எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாஜகவின் சித்தாந்த அமைப்பாக உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கிளை அமைப்புகளில் ஒன்றாக செயல்பட்டு வருகின்ற தொழிலாளர் அமைப்பான பிஎம்எஸ் எனும் பாரதிய மஸ்தூர் சங்கம் எனும் அமைப்பே மோடியின்  நிதி ஆயோக்  தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகின்றது என்று கூறி அம்பலப்படுத்தியுள்ளது.

மத்திய அரசின்கீழ் இயங்கக்கூடிய இந்திய சுற்றுலா வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் டில்லியில் உள்ள ஜன்பத் விடுதி உள்ளிட்ட விடுதிகள் நாடுமுழுவதும் இயங்கிவரு கின்றன. டில்லியில் உள்ள அரசுத்துறை நிறுவன விடுதியான ஜன்பத் விடுதியில் 117 நிரந்தரப் பணியாளர்களும், 235 ஒப்பந்தப் பணியாளர்களும் உள்ளனர்.

மத்திய அரசு நிறுவனத்தில் தனியார் மயம்?

தற்போது மோடியின் தலைமையிலான மத்திய பாஜக அரசு ஜன்பத் விடுதியில் அரசின் முதலீட்டை திரும்பப் பெற்று, பங்குகளை விற்பனை செய்து தனியார் மயமாக்கிட முடிவு செய்துள்ளது.

மத்தியில் மோடியின் தலைமையிலான பாஜக கடந்த மக்களவைத் தேர்தல் (2014) முதல் வளர்ச்சி எனக்கூறிக் கொண்டும், குறைந்த நிர்வாகம் நிறைந்த ஆளுமை என்று கூறிக்கொண்டும் மாற்றங்களை செய்துவருவதாக கூறிக்கொண்டு இருக்கின்ற நிலைகளில் தலைகீழான மாற்றங்களாக, வளர்ச்சிக்கு மாறாகவே செய்து வருகின்ற நிலையே ஏற்பட்டு வருகிறது.

திட்டக்குழுவைக் கலைத்த மோடி

திட்டக்குழு கலைக்கப்பட்டு  நிதி ஆயோக்  எனும் அமைப்பு மோடியின் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், முறையான திட்டமிடல் ஏதுமின்றி, அமைச்சர வைக் கூட்டங்கள், நாடாளுமன்ற விவாதங்கள், அரசுத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை என்று எந்த வகை யிலும் முறையான நிர்வாக செயல்பாடுகள் ஏதுமின்றி, ஒற்றை மனிதனின் சர்வாதிகார ஆட்சிபோல், மோடி நினைப்பதையெல்லாம் செயல்படுத்திவருவதுபோல் செய்து வருகின்ற அவல நிலையில் மத்திய அரசின் நிர்வாக செயல்பாடுகள் இருந்து வருகின்றன.

மோடியின் எதேச்சதிகாரம்

நிதித்துறை அமைச்சருக்கே தெரியாமல் திடீர் அறிவிப் பாக உயர்மதிப்பு ரூபாய்த் தாள் மதிப்பிழப்பு நடவடிக் கையை எடுத்தவர்தான் பிரதமர் மோடி.

நீட்  நுழைவுத் தேர்வு திணிப்பு, இந்துத்துவா திணிப்பு, யோகா என்ற பெயரில் பண்பாட்டுத் திணிப்பு, சமஸ்கிருத, இந்தி திணிப்பு, பசுவதைத் தடை என பலவகைகளிலும் மோடியரசின் செயல்பாடுகள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பின்புலத்தைக்கொண்டே இருந்து வருவது கண்கூடாகும்.

விமர்சனங்களுக்கு
பதில் அளிக்காத மோடி

பலரதரப்பட்ட அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் நாடுமுழுவதும் மோடி அரசின் செயல்பாடுகளைக் கடுமை யாக விமர்சித்து, கண்டித்து வந்தபோதிலும், கண்ணிருந்தும் காணாதவராய், காதிருந்தும் கேளாதவராய், ஜனநாயக மாண்புகளையே சிதைக்கின்ற வண்ணம் கூட்டாட்சித் தத்துவங்கள், மாநில உரிமைகள் என அனைத்தையும் சீர்குலைக்கும் வண்ணம் செயல்பட்டு வருபவராக மோடி உள்ளார்.

ஆனால், தற்போது ஆர்.எஸ்.எஸ். சார்பு தொழிலாளர் அமைப்பாக உள்ள பாரதிய மஸ்தூர் சங்கம் மோடியரசின் செயல்பாடுகளை குறிப்பாக தொழிலாளர் விரோதப் போக்கை, நிதி ஆயோக் அமைப்பின் செயல்பாடுகளை கடு மையாக எதிர்த்து தீர்மானத்தையே நிறைவேற்றியுள்ளது.

சுதேசி ஜாக்ரான் மஞ்ச்  அமைப்பைத் தொடர்ந்து சங் பரிவார அமைப்புகளில்,  பாரதிய மஸ்தூர் சங்கம்  பிஎம்எஸ் எனப்படும் ஆர்.எஸ்.எஸ். சார்பு தொழிலாளர் அமைப்பு  நிதி ஆயோக்Õ அமைப்பின் தொழிலாளர் விரோத கொள் கையை விமர்சனம் செய்துள்ளது. மோடியின் அரசில் சீர்திருத்தங்களில் தவறாக வழிகாட்டுதல் மற்றும் முறையான வழிகாட்டுதலின்மை காரணமாக தொழிலாளர் விரோதப் போக்கில் நிதி ஆயோக் செயல்பட்டு வருகிறது.

கான்பூரில் பிஎம்எஸ் கூட்டத்தில்

மத்திய அரசின்  நிதி ஆயோக்  அமைப்புக்கு எதிரான தீர்மானங்கள்

கான்பூரில் கூடிய பிஎம்எஸ் மே மாதம் 23, 24 ஆகிய  இரண்டு நாள்கள் நடைபெற்ற ஆண்டுக் கூட்டத்தில்   நிதி ஆயோக்  அமைப்பை முற்றிலும் மறுகட்டமைக்கப்பட வேண்டும் என்றும், நிதி ஆயோக்  அதன் இணையதளத்தில் அளித்துள்ள தொழிலாளர் விரோத பரிந்துரைகள் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த செயல் திட்டங்களுக்கான ஆவணங்களை நீக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

1998 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வாஜ்பேயி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்காலம் தொட்டு ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்பாக உள்ள பிஎம்எஸ் போன்ற சங் பரிவார அமைப்புகளின் எதிர்ப்புக் குரல் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றே கூறப்படுகிறது.

அண்மையில் சில வாரங்களாக பொதுத்துறை நிறுவனங் களிலிருந்து அரசு முதலீடுகளைத் திரும்பப் பெறுதல், மரபணு மாற்றப்படுவது  அல்லது மரபணு மாற்ற விதையை எதிர்ப்பது குறித்த பிஎம்எஸ் மற்றும் எஸ்ஜேஎம் அமைப்பு களின் கருத்தை மோடியின் அரசு புறந்தள்ளிவிட்டது. டில்லியில் உள்ள ஜன்பத் விடுதியில் அரசின் முதலீட்டை திரும்பப் பெறுவது என்கிற மோடி அரசின் முடிவை எதிர்த்து போராட்டத்தை நடத்துவது என்று ஜன்பத்  விடுதியின் தொழிலாளர் சங்கத்தின் அமைப்புக் கூட்டத்தின்வாயிலாக  பிஎம்எஸ் எச்சரிக்கை செய்துள்ளது.

பிஎம்எஸ் தொழிலாளர் அமைப்புடன் இணைந்து பணியாற்றக்கூடிய அனைத்திந்திய அய்டிடிசி தொழிலாளர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ராகேஷ் பானோட் கூறுகையில், எதிர்கால நடவடிக்கைகள்குறித்து ஆலோ சனைகள் செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.

மத்திய அரசின் சுற்றுலாத்துறையின் கீழ் இயங்கிவரும் டில்லி ஜன்பத் விடுதி தனியாருக்கு விற்பனை செய்யப் படாதவரை, விடுதியில் உள்ள அலுவலகப்பகுதியை பயன் படுத்த உள்ளதாகவும், அதுவரை போராட்டம் நடத்தப் படாது என்றும் கூறினார். டில்லி ஜன் பத் விடுதியில் பணி யாற்றும் 117 ஊழியர்கள் வேறு இடத்தில் மத்தியஅரசின் சுற்றுலாத்துறைக்கு மாற்றம் செய்யப்படலாம் என்று நம்புவதாகவும், அதேநேரத்தில் ஒப்பந்தப் பணியாளர்களாக உள்ள 235 பேரின் நிலை கவலைக்குரியதாக மாறியுள்ளது என்றும் பானோட் கூறினார்.

கான்பூர் கூட்டத்தில் நிதிஆயோக் குறித்து நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தில் குறிப்பிடும்போது,

நடுநிலையில்லாமல் ஒரு தலைப்பட்சமான அறிவு ஜீவிகள் மூலமாக அதிக விலை கொடுத்துள்ள அமைப்பாக நிதி ஆயோக் உள்ளதுடன், ஒட்டு மொத்த நாட்டையும், மத்திய அரசையும் தவறாக வழிநடத்துகின்ற அமைப்பாக வும் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி ஆயோக் அமைப்பின் கொள்கையானது, மிகவும் குறைபாடுள்ள கொள்கையாக உள்ளது. மேலும், சக்தி வாய்ந்த கார்ப்பரேட்டுகளின் செல்வாக்குகளுக்காகவே நிதி ஆயோக் செயல்பட்டுவருகிறது. நிதி ஆயோக் தொழி லாளர் சட்டங்களில் மாற்றங்களை செய்வதற்கு அளித் துள்ள பரிந்துரைகள் அனைத்தும் தொழிலாளர்களுக்கு விரோதமானவையாக உள்ளன. விவசாயத்துறையில் மிகவும் கண்டிக்கத்தக்க வகையிலேயே செயல்பாடுகள் இருந்துவருகின்றன.

சம வேலை, சம ஊதியம் எனும் உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை காற்றில் பறக்கவிட்டுள்ளது. ஒப்பந்த தொழி லாளர்   சட்டங்களில் விதி 25 இன்கீழ் அளிக்கப்பட்டுள்ள வற்றை புறந்தள்ளிவிட்டது. நிதி ஆயோக் தொழிலாளர் சட்டங்களில் மாற்ற முடியாத அளவில் கடுமையான நிலைகள் உள்ளதாக நிதி ஆயோக் குறிப்பிட்டுள்ளது கேலிக்குரியதாக உள்ளது.

தொழிற்சாலைகளில் தொழிலாளிகள் என்று குறிப்பிடு வதில், குறிப்பிட்ட கால அளவை நிர்ணயம் செய்து கொண்டு,  தொழிலாளர்கள் என்ற வரையறைகளில் வேறு பாடுகளை உருவாக்க முயற்சிக்கிறது.

தொழிலாளர்களின் நிலைகளில் நிரந்தரமான பணி என்கிற தன்மையை அகற்றிவிட்டு, தொழிற்சாலைகள் வளர்ச்சிக்கு கேடு விளைவிக்கிறது. குறிப்பாக ஆடை உற் பத்தி தொழிலில் முற்றிலும் பொருத்தமில்லாத நிலைகளை எடுத்துவருகிறது நிதி ஆயோக்.

துறைமுக பணிவாய்ப்பு மண்டலங்களில் தொழிலாளர் சட்டங்களில் நெகிழ்ச்சித்தன்மையை (அவ்வப்போது மாறுதல் ஏற்படுத்தும்வகையில்) நிதி ஆயோக் வலியுறுத்து வதன் பின்னணி விவாதத்துக்குரியதாக உள்ளது. இவ்வாறு அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரவு நேரப்பணிகளில்
பெண்கள் கூடாதாம்!

மோடி அரசின் பல்வேறு செயல்பாடுகளை கடுமையாக எதிர்த்து தீர்மானங்களை நிறைவேற்றியுள்ள பி.எம்.எஸ்., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் சமூகநீதிக்குப்புறம்பான, பாலியல் சமத்துவமின்மை மற்றும் பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தும்  வகையில் இரவுநேரப்பணிகளில் பெண்களை நியமிக்கக் கூடாது என்று ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது.

- ந.கதிர்


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner