எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- மனீஷ் திவாரி-

(அதிகார வர்க்கத்தினரிடம் உண்மையை எடுத்துக் காட்டி பேசுவதை விட்டுவிட்டு, அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தொலைக்காட்சி நிறுவனங்களும், அச்சு செய்தித் துறையில் உள்ள அவர்களது சகாக்களும், ஒருவர் மேல் ஒருவர் விழுந்து கொண்டு,  அரசு செய்யும் ஒவ்வொரு தவறையும் நியாயப்படுத்தவும், வெள்ளை அடிக்கவும், பெருமைப்படுத்தவும் கூட  செய்து கொண்டிருக்கிறார்கள்)

தொலை தூரத்தில் இருக்கும் வாஷிங்டனில் இருந்து இதனை நான் எழுதுவது, அதிக அளவில் வளைந்து கொடுக்காமல் இருப்பதாக இருக்கலாம்.  இதற்கு முழு விதிவிலக்கானதல்லாத அமெரிக்க பத்திரிகைத் துறையும், ஒளிவெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொண்டும், அதிகார வர்க்கத்துக்கு எதிராக உண்மை பேசிக்கொண்டும்,  தற்போதைய அமெரிக்க நிர்வாகத்துக்கு எதிராக மிகுந்த பகை நிறைந்த ஒரு போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளது. ஊடகத்தின் மீது கட்டுப்பாடற்ற, தங்கு தடையற்ற வசைமாரியை தனது டிவிட்டரில்  பொழிவதை,  அமெ ரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இம்மாதம் 6 ஆம் தேதி காலை தொடங்கிவிட்டார்.

தனது டிவிட்டரில் அவர் கூறியுள்ளார்: ‘‘சமூக ஊடகத்தை நான் பயன்படுத்துவதைத் தடுக்க போலி எஸ்.எம்.எஸ். கடுமையாக முயன்று கொண்டிருக்கிறது. நாணயமான,  வடிகட்டாத செய்திகளை என்னால் வெளியே கொண்டு வந்துவிட முடியும் என்பதற்காக அவர்கள் என்னை வெறுக்கிறார்கள்’’ என்கிறார்.

டிவிட்டர் செய்திகளை சமூக ஊடகக் கொள்கை  செய்திகள் என்றும், அரசு கொள்கை செய்திகள் என்றும் வகைப்படுத்தி, முத்திரை குத்தி வேறுபடுத்திக் காட்டுவதற்கான முயற்சியை அமெரிக்க அதிபரின் உதவியாளர்கள் மேற்கொண்டதற்குப் பிறகு ஒரு நாள் கழித்து வந்ததுதான் இந்த டிவிட்டர் செய்தியாகும். எனது டிவிட்டர் செய்திகள் கவனிக்கப்படத் தகுந்தவை என்று மறுநாள் காலையிலேயே டிரம்ப் பேரம் பேசத் தொடங்கிவிட்டார். செல்வாக்கு மிகுந்த தொலைக் காட்சி, இணையதள, அச்சு செய்தி நிறுவனங்களை நேரடியாகத் தாக்கிய அவர், அதனுடன் உரசிக் கொள்ள முனைந்தார். மறுபடியும் அவர், ‘‘வருந்துகிறேன், நண்பர்களே. ஆனால்   சி.என்.என்., என்.பி.சி., ஏ.பி.சி., சி.பி.எஸ். வாஷிங்டன் போஸ்ட் அல்ல நைடைம்ஸ் ஆகியவற்றின் பொய்யான செய்திகளை மட்டும் நான் நம்பி இருந்தால்,  தேர்தலில் வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்குச் செல்வதற்கு எனக்கு வாய்ப்பே இருந்திருக்காது’’ என்று டிவிட்டர் செய்தி வெளியிட்டார்.

அதிபரின் இந்த டிவிட்டர்கள் வெளியிடப்பட்ட அன்றைய தேதியில்தான் 73 ஆண்டுகளுக்கு முன் ஜெனரல் அய்சனோவர் தலைமையில் நேச நாடுகளின் படை பிரெஞ்சு நாட்டு நார்மாண்டி கடற்கரையை, நாசிப் படைகளின் மிகுந்த எதிர்ப்புக்கிடையேயும், நூற்றுக் கணக்கான வீரர்களின் உயிர் தியாகத்திற்குப் பிறகும் கைப்பற்றியது. அன்று, அதன் 73 ஆவது ஆண்டு நினைவு நாளாகும். ஊடகத்தினர் மீது தாக்குதல் நடத்திய ஆறு மணி நேரம் கழிந்த பிறகுதான் டிரம்பினால் வரலாறு படைத்த நேச நாடுகளின் படையின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்க முடிந்திருக்கிறது என்பது பெரிய அவலமாகும்.

தனது எதிரிகளின் பெயர்களை அமெரிக்க அதிபர் குறிப்பிட்டார். உலகிலேயே அதிக அதிகாரம் படைத்த ஒருவராலும் கூட, தனது கருத்துக்கு ஆதரவு தர விரும்பாத அமெரிக்க ஊடகத்தினரின் மீது, வெறுப்பு மிகுந்த வசைமாரியை மட்டுமே பொழிய முடியுமே தவிர, மத்திய புலனாய்வுத் துறையையோ,  கூட்டாட்சி புலனாய்வு அமைப்பையோ,  உள்நாட்டு வருவாய் சேவைத் துறையையோ, மற்றும் பல்வேறு சட்டங்களை நடைமுறைப்படுத்தும் அமைப்புகளையோ, அரசுக்கு எதிரான ஊடகத்தினர்  மீது ஏவிவிட அவரால் முடி யாது. அமெரிக்காவின் நாகரிகம் மிகுந்த ஜனநாயக அமைப்பில், இத்தகைய நிறுவனங்கள் எல்லாம் முதிர்ச்சி அடைந்தவையாகவும், மறுமலர்ச்சி பெற்றவையாகவும் இருப்பவையாகும். அதிபர் கூறும் மோசமான வேலை களைச் செய்ய அவை தயாராக இல்லை.

இதனை டிரம்ப் கடினமான ஒரு வழியில் கற்றறிந்து கொண்டார். எப்.பி.அய். இயக்குநர் ஜேம்ஸ் கோமியை பதவி நீக்கம் செய்தது, டிரம்ப் மீதான தாக்குதலாகவே திரும்பி வந்துவிட்டது. அதனால் ஏற்பட்ட சேதாரத்தை சரி செய்வதற்கு வெள்ளை மாளிகை தடுமாறிக் கொண் டிருக்கிறது. தங்களைச் சுற்றி உள்ளவர்களைச் சூழ்ந்து கொள்வதற்கு அச்சுறுத்திக் கொண்டிருக்கும் காட்டு நெருப்பு விரைவாகப் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைமுறையில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்பது பற்றியும், டிரம்பின் பிரச்சாரக் குழு உறுப்பினர்கள் தூதர் உள்ளிட்ட மூத்த ரஷ்ய அதிகாரிகளை சந்தித்தனரா என்பது பற்றியும் நடத்தப்பட இருக்கும் விசாரணையை தடுத்த நிறுத்தும்படி எப்.பி.அய். இயக்குநரை அதிபர் டிரம்ப் கேட்டுக் கொண்டார் என்பது வரை இந்தக் கதை போகிறது. அந்த சந்திப்புகளில் என்ன முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன என்பதும், அவை குற்றத்தன்மை உடையனவா இல்லையா என்பதும், இது பற்றிய விசாரணை நடக்கும்போதுதான் தெரியவரும். முன் னாள் பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் பிளின் வெளியிட்டிருக்கும் இத்தகையள ரஷ்ய   தொடர்புகள் பற்றிய தகவல்கள், துணை அதிபர் மைக் பென்சின் பதவியைப் பறித்துள்ளது. செனட் புலனாய்வுக் குழு வின் முன்னே கடந்த 8 ஆம் தேதியன்று கோமி அளித்த சாட்சியம் டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான நடைமுறை தொடங்கப்படுவதைத் தூண்டிவிடுவதாக ஆகிவிடவும் இயலும். இவை அனைத்துமே டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்ட 150 நாள்களுக்குள் நடந்தேறியுள்ள நிகழ்வுகளாகும். இதற்கு அமெரிக்க ஊடகத்தினர் மேற்கொண்ட சலிப்பில்லாத, சோர்வற்ற, தொடர்ந்த நடவடிக்கைகளுக்காக அவர்களுக்கு நன்றி கூறவேண்டும். அமெரிக்க ஊடகத்தினருக்கும், வாட்டர் கேட் ஊழலுக்குப் பிறகு இப்போதுதான் இது போன்ற ஒரு முக்கியமான பிரச்சினை கிடைத்துள்ளது. அமெரிக்க பத்திரிகை துறை காட்டில் தவழும் குழந்தையல்ல. அது ஒரு கார்ப்பரேட் ஊடகமாகும். ஆனால், அமைப்புகள் ஒன்றை ஒன்று நம்பக்கூடாது என்ற கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டது அது. துடிப்பு மிகுந்த ஒரு ஜனநாயகத்தில் சம்பந்தப்பட்ட பல்வேறு நபர்களுக்கிடையே நிலவும் உறவை சுட்டிக் காட்டுவதாக அது இருக்கிறது. நான் அரசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள   ஊடகம் என்று கூறுவது இதனைத்தான்!

முதலாளிகளின் தலைநகரான வாஷிங்டனில் இருந்து உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடான இந்தியா பக்கம் நமது பார்வையை ஒருவர் திருப்பும்போது, நரேந்திர மோடியின் அரசு பேச்சு மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தின் குரல்வளையை வெளிப் படையாகவும், துணிவாகவும் நெரிக்கும் ஒரு  புதிய, இயல்புக்கு மீறிய காட்சியை அவர் காணலாம். என்.டி.தொலைக்காட்சி மீதும் அதன் இயக்குநர்கள் பிரணாய் ராய் மற்றும் ராதிகா ராய் மீதும் நடத்தப்பட்ட சோதனைகள், மோடிக்கும் அவரது சகாக்களுக்கும் தொல்லை தரும் ஒரு மாற்றுக் கருத்தை அடக்கி ஒடுக்குவதற்கான மோசமான முயற்சியே தவிர வேறல்ல. வங்கி பணப்பரிவர்த்தனை தொடர்பாக,  அடிப்படையில் உண்மை இல்லாத, பொய்யாகத் தொடுக்கப்பட்டது இந்த வழக்கு. அவ்வளவுக்கும் அந்த வங்கி தனியார் வங்கி என்பதும், இந்த விவகாரத்தில் வங்கி எந்த புகாரும் அளிக்கவில்லை என்பதும்,  இந்த வழக்கு,  மிகுந்த மதிப்புக்குரியதும், மிகப் பழையதுமான இந்த ஆங்கில செய்தி நிறுவனத்தை அடிபணியச் செய்ய அதன் மீது கட்டவிழ்த்துப் புனையப்பட்ட பொய்யான வழக்கு என்பதை மெய்ப்பிப்பதுடன், மோடி அரசின் தவறுகளையும், பாதுகாப்பின்மையையும் அடிக் கோடிட்டுக் காட்டுவதாகவும் இருக்கிறது. மத்திய அரசுக்கு எதிரான ஒரு பிரச்சாரத்தை என்.டி.தொலைக்காட்சி மேற்கொண்டு வருகிறது என்று குற்றம் சாட்டிய பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ஒருவரை, அத் தொலைக்காட்சி நிறுவனத்தின் மிகவும் மென்மையாகப் பேசக்கூடிய நிகழ்ச்சித்தொகுப்பாளர்ஒருவர்நிகழ்ச்சியில்இருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டதற்கு சில நாள்களுக் குப் பின்னர்தான் இந்த மத்திய புலனாய்வுத் துறை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது தற்செயலாக நிகழ்ந்ததல்ல என்பது மட்டும் நிச்சயமானது ஆகும்.

என்றாலும், இந்த விவகாரத்தில் பெருத்த ஏமாற் றத்தை அளித்த நிகழ்ச்சி என்னவென்றால்,  இந்திய ஊடகத்தின் பெரும் பகுதியினர் இச் செயலைக் கண்டனம் செய்யவோ, எதிராக கருத்து தெரிவிக்கவோ முன்வரவில்லை என்பதுதான். அதற்கு மாறாக, அரசின் சில பிரச்சார வாகனங்கள், தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களைப் போல வேடம் போட்டுக் கொண்டு அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தன. இந்நிகழ்ச்சியைப் பற்றி குறிப்பிட்ட  அருண் ஷோரி மிகச் சரியாக இவற்றை வடகொரிய தொலைக்காட்சி செய்தி நிறுவனங்கள் என்று குறிப் பிட்டுள்ளார். அரசின் தவறான நடவடிக்கையை நியா யப்படுத்துவதற்கு ஆதரவாக, சமூக ஊடகங்களைத் தூண்டில் போட்டு இழுக்கும் முயற்சியில் அரசு நிறுவனங்கள் ஈடுபட்டிருந்தன. பத்திரிகை சுதந்திரத்தின் பாதுகாவலர் என்றும், செய்தி ஒளிபரப்புத் துறையில் தன்னைத் தானே ஒழுங்குபடுத்திக் கொள்ளும் நிறுவனம் என்றும் கூறப்படும் செய்தி ஒளிபரப்பு சங்கமும் கூட, அதன் இணையதளங்களில் சிபி.அய். சோதனை மேற்கொண்டதற்கு,   பெயரளவுக்கேனும்  கண்டனம் செய்யவில்லை. இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கமும் கூட, ஒரு சாதாரணமான, சூடற்ற ஒரு மெல்லிய  அறிக்கையை வெளியிட்டதே தவிர, அதில் எந்தவித கண்டனமும் துணிவுடன் தெரிவிக்கப்படவில்லை. கடந்த 36 மாதங்களாக இந்தியாவில், அரசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள   ஊடகம்  என்ற  ஒரு புதிய கொள்கை உருவாகி வந்துள்ளது.

அதிகார வர்க்கத்தினரிடம் உண்மையை எடுத்துக் காட்டி பேசுவதை விட்டுவிட்டு, அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தொலைக்காட்சி நிறுவனங்களும், அச்சு செய்தித் துறையில் உள்ள அவர்களது சகாக்களும், ஒருவர் மேல் ஒருவர் விழுந்து கொண்டு,  அரசு செய்யும் ஒவ்வொரு தவறையும் நியாயப்படுத்தவும், வெள்ளை அடிக்கவும், பெருமைப்படுத்தவும் கூட  செய்து கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்க ஊடகத்தினர் தங்களுக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பு  இது என்று கருதி புகழ் வெளிச் சத்தில் குளிர் காய்ந்து கொண்டிருக்கும்போது,  இந்திய ஊடகத்தின் பிரிவுகள், வரலாற்றின் ஒரு மோசமான நேரத்தில், செயல்படத் துணிவற்ற முறையில் தர்மசங்கடத் தில் சிக்கியிருக்கின்றன. 1977 முதல் 1980 வரை மத்திய ஜனதா கட்சி ஆட்சியில் செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருந்த லால்கிருஷ்ண அத்வானி நாட்டில் நெருக்கடி நிலை நடைமுறையில் இருந்த போது,  பத்திரிகையாளர்களிடம் கூறிய புகழ் பெற்ற வசனம் இதுதான்: ‘‘பத்திரிகையாளர்களாகிய நீங்கள், அரசு உங்களை வளைந்து கொடுக்கக் கேட்கும்போது, நீங்கள் மண்டியிட்டு தவழ்ந்து வருகிறீர்கள்.’’ இன்றோ, இந்திய ஊடகத்தின் பிரிவுகள் அதனை விட மோசமாக நடந்து கொள்கின்றன. இனியும் பத்திரிகைத் துறையினர் என்று அழைக்கப்படுவதற்கு அவர்கள் தகுதியற்றவர்கள். அரசின் வெட்கம்கெட்ட பிரச்சாரகர்கள் என்று வேண்டு மானால் அவர்களை அழைக்கலாம்.

எவ்வாறாயினும், இவ்வாறு அரசினால் அடக்கி வைக்கப்பட்டுள்ள ஊடகத்தினர், ஜெர்மன் பாதிரியார் மார்டின் நீமோலர் தீர்க்க தரிசனத்துடன் கூறிய சொற்களை மெய்ப்பிக்க இயன்றவர்கள் தாங்களே என்பதை மட்டும் உணர்ந்து கொள்ளாமல் இருக்கின்றனர். அவரது அந்த சொற்கள் ஜெருசலம் அருங்காட்சியகத்தில் பொறித்து வைக்கப்பட்டுள்ளன.

‘‘முதலில் சமதர்மவாதிகளைத் தேடி அவர்கள் வந்தனர்; நான் ஒரு சமதர்மவாதி இல்லை என்பதால் அப்போது நான் அவர்களை எதிர்த்துப் பேசாமல் இருந்தேன்.

அடுத்து தொழிற்சங்கத்தினரைத் தேடி  அவர்கள் வந்தனர்; நான் ஒரு தொழிற்சங்கவாதி இல்லை என்ப தால் அப்போதும்  நான் அவர்களை எதிர்த்துப் பேசாமல் இருந்தேன்.

பின்னர் யூதர்களைத் தேடி அவர்கள் வந்தனர்; நான் ஒரு யூதன் இல்லை என்பதால் அப்போதும் கூட நான் அவர்களை எதிர்த்துப் பேசாமல் இருந்தேன்.

இறுதியில் என்னைத் தேடி அவர்கள் வந்தனர்; அப் போது எனக்காக அவர்களை எதிர்த்துப் பேசுபவர்கள் ஒருவர் கூட எஞ்சி  இருக்கவில்லை.’’

துதிபாடிகளுக்கு ஏற்பட இயன்ற முடிவு அத்தகையது தான்.

நன்றி: ‘தி டெக்கான் கிரானிகிள்’, 10.06.2017

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner