ஞானிகள் மாநாட்டில் வேத காலத்தில் இந்தியர்கள் இன்டர்நெட், கணினி வைத்திருந்தனர் என்று இந்துத்துவாதிகளான போடாஸ், ஜாதவ் ஆகியோர் உளறிக் கொட்டி இந்தி யாவின் மானத்தைக் கப்பலேற்றினரே, நினை விருக்கிறதா?

* 2014 அக்டோபர் 28 அன்று மும்பையில் நடைபெற்ற ஒரு மருத்துவமனைத் திறப்பு விழாவில், நமது விநாயகனின் யானை முகம் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைமூலம் உருவானது என்று சொல்லப்போய், உல கெல்லாம் கைகொட்டி சிரித்ததே, நினைவிருக் கிறதா?

* 2018 ஆம் ஆண்டில் 105 ஆம் அ.இ. அறிவியல் மற்றும் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பேசிய மத்திய தொழில் நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஸவர்தன் ஆல்பர்ட் என்பவர் (பி.ஜே.பி.) அய்ன்ஸ்டின் நிறை ஆற்றல் சமன்பாடு என்பது ஆதி வேதகாலத்திலேயே இருந்ததாகவும், பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் இதனை ஏற்றுக்கொண்டார் என்று பொய்யைக் கட்டவிழ்த்து விட்டதும்தான் எவ்வளவுக் கேவலம்!

* 2019 ஜனவரியில் ஜலந்தரில் இந்திய விஞ்ஞானிகள் 106 ஆம் மாநாட்டில், ஆந்திரப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் (எல்லாம் இந்த ஆர்.எஸ்.எஸ். கும்பல்தான்) டாக்டர் நாகேஸ்வரராவ் என்பவர் மகாபாரதத்தின் கவுரவர்கள் சோதனைக் குழாய்க் குழந்தைகள் என்று உளறிக் கொட்டி, விஞ்ஞானிகளின் வெறுப்பைச் சம்பாதித்த சம்பவம் நினைவிருக்கிறதா?

பிரதமர் முதல் டாக்டர் பட்டம் பெற்ற படிப்பாளிகள் வரை உள்ள பி.ஜே.பி. - ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் புராணக் குப்பைகளைக் கிளறிக் கொண்டு கிடக்கிறார்களே!

இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) - விஞ்ஞான மனப்பான்மையைப் பரப்புவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்று கூறுகிறது - அதற்கு எதிராக இருக்கக்கூடியவர்களைப்

பதவியில் அமர்த்தலாமா?

வாக்காளர்களே, சிந்திப்பீர்! செயல்படுவீர்!!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner