எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பேராசிரியர், முனைவர் ந.க.மங்கள முருகேசன் சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத் துறையில் பரிதிமாற் கலைஞர் அரங்கில் ஆற்றிய உரை:

சென்னை, மதுரை, மேகாலயா ஆகிய பல் கலைக் கழகங்களில் பணியாற்றி பணி நிறைவு பெற்றுப்பின், 99 ஆண்டுகள் ஆறுமாதகாலம் வாழ்ந்த தனித்த சிந்தனையாளராக விளங்கிய, பேராசிரியர் முனைவர் ந.சுப்பிரமணியன், வரலாற் றுப் பேராசிரியர் நிறுவிய அறக்கட்டளைப் பொழி விற்குத் தலைமையேற்கும், மரியாதைக்குரிய, சமூகநீதி, மதச்சார்பின்மை - மாநில உரிமை காக்கும் முகத்தான் ஜனநாயகப் பாதுகாப்புப் பேரவை ஒருங்கிணைப்பாளர். தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர், திராவிட இயக்கத்தின் வாழும் மூத்த தலைவர்கள் மூவரில் ஒருவர் - ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும், தமிழ் இலக்கியத்துறைத் தலைவர் பேராசிரியர் ஒப்பில்லா மதிவாணன், அறக்கட்டளைப் பொறுப்பேற்று  நிருவகிக்கும் உதவிப் பேராசிரியர் முனைவர் ஏகாம்பரம் அவர்களுக்கும், திருக்குறள் துறை உதவிப் பேராசிரியர் அன்பிற்கினிய நண்பர் முனைவர் ரகுராமன் அவர்களுக்கும், வருகை புரிந்துள்ள திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன் அவர்களுக்கும், பேராசிரியப் பெருமக் களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும், திராவிட இயக்கப் பெருமக்களுக்கும், என் வாழ்விணையர் திருமதி ம.இராஜம், மருமகள் ரா.ஆர்த்தி, பேரன் விசாலன், மகளிருக்கும் என் அன்பு வணக்கங்களை முதற்கண் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒத்து ஊதுபவன்

இந்த அறக்கட்டளைப் பொழிவினை நிகழ்த்து பவன் யான் என்ற போதிலும் முதன்மை உரையாளர் தமிழர் தலைவரே. நான் ஒத்து ஊதுபவன் பக்கமேளம் அவ்வளவு தான்.

இந்த அறக்கட்டளைப் பொழிவின் தலைப்பு “திராவிட இயக்கத்தின் முதன்மை மகளிர் இருவர் - ஈ.வெ.ரா. நாகம்மையார் - ஈ.வெ.ரா.மணியம்மை யார்”,

எனினும் இந்தப் பொழிவினை மூன்று பகுதி களாகப் பிரித்துக் கொண்டு எனது உரையைத் தொடங்குகிறேன்.

முதலாவது பகுதியில் இந்த அறக்கட்டளையை நிறுவிய பேராசிரியர் ந.சுப்பிரமணியன் குறித்துக் கூறுவது மரபு சார்ந்ததும், கடமையும் ஆகும்.

இரண்டாவது பகுதி தோழர் ஈ.வெ.ரா.நாகம் மையார் குறித்தும், மூன்றாவது பகுதி அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் குறித்தும் அமைகிறது.

மூவரைப் பற்றிய வரலாறும், செய்திகளும் கடல் போல் விரிந்தன. வானம்போல் பரந்தன. காலத்தின் அருமை கருதிச் சுருக்கமாகத் தருகிறேன்

கோவூர் கிழாரும்,

பிசிராந்தையாரும்

இங்கே இருக்கின்ற பெரும்பான்மையோர் தமிழ் இலக்கிய, இலக்கணம் பயின்றோர். தமிழ் இலக்கியத்தில் கோவூர் கிழாரும், பிசிராந்தையாரும் குறித்துப் படித்திருப்பீர்கள். அத்தகைய நட்பு நம் தமிழர் தலைவரின் நட்பு. அத்தகைய நட்பின் காரணத்தாலேயே இங்கே நம் தமிழர் தலைவர் ஆசிரியர் ந.சுப்பிரமணியனார் அறக்கட்டளைத் தலைமையென்ற உடனேயே இங்கே பல்வேறு அலுவல்களுக்கிடையே வந்திருக்கிறார்.

பேரா ந.சுப்பிரமணியன் பிறப்பால் பார்ப்பனர். அவருடன் தமிழர் தலைவர் கொண்ட நட்பு உண் மையானது, உயர்வானது. அது குறித்துப் பின்னர் காண்போம். பேராசிரியர் ந.சுப்பிரமணியன் 99 ஆண்டுகள் 6 மாதம் வாழ்ந்தவர். தமிழர் தலைவர் அவருடைய நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவோம் என்று எண்ணியிருந்த வேளை யில் வயது நூறைக் காணாமல் திடீரென்று மறைத்து விட்டார்.

வாழ்ந்த காலத்தில் 170 நூல்களைத் தம் தொண் ணூற்று எட்டு வயது வரை படைத்திருக்கிறார். 170 நூல்களில் 63 நூல்கள் ஆங்கிலத்தில், 107 நூல்கள் தமிழில் வரலாறு, சிறுகதை, நாடகம், கட்டுரை, பொருளாதாரம், திருக்குறள், பாரதியார் கவிதைகள் என்று பல் வகை.

93 வயதில் கார்வைல் எழுதிய French Revolution நூலை மொழி பெயர்த்தவர் 93-95 வயதுக்கிடையே 24 மொழி பெயர்ப்புகள், 12 நூல்கள் எழுதிச் சாதனை படைத்து இருக்கிறார். ஆம்! 95 வயதில்.

கோட்பாட்டாளர்

வாழ்நாள் முழுவதும் ஒரு கோட்பாட்டுடன் வாழ்ந்ததுதான் தமிழர் தலைவரை இவர் பால் தொடர்ந்து நட்புக் கொள்ளச் செய்திருக்கிறது. அவர் மறைந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலான பின்னும் அவர் நினைவைப்போற்றச் செய்கிறது.

“உணவு, உடை, உறையுள், மருத்துவ வசதி, கல்வி வாய்ப்பு, புவியியல், சூழ்நிலை என்பவையும் உலகில் ஒரு மனிதனுக்கும் கிடைக்காமல் இருக்கக்கூடாது. அப்படிக்கிடைக்காமல் இருக்கும் நிலைமையை எந்தஒருசக்தியேனும்உருவாக்கினால்அந்தச் சக்தியைஅழிப்பதற்குஅவ்வசதிகளைஇழந்த வர்களுக்குத் தர்மீக உரிமை உண்டு. அதைக் கூடியவரை அமைதியான முறையில் செய்யலாம். இயலாதுஎன்றுஉறுதிப்பட்டுவிட்டால்அச்சக்தி களை எவ்வாறேனும் அழிப்பதற்குப் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உரிமை உண்டு” என்ற கொள்கையாளர் பேராசிரியர்.

தனிச்சிறப்பு

பார்ப்பன குலத்தில் பிறந்த இவரைத் திராவிட இயக்கத் தவைர் பாராட்டுவது இவர் கொண்டிருந்த தனிச்சிறப்பினாலேயே எனலாம். என்ன தனிச் சிறப்பு? யாருடைய தயவு தாட்சண்யத்தையும் எதிர்பார்க்காமல், எவருக்கும் அஞ்சாமல் தன் மனதில் பட்டதைப் பேசியும் எழுதியும் வந்ததே. மதிப்பீட்டிற்குப்புறம்பான மனிதர் என்று எவரும் இல்லை. அவர் சங்கராச்சாரியாரிடமோ, அரசியல் தலைவர்களிடமோ அவர்கள் விருப்பத்திற்கிணங்க நடந்துகொள்ள வில்லை.

பேராசிரியர் பற்றி

தமிழர் தலைவரின் படப்பிடிப்பு

இவரை நன்கு புரிந்து கொண்ட தமிழர் தலைவர் அதனாலேயே கூறுகிறார்: “பேராசிரியர் அவர்களுக்குப் சனாதனத்தில் பெரிய நம்பிக்கை கிடையாது. நட்புக்குத்தான் மரியாதை கொடுத்தார். மனித நேயத்திற்குத்தான் மரியாதை கொடுத்தார். ஜாதிக்கு மரியாதை கொடுக்கவில்லை. மதத்திற்கும் மரியாதை கொடுக்கவில்லை. உண்மைக்கு மரி யாதை  கொடுத்தார் அன்புள்ளவராக இருந்தார்” என்கிறார்.

தமிழர் தலைவர்

சந்தித்தது எப்படி?

தமிழர் தலைவரின் இவருடனான நட்பு மற்ற வர்களால் அவரே கூறுவது போல் விசித்திரமாகப் பார்க்கப்பட்ட நட்பு. அவர் பேராசிரியராக இருந்த கால கட்டத்தில் தமிழர் தலைவருக்கு அவரைத் தெரியாது. Brahmin in Tamil Country’
என்ற நூலை அவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இருந்து ஓய்வு பெறுகிற காலத்தில் ஆங்கிலத்தில் எழுதியிருந்ததை வாங்கிப்பார்த்தபோது தமிழர் தலைவர் வியப்படைந்தார்.

பல்வேறு செய்திகளை ஆழமாக அதே நேரத்தில் தன்னுடைய விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லாமல், தான் சார்ந்த ஜாதியோ, குலமோ, பண்பாடோ, குறுக்கிட முடியாத அளவிற்கு அந்நூலினை அவ்வளவு ஆழமாக அவர் எழுதியிருந்தது, அவர் மீது இவருக்கு எல்லையற்ற மதிப்பினை உருவாக்கிற்று. அவருடைய மகன் சுந்தரேசனே அவருக்குத் துணை என்றும், அவரே பதிப்பிக்கிறார் என்றும், 200 புத்தகத்திற்கு மேல் அப்புத்தகம் விற்காமல் இருக்கிறது என்று அறிந்து அத்தனை புத்தகங்களையும் விலை கொடுத்து வாங்கி அவருடைய சுமையைக் குறைத்தவர் தமிழர் தலைவர்! ஆம்! பார்ப்பனப் பேராசிரியரின் புத்தகம் அத்தனையையும் பார்ப்பனீயத்தைத் தோலுரித்தமையால் அதனைச் செய்தார்

அதன் பிறகு அவர் எழுதிய பல நூல்களைப் படித்த போது தான் வியப்படைந்ததுடன், அவரைச் சந்திக்க வேண்டும் என்று முயன்று, குடும்பத்தோடு கொடும் நோயிலிருந்து விடுபட்டு, தன்னந்தனியாக அவர் உடுமலையில் உட்கார்ந்த வேளையில் சந்தித்தார்.

குறைந்தது ஆண்டுக்கு இரண்டு முறையாவது தமிழர் தலைவரும், திருமதி மோகனா அம்மை யாரும், இயக்க தோழர்களுடனும் சென்று நேரம் போவதே தெரியாமல் உரையாடிய நம் தமிழர் தலைவர் கூறுவது, “அவர் ஒரு அறிவு ஊற்று மாதிரி”.

வ.ரா.போல

“அக்கிரகாரத்து அதிசய மனிதர் என்று பார்ப்பன எழுத்தாளர் வ.ரா.வை அண்ணா குறிப்பிட்டார்.

வ.ரா. “தமிழ்நாட்டுப் பெரியார்கள்” என்னும் தம் நூலில் தந்தை பெரியாரை மண்ணை மணந்த மணாளர் என்று குறிப்பிட்டிருப்பார். அந்த வகையில் 1999ஆம் ஆண்டிலேயே பெரியார் பேருரையாளர் பேராசிரியர் இறையன் கோரா காலத்திற்குக் கால் நூற்றாண்டு கழித்து ஒரு பார்ப்பன அறிஞரும், இயக்கத்தின் பாராட்டினைப் பெறுவது சிறப்பாகக் குறிப்பிடத் தக்கது” என்று எழுதி இருந்தார்.

இந்து முக்காலி (The Hindu Tvipod)

நம் தமிழர் தலைவர்  நீலகண்ட சாஸ்திரி பேரா சிரியரிடம் அவர் பணியாற்றிய காலத்தே ஒரு கட்டுரை கேட்டிருக்கிறார். இந்தக்கட்டுரையை லண்டன் பல்கலைக்கழகச் சட்டப் பேராசிரியர் ஜே.டங்கன் எம்டெர்ரெட் என்பவர் படித்து வியந்து இக்கட்டுரை இன்னும் விரிவாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று கூற உடனே அதனை விரிவாகவே எழுதிக் கொடுத்திருக்கிறார். அதன் பெயர் The Hindu Tripod.

 

- தொடரும்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner