எழுத்துரு அளவு Larger Font Smaller Font

2016ஆம் ஆண்டின் கழக முக்கிய நிகழ்வுகள்

செப்டம்பர்

3.9.2016 புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து

அனைத்து அமைப்புகள் கூட்டம்

புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் அமைப்புகளின் கலந்துரையாடல் கூட்டம்,  கழகத்தின் சார்பில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பங்கேற்றார்.

செப். 29இல் சென்னையிலும் அடுத்து புதுடில்லியிலும் "மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்" நடத்துவதென முடிவு.

11.9.2016 பெரியார் உலகம் திடலில் கழகக்கொடி.

திருச்சி - சிறுகனூர் பெரியார் உலகம் திடலில் அமைக் கப்பட்டுள்ள மிகப்பெரிய கம்பத்தில் மிகப்பெரிய கழகக் கொடியினை கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஏற்றி வைத்தார்.

11.9.2016 தங்கத் தமிழன் மாரியப்பனுக்கு
தமிழர் தலைவர் வாழ்த்துகள்

"ஊனம் உடலில் இருந்தும் பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தங்கத் தமிழன் மாவீரன் மாரியப்பனுக்கு நமது மகத்தான வாழ்த்துகள்" என தமிழர் தலைவர் மாரியப் பனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

15.9.2016 அண்ணா பிறந்த நாள்

அறிஞர் அண்ணாவின் 108ஆவது பிறந்த நாளில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு, தமிழர் தலைவர் மலர் மாலை அணிவித்து மரியாதை.

16.9.2016 மலேசிய கழகப் புதிய பொறுப்பாளர்களுக்கு...

தேர்தல் மூலம் தேர்வாகிய மலேசிய திராவிடர் கழகத்தின் புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.

17.9.2016 தந்தை பெரியார் பிறந்த நாள் விழா!

தந்தை பெரியார் 138ஆம் ஆண்டு பிறந்த நாள் முன்னிட்டு அய்யா சிலைக்கு மாலையணிவித்தும், அய்யா - அம்மா நினைவகங்களில் மலர் வளையம் வைத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சூளுரை ஏற்றார். அனைத்துக் கட்சித் தலைவர்களும், தோழர்களும் பெரியார் திடலுக்கு வந்து பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் சிறப்பு நிகழ்வுகள் பல சென்னை பெரியார் திடலில் நடைபெற்றன.

சிங்கப்பூரில்...

சிங்கப்பூரில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் கலந்துரையாடலும், காணொலியும், கருத்தரங்கமும் நடைபெற்றன.

அமெரிக்காவில்...

அமெரிக்காவின் கன்னெக்டிகட் மாநிலம், சிகாகோ, மேரிலாந்து, வெர்ஜீனியாவில்  தந்தை பெரியார் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பிற நாடுகள் - மாநிலங்களில்...

மலேசியா - பினாங்கிலும், உத்தரபிரதேசம், மகாராஷ்ட் டிரா, கருநாடகம் மாநிலங்களிலும், விசாகப்பட்டினம், அய்தராபாத், கேரள மாநிலம் வைக்கத்திலும் தந்தை பெரியார் பிறந்த நாள்  விழா சிறப்பாக நடைபெற்றன.

ஓ.என்.ஜி.சி. சார்பில் இந்தியாவில் 22 இடங்களில் அய்யா பிறந்த நாள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

24.9.2016 வேலூர் - அய்யா விழா!

வேலூரில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்றார். விடுதலை மற்றும் கழக இதழ்களுக்கான சந்தாத் தொகை ரூ. 2,24,830 வழங்கப்பட்டது.

28.9.2016 சிறப்புக் கூட்டம்

"காவிரி நீர்ப் பிரச்சினை" இன்றைய நிலை என்ன? என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் சென்னை பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்றது.

கழகத் தலைவர் ஆசிரியர், கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உரையாற்றினர்.

29.9.2016 எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து, அனைத்துக் கட்சியினர் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தொடங்கி வைத்தார்.

அக்டோபர்

1.10.2016 ஆத்தூர் - அய்யா விழா

ஆத்தூர் இராணிப்பேட்டை பெரியார் திடலில் பிரம் மாண்டமாக நடைபெற்ற தந்தை பெரியார் 138ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார். "விடுதலை"க்கு சந்தா தொகை வழங்கப்பட்டது. பிரச்சார ஊர்தி நிதியும் வழங்கப் பட்டது.

3.10.2016 சேலத்தில் ஆர்ப்பாட்டம்

சேலம் இரும்பாலையை தனியாருக்குத் தாரை வார்ப்பதா? மத்திய அரசைக் கண்டித்து கழகத்தின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தார்.

6.10.2016 தூத்துக்குடியில் முப்பெரும் விழா!

பெரியார் மய்யம் திறப்பு விழா - பகுத்தறிவுப் பகலவன் 138ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - விடுதலை சந்தா வழங்கும் விழாவென - தூத்துக்குடியில் நடைபெற்ற முப் பெரும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை யாற்றினார்.

7.10.2016 மாணவர் கலந்துரையாடல்

திருச்சி என்.ஆர்.அய் அகாடமி சார்பில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி கரூர் புறவழிச்சாலை அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

பெரியார் - மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி வழிகாட்டுதல் உரையாற்றினார்.

7.10.2016 திருச்சியில் நிறுவனர் நாள் விழா

தமிழர் தலைவர், கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில், திருச்சியில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் "நிறுவனர் நாள் விழா" சிறப்பாக நடைபெற்றது. கழகப்பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் முன்னிலை வகித்தார். தமிழினப் பெருமக்கள், திரைத்துறை வித்தகர்கள் பாராட்டப் பெற்றனர்.

8.10.2016 திருச்சி - இருபெரும் விழா!

திருச்சிராப்பள்ளி - உறையூர் பஞ்சவர்ணசாமி திடலில், கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 138ஆவது பிறந்த நாள் விழா - விடுதலை சந்தா வழங்கும் விழா என இருபெரும் விழாக்கள் நேர்த்தியாக நடைபெற்றன. தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் சிறப்புரை வழங்கினார். கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் சிறப்பான கருத்தரங்கமும் நடந்தது.

9.10.2016 தருமபுரியில்...

தமிழர் தலைவர் பிரச்சாரப் பயண ஊர்தி நிதிக்கு கடைத்தெரு நிதி திரட்டும் பணியைத் தருமபுரி கடை வீதியில் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் துவக்கி வைத்து தொடர்ந்து பயணித்தார்.
மதுரையிலும் இப்பணி சிறப்பாக நடைபெற்றது.

14.10.2016 கழக தலைமைச் செயற்குழு

திருச்சி பெரியார் மாளிகையில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் கழக தலைமைச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தீர்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டன.

15.10.2016 போராட்டத்தில்...

காங்கிரசு கட்சியின் சார்பில், திருச்சியில் நடைபெற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வலியுறுத்தி கழகத் தலைவர் தமிழர் தலைவர் உரையாற்றினார். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு வாழ்த்துரைத்தார்.

15.10.2016 கா.ஜெகவீரபாண்டியன் மறைவு

சமூகநீதிக்கட்சி நிறுவனர் கா.ஜெகவீரபாண்டியன் மறைவுற்றார். 16.10.2016 அன்று கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.

17, 18.10.2016  ரயில் மறியல்

விவசாயிகள் சங்க கூட்டியக்கம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு தெரிவித்த மத்திய அரசைக் கண்டித்து, ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இருநாள்கள் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் திராவிடர் கழகத் தோழர்களும் கலந்து கொண்டு சிறை சென்றனர்.

22.10.2016 தேர்தல் ஆதரவு!

தமிழ்நாட்டில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங் குன்றம் ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல்களில் திமுகவுக்கும், புதுச்சேரி நெல்லித்தோப்புத் தொகுதியில் காங்கிசுக்கும் கழகத்தின் ஆதரவு என தமிழர் தலைவர் அறிவித்தார்.

24.10.2016 எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா!

வள்ளல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா வேப்பேரி, பெரியார் திடல், எம்.ஆர்.இராதா மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழர் தலைவர் ஆசிரியர் விழாவிற்குத் தலைமை வகித்து விழாப் பேருரையாற்றினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார். கம்யூனிஸ்ட் கட்சி தா.பாண்டியன் சிறப்புரையாற்றினார். பாராட்டப்பட்ட டாக்டர் பழனி ஜி.பெரியசாமி ஏற்புரை யாற்றினார்.

25.10.2016 அனைத்துக் கட்சிக் கூட்டம்

சென்னை கலைஞர் அரங்கில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், காவிரி நீர்ப் பிரச்சினை குறித்து நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்துரை வழங்கினார்.

நவம்பர்

13.11.2016 சிதம்பரம் பொதுக்கூட்டம்

சிதம்பரத்தில் நடந்த தந்தை பெரியார் பிறந்த நாள் பெருவிழாவில் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்று சிறப்பு செய்தார். மாவட்டங்கள் பலவற்றின் சார்பில் பிரச்சார ஊர்தி நிதி ரூபாய் 4,15,550 மற்றும் "விடுதலை" சந்தாத் தொகை ரூபாய் 1,35,410யும் தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்டது.

14.11.2016 தேர்தல் பரப்புரை

தஞ்சாவூரில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் திமுக வேட்பாளர் அஞ்சுகம் பூபதிக்கு ஆதரவு கேட்டு தமிழர் தலைவர் பேருரையாற்றினார்.

17.11.2016 புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து

டில்லியில் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வரும் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக அகில இந்திய அளவில் கண்டனப் பேரணியும், பெருந்திரள் ஆர்ப்பாட்டமும் புதுடில்லியில் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஏராளமானத் தோழர்கள் கலந்து கொண்டனர்.

18.11.2016 சாமியாரை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

சேத்தியா தோப்பில் மோசடிச் சாமியாரை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

19.11.2016 இளைஞரணி - மாணவரணி மாநாடு

அரக்கோணத்தில், காஞ்சி மண்டல கழக இளைஞரணி - மாணவரணி மாநாடு நடைபெற்றது. பெரியார் பட ஊர் வலமும் நடந்தது. மாநாட்டில் தமிழர் தலைவர் சமூக நீதிப் பிரகடனம் செய்தார்.

20.11.2016 நீதிக்கட்சி நூற்றாண்டு நிறைவு விழா

சென்னை பெரியார் திடல் நடிகவேள் இராதா மன்றத்தில் நடைபெற்ற நீதிக் கட்சி நூற்றாண்டு நிறைவு விழாவில் பல்துறை அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.
இறுதியாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி விழாப் பேருரையாற்றினார்.

டிசம்பர்

1.12.2016 மறைவுகள்!

கவிஞர் இன்குலாப், தோழர் நல்லகண்ணு துணைவியார் ரஞ்சிதம் அம்மையார் மறைவுக்கு தமிழர் தலைவர் இரங்கல்.

2.12.2016 பிறந்த நாள் பெரு விழா!

தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 84ஆவது ஆண்டு பிறந்த நாள் நாடெங்கும் கழகக் குடும்பத்தினராலும், தமிழினப் பெருமக்களாலும் கொண்டாடப்பட்டது.

"இறுதி மூச்சு அடங்கும் வரை எம் பணி நிற்காது - தொடரும்!" என்று தமிழர் தலைவர் தமது பிறந்த நாள் செய்தியில் குறிப்பிட்டார்.
கோ.சி.மணி மறைந்தார்!

திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், மேனாள் அமைச்சருமான மானமிகு கோ.சி.மணி மறைவுக்கு தமிழர் தலைவர் இரங்கல்.

5.12.2016 தமிழக முதலமைச்சர் காலமானார்

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா மறைந்தார் (5.12.2016) "சமூகநீதி காத்த வீராங்கனைக்கு நமது வீர வணக்கம்! வீர வணக்கம்!!" என்று தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார்.

மறைந்த முதலமைச்சர் உடலுக்கு தமிழர் தலைவர் மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உடன் சென்று இறுதி மரியாதை செலுத்தினர்.

7.12.2016 "துக்ளக்" ஆசிரியர் மறைவு!

தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளர் "சோ" இராமசாமி காலமானார். கொள்கைகளையும் கடந்து பண்போடு பழகிய நண்பர் சோ!  என்று இரங்கல் தெரிவித்த தமிழர் தலைவர் "சோ" ராமசாமி உடலுக்கு மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.

8.12.2016 கலைஞர் நலம் பெற்றார்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் நலமடைந்து இல்லம் திரும்பியதற்கு தமிழர் தலைவர் மகிழ்ச்சியும், வாழ்த்தும் தெரிவித்தார்.

10.12.2016 தமிழறிஞர் மறைந்தாரே!

தமிழமொழி அறிஞர் வா.செ.குழந்தைசாமி காலமானார். அந்த மாமேதைக்கு நமது வீர வணக்கம்! என்று தமிழர் தலைவர் இரங்கல் அறிக்கை விடுத்தார். அன்னாரது இல்லம் சென்று அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

15.12.2016 நலம் விசாரித்தறிதல்...

சிகிச்சைக்கென காவேரி மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்த திமுக தலைவர் கலைஞர் அவர்களது உடல் நலத்தினை திமுக பொருளாளர் திரு.மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் தமிழர் தலைவர் விசாரித்தறிந்தார்.

17.12.2016 திணறியது - திருவாரூர்!

திருவாரூரில் திராவிடர் மகளிர் எழுச்சி மாநாடு சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில், வரலாற்று சிறப்புமிக்க, மகளிர் உரிமைக்கோரும் 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. "பெண்ணென்றால்" என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. 'மந்திரமா? தந்திரமா'  நிகழ்ச்சியும், பெரியார் பிஞ்சுகளின் கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றன. திருவாரூர் குலுங்கிட நடைபெற்ற மாநாட்டுப் பேரணி ஏராளமான மகளிர் பங்குகொண்ட எழுச்சி மிக்கப் பேரணியாய் அமைந்தது.

மாநாட்டுப் பேருரையை தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி நிகழ்த்தினார். அன்னை மணியம்மை யார் பிறந்த மார்ச் 10ஆம் தேதியன்று மனுதர்மம் சாத்திரம் எரிப்புப் போராட்டம் நடத்தப்படுமெனவும் அறிவிப்புச் செய்தார்.

18.12.2016 முத்தரப்பு மாநாடு

திருச்சி மாநகரில் திராவிடர் கழகத்தின் சார்பில், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் பங்கேற்ற முத்தரப்பு மாநாடு நடைபெற்றது.

மாநாட்டில் தேசிய புதிய கல்விக்கொள்கையை முற்றிலும் நிராகரிப்பதாகவும், நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழர் தலைவர் தலைமையில் மூன்று முத்தான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

24.12.2016 அய்யா நினைவு நாளில்...

தந்தை பெரியார் 43ஆம் ஆண்டு நினைவு நாள் முன் னிட்டு, தமிழர் தலைவர் தலைமையில் சென்னை, பெரியார் திடலில் உள்ள அய்யா நினைவிடத்தில், மலர் வளையம் வைத்து கழகத்தின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.  சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 4) மற்றும் பெரியார் ஒளி முத்துக்கள் ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பனார் நூல்களை வெளியிட, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் பெற்றுக் கொண்டார்.

தமிழினம் வாழும் இடமெல்லாம் தந்தை பெரியார் நினைவு நாள் நிகழ்வுகள் நடைபெற்றன. மேலும் சொற்பொழி வாளர் கூட்டமும், இளம் பேச்சாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையும் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றன.

30.12.2016 கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழர் தலைவரது அறிவிப்பின்படி, தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில், புதிய கல்விக் கொள்கை - "நீட்" நுழைவுத் தேர்வை எதிர்த்து எழுச்சிமிகு முத்தரப்பு கண்டன ஆர்ப் பாட்டங்கள் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடைபெற்றன.

பயிற்சிப் பட்டறை

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் பெரியாரியல் பயிற்சி பட்டறை நடைபெற்றது. தமிழர் தலைவர், ஆசிரியர் மானமிகு கி.வீரமணி, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மற்றும் கழகப் பொறுப்பாளர்களும், பேராசிரியப் பெருமக்களம் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner