எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- வி.சிறிதர்

நேற்றைய தொடர்ச்சி வருமாறு:-

புதிய 500 ரூபாய் நோட்டுகளை அச்சிடவேண்டிய பொறுப்பில் உள்ள மகாராட்டிர மாநில நாசிக்கிலும், மத்திய பிரதேச மாநில தேவாசிலும் உள்ள அரசு அச்சகங்கள் மீது நேரடியான கட்டுப் பாட்டை வைத்திருக்கும், மத்திய நிதித் துறை அமைச்சகம் செய்த குளறுபடிகள் பற்றிய தகவல்கள் மெல்ல மெல்ல கசிந்து வெளியானது. மொத்தம் உள்ள, நவம்பர் 8 ஆம் தேதி இரவு முதல் செல்லாமல் போன,  17 . 165 பில்லியன் 500 ரூபாய் நோட்டுகளை மாற்றி அளிக்கும் சவாலை ஏற்றுக் கொள்ளும் திறமை படைத்தவைகளாக இந்த அச்சகங்கள் இருக்கவில்லை. புதிய ரூபாய் நோட்டுகளில்  இருந்த நன்கு புலப்பட இயன்ற தவறுகள் தெரிய வந்தபோது,  கர்நாடக மாநில மைசூரிலும்,  மேற்கு வங்க சல்போனியிலும் உள்ள ரிசர்வ் வங்கி அச்சகங்களுக்கு இந்த புதிய 500 ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பணி மாற்றப்பட்டது. அரசின் உடைமையான பாதுகாப்பாக அச்சடிக்கும், நாணயம் தயாரிக்கும் இந்திய கார்ப்பரேஷனின் அச்சடிக்கும் இயந்திரங்கள், ரிசர்வ் வங்கியின் அச்சக இயந்திரங்களுடன் ஒப்பிட்டுக் காணும்போது,  மிகப் பழைய காலத்தைச் சேர்ந்தவையாகும். இந்த நிறுவனத்திற்கு இந்த நெருக்கடியான நேரத்திலும் கூட, ஒரு முழு நேர இயக்குநர்  இல்லாமல் இருக்கிறது. இவையெல்லாம் அரசின் நிதித் துறை  முற்றிலும் தயார் நிலையில் இருக்கவில்லை என்பதையும், ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் மத்திய வங்கியுடன் ஒத்துழைக்க இயலாததாக  இருந்தது என்பதையும் காட்டுகின்றன. ரகுராம்ராஜன்  செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து சென்றவுடன், இந்த புதிய 2000 ரூபாய் நோட்டு அச்சடிக்கத் தொடங்கியதும், புதிய 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணி மிகவும் தாமதமாக மேற்கொள்ளப்பட்டதும் குளறுபடிகளை மேலும் மேலும் சிக்கல் மிகுந்தவையாக ஆக்கிவிட்டது.

ரூபாய் நோட்டுகள் பற்றாக் குறையே, குறிப்பாக 100 ரூபாய் மற்றும் அதற்கும் குறைந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் பற்றாக்குறையே , நாடு முழுவதிலும் உள்ள  மக்களை வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் நீண்ட வரிசைகளில் காத்துக் கிடக்கச் செய்தது. இந்த ரூபாய் நோட்டு பற்றாக்குறை அனைத்து மக்கள் மீதும் ஒரே அளவிலான பாதிப்பை ஏற்படுத்தவில்லை.  பல மணி நேரம் வரிசையில் நின்று பணம் பெறும் ஒரு அட்டை வைத்திருப்பவர்களை விட , பல ஏ.டி.எம். அட்டைகளை வைத்திருப்பவர்கள், அதிக அளவில் பணத்தைத் திரும்பப் பெற முடிந்தது. தனியார் வங்கிகளின் நட்புறவுடன் கூடிய வங்கி சேவையை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களால், உயர் தகுதி படைத்த வாடிக்கையாளர் என்ற முறையில், இந்தப் பற்றாக்குறை காலத்திலும் கூட ஒரு சலுகை பெற்ற நிலையை அனுபவிக்க இயல்கிறது.

மாற்றி அமைக்கப்படும் ரூபாய் நோட்டுகளின் அளவுகளுடன், வடிவங்களுடன்,  கனத்துடன் புதிய ரூபாய் நோட்டுகள் வடிவமைக்கப்பட்டிருந்தால், நாடு முழுவதிலும் உள்ள 2 லட்சம் ஏ.டி.எம். இயந்திரங்கள் கடந்த ஒரு மாத காலமாக செயல்பட முடியாமல் போனதைத் தவிர்த்து இருக்கலாம் என்பதை வங்கி மேலாளர் ஒருவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

ஆனால், குறைந்த அளவு ரூபாய் நோட்டுகள் கையிருப்பில் இருந்த நிலையிலும் கூட, சற்றும் வெளிப்படைத் தன்மையற்ற, யதேச்சதிகாரமான முறையில் பகிர்ந்து அளிக்கப்படுவதில் ரிசர்வ் வங்கி செய்த தவறு, நிலையை மேலும் தீவிரமானதாக ஆக்கிவிட்டது. சில தனியார் வங்கிகளுக்கு, பொதுத் துறை வங்கிகளை விட, அதிக அளவில் புதிய ரூபாய் நோட்டுகள் ஒதுக்கீடு செய்து பாகுபாடு காட்டியதற்கான தக்க சான்றுகள் உள்ளன.

நவம்பர் 10 ஆம் தேதி முதல், தமிழ்நாட்டில் உள்ள தனியார் வங்கிகளுக்கு, குறிப்பாக புதிய தலை முறை தனியார் வங்கிகளுக்கு, மாநில அளவில் அதிக எண்ணிக்கையிலான கிளைகளைக் கொண்ட பொதுத்துறை வங்கிகளுக்கு அளித்ததைவிட அதிக அளவிலான புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டுள்ளது என்று அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் உதவித் தலைவர் தாமஸ் பிராங்கே  எம்மிடம் கூறினார். அதிக அளவில் 137 ரூபாய் நோட்டுக் கருவூலங்களை பாரத ஸ்டேட் வங்கி கொண்டிருந்த போதிலும்,  தங்களுக்குத் தேவையான ரூபாய் நோட்டுகளை மதுரை அய்.சி.அய்.சி.அய் வங்கியிடமிருந்தும், கோவை எச்.டி.எப்.சி. வங்கியிடமிருந்தும் பெற்றுக் கொள்ளும்படி ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது என்றும் அவர் குற்றம் சாட்டினார். நவம்பர் மாத இறுதி வரை அய்.சி.அய்.சி. வங்கிக்கு 4500 கோடி ரூபாய் அளவிலும், எச்.டி.எப்.சி. வங்கிக்கு 9000 கோடி ரூபாய் அளவிலும், ஆக்சிஸ் வங்கிக்கு  700 கோடி அளவிலும் புதிய ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டன. ஆனால், மற்ற அனைத்து வங்கிகளுக்கும் சேர்த்து மொத்தமாக ரூபாய் 7,800 கோடி அளவுக்கான ரூபாய் நோட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளின் எண்ணிக்கையில் இந்த தனியார் வங்கிகளின் கிளைகள் வெறும் கால்பங்குதான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வெளிப்படையாக பேசுபவர்கள் என்று புகழ் பெற்ற பத்திரிகையாளர்கள் கூறும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் சக்ரபர்த்தி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், ‘‘எந்தெந்த வங்கிகளுக்கு எந்தெந்த மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகள், எந்த அடிப்படையில் அளிக்கப்பட்டன என்பதை ரிசர்வ் வங்கி அறிவிக்கவேண்டும். அச்சடித்த ரூபாய் நோட்டுகள், விநியோகம் செய்யப்பட்டவை, எஞ்சி இருப்பவை பற்றிய விவரங்களையும் ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும். அப்போதுதான் களநிலையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நாம் அறிந்து கொள்ள முடியும். இன்று இந்த விவரங்கள் எல்லாம் கணினியில் உள்ளன. ஏன் அவற்றைப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது?

(தொடரும்)

நன்றி: ‘ப்ரண்ட் லைன்’,  23.12.2016

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner