எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- தீபங்கர் குப்தா -

(தேசியம் பற்றிய நமது கருத்தை, அணுகு முறையை, பார்வையைப் பற்றி நாம் மறுசிந்தனை மேற்கொள்வதுடன், அதனுடன் இணைந்து செல்ல இயன்ற மிகைப்பட்ட ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளவும் வேண்டும்).

இந்திய மக்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து மக்களுக்கும் தேசியம் என்பது  மயக்கம் தரும் ஒரு கோட்பாடாகவே எப்போதுமே இருந்து வருகிறது. ‘‘நாங்கள் - எங்களுக்கு எதிராக அவர்கள்’’ என்ற ஓர் உணர்வை மிகச் சிறந்த முறை யில் உருவாக்குவதைத்தான் தேசியம் செய்து வருகிறது.

மற்றவர் என்பது ஓர் அயல்நாட்டு சக்தியாகவோ, தனிப்பட்ட சில சக்திகளாகவோ, சர்வாதிகாரி யாகவோ இருப்பவர்கள் என்ற காரணத்தால், கடந்த அண்மைக் காலத்தில் அதற்கு வரவேற்பு இருக்க வில்லை. இத்தகைய சூழ்நிலைகளில் தேசியம் என்பது ஓர் ஆக்கபூர்வமான, சுதந்திரமான உணர்வை ஏற்படுத்து கிறது. இத்தகைய அனைத்து வழக்குகளிலும்,  ரத்தம், உறைந்து போன ரத்தம், வெற்றி, தோல்வி, அவமானம், கொண்டாட்டம் ஆகியவைகளின் மீது கட்டமைக்கப்பட்டதுதான் தேசியம் பற்றிய இந்த பொதுவான விழிப்புணர்வு  ஆகும். ஆனால், மக்களாட்சி என்பது முற்றிலும் மாறுபட்டதாகும். அதற்கு தேசியம் என்ற ஒரு முன்நிபந்தனை தேவைப் படுகிறது; ஒரு முன் நிபந்தனையாக மட்டுமே தேவைப்படுகிறது. கூட்டுப் புழுவிற்குள் இருந்து வெளியே வரும் பட்டாம்பூச்சியைப் போன்றதுதான், தேசியத்தில் இருந்து வரும் மக்களாட்சியும். தேசியம் கோருவதைப் போல, முன்காலத்திய பழக்க வழக்க உறவுகள்,  புராணக் கதைகள், நாடோடி இலக்கியம், பாரம்பரியம்  போன்ற கவர்ச்சிகளை மக்களாட்சி கொண்டிருப்பதில்லை.

தேசியமும், குடிமைப் பண்பும்

தேசியம் என்பது நம்மிடையே ஒற்றுமையை உருவாக்குகிறது; ஆனால், மற்றவர்களை கொடியவர் களாகக் காட்டுகிறது. ஆனால், வேற்றுமைகள் ஏற்றுக் கொள்ளப்படும் இடத்தில், சகோதர உணர்வின் அடிப்படையில் ஒற்றுமையை உருவாக்குவது என்ற முற்றிலும் மாறான ஒரு கொள்கையைப் பின்பற்றுவது மக்களாட்சியாகும். நம்முள் தாமாகவே எழும் ரத்த உறவு மற்றும் பாரம்பரியம் போன்ற அனைத்துக்கும் எதிராகப் போவது என்ற காரணத்தினால், குடிமைப் பண்பினைப் போற்றி வளர்ப்பது என்பது மிகுந்த கடினமானதும், முக்கியமாக சவால்கள் நிறைந்ததும் ஆகும். மக்களாட்சியையும், அதன் காவலனான சகோதரத்துவத்தையும் கடை பிடிப்பதைக் கடுமையானதாக ஆக்குவது,  குடிமைப் பண்பின்  மென்மையும், பலவீனமுமே ஆகும்.

இந்திய தேசியம் 1947 இல் பிறந்தது. ஆனால், இந்தியக் குடிமகன் என்பவன், நமது அரசமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட  1950-க்கும் பிறகே வந்தான். அப்போதிருந்து, குடிமைப் பண்பு என்னும் கொடியை, எதிர்காற்றுடன் போராடி எதிர்த்து நிற்கச் செய்வது எவ்வளவு கடினமான செயல் என்பதை நாம் கண்டறிந்திருக்கிறோம். பருவநிலை மாற்றம் பெறுவதற்காக இந்த மிகைப்படுத்தப்பட்ட  போலி தேசியம் வெளியில் எப்போதுமே காத்துக் கொண்டு இருந்து வருகிறது.

உலகெங்கும் உள்ள நாடுகளில் இத்தகைய  மிகைப்படுத்தப்பட்ட போலி தேசியம் எதிர்க்கப்படு வதால்,  இந்திய தேசியம் மட்டுமே இதற்கு விதி விலக்கல்ல. அண்மையில் நடைபெற்ற  பிரெஞ்சு தேர்தல் இதற்கு மிகவும் சரியான ஒரு எடுத்துக் காட்டாகும். நல்ல வேலையாக மக்களாட்சி அங்கு வெற்றி பெற்றது. ஆனால், இது போன்றதொரு அச் சுறுத்தலை எதிர்கொள்ளும், பல தேசிய அரசுகள் உள்நாட்டிலோ, வெளி நாட்டிலோ  இருக்கவும் கூடும்.

அரசமைப்பு சட்ட விதிகள்

வேறு பல நிலைகளிலும் தவறு செய்வதாக நமது அரசமைப்பு சட்டம் இருந்த போதிலும், மக்கள் அனைவரும் சமமானவர்களே என்றும், ஒருவரை விட மற்றொருவர் எந்த ஒரு சிறிய அளவிலும் கூட மேம்பட்டவர் அல்ல என்றும் விதித்திருப்பதால்,  நமது நாட்டில் குடிமைப் பண்பின் அடித்தளங்கள் உறுதியாக அமைக்கப்பட்டுள்ளன. நமது அரசமைப்பு சட்டம் சிறுபான்மையினரைக் காத்து, ஆணாதிக்கத்தை எதிர்த்து வந்திருப்பதுடன்,  தீண்டாமையையும், ஜாதி வேறுபாடுகளையும் பொதுவாழ்வில் இருந்து ஒழிக்கவும் செய்துள்ளது. இவை அனைத்தும் இயல்பாகவோ, கீழ்மட்டத்தில் உள்ள மக்களிடமிருந்தோ வந்துவிடவில்லை. அவை நிறைவேறுவதற்கு, இத்தகைய தீவிர கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்று  காந்தி, நேரு, அம்பேத்கர், படேல் மற்றும் பல உயர் மட்டத் தலைவர்கள் மேற்கொண்ட கூட்டு முயற்சியே பெரிதளவும் காரணமாக அமைந்தது. தேசியம் என்பதை இவ்வளவு எளிமையானதாகவும், தூய்மையானதாகவும் ஆக்கு வது என்பதை இக்காலத்தில் கற்பனையிலும் காண இயலாது.

அதே நேரத்தில், பல நேரங்களில், மிகைப்படுத்தப் பட்ட தேசியத்தையும் கூட நமது அரசமைப்பு சட்டம்  ஏற்றுக் கொண்டும் உள்ளது.  நெருக்கடி நிலை பிரகடனம் செய்வதற்கும், தேச துரோகக் குற்றச் சாட்டின் அடிப்படையில் மக்களை விசாரணை இன்றி கைது செய்து வைத்திருக்கவும் அனுமதி அளித்து இருக்கும் அரசமைப்பு சட்ட விதிகளில் இந்த சிறப்பு அம்சத்தைக் காணலாம்.

எனவே,  தேசியத்தைப் பற்றிய நமது அணுகுமுறை பற்றியும், அதனுடன் இணைந்து செல்லும் மிகைப்பட்ட ஆர்வத்தைத் தடுத்து நிறுத்துவது பற்றியும் மறுசிந்தனை செய்ய பரிந்துரைப்பதே சரியானஆலோசனையாகஇருக்கக்கூடும். கடந்த பல ஆண்டுகளில் நாம் கண்டு வரும் இனப் படுகொலைகள்,  சிவசேனா பாணியிலான பெருமை பேசுதல், பசுப்பாதுகாவலர் என்ற பெயரில் நடைபெறும் படுகொலைகள், கேடு பயக்கும் மதவாத சலுகைகள் ஆகிய அனைத்துமே தேசியத்தின் வெளிப்பாடுகளே ஆகும்.

இவற்றில் எதனையும் குடிமைப்பண்பால் பொறுத்துக் கொள்ள முடியாது. ஆனால், இதனை செய்து முடிப்பதற்கு பேரறிவு கொண்ட ராஜதந்திரிகளைப் போன்ற தலைவர்கள் தேவை. எந்த மக்களாட்சி முறையுமே தவறே அற்ற நிறைவு பெற்றதல்ல. அவ்வாறிருந்தாலும், புயலின்போது நாம் ஒரு திசைகாட்டியைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இங்குதான், குடிமைப் பண்பை மட்டுமே, நம்மை வழி நடத்திச் செல்வதற்காக நம்ப முடியும்.

நன்றி: ‘தி இந்து’, 02.06.2017

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner