எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- பார்சா வெங்கடேஸ்வரராவ் ஜூனியர் -

குறைந்த அளவு பண வீக்கமோ, உணவுப் பொருள் களின் விலை குறைவோ நாட்டின் பொருளாதார நிலை யைக் கண்காணித்து வரும் ஒருவருக்கு எப்போதுமே நல்ல செய்திகளாக இருப்பதில்லை. கடந்த மே மாதத்தில் சில்லறை விற்பனையில் ஏற்பட்ட அனைத்துக் காலத்திலும் இல்லாத குறைந்த அளவு பணவீக்கமான 2.18 சதவிகித பணவீக்கத்தை,  அதே மே மாதத்துக்கான  தொழில் உற் பத்திப் புள்ளியான 3.1 உடன்  ஒப்பிட்டுப் பார்த்தால், அதிக அளவில் உற்பத்தி செய்து அதிகளவில் செலவு செய்ய இயலாத சோகை நோய்  கொண்டது போன்ற நாட்டின் பொருளாதார வளர்ச்சியைச் சுட்டிக்காட்டுவதாகவே அது இருக்கிறது.

குறைந்த பணவீக்கத்துக்கு முக்கிய காரணமான பருப்பு, காய்கறிகளின் விலை குறைவுபற்றி விவசாயிகள் புகார் கூறுவது நிச்சயமானதும், நியாயமானதுமேயாகும். பருப்பு, காய்கறிகளை உற்பத்தி செய்ய விவசாயிகள் செய்த செலவு அளவுக்கு நியாயமான விற்பனை விலை அவர்களுக்குக் கிடைக்காதது, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய பாதிப்பாகும். அவர்கள் செலவு செய்ததைவிட சந்தை விலை குறைவாக இருந்தால், அது அவர்களுக்கு மரண அடியாகவே விளங்கும். கச்சா எண்ணெய் விலை குறையும்போது, எண்ணெய் வள நாடுகள் மகிழ்ச்சி அடைவதில்லை என்பதைக் காணும்போது, விவசாயிகளின் குறையை நம்மால் ஒதுக்கித் தள்ளிவிட்டுச் செல்ல முடிகிறது. ஆனால், அதனால் நுகர்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது, அதிகளவில் இருசக்கர வாகனங்களும், கார்களும் விற்பனை ஆவதில் இருந்தும், கூடுதலாக பெட்ரோல், டீசல் பயன்படுத்தப்படுவதில் இருந் தும் தெரிகிறது.  குறைந்த அளவு பணவீக்கமோ, உணவுப் பொருள்களின் விலை குறைவோ  நுகர்வை அதிக அளவில் உயர்த்திவிடவில்லை என்பது வெகு தெளிவாகத் தெரிகிறது. தொழில் உற்பத்திப் புள்ளிகள் இந்த அளவுக்குக் குறைந்து இருப்பதற்கான காரணமே இதில்தான் அடங்கி இருப்பதாகத் தோன்றுகிறது. தேவை குறைந்து போனது என்று கூறுவது, தீயதை மறைத்து நல்லதைக் கூறுவது போன்றதாகும். குறைந்த அளவு நுகர்வு, ஒரு சந்தை பொருளாதாரத்திற்குப் பெரும் கேடு விளைவிப்பதாகும். குறைந்த அளவு நுகர்வை பொருளாதார நிர்வாண நிலை என்று கூறும் புத்தர் கால பொருளாதாரத்திற்கு வேண்டுமானால் அது பொருத்தமாகத் தோன்றலாம். இந்த ஆடம்பரமற்ற எளிய நிலையை சமதர்மவாதிகளும், இதர இடதுசாரிகளும் விரும்பவும் செய்யலாம். ஆனால், ஒரு சாதாரணமான பொருளாதாரத்தில், நுகர்வில் ஏற்படும் குறைவு, பொருளாதார நிலையில் ஏற்படும் சரிவைச் சுட்டிக்காட்டுவதாகும்.

பணவீக்கம் என்ற அபாயம் கட்டுக்குள் அடங்கியிருக் கிறது என்பதையே குறைந்த அளவு பணவீக்கம் காட்டு வதாகக் கூறுவதையும், தங்களது அடுத்த கூட்டத்தில் வட்டிவிகிதத்தைக்குறைப்பதுஎன்றமோசமானவிளை யாட்டைவிளையாடுவதை,  ரிசர்வ் வங்கியின்  பொருளா தாரக் கொள்கைக் குழு நிறுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வது அதன் கொள்கைகளில் உள்ள முதிர்ச்சி இன்மையையே காட்டுகிறது. ‘உயர்ந்த வட்டி விகிதங்கள், செலவு செய்வதைத் தடுக்கிறது என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வட்டி விகிதங்கள் நுகர்வோர் செலவு செய்வதை நிறுத்தி வைக்கிறது என்று கூறுவது உண்மையல்ல' என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர்  ரகுராம் ராஜனும் கூறுவது வழக்கம். பலவீனமான தேவையே இந்த நிலைக்கான குற்றவாளி ஆகும்.பொருளாதாரவளர்ச்சியைஎதுதடுத்துநிறுத்து கிறது என்பதை பணவீக்கத்தையும் கடந்து, பார்க்க வேண்டிய கடமை அரசின் கொள்கைகளை வடிவமைப்ப வர்களுக்கும்,  முடிவு எடுப்பவர்களுக்கும் உள்ளது.

எந்த ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பேரழிவை ஏற்படுத்த வல்ல பணவீக்கக் குறைவு என்ற ஆபத்து ஏற்படக் காத்திருப்பதுபோலவே தோன்றுகிறது. ஒரு பக்கத்தில் குறைந்து வரும்  பணவீக்கத்துக்கும், மறு பக்கத்தில்  பெருகி வரும் பணவீக்கத்துக்கும் இடையே, எந்தக் கேடு பயப்பதை தேர்ந்தெடுப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல என்றே தோன்றுகிறது. ஓர் அலைவரிசையில் உள்ள உயர்ந்த பணவீக்கத்தைத் தேர்ந்தெடுப்பதே சிறந்தது என்பதை ஒப்புக்கொள்ள பொருளியலாளர்கள் விரும்புகின்றனர். பொருளாதார நிலை வளர்ச்சிப் பாதையில் நகர்ந்து கொண்டு செல்வ தையே உயர்ந்த பணவீக்கம் காட்டுகிறது என்பதே இதன் காரணம். மிகமிகக் குறைந்த அளவான 2.18 பணவீக்கம் என்பது, பெரும் மகிழ்ச்சியுடனும், ஆரவாரத்துடனும் வரவேற்கத்தக்க ஒன்றல்ல. உற்பத்திக் குறைவுடன் இணைந்த குறைந்த பணவீக்கம் நோய்வாய்ப்பட்ட ஒரு பொருளாதார நிலைக்கான அடையாளமாகும்.

உண்மையில் நாட்டின் பொருளாதார நிலை எந்த வழியிலும் முன்னேறிவிடவில்லை

இது உண்மையிலேயே,  பா.ஜ.கட்சியின் தலைமையி லான  பிரதமர் நரேந்திர மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன் உள்ள மிகப்பெரிய, தெளிவான சவால் ஆகும்.அய்க்கியமுற்போக்குக்கூட்டணியின்இரண்டாம் கால ஆட்சியின்போது ஏற்பட்ட பொருளாதாரச் சீரழிவிலிருந்துநாட்டைத்தாங்கள்மீட்டெடுத்துவிட்ட தாகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தவிர்க்க இயலாத, ஆக்கபூர்வமான நம்பிக்கையைத் தாங்கள்  அளித்திருப்பதாவும்  பிரதமரும், அவரது சகாக்களும், கட்சிக்காரர்களும் கூரையின் உச்சியில் ஏறி நின்று கூச்சலிட்டுக் கொண்டுள்ளனர். இதில் உள்ள சோகம் என்னவென்றால், எதிர்பார்த்ததுபோல பொருளாதார வளர்ச்சி ஒன்றும் இறக்கைக் கட்டிக் கொண்டு பறந்து விடவில்லை. பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தத் தவறியதற்காக மோடியின் அரசைக் குறை கூறுவதற்கு மோடியின் விமர்சகர்களும், மோடியை எதிர்ப்பவர்களும் விரும்பக் கூடும். முதல் இரண்டு கால ஆட்சியின்போது, ஆட்சிக்கு புதிதாக வந்தவர்கள் என்ற ஒரு சாக்கு இருந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிடமிருந்து தாங்கள் பெற்ற ஊழல் மலிந்த அரசே, பொருளாதார நிலை சீரழிவிற்கான காரணமாக குற்றம்சாட்ட மோடி அரசினால் முடியும். ஆனால், இரண்டாண்டு காலம் கடந்த பிறகு, மூன்றாவது ஆண்டிலும் கடந்த ஆட்சியாளர்களைக் குறை கூறிக் கொண்டிருப்பது சரியானதாகவோ, அர்த்தம் உள்ளதாகவோ தோன்றவில்லை.

நாட்டின் பொருளாதார நிலையின்மீது குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்திய இரண்டு மிக முக்கியமான முடிவு களை தாங்கள் மேற்கொண்டிருப்பதாக மோடி குழுவினர் பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடும். அவற்றில் ஒன்று, 2018 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு ஆகும். இதன் நோக்கமே கருப்புப் பணத்தைக் கட்டுப் படுத்துவதும், வெளிக்கொணர்வதும், நாட்டில் அதிக அளவில் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதை வெளிக் கொண்டு வருவதுமே என்று  கூறப்பட்டது. அதன் நோக்கம் என்னவாக இருப்பதாகத் தோன்றினாலும்  சரி, நாட்டின் பொருளாதார நிலைக்கு, குறிப்பாக தங்களது பணப் பரிவர்த்தனையை ரொக்கமாகவே செய்து வந்த அமைப்பு சாராத் துறையினருக்கு,  ஒரு பேரதிர்ச்சியை அது ஏற்படுத்திவிட்டதாகவே தோன்றுகிறது. இது அவர் களது அன்றாட செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாக முடக்கிவிட்டது.

உயர்ந்த உணவுப் பொருள் உற்பத்தியுடன் இணைந்து, உணவுப் பொருள்களின் விலை வீழ்ச்சிக்கு இந்த ரொக்கப்பணப் பற்றாக்குறையே காரணம் என்று பகுத்தாய்வர்கள் இப்போது கூறுகின்றனர். நீண்ட கால அளவில் என்ன நன்மைகளை இந்த பணமதிப்பிழப்பினால் செய்ய முடியுமோ இல்லையோ,  குறுகிய கால அளவில் துன்பம் தருவதாகவும், அழிவைத் தருவதாகவும் அது அமைந்துவிட்டது.

மோடி அரசு பெருமைப்பட்டுக் கொள்ளும் மற்றுமொரு பெரிய முடிவு சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தைப் பற்றியது ஆகும். ஜூலை ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள அகில இந்திய அளவிலும் ஒரே மாதிரியான இந்த வரி விதிப்பு முறையின் மூலம் வரி விகிதங்கள் குறைவதுடன், வரி ஏய்ப்புகளும் ஒழிந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.   முன்னேற்ற மற்றும் சமூகக் கட்டமைப்புகளுக்காக அதிக பணம் செலவிடுவதற்கான வருவாயை மத்திய, மாநில அரசுகள் இந்த வரி விதிப்பு நடைமுறையின்  மூலம் பெறமுடியும் என்பதுதான் இதன் பொருள். மேலும், அதிக அளவு உற்பத்தி செய்யவும், அதிக அளவில் விற்கவும், அதிக அளவில் வாங்கவும் மக்களுக்கு அது ஊக்கம் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார இயந்திரம் தனது அனைத்து வழிகளிலும் செயல்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

என்றாலும்,  விழிப்புணர்வு அளிக்கும் ஒரு நடைமுறை யான இந்த சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு நடைமுறை, சில இனம் புரியாத காரணத்தால்,  அது உறுதி அளிக்கும் என்று எதிர்பார்க்கும் நன்மைகளை உடனடியாகக் கொண்டு வராது என்ற அச்சமும் நிலவுகிறது.  இந்த நடைமுறையின் தொடக்கத்தில் பல இடையூறுகள் ஏற்படும் என்பதையும், இவை ஓராண்டு காலத்திற்கு நீடிக்கும் என்றும், அதன் பிறகே இந்த நடைமுறை நன்கு செயல்படும் என்பதையும், இந்த வரிவிதிப்பு நடை முறையைத் தீவிரமாக ஆதரிப்பவர்களும்கூட ஒப்புக் கொள்கின்றனர். மறுபடியும், குறுகிய காலத்தில்,  சரக்கு சேவை வரிவிதிப்பு ஒரு வேகத்தடையாக இருக்குமே அன்றி, ஊக்கம் அளிப்பதாக இருக்காது. மென்மையாக நடைமுறைப்படுத்தப்படும் நியாயமான, பகுத்தறிவுக்கு ஏற்ற இந்த வரிவிதிப்பு நடைமுறை சத்து மருந்தைப் போன்ற பாதிப்பை ஏற்படுத்துமே அன்றி, எந்த இலக்கையும் நோக்கி பயணிக்காத ஒரு பொருளாதாரத்திற்கு அது கூடுதல் பலம் சேர்க்காது.

குறைந்த அளவு பணவீக்கத்துடனும், குறைந்த அளவு உற்பத்தி வளர்ச்சியுடனும்  சேர்ந்த பணமதிப்பிழப்பு நட வடிக்கை மற்றும் சரக்கு, சேவை வரி விதிப்பு நடைமுறை ஆகியவற்றினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்குப் பின்னும்  பொருளாதார நிலை சீர்படும் என்று கருதினால், அது சீர்படுவதற்கு முன்னர் மிகமிக மோசமான அளவில் அதனால்  பாதிக்கச் செய்யவும்  இயலும்.  பொருளாதார நிலை வளர்ச்சி அடையத் தேவையான அளவிற்கு போதுமான அளவிலோ, கூடுதலாகவோ செலவு செய்ய மக்களிடம் பணம் இல்லை என்பதுதான் இதில் அடங்கியுள்ள அப்பட்டமான உண்மை ஆகும்.

வெற்று முழக்கங்களாலும், ‘மேக் இன் இந்தியா', ‘ஸ்கில் இந்தியா‘, ‘டிஜிட்டல் இந்தியா' போன்ற ஏட்டளவிலான திட்டங்களாலும் இனியும் மோடியின் அரசினால் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஓர் உந்துதல் தேவை. இனிக்கும் பேச்சினால் அதனை அளிக்க  முடியாது.

நன்றி: ‘தி டெக்கான் கிரானிகிள்', 14.06.2017     தமிழில் : த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner