எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- லூசி குர்ஷித் -

(பார்ப்பனர்-முஸ்லிம்கள்-தலித்துகள் கூட்டணி யின் ஒரு பகுதி வாக்குகளைத் திரும்பப் பெறுவதற்காக தானாகவே தனியாகப் போராடுவது என்பது காங்கிரஸ் கட்சியின்  கொள்கைகளுக்கு ஏற்றதாக இருந்திருக்கும். ஆனால் பிற்படுத்தப்பட்டோர் ஆதரவு சமாஜ்வாடி கட்சியுடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணி, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. எதிர்பாராத நெருக்கடிகள், பிரச் சினைகள் ஏற்படும்போது, தனித்து முடிவு எடுக்க இயலாத ஒரு கூட்டணியின் வாலாக இருப்பதில் உள்ள ஆபத்துகள் அதிகமானவையே. அதே போன்று, கடந்த முறை பெரும் அளவில் பார்ப்பனர் ஆதரவுடன் செயல்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி, முன்எப்போதும் இல்லாத அளவில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு தனது கட்சி இடம் அளித்துள்ளதாக மார் தட்டிக் கொண்டது, முன்னணியில் இருக்கும் உயர்ஜாதியினரை நிச்சய மாக மேலும் குழப்பிவிட்டது.)

அண்மையில் நடைபெற்ற அய்ந்து மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியபோது, அகிலேஷ் யாதவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர்களும்,  நாங்களும், சென்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் நடைபெற்றது போலவே, இப்போதும் தேர்தல் கணிப்புகள் தவறாகிப் போகும் என்று உறுதியாக நம்பியிருந்தோம்.

உண்மையைக் கூறுவதானால், பா.ஜ.க. தனிப் பெரும் கட்சியாக வந்தாலும், மாயாவதி ஆதரவு தர மறுக்கும்  காரணத்தால், ஆட்சி அமைக்க முடியாத நிலை  ஏற்பட்டு, ஒரு தொங்கு சட்டமன்றம் ஏற்படுவதையே நான் எதிர்பார்த்திருந்தேன். முஸ்லிம்களின் உறுதியான ஆதரவைக் கொண்டு  தனது தலித் ஆதரவு வாக்கு வங்கியை, பலப் படுத்திக் கொள்வதைப் பற்றி பகுஜன் சமாஜ் கட்சி கவலைப்படத் தொடங்கியிருந்ததையே,  அக் கட்சியின் வேட்பாளர்கள் தேர்வு தெளிவான எடுத்துக் காட்டாக அமைந்திருந்தது.

ஆனால், உண்மையில் வெளிவந்த முடிவுகள் மிகுந்த அதிர்ச்சி அளிப்பவையாக இருந்தது என்பதைக் கூறத்தேவையில்லை. இந்த வெற்றி பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்ததன் காரணமாகக் கிடைத்த வெற்றி என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர்கள் கூறினார்கள்; ஆனால், பஞ்சாபில் தங்களது தோல்வி கூட்டணிக் கட்சியினால் ஏற்பட்டது என்று சாதாரணமாகக் கூறிவிட்டனர். பெருகி வரும் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் மீது,  உண்மையான பொருளாதார அளவுகளில், பேரழிவை ஏற்படுத்தும் தவிர்க்க இயலாத மாபெரும் பாதிப்பை, பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்படுத்தக் காந்திருந்த நிலையிலும், உ.பி. மாநில கிராமப்புறப் பகுதிகளிலிலோ அல்லது நகர்ப் புறங்களிலே, பெரும் அளவிலான எந்த எதிர்மறை பாதிப்பையும் அது ஏற்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. கடந்த காலத்தில் இருந்தது போலவே, இம்முறையும் ஜாதிக் கூட்டணிகளே துருப்புச் சீட்டுகளாக விளங்கின என்றாலும், பா.ஜ.க. பெற்ற 43 சதவிகித வாக்குகள் அதனை மறைத்துவிட்டன.

யாதவர் அல்லாத பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் மீது கவனம் செலுத்திய பா.ஜ.க. தேர்தல் கணக்கை மிகச் சரியாகவே போட்டிருந்தது. ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருந்து பின்னர் படிப்படியாக பா.ஜக.வுக்கு மாறி வந்திருக்கும் பாரம்பரியமான உயர் ஜாதிப் பிரிவினரின் ஆதரவை இதனால் பா.ஜ.க. இழக்க நேரிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த பிரச்சினையே, அத்தகைய உயர்ஜாதிப் பிரிவினரின் வாக்குகளைக் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் கொண்டு வந்து சேர்ப்பதற்கு அக் கட்சயில் எவரும் இல்லை என்பதுதான்.

பார்ப்பனர்-முஸ்லிம்கள்-தலித்துகள் கூட்டணியின் ஒரு பகுதி வாக்குகளைத் திரும்பப் பெறுவதற்காக தானாகவே போராடுவது என்பது அதன் கொள்கைகளுக்கு ஏற்றதாக இருந்திருக்கும். ஆனால் பிற்படுத்தப்பட்டோர் ஆதரவு சமாஜ்வாடி கட்சியுடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணி, காங் கிரஸ் கட்சிக்குள்ளேயே பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. எதிர்பாராத நெருக்கடிகள், பிரச் சினைகள் ஏற்படும்போது, தனித்து முடிவு எடுக்க இயலாத ஒரு கூட்டணியின் வாலாக இருப்பதில் உள்ள ஆபத்துகள் அதிகமானவையே. அதே போன்று, கடந்த முறை பெரும் அளவில் பார்ப்பனர் ஆதரவுடன் செயல்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி, முன்எப்போதும் இல்லாத அளவில் முஸ்லிம் வேட் பாளர்களுக்கு தனது கட்சி இடம் அளித்துள்ளது என மார் தட்டிக் கொண்டது, முன்னணியில் இருக்கும் உயர்ஜாதியினரை நிச்சயமாக மேலும் குழப்பிவிட்டது.

இது ஆதித்தியானந்த் மற்றும் சாக்க்ஷி மகராஜ் போன்றோருக்கு காதில் தேன் வந்து பாய்ந்தது போல இருந்தது. பா.ஜ.க.வின் இந்த தாண்டவத்தில், ஒரு பிரதமருக்கு அழகானது அல்ல என்று கூறும் படியாக, மோடி வெளிப்படையாகக் கலந்து கொண்டு, கபரிஸ்தானுக்கும் - சம்சானுக்கும் நடைபெறும் போர் இது என்று குறிப்பிட்டார். வாரணாசியில் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாள்களில் பங்கு கொண்ட மோடியின் இத்தகைய பேச்சும், பாணி யும் பா.ஜ.கட்சியை கூடுதல் ஆதரவு பெற இயன் றதாக ஆக்கி விட்டது. மதஅடிப்படையிலான வாக்கு பிரிவினை உண்மையில் ஏற்படுவதற்கு  முன்னதாகவே, அது பற்றிய வதந்தியின்  பிரச்சாரம் தொடங்கிவிட்டது. இதற்கு உதவி செய்த மின்னணு ஊடகங்கள் சில, அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி ஆகியோரின் கூட்டணியை ஒரு தனி மாதிரி யானதாக சித்தரித்தன. அண்மைக் கால உச்ச நீதி மன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி வலதுசாரி இந்து தீவிரவாதிகளுக்கு அமைதி காக்க வேண்டுகோள் விடும் அதே நேரத்தில், யாதவர் அல்லாத பிற்படுத் தப்பட்டோர் வாக்குகளை உயர்ஜாதியினரின் வாக்கு களையும் சேர்த்து தங்களது வெற்றியை பா.ஜ.க. உறுதிப்படுத்திக் கொண்டது.

அப்படியிருந்தும், முசாபர்நகர் கலவரங்களுக்குப் பின்னர் பகுஜன் சமாஜ் கட்சி இன்னமும் நல்ல முறையில் செயல்பட்டிருக்கும் என்று எதிர்பார்க் கப்பட்டதும்,  மேற்கு உ,பி. இல் அஜித் சிங்கின் ராஷ் டிரிய லோக் தளம் கட்சி முன்னணியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதும்  நிறைவேறவில்லை. இந்த இரு இடங்களிலும் இந்த இரு கட்சிகளின் அடித்தளம் சரிந்துவிட்டதாகவே தோன்றுகிறது. ஒரே ஒரு மாநிலத்தில் உள்ள  கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியை முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், இந்திய மக்களாட்சியின் அற்புதம் என்று வர்ணித்திருந்தார். கடந்த முறை தோல்வி அடைந்த பகுஜன்சமாஜ் கட்சி தனது  தோற்றத்தையும், அந்தஸ்தையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் இருந்தது. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியைக் கீழே அழுத்திவிட்டு, அதன் தலித் வாக்காளர்கள் சிலரைத் தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ள வேண்டி இருந்த பா.ஜ.கட்சியின்   தேவை, குறிப்பாக பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிப்பது அல்லது அக்கட்சியிடமிருந்து ஆதரவு பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி கூறத்  தொடங்கிய பிறகு,  அதிகரித்தது. அதனால், மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் மீது பகுஜன்சமாஜ் கட்சி  குற்றம் சாட்டியதில் வியப்பேதுமில்லை; மற்ற கட்சிகளும் அதனை அரை மனதுடன் ஆதரித்தன.

தேர்தல் விமர்சகர்களால் அதிகமாகப் பேசப்படாத ஒரு அம்சம் உண்டென்றால், அது சமாஜ்வாடி உட்கட்சியின்  சண்டைகள் இழைத்த பேரழிவைப் பற்றியதே ஆகும். தேர்தல் அட்டவணை வெளி யிடப்பட்டதற்குப் பிறகும் அக்கட்சியில் தோன்றிய சில பிளவுகள் காரணமாக, கட்சியின் முன்பு நிலவிய சகஜ நிலை திரும்பவே இல்லை. இரு பக்கத்து ஆதரவாளர்களும் விடுத்த பத்திரிகை அறிக்கைகளும், அளித்த பேட்டிகளும் கொஞ்சம் நஞ்சமல்ல. இதனை வெளி ஆட்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஓர் ஆழ்ந்த பகுத்தாய்வு அக்கதை முழுவதையும் தெரிவிக்கும். என்றாலும், இளம் முதலமைச்சரைப் பொருத்த வரை, அவர் இரு பெரும் மலைகளுக்கு இடையே சிக்கிக் கொண்டது போன்ற நிலையிலேயே இருந்தார். கட்சியில் பிளவு ஏற்படுவதை அகிலேஷ் யாதவ் அனுமதித்தது தவறு என்றும் கூறுவதற்கில்லை. இளைஞரான அவரால் கட்சியைத் தொடர்ந்து கட்டுக்கோப்புடன் வைத்திருக்கவும் முடியும். இந்த தேர்தல் அரசியல் புயலில் சிக்கித் தவிக்கும் அவரால், அதில் இருந்து மீண்டும் வெளிவந்து மறுபடியும் போட்டியிடவும் இயலும். காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் இளைஞர் ராகுலுக்கும் இது பொருந்தும். அவர்களின் கூட்டணி இம்முறை வெற்றி பெறவில்லை என்றாலும், அக்கூட்டணியைத் தொடர்ந்து பலப்படுத்தி, 2019 தேர்தலில் தற்போது இழந்த இழப்பை ஈடுசெய்ய முடியும். இதற்கான மாற்று வழிகளை சிந்திப்பது முயற்சி இன்மைக்கும், ஆற்றல் அழிவுக்கும், தொடர் தோல்விகளுக்குமே வழி வகுக்கும். ஆனால், அதற்கு காயம் பட்ட காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சித் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் பொறுமையும், எதிர்காலத்தைப் பற்றிய ஒரு உறுதியான கண்ணோட்டமும்,  அனைத்துக்கும் மேலாக, 2017 தேர்தல் தோல்வியால் அடைந்த அதிர்ச்சியைத் தாண்டிச் செல்லும் தொலை நோக்குப் பார்வையும் இன்றியமையாதவை ஆகும்.

அதற்கு நேர் மாறாக, பா.ஜ.கட்சியின் இந்த வெற்றி,  2019 ஆம் ஆண்டு தேர்தல் தொடர்பான அக்கட்சியின் பிரச்சினைகளின் தொடக்கமாக அமைந்திருக்கவும் கூடும். மதம் மற்றும் அடையாள அடிப்படையில் மக்களிடையே பிளவை ஏற்படுத்த இயன்ற அக்கட்சித் தலைவர்களின் திறமை உண்மையான கோட்பாட்டு அளவிலான பிளவை உருவாக்க இயன்றதாகவும் இருக்கக்கூடும்.  அவர்கள் அளித்த முட்டாள்தனமான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையினால், முன்னேற்றம் பற்றிய அவர்களது பேச்சு ஒதுக்கித் தள்ளப்படும். 2017 ஆம் ஆண்டு சண்டையில் வேண்டுமானால் அவர்கள் வெற்றி பெற்றிருக்கக்கூடும்; ஆனால் 2019 போரில் அவர்கள் தோல்வியே அடைவர்.

நன்றி: ‘தி டெக்கான் கிரானிகிள்’ 14.03.2017

தமிழில்:  த.க.பாலகிருட்டிணன்.

Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4

2019 மக்களவை தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பினை

பா...வின் எதிர்கட்சிகள் இழந்துவிடவில்லை

- லூசி குர்ஷித் -

(பார்ப்பனர்-முஸ்லிம்கள்-தலித்துகள் கூட்டணி யின் ஒரு பகுதி வாக்குகளைத் திரும்பப் பெறுவதற்காக தானாகவே தனியாகப் போராடுவது என்பது காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு ஏற்றதாக இருந்திருக்கும். ஆனால் பிற்படுத்தப்பட்டோர் ஆதரவு சமாஜ்வாடி கட்சியுடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணி, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. எதிர்பாராத நெருக்கடிகள், பிரச் சினைகள் ஏற்படும்போது, தனித்து முடிவு எடுக்க இயலாத ஒரு கூட்டணியின் வாலாக இருப்பதில் உள்ள ஆபத்துகள் அதிகமானவையே. அதே போன்று, கடந்த முறை பெரும் அளவில் பார்ப்பனர் ஆதரவுடன் செயல்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி, முன்எப்போதும் இல்லாத அளவில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு தனது கட்சி இடம் அளித்துள்ளதாக மார் தட்டிக் கொண்டது, முன்னணியில் இருக்கும் உயர்ஜாதியினரை நிச்சய மாக மேலும் குழப்பிவிட்டது.)

அண்மையில் நடைபெற்ற அய்ந்து மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியபோது, அகிலேஷ் யாதவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் தீவிர ஆதரவாளர்களும், நாங்களும், சென்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் நடைபெற்றது போலவே, இப்போதும் தேர்தல் கணிப்புகள் தவறாகிப் போகும் என்று உறுதியாக நம்பியிருந்தோம்.

உண்மையைக் கூறுவதானால், பா... தனிப் பெரும் கட்சியாக வந்தாலும், மாயாவதி ஆதரவு தர மறுக்கும் காரணத்தால், ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டு, ஒரு தொங்கு சட்டமன்றம் ஏற்படுவதையே நான் எதிர்பார்த்திருந்தேன். முஸ்லிம்களின் உறுதியான ஆதரவைக் கொண்டு தனது தலித் ஆதரவு வாக்கு வங்கியை, பலப் படுத்திக் கொள்வதைப் பற்றி பகுஜன் சமாஜ் கட்சி கவலைப்படத் தொடங்கியிருந்ததையே, அக் கட்சியின் வேட்பாளர்கள் தேர்வு தெளிவான எடுத்துக் காட்டாக அமைந்திருந்தது.

ஆனால், உண்மையில் வெளிவந்த முடிவுகள் மிகுந்த அதிர்ச்சி அளிப்பவையாக இருந்தது என்பதைக் கூறத்தேவையில்லை. இந்த வெற்றி பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மக்களிடையே செல்வாக்கு பெற்றிருந்ததன் காரணமாகக் கிடைத்த வெற்றி என்று பா... செய்தித் தொடர்பாளர்கள் கூறினார்கள்; ஆனால், பஞ்சாபில் தங்களது தோல்வி கூட்டணிக் கட்சியினால் ஏற்பட்டது என்று சாதாரணமாகக் கூறிவிட்டனர். பெருகி வரும் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் மீது, உண்மையான பொருளாதார அளவுகளில், பேரழிவை ஏற்படுத்தும் தவிர்க்க இயலாத மாபெரும் பாதிப்பை, பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்படுத்தக் காந்திருந்த நிலையிலும், .பி. மாநில கிராமப்புறப் பகுதிகளிலிலோ அல்லது நகர்ப் புறங்களிலே, பெரும் அளவிலான எந்த எதிர்மறை பாதிப்பையும் அது ஏற்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. கடந்த காலத்தில் இருந்தது போலவே, இம்முறையும் ஜாதிக் கூட்டணிகளே துருப்புச் சீட்டுகளாக விளங்கின என்றாலும், பா... பெற்ற 43 சதவிகித வாக்குகள் அதனை மறைத்துவிட்டன.

யாதவர் அல்லாத பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்கள் மீது கவனம் செலுத்திய பா... தேர்தல் கணக்கை மிகச் சரியாகவே போட்டிருந்தது. ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருந்து பின்னர் படிப்படியாக பா.ஜக.வுக்கு மாறி வந்திருக்கும் பாரம்பரியமான உயர் ஜாதிப் பிரிவினரின் ஆதரவை இதனால் பா... இழக்க நேரிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த பிரச்சினையே, அத்தகைய உயர்ஜாதிப் பிரிவினரின் வாக்குகளைக் காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் கொண்டு வந்து சேர்ப்பதற்கு அக் கட்சயில் எவரும் இல்லை என்பதுதான்.

பார்ப்பனர்-முஸ்லிம்கள்-தலித்துகள் கூட்டணியின் ஒரு பகுதி வாக்குகளைத் திரும்பப் பெறுவதற்காக தானாகவே போராடுவது என்பது அதன் கொள்கைகளுக்கு ஏற்றதாக இருந்திருக்கும். ஆனால் பிற்படுத்தப்பட்டோர் ஆதரவு சமாஜ்வாடி கட்சியுடன் ஏற்படுத்திக் கொண்ட கூட்டணி, காங் கிரஸ் கட்சிக்குள்ளேயே பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. எதிர்பாராத நெருக்கடிகள், பிரச் சினைகள் ஏற்படும்போது, தனித்து முடிவு எடுக்க இயலாத ஒரு கூட்டணியின் வாலாக இருப்பதில் உள்ள ஆபத்துகள் அதிகமானவையே. அதே போன்று, கடந்த முறை பெரும் அளவில் பார்ப்பனர் ஆதரவுடன் செயல்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி, முன்எப்போதும் இல்லாத அளவில் முஸ்லிம் வேட் பாளர்களுக்கு தனது கட்சி இடம் அளித்துள்ளது என மார் தட்டிக் கொண்டது, முன்னணியில் இருக்கும் உயர்ஜாதியினரை நிச்சயமாக மேலும் குழப்பிவிட்டது.

இது ஆதித்தியானந்த் மற்றும் சாக்க்ஷி மகராஜ் போன்றோருக்கு காதில் தேன் வந்து பாய்ந்தது போல இருந்தது. பா...வின் இந்த தாண்டவத்தில், ஒரு பிரதமருக்கு அழகானது அல்ல என்று கூறும் படியாக, மோடி வெளிப்படையாகக் கலந்து கொண்டு, கபரிஸ்தானுக்கும் - சம்சானுக்கும் நடைபெறும் போர் இது என்று குறிப்பிட்டார். வாரணாசியில் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாள்களில் பங்கு கொண்ட மோடியின் இத்தகைய பேச்சும், பாணி யும் பா..கட்சியை கூடுதல் ஆதரவு பெற இயன் றதாக ஆக்கி விட்டது. மதஅடிப்படையிலான வாக்கு பிரிவினை உண்மையில் ஏற்படுவதற்கு முன்னதாகவே, அது பற்றிய வதந்தியின் பிரச்சாரம் தொடங்கிவிட்டது. இதற்கு உதவி செய்த மின்னணு ஊடகங்கள் சில, அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி ஆகியோரின் கூட்டணியை ஒரு தனி மாதிரி யானதாக சித்தரித்தன. அண்மைக் கால உச்ச நீதி மன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி வலதுசாரி இந்து தீவிரவாதிகளுக்கு அமைதி காக்க வேண்டுகோள் விடும் அதே நேரத்தில், யாதவர் அல்லாத பிற்படுத் தப்பட்டோர் வாக்குகளை உயர்ஜாதியினரின் வாக்கு களையும் சேர்த்து தங்களது வெற்றியை பா... உறுதிப்படுத்திக் கொண்டது.

அப்படியிருந்தும், முசாபர்நகர் கலவரங்களுக்குப் பின்னர் பகுஜன் சமாஜ் கட்சி இன்னமும் நல்ல முறையில் செயல்பட்டிருக்கும் என்று எதிர்பார்க் கப்பட்டதும், மேற்கு ,பி. இல் அஜித் சிங்கின் ராஷ் டிரிய லோக் தளம் கட்சி முன்னணியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதும் நிறைவேறவில்லை. இந்த இரு இடங்களிலும் இந்த இரு கட்சிகளின் அடித்தளம் சரிந்துவிட்டதாகவே தோன்றுகிறது. ஒரே ஒரு மாநிலத்தில் உள்ள கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியை முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், இந்திய மக்களாட்சியின் அற்புதம் என்று வர்ணித்திருந்தார். கடந்த முறை தோல்வி அடைந்த பகுஜன்சமாஜ் கட்சி தனது தோற்றத்தையும், அந்தஸ்தையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையில் இருந்தது. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியைக் கீழே அழுத்திவிட்டு, அதன் தலித் வாக்காளர்கள் சிலரைத் தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ள வேண்டி இருந்த பா..கட்சியின் தேவை, குறிப்பாக பா...வுக்கு ஆதரவு அளிப்பது அல்லது அக்கட்சியிடமிருந்து ஆதரவு பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சி கூறத் தொடங்கிய பிறகு, அதிகரித்தது. அதனால், மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் மீது பகுஜன்சமாஜ் கட்சி குற்றம் சாட்டியதில் வியப்பேதுமில்லை; மற்ற கட்சிகளும் அதனை அரை மனதுடன் ஆதரித்தன.

தேர்தல் விமர்சகர்களால் அதிகமாகப் பேசப்படாத ஒரு அம்சம் உண்டென்றால், அது சமாஜ்வாடி உட்கட்சியின் சண்டைகள் இழைத்த பேரழிவைப் பற்றியதே ஆகும். தேர்தல் அட்டவணை வெளி யிடப்பட்டதற்குப் பிறகும் அக்கட்சியில் தோன்றிய சில பிளவுகள் காரணமாக, கட்சியின் முன்பு நிலவிய சகஜ நிலை திரும்பவே இல்லை. இரு பக்கத்து ஆதரவாளர்களும் விடுத்த பத்திரிகை அறிக்கைகளும், அளித்த பேட்டிகளும் கொஞ்சம் நஞ்சமல்ல. இதனை வெளி ஆட்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஓர் ஆழ்ந்த பகுத்தாய்வு அக்கதை முழுவதையும் தெரிவிக்கும். என்றாலும், இளம் முதலமைச்சரைப் பொருத்த வரை, அவர் இரு பெரும் மலைகளுக்கு இடையே சிக்கிக் கொண்டது போன்ற நிலையிலேயே இருந்தார். கட்சியில் பிளவு ஏற்படுவதை அகிலேஷ் யாதவ் அனுமதித்தது தவறு என்றும் கூறுவதற்கில்லை. இளைஞரான அவரால் கட்சியைத் தொடர்ந்து கட்டுக்கோப்புடன் வைத்திருக்கவும் முடியும். இந்த தேர்தல் அரசியல் புயலில் சிக்கித் தவிக்கும் அவரால், அதில் இருந்து மீண்டும் வெளிவந்து மறுபடியும் போட்டியிடவும் இயலும். காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் இளைஞர் ராகுலுக்கும் இது பொருந்தும். அவர்களின் கூட்டணி இம்முறை வெற்றி பெறவில்லை என்றாலும், அக்கூட்டணியைத் தொடர்ந்து பலப்படுத்தி, 2019 தேர்தலில் தற்போது இழந்த இழப்பை ஈடுசெய்ய முடியும். இதற்கான மாற்று வழிகளை சிந்திப்பது முயற்சி இன்மைக்கும், ஆற்றல் அழிவுக்கும், தொடர் தோல்விகளுக்குமே வழி வகுக்கும். ஆனால், அதற்கு காயம் பட்ட காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சித் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் பொறுமையும், எதிர்காலத்தைப் பற்றிய ஒரு உறுதியான கண்ணோட்டமும், அனைத்துக்கும் மேலாக, 2017 தேர்தல் தோல்வியால் அடைந்த அதிர்ச்சியைத் தாண்டிச் செல்லும் தொலை நோக்குப் பார்வையும் இன்றியமையாதவை ஆகும்.

அதற்கு நேர் மாறாக, பா..கட்சியின் இந்த வெற்றி, 2019 ஆம் ஆண்டு தேர்தல் தொடர்பான அக்கட்சியின் பிரச்சினைகளின் தொடக்கமாக அமைந்திருக்கவும் கூடும். மதம் மற்றும் அடையாள அடிப்படையில் மக்களிடையே பிளவை ஏற்படுத்த இயன்ற அக்கட்சித் தலைவர்களின் திறமை உண்மையான கோட்பாட்டு அளவிலான பிளவை உருவாக்க இயன்றதாகவும் இருக்கக்கூடும். அவர்கள் அளித்த முட்டாள்தனமான வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையினால், முன்னேற்றம் பற்றிய அவர்களது பேச்சு ஒதுக்கித் தள்ளப்படும். 2017 ஆம் ஆண்டு சண்டையில் வேண்டுமானால் அவர்கள் வெற்றி பெற்றிருக்கக்கூடும்; ஆனால் 2019 போரில் அவர்கள் தோல்வியே அடைவர்.

நன்றி: ‘தி டெக்கான் கிரானிகிள்’ 14.03.2017

தமிழில்: ..பாலகிருட்டிணன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  

Security code
Refresh

Banner
Banner