எழுத்துரு அளவு Larger Font Smaller Font

(இணையர்களிடையே மணவிலக்கு பிரச்சினை எழுந்தவுடன், ஒரு நடுவர் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், அவர்களிடையே சமரசம் செய்து வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், மணவிலக்கு அளிப்பதற்கு 90 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் முஸ்லிம் குடும்ப சட்ட பிரகடனத்தின் 7 ஆம் பிரிவு கூறுகிறது. இந்தப் பிரச்சினையில் இந்திய முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்புகள் இந்த சட்டத்தை பிடி வாதமாகக் காணத் தவறி, அலட்சியப்படுத்துவதால், ஷரியத் மதக்கோட்பாட்டுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருந்தாலும், மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை ஒழிக்கப்பட வேண்டும் என்று விரும்பும் முஸ்லிம் பெண்கள் அமைப்புகளின் கோரிக்கையை மறுப்பதன் மூலம்,  பா.ஜ.க.வின் வலையில் சிக்கிக் கொள்கின் றனர்.)

1951 ஆம் ஆண்டில் ஜனசங்கம் தொடங்கப்பட்ட காலம் முதற்கொண்டு, முஸ்லிம்களுக்கான தனிச் சட்டத்தை ரத்து செய்துவிட்டு, நாடு முழுவதும் அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும் மதச்சட்டம் ஒன்றை  உருவாக்குவதே, அதன் முக்கிய மான நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. 1980 இல் ஜனசங்கம் பாரதிய ஜனதா கட்சியாக மறு அவதாரம் எடுத்தபோது, இந்த கோரிக்கை அவர்களது அடை யாளச் சின்னங்களில் ஒன்றாக ஆகிவிட்டது.

தான் பிரதமராகப் பதவியேற்றவுடன், ஷரியத் பிரிவு மதக் கோட்பாடு சார்ந்த  முஸ்லிம்களின் தனிப்பட்ட சட்டங்கள் மீது,  நரேந்திர மோடி தனது பிரச்சாரத்தில் தாக்குதலுக்கான ஓர் இலக்காக வரித்துக் கொண்டார்.  மூன்று முறை தலாக் கூறி மணவிலக்குபெறுவது இஸ்லாம் மதக் கட்டளைக்கு எதிரானது என்பதால்,  தாங்களாகவே அதனை மாற்ற வேண்டும் என்று பல முஸ்லிம்கள் எண்ணிக் கொண்டிருக்கும்  நேரத்தில், இந்த ஒரு அம்சத்தை மட்டுமே மோடி தனது பிரச் சாரத்துக்கும், தாக்குதலுக்கும் எடுத்துக் கொண்டார்.

கடந்த ஆண்டு,  அரசமைப்புச் சட்டப்படியான தங்களது உரிமைகளை முஸ்லிம் பெண்களை பெறச் செய்வது அரசு மற்றும் சமூகத்தின் பொறுப் பாகும்; ஒரு கணவன் தொலைபேசியில் மூன்று முறை தலாக் என்று கூறிவிட்டால், மனைவியின் ஒட்டு மொத்த வாழ்க்கையுமே நாசமாகிப் போவ தற்கு எனது முஸ்லிம் சகோதரிகள் செய்த குற்றம் தான் என்ன? என்று பெருங்கவலையுடன் பேசினார்.

1995 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற அனைத்திந்திய பெண்கள் ஜனநாயக சங்க மாநாட்டில், முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக நாடு முழுமைக்கும் பொதுவான ஒரு சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற  பா.ஜ.க.வின் பிரச்சாரத்தை இந்த மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. முஸ்லிம் பெண் களது உரிமைகள் பற்றிய தங்களது கவலையால்தான் இந்த கோரிக்கையை முன்வைப்பதாகக் கூறும் அவர்களது போலித்தனத்தை இந்த மாநாடு எதிர்க் கிறது. இந்த அரசியல் மேடைதான், தனது முந்தைய இந்து மகாசபை, ஜனசங்கம் என்ற அவதாரங்களில்,  இந்து மத சட்டங்களில் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வருவதற்கு எதிராக இருந்த இயக்கத்தை தலைமை தாங்கி நடத்தி வந்ததால்,  பெண்களின் உரிமைகள் பலி கொடுக்கப்பட்டு, ஒரு சந்தர்ப்ப வாத சமரசம் ஏற்பட வழி அது வகுத்தது என்று ஒரு தீர்மானமே நிறைவேற்றப்பட்டுள்ளது.

1925 ஆம் ஆண்டில் மத்திய சட்டமன்றத்தில் பேசும்போது, பல நேரங்களில் பிரிவியூ கவுன்சில் இந்துமத சட்டங்களைக் கொலை செய்தும், முஸ்லிம்மத சட்டங்களை படு கொலை செய்தும் இருக்கிறது என்று கூறுவதற்கு எனக்கு தயக்கமே இல்லை என்று முகமது அலி ஜின்னா கூறினார்.

குரான் வேத நூலின் பாடங்களில்  ஏற்பட்டுள்ள சில அய்யங்களைத் தீர்த்து வைப்பதற்கான  விரிவுரை களை தான் தேடுவதாக 1897 இல் பிரிவியூ கவுன்சில் தெளிவுபடுத்தியது. ஹேமில்டன் மற்றும் என்.ஈ.பெய்லி ஆகியோரின் மொழிபெயர்ப்பான  முகமதிய சட்டத் தொகுப்பு என்ற நூலையே குறிப்புக்கு எடுத்துக் கொள்ள பிரிவியூ கவுன்சில் முடிவு செய்தது. இரண்டு மாபெரும் நீதியரசர்கள் அமீர் அலி மற்றும் சையத் முகமத் இருவரும் அந்நூலின் மொழிமாற்றத்தில் இருந்த தவறுகளை வெளிப்படுத்தினர்.

சுதந்திரத்துக்குப் பிறகு, இந்த பாரம்பரியத்தை பாகிஸ்தான் உச்சநீதி மன்றம் ரத்து செய்துவிட்டது. பிரிட்டிஷ் ஆதிக்க கால மொழிபெயர்ப்பு குரான் நூலைப் பின்பற்றுவதற்கு பதிலாக, முஸ்லிம் மத சட்டத்தை குரானில் இருந்தும், ஹாடித்தில் இருந்தும் நேரடியாக அறிந்து கொள்ளும் கடமை நீதிமன்றங் களுடையது என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், இந்திய முஸ்லிம்கள் பிரிவியூ கவுன்சில் கூறிய கோட்பாட்டைக் கைவிட்டு விடவில்லை. போன பாதையிலேயே போகும் பழக்கத்தை கைவிட்டு,  சில இந்திய நீதிபதிகள், மணவிலக்கு பற்றிய தற்போதுள்ள முஸ்லிம் மத சட்டத்திற்கு குரானில் அனுமதி இல்லை என்றே நம்பி வந்திருக்கின்றனர்.

மணவிலக்கிற்காக குரானில்
குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகள்

மணவிலக்கிற்கான தெளிவான ஒரு நடைமுறையை குரான் விதித்துள்ளது.  இணையரிடையே பிளவு ஏற்பட்டுள்ளது என்ற அச்சம் ஏற்பட்டவுடனே, நடுவர்களை நியமிப்பதுதான் முதல் நடைமுறையாகும். அந்த முயற்சிகள் தோல்வி அடைந்து இருவரில் எவர் ஒருவர் வேண்டுமானாலும் மணவிலக்கு வேண்டும் என்று கோரலாம். மூன்று மாத காலத்திற்குள், மணவிலக்கு விரும்பும்  மனைவி குலாவையும், கணவர் தலாக்கும் கூறவேண்டும் என்பது கட்டாயம். மூன்று மாத காலத்திற்குள் அவர்கள் தங்கள் மணவிலக்கு கோரிக்கையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

தலாக் என்பது திரும்பப் பெற்றுக் கொள்ள இயன் றது  என்பதையோ அல்லது பல சட்ட சிக்கல்களுக்கு வழி வகுக்கும் ஒரு பாவச் செயல் அது  என்ற போதிலும், பொதுவாகவே மணவிலக்கு பெறும் வடிவத்தில்தான் மும்முறை தலாக் கூறமுடியும் என்று, போதிய அறிவு இல்லாத காரணத்தால்,   அனைத்து முஸ்லிம்களுமே  தவறாகவே புரிந்து கொண்டிருக் கிறார்கள்   என்று 1943 இல் மவுலானா அப்துல் ஆலா மவ்டி கூறியிருக்கிறார். மும்முறை தலாக் கூறி மண விலக்கு பெறும் நடைமுறை தேவை அற்றது என்ப தையும், ஒரு முறை தலாக் கூறினாலே போதும்; அதன் படி மூன்று மாத காலம் கடந்த பிறகு  மணவிலக்கு செய்யப்பட்டதாகக் கருதப்படும் என்றாலும், மூன்று மாதங்களுக்குள் அதனைத் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால், மூன்று மாதம் கடந்த பின் பிரிந்த கணவன், மனைவி ஒன்று சேரமுடியாது; மறுபடியும் புதியதாக திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம், மணவிலக்கு என்னும் பிளவில் இருந்து எண்ணற்ற இணையர்களை காப்பாற்றி இருந்திருக்க முடியும்   என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இணையர்களிடையே மணவிலக்கு பிரச்சினை எழுந்தவுடன், ஒரு நடுவர் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், அவர்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், மணவிலக்கு அளிப்பதற்கு 90 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் முஸ்லிம் குடும்ப சட்ட பிரகடனத்தின் 7 ஆம் பிரிவு கூறுகிறது. இந்தப் பிரச்சினையில் இந்திய முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் அமைப்புகள் இந்த சட்டத்தை பிடிவாதமாகக் காணத் தவறி, அலட் சியப்படுத்துவதால், ஷரியத் மதக் கோட்பாட்டுக்குக் கட்டுப்பட்டவர்களாக இருந்தாலும், மூன்று முறை தலாக் கூறி மணவிலக்கு செய்யும் நடைமுறை ஒழிக்கப் படவேண்டும் என்று விரும்பும் முஸ்லிம் பெண்கள் அமைப்புகளின் கோரிக்கையை மறுப்பதன் மூலம்,  பா.ஜ.க.வின் வலையில் சிக்கிக் கொள்கின்றனர்.
நன்றி: ‘தி டெக்கான் கிரானிகிள்’,

21.05.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner