எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மத்தியில் வளர்ச்சி, முன்னேற்றம் என சொல்லி, ஆட்சிக்கு வந்த மோடியின் தலை மையிலான பாஜக - மூன்று ஆண்டுகள் ஆகி விட்டது.

இந்த மூன்று ஆண்டுகளில், நாட்டில், விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழை மக்கள் என அனைவரும் அல்லல்படும் தன்மை குறைந்தபாடில்லை; உயர் பணம் செல்லாது என அறிவித்து, சாதாரண மக்களை, சாலையில் அலையவிட்டதுதான் சாதனை.

இப்போது, பாஜக ஆளும் மாநிலங் களில், விவசாயிகள் போராட்டம் உச்சத்தில் உள்ளது.

பொருளாதாரம் கடும் வீழ்ச்சியில் உள்ளது. புதிய வேலைவாய்ப்புகள் இல் லாதது மட்டுமல்ல, இருக்கிற வேலையும் பறிபோகும் நிலை.

மூன்றாம் ஆண்டில், நாடு முழுவதும் 900 இடங்களில், மோடியும் அவரது அமைச்சர்களும், மூன்று ஆண்டு சாதனைக் கூட்டத்தை நடத்துவார்கள் எனக் கூறினார்கள். ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில், அவரது அமைச் சர்கள் பொதுக்கூட்டம் நடத்துவது இருக் கட்டும்; தலையைக் காட்டுவதே கஷ்டம் என்ற நிலை.

விவசாயிகள் சுடப்பட்டு, கலவரம் நடக்கும் நிலையில், பாஜக ஆளும் மத்திய பிரதேச முதல்வர் சவுகான், பிரச்சினையைத் தீர்க்க, உண்ணாவிரதம் இருக்கிறார்; அவரது சக விவசாய அமைச்சர் யோகா நடனம் புரிகிறார். இதைப்பற்றியெல்லாம், தமிழக தொலைக்காட்சி ஊடகங்கள் விவாதப்பொருளாக ஆக்கவில்லை; மாறாக, தந்தி டிவி, இந்தி மொழி பற்றியும், ரஜினி வந்தால் என்ன ஆகும் என்றும், இப்போது யாருக்கு செல்வாக்கு என்றும், வேண்டுமென்றே திசை திருப்புகிறது; கொஞ்சம் நேரம் கிடைத்தால், அதிமுகவில் உள்ளவர்களைப் பற்றி விவாதம். ஏனைய, ஊடகங்களும், இதற்கு தாங்கள் சளைத் தவர்கள் அல்ல என்கிற ரீதியில் அவர்கள் பங்குக்கு, நாட்டின் முக்கிய பிரச்சினைப் பற்றியெல்லாம் பேசாமல், வேறு பக்கம் மக்களை திசை திருப்பி விடுகிறார்கள்.

இதற்கு, இன்றைய சான்று, பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா, காந்தியைப் பற்றி ஒரு கருத்தைச் சொல்கிறார். அவர் ஒரு சதுர் பனியா என்று அதாவது காந்தி ஒரு தந்திர பனியா என்று சொல்வதன் மூலம், நாடு முழுவதும், பலரும் அதை எதிர்த்து பேசுவார்கள். விவசாயிகள் பிரச் சினை, பொருளாதார வீழ்ச்சி போன்ற வற்றை தவிர்த்து, இது போன்ற ஒரு விசயத்தை பேச வேண்டும் என்பதற் காகவே, வேண்டுமென்றே, திட்டமிட்டு செய்யப்படும் கோயபல்ஸ் கால யுக்தி என்பதை தமிழக மக்கள் புரிந்து கொண்டால் நல்லது.

- குடந்தை கருணா

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner