எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- கபில் சிபல் -

(2014மக்களவைதேர்தலின்போதுபா.ஜ.க. பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி வானளாவிய உறுதிமொழிகளை வாரி வாரி வழங்கினார். விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் லாபம் அளிக்கும் வகையில்  விவசாய உற் பத்திப் பொருள்களின் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும்என்றுகூறியதற்குமாறாக அத்தகைய குறைந்த அளவு கொள்முதல் விலை நிர்ணயிக்க முடியாது என்று உச்சநீதி மன்றத்துக்கு மோடி அரசு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள பணத்தை வெளியே கொண்டு வருவோம் என்று கூறியவர், இன்று அவ்வாறு கணக்கு வைத்திருப்பவர்களின் பட்டியலைக்  கூட வெளியிட மறுக்கின்றார். ஒரு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று கூறிய மோடியின் ஆட்சியில் 2015 இல் 1.55 வேலை வாய்ப்புகளும், 2016 இல் 2.31 வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. எனது  தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்று கண்ணீர் சிந்திய மோடியின் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் செயல்கள், குறிப்பாக பாலியல் வன்கொடுமைகள் அதி கரித்து வருகின்றன. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவோம் என்று கூறிய மோடியின் ஆட்சியில் பருப்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்கள் மற்றும் எரிபொருள்களின் விலைதொடர்ந்துஉயர்ந்துகொண்டேசெல் கிறது. லஞ்ச ஊழலற்ற இந்தியாவை உருவாக்கு வோம் என்று கூறிய மோடியின் ஆட்சியில்தான் 2016 இல் லஞ்ச ஊழல் புகார்களின் எண்ணிக்கை 67 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மோடி வெறும் வாய்ச்சொல் வீரர் என்பதை மக்கள் எப்போதுதான் உணர்ந்து கொள்வார்களோ?)

அய்க்கிய முன்னேற்றக் கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு, இந்தியாவை ஆட்சி செய்வதற்காக 2014 இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு 2017 மே 25 அன்று மூன்றாண்டு காலம் நிறைவடைந்தது. இந்த அரசின் சாதனையை மதிப்பிடுவதற்கு  இந்த மூன்றாண்டு காலமே போதுமானது. தேர்தலின்போது பா.ஜ.க. வும், அதன் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடியும் மக்களுக்கு அளித்த உறுதிமொழிகள் எந்த அளவில் நிறைவேற்றப்படாமல் உள்ளன என்ற உண்மைகளே இந்த ஆட்சியின் சாதனையைப் பற்றிப் பேசும்.

விவசாயிகளின்

நலனைப்பாதுகாத்தல்

விவசாயிகளின் தற்கொலை ஒரு தேசிய சோகமும், அவமானமும் ஆகும். அண்மை யில் ஏற்பட்ட புயல் போன்ற இயற்கைப் பேரிடர் களின்போதும்,பொருளாதாரநெருக்கடிகளின் போதும், தேசிய ஜனநாயகக் கூட்டணி விவ சாயிகளின் பின்னால் பக்க பலமாக நிற்கும். விவசாயிகளுக்கு எதனையாவது என்னால் செய்ய முடியும் வரை, என்னால் தூங்கவும் முடியாது என்று 2014 மார்ச் 20 அன்று அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி பேசினார். நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் நீர் மேலாண்மை போன்றவற்றின்மூலம் விவசாய உற்பத்தியை இருமடங்காக உயர்த்தும் ஒரு நடைமுறை கடை பிடிக்கப்பட்டிருந்தால், விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைக்கே தள்ளப் பட்டு இருக்க மாட்டார்கள் என்று அவர் பேசினார்.

‘‘இந்தியாவில் விபத்து சாவுகளும், தற் கொலைகளும்’’  என்ற தலைப்பில், தேசிய குற்றப் பதிவு அமைப்பு 2015 இல் வெளியிட்ட அறிக்கையின்படி,  தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 8007 என்றும், 2014 ஆம் ஆண்டில் இது 5650 ஆக இருந்தது என்றும் தெரிய வருகிறது. ஓராண்டு காலத்தில் விவசாயிகளின் தற்கொலை 42 சதவிகிதம் அதிகரித்துள்ளது. விவசாயிகளின் தற்கொலைக்கு, அய்க்கிய முற்போக்குக் கூட்டணியும், அதன் கொள்கைகளுமே காரணம் என்று 2014 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறிய பா.ஜ.க., விவசாயிகளின் தற்கொலைக்கும், பா.ஜ.க. அரசின்  கொள்கைகளுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று இப்போது கூறி வருகிறது.

2015 ஜூலை 24 அன்று மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த விவசாயத் துறை அமைச்சர் ராதா மோகன்சிங், விவசாயிகளின் தற்கொலைக்கான பல காரணங்களுள் காதல் விவகாரங்களும்,ஆண்மைக்குறைவும்சில முக்கியமான காரணங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.  அனைத்துக்கும் மேலாக, தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் கோழைகள் என்று அரியானா மாநில பா.ஜ.க. அரசின் விவசாயத் துறை அமைச்சர் ஓ.பி.டங்கர், 2015 ஜூலை 24 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநில பதான்கோடில் 2014 ஏப்ரல் 25 நரேந்திர மோடி, ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந் தால், விவசாயஉற்பத்திப்பொருள்களுக்கான விலையை,  விதை, உரம், நடவு,  அறுவடை உள்ளிட்ட உற்பத்தி செலவுகளுடன்,  50 சதவிகித உயர்வுடன் நிர்ணயம் செய்து வழங்குவோம்’’  என்று பேசினார். அதே மோடியின் அரசு 2015 பிப்ரவரியில் உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்த அறிக்கையில், 50 சதவிகித லாபத்துடன் கூடிய விலையை விவசாய உற்பத்திப் பொருள்களுக்கு நிர்ணயிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. 2009-2010ஆம்ஆண்டில்,நெல்லின்உற்பத்தி செலவு குவிண்டாலுக்கு 670 ஆக இருந்த போது,குறைந்தபட்சவிலை950ஆகஅய்க் கிய முற்போக்குக் கூட்டணி அரசால் நிர்ணயிக் கப்பட்டது; இது உற்பத்தி செலவுடன் 42 சதவிகிதம் கூடுதலானதாகும்.

2015-2016 இல் நெல்லுக்கான உற்பத்தி செலவு 1324 ஆக இருந்தபோது, குறைந்தபட்ச விற்பனை விலை 1410 என பா.ஜ.க. அரசால் நிர்ணயிக்கப்பட்டது. இது உற்பத்தி செலவைவிட வெறும் 6.5 சதவிகிதம் மட்டுமே கூடுலானதாகும். இவற்றில் இருந்து மோடி அரசினால் நிர்ண யிக்கப்பட்ட நெல், கோதுமை மற்றும் இதர விவசாய உற்பத்திப் பொருள்களுக்கான  கொள் முதல் விலை, மன்மோகன்சிங் அரசினால் நிர்ண யிக்கப்பட்ட கொள்முதல் விலையைவிட மிகமிகக் குறைவானதே என்பது தெளிவாகும்.

2014 இல் இருந்த நெல் கொள்முதல் விலையை மோடி அரசு 2016 இல்  ஆண்டுக்கு 3.9 சதவிகிதம் அளவிலும், கோதுமையின் கொள்முதல் விலையை 4.1 சதவிகிதம் அளவில்  மட்டுமே உயர்த்தி வந்துள்ளது. 2011 இல் இருந்த நெல் கொள்முதல் விலையை மன்மோகன்சிங் அரசு ஆண்டு ஒன்றுக்கு 9.5 சதவிகிதமும், கோதுமை கொள்முதல் விலையை  7 சதவிகிதம் அளவிலும் உயர்த்தியுள்ளது.

கருப்புப் பணத்தைத்

திரும்பக் கொண்டு வருதல்

பா.ஜ.க. அரசின் முன் உள்ள மற்றுமொரு பெரிய பிரச்சினை கருப்புப் பணத்தைப் பற்றியதாகும்.  2014 பிப்ரவரி 12 அன்று அகமதாபாதில் தொடங்கிய தனது தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மோடி, ‘‘கருப்புப் பணத்தைப் பற்றி ஒட்டு மொத்த நாடே கவலை கொண்டுள்ளது. இந்திய குடிமக்களால் அயல்நாட்டு வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு பைசாவையும் நாங்கள் திரும்பப் கொண்டு வருவோம். இந்தப் பணம் இந்திய குடிமக்களின் பணம் என்பதாலும், இது போன்ற தேசவிரோத செயல்களை மேற்கொள்ள எவர் ஒருவருக்கும் உரிமையில்லை என்பதாலும், அந்த கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வந்தே தீருவது’’ என்று நான் உறுதி எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று பேசினார்

ஆனால் உண்மை நிலை என்ன? அயல் நாட்டு வங்கிகளில் பணத்தைப் பதுக்கி வைத்தி ருக்கும் இந்திய குடிமக்களின் பட்டியல் இந்த மூன்று ஆண்டு காலத்தில் மோடி அரசுக்குக் கிடைத்திருக்கும் போதும், இன்னமும் அது மிகமிக ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

2014 அக்டோபர் 17 அன்று, மோடி அரசு பதவியேற்று கொண்டு அய்ந்து மாதங்கள் கழிந்த பிறகு,  அயல்நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்களை வெளியிட இயலாது என்றும், இதற்குக் காரணம்  அய்க்கிய ஜனநாயகக் கூட்டணி அரசு அயல்நாட்டு வங்கிகளுடன் செய்து கொண்ட இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தங்கள்தான் என்றும் உச்ச நீதிமன்றத்திற்கு மோடி அரசு தெரிவித்துள்ளது.  பெயர்களை வெளியிடுவதற்கு  பா.ஜ.க. அரசு தயக்கம் காட்டுகிறது என்ற குற்றச்சாட்டை மறுத்த நிதியமைச்சர் அருண்ஜேட்லி, ‘‘சில பெயர்களை வெளிப்படுத்த மோடி அரசு நிச்சயமாக தயக்கம் காட்டவில்லை. பெயர்களை வெளியிடுவது எங் களுக்கு கடினமான செயல் அல்ல.  ஆனால், உரிய சட்ட நடைமுறையின்படிதான் அவை வெயியிடப்பட இயலும்’’ என்று கூறியுள்ளார்.

2017 ஆம் ஆண்டிற்குப் பிறகு தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகள் பற்றிய விவரங்கள்  மட்டும் வெளியிடப்படும் என்று மோடி அரசு இப்போது கூறுகிறது. தகவல்களை அரசுகள் தாங்களாகவே பரிமாறிக் கொள்ளும் நடைமுறை பற்றிய ஒப்பந்தம் ஒன்று அயல்நாடுகளுடன் செய்து கொள்ளப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. 2017 ஆம் ஆண்டுக்கு முன் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகளைப் பற்றிய விவரங்கள் ஏன் வெளியிடப்பட இயலாது? இந்தக் கோரிக்கையை மக்களவையில்பா.ஜ.க.மற்றும்எஞ்சியஎதிர்க் கட்சிஉறுப்பினர்கள்முன்வைத்தனர்.இவர்கள்தான் அயல்நாட்டு வங்கிகளில் பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட வில்லை என்று மன்மோசன் சிங் அரசை முன்பு தாக்கிப் பேசியவர்கள் ஆவர்.

நன்றி: ‘தி இந்து’, 29.05.2017

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

(தொடரும்)

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner