எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மார்ச் 19 ஆம் தேதி அன்று முதல்வராக அறிவிக்கப்பட்ட வர், ஆனால் அவர் பதவியேற்றது 26ஆம் தேதி இதற்கான  காரணம் குறித்து அவரது ஆஸ்தான ஜோதிடர் கோரக்பூர் மடத்தின் துணை நிர்வாகி கோரக்கேஸ்வர்நாத் கூறும் போது, மார்ச் 24 ஆம் தேதி துவங்கும் பாபமோட்சனி ஏகாதசி விரதம் 25 மாலையில் தான் நிறைவு பெற்றது, இதற்காக  உஜ்ஜைனில் மிகபெரிய யாகம் ஒன்று நடந்தது, இந்த யாகத்தில் ஆதித்யநாத்தின் அரசியல் எதிர்காலம் நல்ல வழியில் இருக்கவும், சுபிட்சம் நீடிக்கவும் அனைத்து புனித நதிகளின் நீரும் கொண்டுவந்து ஊற்றப்பட்டது,

ஆதியநாத் பிரம்மாச்சாரி ஆகையால் அவர் வகிக்கும் பதவியில் முன்பு வகித்தவர்கள் அனைவரும் கிரகஸ்தர்கள்,  ஆகவே பிரம்மாச்சாரிக்கான வரைமுறைக்கு ஏற்ப முதல் வர் இருக்கைக்கு சில பூஜைகள் செய்யப்படவேண்டும். சுமங்கலிகளும் தீட்டுப்படாத பெண்குழந்தைகளும் சிறப்பு பூஜையில் இருக்கவேண்டும். மதவிதிகளின்படி சில  காரியங்கள் செய்யவேண்டியுள்ளது, இது நம்பிக்கைக்குரிய ஒரு செயல் ஆகையால் இதில் பல விதிமுறைகளை  நேரடி யாக கூறமுடியாது.(விதிமுறைகள் என்பது விதவைகள், தாழ்த்தப்பட்டவர்கள், இதர பிறபடுத்தப்பட்டவர்கள்,  முதல் வர் பதவியேற்கும் போது சாமியாரின் முன்பு நிற்கக் கூடாது இது பதவியேற்கும் முன்பாக செய்யவேண்டியவைகள்.

பதவியேற்ற பின்பு முதல்வர் இல்லத்தில் நுழைவதற்கு முன்பு, 12 பசுக்கள் முதலில் நுழையவேண்டும், முதல்வரின்  இல்லம் உள்ள சாலை முதல் முதல்வர் இல்ல கதவுகள் வரை புனித ஆற்றுநீர்கள் தெளிக்கப்படும், அதே நேரத்தில்  குறிப் பிட்ட சிலர் அப்பகுதியில் வர தடைசெய்யப்படும், சில அசவு கரியங்களைத் தடுக்க முன்னறிவிப்பாக தெரிவிக்கப்படும்.

முதல்வரின் இல்லத்தில் எவ்வகையான பொருட்கள் இருக்கவேண்டும், எத்தகையவர்கள் நுழையவேண்டும் என்பதிலும் சில மதரீதியான விதிமுறைகள் உண்டு. அதை நாங்கள் செயல்படுத்த மூத்த பண்டிதர் ஒருவரை நியமித் துள்ளோம்.

முதல்வரின் இல்லத்தில் அய்.ஏ.எஸ் மட்டத்தில் உள்ள அதிகாரிகள் உடனடியாக நியமிக்கப்படவில்லை, ஏற்கெ னவே இருந்த 5 அதிகாரிகளில் ஒருவர் மட்டுமே பார்ப்பனர் மற்றவர்கள் அனைவரும் பார்ப்பனரல்லாதோர், ஆகை யால் ஆதித்யநாத்தின் உதவியாளரான கோரக்கேஸ்வர் நாத் அந்த பார்ப்பனரைத் தவிர மற்றவர்களுக்கு வேறு பதவிகள்  கிடைக்கும் வரை கட்டாய விடுப்பு கொடுத்து விட்டார்.

ஆதித்யநாத் முதல்வராக இருந்தாலும் அவர் காலையில் கண்விழிப்பது முதல், பேனாவை பிடித்து எந்த திசையில் அமர்ந்து எந்த திசையை நோக்கி பேனாவைப் பிடித்து கையெழுத்திடவேண்டும் என்பது வரை இந்த கோரக்கேஸ்வரின் ஆலோசனையின் பேரில்தான் நடக்கும்.

முதல்வர் இல்லத்தில் வெளியாட்கள் அதாவது பார்ப்பனர் அல்லாதோர் நுழையத்தடை விதிக்கப்பட்டுள் ளது, வெளியில் பார்க்க இது தெரியாமல் இருக்கலாம்,  முதல் வரான பிறகு  ஒரு ஊடகவியளார் கூட்டம் நடை பெற்றது. இதில் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை மட்டுமே ஊடக நிறுவனங்கள் அனுப்பி வைத்தன. அதா வது பார்ப்பன ஊடகவியாளர்கள் மட்டுமே என்பது அனை வருக்கும் தெரிந்ததே?  அனைத்து ஜாதி ஊடகவிய லாளர்கள் வருகை தந்தால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்ற நல்ல?? நோக்கத்துடனே பார்ப்பன ஊடகவியலா ளர்கள் மட்டுமே முதல்வர் இல்லத்தில் அனுமதிக்கப்பட் டனர். இதற்கு ஊடக முதலாளிகளும் துணைபோகின்றனர்.

தலித்துகளின் மனுக்கள்
குப்பைத் தொட்டியில்

தலைமைச்செயலகத்திலும் இதே கெடுபிடிதான், மனுக்கள் அளிப்பதில் கூட வர்ணாஸ்ரம முறை பயன் படுத்தப்படுகிறது, சமீபத்தில் தலித்துகள் தங்களது பகுதியில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து முறையிட தலைமைச்செயலகம் சென்ற போது அவர்களுக்கு தலைமைச்செயலக முக்கிய நுழைவாயில் அருகே உள்ள ஒரு பெரிய பிளாஸ்டிக் பெட்டியில் அந்த மனுக்களை போடச்சொல்லி பாதுகாவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அங்கே போடச்சென்ற போது ஏற்கெனவே அதில் சில குப்பைகளும், உணவுக்கழிவுகளும் இருந்ததைக் கட்டு அப்பாதுகாவலருடன் வாக்குவாதம் செய்தனர். ஆனால் அவர் மேலிடத்திலிருந்து நீங்கள் கொண்டுவந்ததை அந்தப்பெட்டியில் போட உத்தரவு வந்துள்ளது, நான் எனது கடமையைச்செய்கிறேன் என்று கூறிவிட்டார்.

மார்ச் 26 ஆம் தேதி பதவியேற்ற உடன் அதிகாரிகள் மட்டத்தில் பெரும் மாற்றம் கொண்டுவந்தார். பதவி நீடிக்கப்பட்ட 120க்கும் மேற்பட்ட செயலாளர் மட்டத்தில் உள்ள அதிகாரிகள், வீட்டிற்கு அனுப்பட்டனர் என்று பெரிய எழுத்தில் செய்திகள் வெளியாகிக்கொண்டு இருந் தது, இவர்கள் அனைவரும் பார்ப்பனர் அல்லாதவர்கள் என்பது குறித்து எந்த ஒரு செய்தியும் வெளியிடவில்லை, அதே போல் 12-க்கும் மேற்பட்ட பார்ப்பன அதிகாரிகள், தாங்கள் கொடுத்த பதவி விலகல் கடிதத்தை திரும்பப்பெற்று மீண்டும் தலைமைச்செயலகத்திற்கும், ஆதித்யநாத்தின் முதல்வர் இல்லத்திற்கும் பணிசெய்ய  சென்றுவிட்டனர்.

ஜாதி ரீதியினாலான பதவிகள்

மார்ச் 26 ஆம் தேதி பதவியேற்றது முதல் 187 அதி காரிகள் இதுவரை மாற்றப்பட்டுள்ளனர். அப்படி மாற்றப் பட்டுள்ளவர்களின் விவரங்களை பார்த்தால் தெளிவான வர்ணாஸ்ரம விதிகள் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது தெரியவரும்.

எடுத்துக்காட்டாக கிராமப்புற நிர்வாக வளர்ச்சித்துறை அமைச்சராக பதவியேற்ற மகேந்திரசிங்தான் தனக்கு நெருங்கிய சிலரை தன்னக்கு உதவியாளராக பணிய மர்த்திய போது, அவர்களின் ஜாதிவிவரங்களைக் கேட்டும் முதல்வரின் உதவியாளரிடமிருந்து ஆணை வந்தது, இதனை அடுத்து அவர் ஜாதிவிவரப் பட்டியலைக்கொடுத்த போது அந்தப் பட்டியலில் உள்ள நபர்களை நீக்கிவிட்டு இவர்களாகவே ஒரு பட்டியல் கொடுத்தனர். அதில் உள்ள அனைவருமே உயர்ஜாதியைச்சேர்ந்தவர்கள்.

எகனாமிக்ஸ் டைம்ஸ் என்ற ஆங்கில இதழ் ஏப்ரல் 27 ஆம் தேதி வெளியிட்ட செய்தியில் பெருவாரியான தலைமைச் செயலக அதிகாரிகள், பணியாளர்கள் அனை வரும் இரண்டு முறை பல்வேறு பொறுப்புகளுக்கு மாற்றப் பட்டுள்ளனர். ஏன் மாற்றப்பட்டார்கள் என்றால் அவர்கள் ஜாதிகள் பற்றிய குளறுபடிகள்தான், ஜாதவ் என்பவர்களில் சிலபிரிவினர்  தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலிலும் வருவார் கள், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் வருவார்கள். முதலில் அவர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற நினைப்பில் குறிப்பிட்ட துறைக்கான பணியைக் கொடுக்க, பிறகு அவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் இல்லை, தாழ்த் தப்பட்டவர்கள் என்று தெரிந்த பிறகு மீண்டும் அவர் களுக்கு வேறு பணிக்கான பொறுப்புகள் வழங்கப்பட்டுள் ளன.

தேசிய துப்புரவு தொழிலாளர் அமைப்பின் தலைவர் பெஜேவாட் வில்சன், தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கூறினார், நான் கல்லூரி முடித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யச்சென்றேன், எனது சான்றி தழிலில் எனது ஜாதியைப் பார்த்ததுமே அவர்களாகவே எனக்கு நகராட்சி துப்புரவு தொழிலாளர் பணியை வழங்கினார்கள். நான் என்னுடைய கல்வித்தகுதிக்கு தகுந்த பணியைத்தாருங்கள் இல்லையென்றால் இந்தப் பணியே வேண்டாம் என்று சான்றிதழை கிழித்து அவர்களின் முகத்தில் வீசிவிட்டு வந்துவிட்டேன் என்று கூறியிருந்தார்.

யுவவாகினிதான் உபி காவலர்கள்

முதல்வர் பதவியேற்றதுமே தனது நீண்ட நாள் அவா வான லவ்ஜிகாத் அதாவது இஸ்லாமியர்கள் இந்துப் பெண்களை காதலிப்பதை தடுக்கும் வகையில் ஆண்டி ரோமியோ என்ற பிரிவை காவல்துறையில் உருவாக்கினார். பெயரளவிற்குத்தான் இந்த பிரிவில் காவல்துறையினர் இருந்தனர். ஆனால் காவல்துறையின் வாகனத்தில் ஆதியநாத்தின் யுவவாகினி அமைப்பினர் வலம் வந்தனர். ஆக்ராவில் சகோதரன் உறவு முறை உள்ள ஒரு நபருடன் வந்த பெண்ணை யுவவாகினியினர் அடித்து துன்புறுத்தி விரட்டிய நிகழ்வு, பள்ளித்தோழியுடன் நடந்த வந்த ஒரு மாணவனை பிடித்து அவர் இஸ்லாமியாராக இருந்த ஒரே காரணத்திற்காக பொது இடத்தில் அவருக்கு மொட்டை யடித்து சாலையில் தோப்புக்கரணம் போடவைத்தது போன்றவை  யுவ வாகினி அமைப்பினரின் அடாவடிக் களுக்கு மிகப்பெரிய எடுத்துக்கட்டாகும்.

இறைச்சிக்கடைகள்

மாநிலம் முழுவதும் மாட்டிறைச்சி மட்டுமல்லாது, ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி மீன் விற்பனை நிலையங்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டு வருகின்றன. லக் னோவில் உள்ள பிரபல இறைச்சி உணவகச்சாலை சுமார் 700 ஆண்டுகளுக்குப் பிறகு வெறிச்சோடியது, கோரக்பூரில் தனியார் கோழிப்பண்ணையில் புகுந்த யுவவாகினி அமைப்பினர் கோழிகள் அடங்கிய குடில்களை சேதப் படுத்தி கோழிகள் அனைத்தையும் விரட்டிவிட்டனர். இந்த கோழிப்பண்ணை கிறிஸ்தவர் ஒருவரால் நடைபெறுவ தாகும். இந்த நிலையில் விரட்டப்பட்ட கோழிகள் பெரும் பாலானவை சாலைகளில் அடிபட்டு மரணமடைந்தது சில நாய்களால் குதறப்பட்டு ஆங்காங்கே செத்து விழுந்தன. சில உணவு கிடைக்காமல் செத்து விழுந்தன,

இது குறித்து செய்திவெளியிட்ட ஒரு இந்தி பத்திரிகை இரண்டு சமூகத்திற்கிடையே ஏற்பட்ட மோதலால் சேத மடைந்த கோழிப்பண்ணை என்ற தலைப்பில் செய்தி வெளி யிட்டிருந்தது,

இந்து மதமே வேண்டாம்

அதிகாரிகள் மட்டத்தில் ஜாதிவாரியாக பணிகள் தரும் நடவடிக்கை மிகவிரைவிலேயே பெரிய அளவில் வெடிக் கத் துவங்கியுள்ளது,  ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உயர் ஜாதியினரின் கொடுர நடவடிக்கையைத் தாங்க முடியாமல் நாங்கள் இந்துக்கள் அல்ல என்றும் இஸ்லாமிய களாகவும், பவுத்தர்களாகவும் மதம் மாறும் நிலை உருவாகியுள்ளது,

1980-களில் ஒரே ஒரு மீனாட்சிபுர பள்ளர்கள்தான் இஸ்லாமியர்களாக மாறினார்கள். ஆனால் இன்று மீரட், சமஸ்திபூர், மொராபாத், சகரன்பூர், ஆக்ரா, போன்ற மாவட் டங்களில் மதம் மாறுவோர்களின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது,  மே மாதம் இரண்டாம் வாரம் முதல் மதமாறுவோர் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளது. சகரன்பூர் மாவட்டத்தில் பல கிராமங்களில் ஒட்டு மொத்த மக்களே மதம் மாறிய செய்திகள் சமீபத்தில் வந்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner