எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- ஏ.ஜி.நூராணி -

 

(சங்பரிவாரத்தின் தேசியம் ஒரு முறைகேடான  கோட்பாட்டையும், கருத்து வேறுபாடு பற்றி சகிப்புத் தன்மை இன்மையையும் எடுத்துக் காட்டுவதாகும். நாட்டின் சுதந்திரப் போராட்டம் பற்றி உருவாகி செயல்பட்ட  தேசிய கருத்தொற்றுமையையும், சுதந்திரம் பெற்றதற்குப் பின்  பல பத்தாண்டுகள் காலத்துக்குப் பின்னும்  அது நீடித்து நிலைத்து இருந்ததைப் பற்றிய நினைவுகளையும் துடைத் தெறிவதுதான் அதன் நோக்கம்.)

நாட்டுப் பற்று எங்களது தலைப்புகளில் ஒன்றாக ஆகிவிட்டபோது, தனது உரத்த, தீர்மானமான தொனியில் திடீரென்று வெடித்துக் கிளம்பிய ஜான்சனின் பழமொழியைப் பலரும் இவ்வாறுதான் சொல்லத் தொடங்குவர்: ‘‘நாட்டுப் பற்று என்பது அயோக்கியனின் இறுதி புகலிடம்’’ என்பதே அது. ஆனால், நமது நாட்டைப் பற்றிய ஓர் உண்மை யான, பெருந்தன்மையான அன்பையும் அவர் கொண்டிருந்தார் என்று இது பொருள் அளிக்காது என்றே கருதப்படவேண்டும். ஆனால், அனைத்துக் காலங்களிலும், கொண்டிருப்பதாக பாசாங்கு மேற் கொள்ளப்பட்ட தேசியம், சுயநலத்தை மறைப்பதற்கான ஒரு மேலாடையைப் போன்றதாக ஆகிவிட்டது.

-ஜேம்ஸ் பாஸ்வெல்லின் ‘டாக்டர் ஜான்சன் வாழ்க்கை வரலாறு’

அரைகுறையாக சுட்டிக்காட்டப்பட்ட ஒரு குறிப்பு, எந்த ஆதாரத்தில் இருந்து, எந்த சந்தர்ப்பத்தில் தோன்றியது என்பதைத் தேடிக் காண முயல்வது எப்போதுமே, அதன் உண்மையான நோக்கத்தைக் கண்டுபிடிக்க உதவுகிறது. சங்பரிவாரத்தின் - ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., அகில பாரதிய வித்யார்த்தியா பரீசத் மற்றும் இதர அமைப்புகளைச் சார்ந்த  கோடிக் கணக்கான சில்லறை தேவதைகளை செயல்படச் செய்வது, தங்களது வகையான நாட்டுப் பற்றைப் பிரகடணம் செய்ய வேண்டும் என்ற அவர்களது சுயநலம் காரணமாக மட்டும்தான்.

சங்பரிவாரத்தின் தேசியம் ஒரு முறைகேடான  கோட்பாட்டையும், கருத்து வேறுபாடுபற்றிய சகிப்புத் தன்மை இன்மையையும் எடுத்துக் காட்டுவதாகும். நாட்டின் சுதந்திரப் போராட்டம் பற்றி உருவாகி செயல்பட்ட  தேசிய கருத்தொற்றுமையையும், சுதந்திரம் பெற்றதற்குப் பின்  பல பத்தாண்டுகள் காலத்துக்குப் பின்னும்  அது நீடித்து நிலைத்து இருந்ததைப் பற்றிய நினைவுகளையும் துடைத்தெறிவதுதான் அதன் நோக்கம்.  ஜவஹர்லால் நேரு அதன் அடையாளமாக விளங்கினார்; அதன் மய்யத்தில் இடம் கொண்டிருந்த ஒரு மதசார்பற்ற அரசியலில்  ஒரு தாராளமயமான மக்களாட்சி அமைந்திருந்தது.

எந்த வழியிலும் அதனைத் தோற்றுவித்தவர் நேரு அல்ல. ஆனால், அதனை பலமாக ஆதரித்து கடுமையாக  பிரச்சாரம் செய்து முன்னெடுத்துச் சென்றவர் நேருதான். வினாயகராம் தாமேதர் சாவர்க் கரின் அத்தியந்த சீடர் சியாம் பிரதாப் முகர்ஜி என்ற சங் பரிவார அமைப்பின் உறுதியான தீர்மானம் கொண்ட தலைவராலும்,  மற்ற  சங்பரிவாரத்தவர்களாலும்,   அதற்கு எதிராகக் குவிக்கப்பட்ட சவால்களுக்கிடையே  அதனை  மிகுந்த ஆர்வத்துடன் முன்னெடுத்துச் சென்றவர் நேருவே ஆவார். மகாத்மா காந்தியை ஏற்றுக் கொள்வதற்கே பா.ஜ.கட்சிக்கு நீண்ட கால மாயிற்று. பி.ஆர்.அம்பேத்கர், பகத் சிங் போன்ற மற்ற சுதந்திர போராட்டத் தலைவர்களுக்கு மரியாதை அளித்து பா.ஜ.க.ஏற்றுக் கொண்டது. ஆனாலும், அதன் இலக்கு  ஜவஹர்லால் நேருவுக்கு எதிரான ஒன்றாகவே  இருந்தது. ஆர்.எஸ்.எஸ்.சும், இந்து மகா சபையும் எப்போதுமே நாட்டின் சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் கலந்து கொண்டதில்லை; அதன் மதிப்பீடுகளைப் பகிர்ந்து கொண்டதுமில்லை. நாட்டுப் பிரிவினைக்குப் பிறகு ஏற்பட்ட மதக் கலவரங்களின் அலையில் ஆட்சிக்கு வர காவிப் படையினர் முயன்றனர். அவர்களின் அந்த முயற்சியைத் தோற் கடித்த காந்தி அதற்காக அவரது உயிரையே பலி கொடுத்தார். காந்தி கொல்லப்பட்டு 40 ஆண்டுகள் கடந்த பிறகுதான் காந்தியை ஏற்றுக் கொள்ள அவர்களால் முடிந்தது என்பதற்கு தந்திரமான காரணங்கள் உள்ளன. காந்தியைப் படுகொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டிய மனிதரான சாவர்க்கரின்  படம் கொல்லப்பட்ட காந்தியின் படத்திற்கு எதிரிலேயே நாடாளுமன்றத்தின் நடுக் கூடத்தில் காட்சி தருகிறது. ஆனால் நேருவை சங் பரிவாரத்தினரால் எப்போதுமே ஏற்றுக் கொள்ள முடியாது.

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்ற பிறகு, நாடு சுதந்திரம் பெற்றதற்குப் பின் வந்த பிரதமர்களில் மோடிதான் தலைசிறந்த பிரதமர் ஆவார் என்று, ஒரு இளைஞரைப் போன்ற துடிப்புடன், பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மார்ச் 11 அன்று பேசினார். இந்த உரிமை கோரலில் உள்ள முட்டாள்தனத்தைப் பற்றி கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை. ஆனால், இதிலிருந்து வெளிப்படுவது என்னவென்றால், இந்தியாவைப் பற்றிய நேருவின் கண்ணோட்டத்தை ஒட்டு மொத்தமாக துடைத்தெறிந்துவிட்டு, அந்த இடத்தில் மோடியை ஏற்றி வைக்க  வேண்டும் என்று அவர்கள் மேற்கொண்டுள்ள  தீர்மானம்தான். நமது அரசியலை, மதச் சார்பின்மை என்ற கோட்பாட்டின் இடத்தில் இந்து ராஜ்யம் என்ற கோட்பாட்டை வைத்து,  மிகத் தீவிரமாக மாற்றி அமைக்க ஆர்.எஸ்.எஸ். முயன்றது. அதன் பிரச்சாரகர் மோடி 2014 இல் பிரதமராகப் பதவிக்கு வந்தது முதற்கொண்டு, கல்வி, கலாச்சார மற்றும் இதர அமைப்புகளின் பொதுப் பதவிகளில் காவி அமைப்பினரை நியமிப்பதன் மூலம்,  இந்துத் துவக் கோட்பாட்டினை மேம்பாடு அடையச் செய்ய அரும்பாடு பட்டார்; அத்துடன் முஸ்லிம்கள், கிறித்தவர்கள், தலித்துகள் போன்ற சிறுபான்மை மக்களின்  மீது இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கண்டு கொள்ளாமலேயே, கண்டிக்காமலேயே மவுனமாக இருந்து வருகிறார்.

இதனைப் பற்றி அம்பேத்கர் நமக்கு ஏற்கெனவே எச்சரிக்கை செய்துள்ளார். அரசமைப்பு சட்ட வரைவை அறிமுகப்படுத்தி 1948 நவம்பர் 4 அன்று சட்டமன்றத்தில் பேசியபோது, ‘‘அரசமைப்பு சட்ட வழியில், அமைதி நிறைந்த முறையில், ஒரு மக்களாட்சி  செயல்படுவதற்கு, அரசமைப்பு சட்டப்படியான ஒழுக்க நெறியைப் பின்பற்றவேண்டிய தேவையை அனைவரும் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படாத இரண்டு விஷயங்கள் அதனுடன் தொடர்புடையதாக இருப்பது இழப்புக் கேடேயாகும்.

நிர்வாக வடிவம் அரசமைப்பு சட்ட வடிவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாக இருக்கிறது என்பது ஒன்று.  நிர்வாக வடிவம், அரசமைப்பு சட்ட வடிவுடன் பொருத்தமாக இருப்பதுடன், அதே உணர்வைக் கொண்டதாகவும் இருக்க வேண்டும். இரண்டாவது,  அரசமைப்பு சட்டத்தின் வடிவத்தை மாற்றாமலேயே, நிர்வாக அமைப்பின் வடிவத்தை மாற்றுவதன் மூலம், அதனை அரசமைப்பு சட்ட உணர்வுக்கு எதிரானதாகவும், பொருத்தமற்றதாகவும் ஆக்கிவிடுவது முற்றிலும் இயலக்கூடிய ஒன்றுதான். நிர்வாக விவரங்களை அரசமைப்பு சட்டத்தில் இடம் பெறச் செய்யாமல் விட்டு விட்டு, அவற்றை சட்டமன்றமே செய்து கொள்ளட்டும் என்று விட்டு விடும் ஆபத்து தரும் செயலையும் ஒருவரால் மேற் கொள்ள இயலும் என்று வரலாற்றாசிரியர் க்ரோட் விவரித்தபடி, அரசமைப்பு சட்ட நெறிமுறைகளில் மக்கள் உறைந்து போகும் ஓரிடம் மட்டுமே அது என்பது அதனைத் தொடர்ந்து வருவதாகும். அத்த கைய அரசமைப்பு சட்ட நெறிமுறைகளை பரவலாகப் பரப்புவது இயலுமா என்ற கேள்வி ஒன்று எழுகிறது. அரசமைப்பு சட்ட ஒழுக்க நெறிமுறை இயற்கையாக ஏற்படும் ஓர் உணர்வல்ல. அது பழக்கத்தினால் பண்படுத்திக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். நமது மக்கள் இன்னமும் அதனை கற்றறிந்து கொள்ள வேண்டியவர்களாகவே உள்ளனர் என்பதை நாம் கட்டாயமாக உணர்ந்து கொள்ள வேண்டும். இந்திய மக்களாட்சி என்பது, இந்திய மண்ணின் மேல்பரப்பில் அலங்காரம் செய்து வைக்கப் பட்டிருப்பதாகும். அது அடிப்படையில் மக்களாட்சிக்கு எதிரானது’’ என்று பேசியுள்ளார். (அரசமைப்பு சட்டமன்ற நடவடிக்கைகள் பகுதி 7 பக்கம் 38. தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.)

இந்தியாவை ஒரு இந்து மத நாடாக ஆக்கும் கோரிக்கை

‘‘இந்தியா பாகிஸ்தான் பிரிவினை இந்துக்களுக்கு ஒரு நல்ல விஷயம் என்பதில் சந்தேகமில்லை. இந்து மதத்தை அரசு மதமாகக் கொண்டு, ஒரு இந்துஸ்தான் நாட்டை உருவாக்குவதற்கான நேரம் இதுவே என்று நாம் கருதவேண்டாமா’’ என்று முன்னணி தொழிலதிபர் பி.எம்.பிர்லா வல்லபாய் படேலுக்கு 1947 ஜூன் 5 ஆம் தேதி எழுதினார். படேலின் 10 ஆம் தேதி கடிதம் விரைந்ததாகவும், உறுதியானதாகவும் இருந்தது. ‘‘இந்து மதத்தை அரசு மதமாகக் கொண்ட ஒரு இந்து ராஜ்யத்தை உருவாக்குவது பற்றி பரிசீலனை செய்ய இயலாது என்றே நான் நினைக்கிறேன். நாட்டில் மற்ற சிறுபான்மை மத மக்களும் இருக்கின்றனர் என்பதையும், அவர்களது பாதுகாப்பு நமது முக்கியமான பொறுப்பு என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. ஜாதி, மத, இன பேதமின்றி அனைவருக்காகவும் இருப்பதாக நாட்டின் அரசு  இருக்க வேண்டும்.’’ (துர்காபாய் தொகுத்த சர்தார் படேலின் கடிதங்கள். பகுதி 4, பக்கம் 56).

அம்பேத்கர் எச்சரித்தபடி, ஒரு இந்து ராஜ்யம் பற்றிய முறையான அறிவிப்பு எதுவும் பிறப்பிக்கப் படாமலேயே, ‘‘நிர்வாகத்தின் வடிவத்தை  மாற்றுவதன் மூலம், அரசமைப்பு சட்டத்தின் வடிவத்தை மாற் றாமலேயே, மக்களாட்சிக்கு எதிரானதாக ஆக்குவது இயலக்கூடியதே ஆகும்.’’  கொள்கைகள் மூலமாகவும், முக்கியத்துவம் வாய்ந்த பொதுப் பதவிகளில் அரசியல் நோக்கம் கொண்டவர்களை நியமிப்பதன் மூலமாகவும் இதனைச் செய்ய இயலும்.

தொடரும்

நன்றி: ‘தி ஃப்ரண்ட் லைன்’,

ஏப்ரல் 14, 2017

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner