எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- நிரஞ்சன் முகாபாத்தியோயா -

(அரசு உத்திரவிடும்போது, செயல்பட ராணுவம் தயாராக இருக்க வேண்டும். ஆனால் ஒரு கொள்கை களை உத்தரவாக இடும் அதிகாரம் கொண்டதாக ராணுவம் இருக்கக்கூடாது. ஆனால், இழப்புக்கேடாக கடந்த மூன்று ஆண்டுகளில் இதுதான் நடந்தது. ராணுவ ஆட்சியை விரும்பும் மத்திய தர மக்களின் விருப்பம் நிறைவேறும் அபாயம் அச்சம் தரும் வகையில் மறைமுகமாக  நெருங்கி வந்து கொண்டி ருக்கிறது. ராணுவத்தின் செயல்பாடுகளுக்கு அரசியல் நியாயம் கற்பிப்பதோ அல்லது ராணுவத்திற்கு அதிகாரம் அளிப்பதோ எப்போதுமே ஒரு மிகமிக மோசமான கருத்தாகும்).

பள்ளிக் கல்வி முடித்ததும், என்னுடன் படித்த இரு மாணவர்கள், அவர்களது குடும்ப பாரம்பரியப்படி  ராணுவத்தில் சேர்ந்தது, எந்த நேரத்திலும் சிறப்பானதாகக் கருதப்பட்டதில்லை. ராணுவத்தில் சேர்பவர்கள் அதிக நாட்டுப் பற்று கொண்டவர்களாக இருப்பார்கள் என்ப தையும் எவரும் நினைத்துப் பார்த்ததில்லை.  ஆனால், இன்றைய இந்தியாவில் இதனைப் பற்றி முடிவு செய்வது அவ்வளவு எளிதானதல்ல. ராணுவத்தில் சேர்வதை மிகவும் விரும்புவதாகக் கூறாதவரும், நாட்டிற்குக் கடமைப்பட்டிருப்பதைப் பற்றி கேள்வி கேட்பவரும் கோழைகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள்.

இதற்கும் முன்பு கூட, ராணுவத் தளபதி அரசியல் அரங்கில் நுழைந்து அறிக்கை வெளியிடுவது என்பது அவரது வேலைக்கு முற்றிலும் அப்பாற்பட்டது. ராணு வத்தின் மேன்மைத் தன்மை பற்றிய கருத்தை இந்தியா கொண்டாடத் தொடங்கியிருக்கிறது. பா.ஜ.க.வின் அரசியல் பாடம் கலாச்சார தேசியம் என்ற நிலைக்கு மாற்றம் பெற்ற போதும்,  வன்முறை வழியிலான தேசியத்துக்கு அது வழிநடத்திச் செல்லப் பட்ட போதும்,  ராணுவத்தைப் பற்றி கேட்கப்படும் எந்த கேள்வியும் தேசதுரோகச் செயலே என்று கருதத் தொடங்கும் அளவுக்கு, இன்றைய ராணுவ தேசியம் உருவாக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடியின் ஆட்சியில், ஏற்கெனவே இருப்பவைகளுடன், புதியதாக ஒரு புனிதப் பசுவும் சேர்க்கப்பட்டுள்ளது. அயல்துறை அல்லது பாது காப்பு தொடர்பான விஷயங்களில் மக்கள் எந்தக் கேள்வியையும் கேட்கக்கூடாது அல்லது ராணுவத்தைப் பற்றி விமர்சிக்கவோ கூடாது என்ற அரசின் கொள்கை தான் அது.

இதற்கு முன்பு, நாட்டிற்காக ராணுவத்தினர் எத்தகைய கடினமான சேவையையும் ஆற்றிக் கொண்டிருக்கின்றனர் என்ற போதிலும்,  தெளிவாக அடையாளம் காணப்பட்ட நோக்கங்கள் ராணுவத்திற்கு அளிக்கப்பட்டது மட்டுமன்றி,  நிர்ணயிக்கப்பட்ட சட்ட விதிகளை எந்த சூழ்நிலையிலும் ரணுவத்தினர் மீறக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், தேசியம் பற்றி இந்த அரசு மிகைப்படுத்திப் பேசத் தொடங்கியிருக்கும் நிலையிலும், அரசின் சிந்தனையில் இருந்து சிறிதளவு மாறுபட்ட சிந்தனையை வெளிப்படுத்தினாலும் அதனை தேசதுரோகம் என்று அரசு குற்றம் சாட்டத் தொடங்கி யுள்ள நிலையிலும், ராணுவம் புதிய புனித பசுவாக ஆகிவிட்டதுடன்,  சட்ட எல்லைகளில் அதற்கு சலுகைகள் கிடைக்கத் தொடங்கியுள்ளது. ராணுவத்தின் செயல்பாடுகளைக் குறை கூறுவதோ அல்லது அது மனித உரிமைகளை மீறியிருக்கிறது என்று குற்றம் சாட்டுவதோ, தேசத் துரோகச் செயல்கள் என்று தொடர்ந்து முத்திரை குத்தப்பட்டு வருகிறது. கட்டுப்பாடற்ற முறையில் ஊடகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள இடம் அதிகரித்து வருவதில் உள்ள படுகுழிகளில் இது ஒன்று, ஆட்சேபணை மிகுந்த ஒரு கண்ணோட்டத்தை ஒளிபரப்புவதற்குக் கூட யாரோ ஒருவராக இனியும் இருக்க வேண்டியதில்லை என்பதுதான். நாட்டின் பெயரால் அல்லது நாட்டின் நலன் என்ற பெயரால் மற்றவர்களை எவர் ஒருவர் வேண்டுமானாலும் அடித்து நொறுக்க இயலும் என்பதை சமூக ஊடகம் உறுதிப்படுத்திக் கொள்கிறது. நாடு என்பது எப்போதுமே ஒரு நல்ல ஒழுக்கநெறி சார்ந்தது என்பதால், மரியாதை புருஷோத்தம அனுமன்களைக் கேள்வி கேட்கும் எவர் ஒருவர் வேண்டுமானாலும் மிகவும் ஒழுக்கக்கேடு உடையவர் என்பது போன்று கண்டிக்கப்பட இயலும். சம காலத்தில் அளிக்கப்பட்டுள்ள தோற்றத்தின்படி, ராணுவம் என்பது குரங்குக் கடவுளின் பிரதிநிதியாகவும்,  கடவுள் ராமர் தேசமாகவும் வர்ணிக்கப்படுகிறது. இத்தகைய ஒரு சூழ்நிலையில்,  ராணுவத்தைப் பற்றி விமர்சித்து குறை கூறுபவர்களும், ராணுவத்தின் மனித உரிமை மீறல்களைத் தொடர்ந்து சுட்டிக் காட்டுபவர்களும், ஏ.எப்.எஸ்.பி.ஏ. போன்ற மக்களாட்சிக்கு எதிரான ராணுவ சட்டங்களை நீக்க வேண்டும் என்று கோருபவர்களும் மென்மையான தாக்குதலுக்கு இலக்காகின்றனர்.  மெல்ல மெல்ல, ஆனால் மறைமுகமாக ராணுவம் என்பது நாடு என்ற பெயரைப் போன்றதாகவே ஆகிவிடுகிறது.

இவ்வாறு,அரசியல்நிருவாகத்திற்கும்,ராணுவத் திற்கும் இடையே மிகுந்த கவனத்துடன் வரையறுக் கப்பட்ட இடைவெளி முழுமையாக நீக்கப்படுகிறது. முன்பு பொதுமக்கள் முன்னிலையில் விவாதித்து ஒதுக்கப்பட்ட சிவில்-ராணுவ உறவுகளை  இந்த அரசு இப்போது அதிக அளவில் அணுமதிப்பது பொது ஊடக மேடைகளில் விவாதிக்கப்பட வேண்டும். பொது மக்களின் அழுத்தமே கொள்கைகளை வரையறுக்கிறது. ராணுவத் தலைமை அரசியல் அறிவிப்புகளை வெளி யிடும்போது  அரசு எந்த ஆட்சேபணையையும் தெரிவிக்கவில்லை. ராணுவ களத்தில் இருந்து வரும் இத்தகைய செய்திகள் நாட்டிற்கு அவசியமானவை என்பது அவரது வேலைக்கு முற்றிலும் அப்பாற்பட்டது. ராணுவத்தின் புனிதத் தன்மை பற்றிய கருத்தை இந்தியா கொண்டாடத் தொடங்கியிருக்கிறது. பா.ஜ.க.வின் அரசி யல் பாடம் கலாச்சார தேசியம் என்ற நிலைக்கு மாற்றம் பெற்ற போதும்,  வன்முறை வழியிலான தேசியத்துக்கு அது வழிநடத்திச் செல்லப் பட்ட போதும்,  ராணுவத்தைப் பற்றி கேட்கப்படும் எந்த கேள்வியும் தேசதுரோகச் செயலே என்று கருதத் தொடங்கும் அளவுக்கு, இன்றைய ராணுவ தேசியம் உருவாக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தின் பலம் என்று இதனை எடுத்துக் கொள்ளும் ஆளுங்கட்சி, தனது அரசியல் களத்தை விரிவுபடுத்திக் கொள்ள அதனைப் பயன் படுத்திக்கொள்கிறது. என்றாலும், இறுதியில் இது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தவே செய்யும். அரசியலில் தங்களுக்கு நேரடியான பங்கு இருப்பதை ராணுவம் விரும்பாது என்பதால், முடிவில், அரசியல் கொள்கைளை வடிவமைப்பதில் ராணுவம் முக்கிய பங்காற்றியதா என்பதை அறிந்து கொள்ளவே இயலாமல் போய்விடுகிறது. ராணுவ நடவடிக்கைகளுக்கு தடை ஏற்படுத்தும் எவர் ஒருவரும் தீவிரவாதிகளின் கைக் கூலிகள் என்றும், தேசவிரோதிகள் என்றும் அவர்கள் தண்டிக்கப்படாமல் போகமாட்டார்கள் என்றும் ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ரவாத் பிப்ரவரி மாதத்தில் கூறி யது முதற்கொண்டு,  முன்னிலை எடுத்துக் கொள்ள ராணுவத்தை அரசு அனுமதித்துள்ளது. எல்லைக் கோட்டருகே உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் முன் வீரவணக்கம் செலுத்தப்பட்டபோது ரவாத் இவ்வாறு கூறினார். அவரது நோக்கமும் கருத்தும் அரசியலாக இருப்பதால், அத்தகைய அறிவிப்பு பிரதமரிடமிருந்து வந்திருக்க வேண்டும்.

மனித கவச பிரச்சினையில்,  சமூகத்தைக் கூர் மையாகப் பிரிந்து போக அனுமதித்ததுடன்,  மேஜர்  நிதின்  நீடுலுக்கு  பதக்கமும் அளிக்க  தளபதி ரவாத்தை அனுமதித்தன் மூலம்,  தன்னை எளிதில் விடுவித்துக்கொள்ள முடியாத ஒரு பெருவெடிப்பில் அரசு ஆழமாகத் தவறி விழுந்துவிட்டது.

அரசு உத்திரவிடும்போது, செயல்பட ராணுவம் தயாராக இருக்க வேண்டும். ஆனால் ஒரு கொள்கைளை உத்தரவாக இடும் அதிகாரம் கொண்டதாக ராணுவம் இருக்கக்கூடாது. ஆனால், இழப்புக்கேடாக கடந்த மூன்று ஆண்டுகளில் இதுதான் நடந்தது. ராணுவ ஆட்சியை விரும்பும் மத்திய தர மக்களின் விருப்பம் நிறைவேறும் அபாயம் அச்சம் தரும் வகையில் மறைமுகமாக  நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. ராணுவத்தின் செயல்பாடுகளுக்கு அரசியல் நியாயம் கற்பிப்பதோ அல்லது ராணுவத்திற்கு அதிகாரம் அளிப் பதோ எப்போதுமே ஒரு மிகமிக மோசமான கருத்தாகும்.

நன்றி: ‘தி டெக்கான் கிரானிகள்’,  02.06.2017

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner