எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- சஞ்சய் அஹூலிவாலா -

(ஒரு ஏழை விண்ணப்பதாரரோ அல்லது வழக்காடுபவரோ தனது போராட்டத்தைக் கைவிடச் செய்ய வேண்டிய ஒரு நிலை ஏற்படலாம். ஆனால், அதற்காகக் கவலைப்படத் தேவையில்லை. கருப்பு எஜமானர் நியாயத்தில், விளைவுகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட இயன்றவையாக வளைந்து கொடுக்காமல் உறுதியாக நிற்பவை அல்ல கொள்கைகள். பெரும்பாலும் அவர்கள் நடைமுறையை மட்டுமே நியாயப்படுத்துகின்றனரே அன்றி, விளைவுகளை நியாயப் படுத்துவதில்லை.)

யோகி உத்தரப்பிரதேச முதலமைச்சராக வந்த தைக் கண்டு மதச் சார்பற்றவர்கள் கவலைப்படுகின்றனர். அவர்கள் கவலைப்படுவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஆதித்தியநாத் யோகிக்கும் ஓர் அரசியல் செயல் பாட்டுக் கோட்பாட்டு வரலாறு உண்டு. தன்மேல் உள்ள புள்ளிகளை மறைத்துக் கொண்டு, அனைத்து மக்களையும் சமமாக நடத்தி ஆட்சி செய்ய அவரால் இயலுமா? காலம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

ஆனால், இந்துத்துவாவை ஆதரிக்காத அனை வரும் அச்சப்பட வேண்டியவர்கள்தான். வெறும் நம்பிக்கை மட்டுமே போதுமான உறுதிமொழியாக இருக்காது. ஓர் எதிர்மறை விளைவினைத் தவிர்ப் பதற்கான அமைப்பு ரீதியிலான பாதுகாப்புகளை நாம் ஏன் பெற்றிருக்கவில்லை என்பதுதான் உண் மையான கேள்வி. மதம் சார்ந்த நாடாக இல்லாமல் இருப்பதற்கான கட்டுப்பாடுகளை குறிப்பாக நமது அரசமைப்பு சட்டத்தில் இடம் பெறச் செய்து, நடைமுறை சாத்தியமான சட்டங்களாக ஏன் அது பொறிக்கப்படவில்லை?

நாம் இந்த விவகாரத்தை இன்னமும் சற்று அதிக மாக அறிந்திருக்க வேண்டும். ஒரு ஜனநாயகக் கட்டமைப்பை முறையாகப் பின்பற்றி, நாம் மேற்கொண்டிருக்கும் பயணத்தில்,  நாம் இயல்பாக சென்றடைய வேண்டிய இடத்தை சென்றடைந்திருக்கிறோம். அது பற்றிய தொடக்க கால அறிகுறிகள் காணப்பட்டன. வசதி படைத்த மக்களை அவை பெரிதும் பாதிக்கவில்லை என்ப தால்,  அவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப் படாமல் அலட்சியப்படுத்தப்பட்டன. இந்திய மக்கள் தொகையில் அய்ந்தில் ஒரு பங்கினர் மிகமிக மோசமான வறுமையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர். நாட்டு முன்னேற்றத்தின் பயன்கள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கவில்லை என்பதையே காட்டுகிறது. மக்களாட்சி சமத்துவம் என்ற நிலைக்கு மாற்றம் பெறத் தவறிய மற்றொரு எடுத்துக்காட்டு பெண்களின் நிலையே ஆகும்.

ஆனால், இவ்விரண்டிலும் உள்ள நல்ல செய்தி என்னவென்றால், நாட்டு முன்னேற்றப் பயன்களில் அனைத்து மக்களையும் பயன்பெறச் செய்வது பற்றி நாம் கற்றறிந்து கொண்டு, படிப்படியாக அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கட்டமைத்து வருகிறோம் என்பதுதான். இதில்  தாழ்த்தப்பட்ட பிரிவு, பழங்குடியின மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் ஓரளவுக்கு உதவி செய்துள்ளது. சட்ட மன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கான நடைமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

வித்தியாசமாகத் தோன்றினாலும், தற்போது கோரக்பூர் மடத்தில் தலைவராக உள்ள காவியுடை ஆதித்தியானந்தை பா.ஜ.க. முதல்வராகத் தேர்ந் தெடுத்திருப்பது வரவேற்கப்படத் தக்கதுதான். பிற் படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக நியமித்துவிட்டு, ‘‘பார்த்தீர்களா, பார்த்தீர்களா.  நாங்கள் அரசியல் விளையாட்டை நன்றாகவே ஆடுகிறோம்’’ என்று தந்திரமாக பா.ஜ.க.வினால் கூறி இருந்திருக்க முடியும். அவ்வாறு பா.ஜ.க. செய்யாமல் இருந்ததே, கொள்கைகளுக்கும் நடைமுறைக்கும் இடையே நிலவும் அகண்ட சட்ட இடைவெளியைக் காட்டுவதாக இருக்கிறது. நாமனைவரும், நமது இதயத்தால் உணர்ந்து சிந்தித்து செயல்படாத வரை, இந்திய ஜனநாயகத்தில் உள்ள குறைகளையெல்லாம் தீர்த்துவிட முடியாது.

ஆதித்தியானந்த்பற்றி உள்ள கவலையின் பெரும்பகுதி ‘‘கருப்பு எஜமானர்’’ என்ற காலனி ஆதிக்க காலத்து, கலாச்சார அரசியல் நியாயத் தன்மையில் இருந்து பெறப்பட்டதாகும். இந்த கலாச்சாரம் பழக்க வழக்கங்களுக்கு ஆதரவு அளிக்கிறது; அந்த நடைமுறை சட்டத்தின் விளைவு களுக்கு முரண்பாடாக இருக்கிறது. அவ்வாறு செய்யும்போது, ஒரு ஏழை விண்ணப்பதாரரோ அல்லது வழக்காடுபவரோ தனது போராட்டத்தைக் கைவிடச் செய்ய வேண்டிய ஒரு நிலை ஏற்படலாம். ஆனால், அதற்காகக் கவலைப்படத் தேவையில்லை. கருப்பு எஜமானர் நியாயத்தில், விளைவுகளின் அடிப்படையில் மதிப்பிடப்பட இயன்றவையாக வளைந்து கொடுக்காமல் உறுதியாக நிற்பவை அல்ல கொள்கைகள். பெரும்பாலும் அவர்கள் நடைமுறையை மட்டுமே நியாயப்படுத்துகின்றனரே அன்றி, விளைவுகளை நியாயப் படுத்துவதில்லை.  நம் சட்டங்களில் உள்ள ‘‘தான்  எடுத்துக் கூறும் நியாயம்  கேட்கப்படுவதற்கான உரிமை’’  ‘‘வாக்களிக்கவோ அல்லது சொத்து வைத்திருப்பதற்கான உரிமை’’ பற்றிய கொள்கைகள் எவ்வளவு மோசமான அளவில் அமைந்துள்ளன என்பதைப் பாருங்கள்.

நமது ஜனநாயகக் கட்டமைப்பு, இந்தியாவின் உண்மை நிலையை போதுமான அளவில்  பிரதி பலிப்பதாக இல்லாத முறையில், எண்ணற்ற பிரிவுகளுடன்  மேம்படுத்தப்பட்டுள்ளது. வசதி படைத்தவர்களின்  ஆட்சி கடந்த 70 ஆண்டு காலமாக கேள்வி முறையில்லாமல் நடைபெற இயன்றுள்ளது என்றால், கேள்வி முறையற்ற மதசார்புள்ள ஆட்சி நாளை கொண்டுவரப்பட்டாலும் அது வியப்பளிக்காது.

ஒரு இந்து யோகியோ, ஒரு முஸ்லிம் மவுல்வியோ, ஒரு சீக்கிய மதகுருவோ அல்லது ஒரு கிறித்தவ பாதிரியாரோ முதல்வராக இருப்பதைப் பற்றி சங்கடப்படக் கூடியவராக தாங்கள் இருந்தால்,  நமது அரசியல் கட்டமைப்பில் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய மூன்று மாற்றங்கள் உள்ளன.

முதலாவதாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் எவரை வேண்டுமானாலும் முதலமைச்சராக தேர்ந்தெடுப்பதற்கான உரிமை வெற்றி பெற்ற அரசியல் கட்சிக்கு உள்ளது என்பது. ஒரு மதத் தலைவரோ, குருவோ முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது என்று ஒரு சட்டத்தை இயற்ற நம்மால் இயலாதா? அது இயலக்கூடியது அல்ல. அதன் காரணம், மதக்குழு ஒன்றின் பிரதிநிதித்துவத்திற்கான அடிப்படை உரிமையை அது மீறுவதாக ஆகும். மேலும், மதகுரு என்று முடிவு செய்வதற்கு குழப்பமற்ற தெளிவான விளக்கம் ஏதுமில்லை என்பதும் மற்றொன்று. 2003 - மத்திய பிரதேச மாநில சட்ட மன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு நான்கில் மூன்று பங்கு தொகுதிகளில் வெற்றியைத் தேடித் தந்த சாத்வி உமாபாரதி, அம்மாநில முதல்வராக ஆனார். ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்பு கலவரம் ஒன்றைத் தூண்டிவிட்ட வழக்கு ஒன்றில் அவரைக் கைது செய்வதற்கான வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அவர் முதல்வர் பதவியில் இருந்து தற்காலிகமாக விலகவேண்டி நேரிட்டது. மதத் தலைவர்கள் எவ்வாறு அரசியல் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்ற ஆய்வு செய்வதற்கான வாய்ப்பை ஆய்வாளர்களுக்கு அளிப்பது இந்த  வழக்கின் பின்னடைவின் காரண மாக மறுக்கப்பட்டுவிட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் சிடுமூஞ்சிக்காரர்களை வியப்படையச் செய்திருக்கும்.  மறைமுகமாகவும்கூட ஒரு மதம் சார்ந்த நாடாக ஆவதற்கான ஆற்றல்களைத் தடுத்து நிறுத்துவதற்கான வெளிப்படையான பாதுகாப்பு நடைமுறைகளை உருவாக்குவதே சிறந்ததாகும்.

தேசிய அளவிலாவது,  பன்முகத்தன்மை கொண்ட , சிக்கிம் அல்லது வடமேற்கு மாநிலம் நீங்கலாக ,பல பெரிய மாநிலங்களின் அளவிலாவது  பொருந்தக்கூடிய ஒரு தேர்வாக ஒரு நிபந்தனையாக, முதல்வர், உள்துறை அமைச்சர், நிதி அமைச்சர் பதவிகளை வகிப்பதற்கு ஒரே மதம் அல்லது ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படக்கூடாது  என்ற விதியை நிர்ணயிக்கலாம். ஓர் அமைச்சரவையில் இவை மூன்றும்தான் முக்கியமான பதவிகளாகும். குறுகிய நோக்கம் கொண்ட, பாலினம், மதம், ஜாதி அடிப்படையில் கட்சித் தொண்டர்களில் இருந்து தலைவர்களை உருவாக்குவதை விட,  ஜாதி மதக் கலப்பு கொண்ட, வண்ண மயமான தலைமையை உருவாக்குவதற்கு அரசியல் கட்சிகளுக்கு தானாகவே உந்துதல் இதன் மூலம் ஏற்படும். பொருத்தமான தகுதிகள் கொண்ட சாதாரண உறுப்பினர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதும் இதன் மூலம் இயலும். எனவே, தேர்தலுக்குப் பிறகு, சாதாரணமான கட்டுப்பாடுகளை மட்டுமே ஏற்படுத்துவதை விட மேலான பலவற்றை நாம் செய்ய வேண்டியுள்ளது.

இரண்டாவதாக, அமைக்கப்படும் அமைச்சரவை, பாலினம், ஜாதி மற்றும் மதம் ஆகியவற்றை பிரதி நிதித்துவப்படுத்துவதாக இருக்கவேண்டும். முடிவு எடுக்கும் நிலையில், போதுமான அளவில் பன்முக பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதற்கு இது தேவையாகும்.

மூன்றாவதாக, தேர்தல்களில் கட்சிகள் போட்டி யிட்டு வெற்றி பெறுவதற்கு அடிப்படையாக உள்ள வற்றை நாம் மாற்ற வேண்டும். பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் எல்லாம்,  சட்டப்படி அனைத்து மத, ஜாதி, பிரிவு மக்களுக்கும் இடம் அளிக்கும் வகையில், அரசின் மூன்று நிலைகளிலும் அதாவது உள்ளாட்சி, சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தல் களிலும்,  வேட்பாளர்களைத் தேர்வு செய்து நிற்க வைக்க வேண்டும்.  அது தேர்தல் பரப்புரையின் தன்மையையே  மாற்றிவிடும் என்பதால்  இது தேவைப்படுகிறது. அப்போது வாக்குகள் குறுகிய பிரிவினை மனப்பான்மையின் அடிப்படையில் கேட்கப்படுவதில்லை என்பதுடன், கட்சிகள் ஒரு பன்முக வாக்காளர் அடித்தளத்தை வளர்த்துக் கொள்கின்றன.

இந்த மாற்றங்கள் அனைத்தும் அரசமைப்பு சட்டத்திற்குக் கொண்டு வரப்படவேண்டிய திருத்தங் களாகும். அதன் மூலம், பன்முகத்தன்மை என்பது சட்டமன்றங்களிலும், நிருவாகத்திலும் நீங்காத இடம் பெறும்.

பிரதமராகவோ, முதலமைச்சராகவோ ஒரு மதத் தலைவர் ஒரு நாட்டில் அல்லது மாநிலத்தில் இருப்பதால் மட்டுமே இந்திய நாடோ அல்லது உ.பி. போன்ற மாநிலமோ மதசார்பு அரசாக ஆகிவிடமுடியும் என்பதை தலைமையில் உள்ளவர்கள் நம்பவேண் டும். நமது அரசமைப்பு சட்டம் தாராளமானதாகவும், பாகுபாடு காட்டாததாகவும் இருக்கும் வரை, அரசமைப்பு சட்டத்தில் இருந்து பிறக்கும் சட்டத்தின் மூலம்நீதித்துறைஅதிகாரம்பெற்றதாகவும்,பன் முகத்தன்மைகொண்டதாகவும்,நாட்டின்முன் னேற்றத்தில்அனைத்துமக்களையும்உள்ள டக்கியதாகவும் இருப்பது சட்டத்தில் பொறிக் கப்பட்டிருப்பதாகும். ஆனால், அனைத்து மக்களையும் உள்ளடக்கிய அரசியலை அளிக்கத் தேவையான கூடுதல் பாதுகாப்புகள் மேற்கொள்ளப்படுவதும்,  களநடவடிக்கை மேற்கொள்ளப்படுவதும்  இன்றி யமையாதவை ஆகும். இச்செயலை செய்து முடிப் பதற்கு பா.ஜ.க. ஒரு வலுவான இடத்தில் இன்று உள்ளது. தனது அறுதிப் பெரும்பான்மையைப் பயன்படுத்தி, நல்ல நம்பிக்கையுடன் 2019-க்குள் அரசமைப்பு சட்டத்திற்கு இந்த மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.

நன்றி: ‘தி டெக்கான் கிரானிகிள்’, 22.03.2017

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner