எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- ஜோயா ஹாசன்-

இந்திய தேர்தல் களம் முழுவதிலும் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டவேண்டுமென்ற பா.ஜ.க.வின் திட்டங்களுக்கு எதிராக முக்கிய எதிர்கட்சிகள் காட்டும் எதிர்ப்பு இன்னமும் பலமற்றதாகவே இருக்கிறது. ஆனால், பா.ஜ.க.வின் சமூக, அரசியல் செயல்திட்டங்களுக்கும், முழுமையான இந்து அடையாளத்தை நாட்டின்மீது திணிக்கும் அதன் முயற்சிக்கும் எதிரான பொதுமக்களின் போராட்டங்கள் அண்மைக் காலமாக மேலெழுந்துள்ளன. மிக முக்கியமாக, நாட்டின் பொருளாதார நிலை சீரழிந் துள்ளது. ஆண்டுதோறும் வேலைதேடி வரும் நிலையில் கல்வி கற்று வெளிவரும் 1.2 கோடி மாணவர்களுக்கான பணிவாய்ப்பு உருவாக்கமும் அதிக அளவில் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி ஆதரவுக்கு அடித்தளமாக விளங்கும் நடுத்தரப் பிரிவு மக்களிடையே இது மிகுந்த ஏமாற்றத்தையும், மனநிறைவின்மையையும் ஏற்படுத் தியுள்ளது. பா.ஜ.க. அரசு தனது சாதனைகள் பற்றி உரக்க பறைசாற்றிக் கொண்ட போதிலும், அதன் முக்கிய கொள் கைகள் மக்களுக்கு எந்தவித நன்மையையும் செய்ய வில்லை என்று அவர்களது ஆதரவாளர்களும் கூட புகார் கூறத் தொடங்கியுள்ளனர்.

பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக வெடித்துக் கிளம்பும் போராட்டங்கள்

காற்றில் பரவி வரும் மக்களது மனநிறைவின்மை காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும்  கட்சிசாரா பொதுமக்களின் எதிர்ப்பு இயக்கங்களும், போராட்டங்களும் வளர்ந்து வருவது தெளிவாகவே தெரிகிறது. விவசாயிகளின் போராட்டங்கள் பல மாநிலங்களில் வெடித்துள்ளன; மிகுந்த ஏமாற்றமும், மனநிறைவின்மையும் அடைந்த தலித் மக்களை தங்கள் வசம் இழுப்பதற்கான ஆளும் பா.ஜ.க.வின் திட்டமிட்ட முயற்சிக்குப் பிறகும்,  அவர் கள் கடுமையான எதிர்ப்புப் போராட்டங்களை மேற் கொண்டுள்ளனர்; ஆளுங்கட்சி ஏற்றுக் கொள்ளாத கருத்துகளைசிந்திக்கவும்,வெளிப்படுத்தவுமான  சுதந்திரத் துக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து  பல்கலைக் கழகங்களில்  தொடர் மாணவர் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன.  இத்தகைய போராட்டங்கள் பரவ லாக மேற்கொள்ளப்படாததால், பா.ஜ.க.வின் தொடரும் தேர்தல்வெற்றிக்குஒருகடுமையானசவாலாகஅவை விளங்கவில்லை.  என்றபோதிலும், அரசின் கடுங்கோபத் துக்கு அந்த போராட்ட அமைப்புகள்  உள்ளாகியுள்ளன.

வன்முறைச் செயல்கள், வன்முறையற்ற தாஜா செய்யும் செயல்கள் மூலம், ஓர் அகண்ட அளவில்,  கருத்து வேறுபாடுகள் கடிவாளமிட்டு தடுத்து நிறுத்தப்பட்டன. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வீச்சைக் குறைப்பது,  அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு அயல்நாடுகளில் இருந்து நிதி உதவி வருவதைத் தடுத்து நிறுத்துவது, இந்திய குற்றவியல் சட்டத்தின்கீழ் தேசவிரோத குற்றச்சாட்டினை கருத்து வேறுபடுபவர்மீது சுமத்துவது, மனித உரிமை ஆர்வலர்களையும், நாகரிக சமூகக் குழுக்களையும்  வேட்டையாடுவது போன்ற வழிகளும் இவற்றில் அடங்கும். இந்தப் பட்டியலில் அண்மையில் என்.டி. தொலைக்காட்சி மீது மத்திய புலனாய்வுத் துறை நடத்திய சோதனைகளும் அடங்கும். இதுவரை அரசின் வழிக்கு வராமல் இருக்கும் ஊடகத்தினர் இப்போதாவது அரசின் வழிக்கு வரவேண்டும் என்று பொதுவாக ஊடகத்தினருக்கு செய்தி அனுப்புவதாக இந்த சோதனைகள் உள்ளதென பலரும் கருதுகின்றனர்.

முக்கியமான களங்களில் கருத்து வேறுபாடு வேர் விடுவதை அழித்தொழிப்பதையே நோக்கமாகக் கொண்ட இந்த வழியில்தான்  ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகமும், இந்திய திரைப்பட, தொலைக்காட்சி பயிற்சி நிறுவனமும் தாக்குதலுக்கு உள்ளாகின.  பா.ஜ.க.வின் ஆட்சியின் கோட்பாட்டு செயல்திட்டத்துக்கு ஓர் அகண்ட அளவில் அச்சுறுத்தலை அளிக்க இயன்றவையே இந்த ஒவ்வொரு நிறுவனமும் என்று ஆட்சியாளரால் பார்க்கப்பட்டதால், ஆட்சியாளர்கள் பதில் சொல்வதற்கு கடினமாக இருக் கும் கேள்விகளை எழுப்பாமல் இருப்பதற்காக இந்த நிறு வனங்களின் குரலை அடக்கி ஒடுக்க வேண்டும் என்று கருதப்பட்டது.

அரசுக்கு எதிரான போராட்டங்களுக்காக கூறப்படும்  காரணங்களை மறுப்பதன் மூலமாகவும், பேரணிகள் போராட்டங்களை கலைப்பதன் மூலமாகவும், பெரும்பாலும் போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருக்கும்படி காவல் துறையினால் பொதுமக்கள் அச்சுறுத்தப்படுவதன் மூல மாகவும், அரசுக்கு எதிரான போராட்டங்களை அடக்கி ஒடுக்குவதற்கு ஒரு தொடர்ந்த தீவிரமான முயற்சி மேற்கொள்ளப்படுவதை அண்மைக் கால அனுபவம் காட்டுகிறது.  கடந்த சில மாதங்களில் நடைபெற்ற மூன்று போராட்டங்கள் அரசின் இந்தப் போக்குக்கு எடுத்துக் காட்டுகளாக விளங்குகின்றன.

மூன்று போராட்டங்கள்

தங்களது விளைபொருளுக்கு குறைந்த விலையே அளிக்கப்படுகிறது என்று மத்திய பிரதேச மாநில விவசாயிகள் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கிய போராட்டம்  முதலாவது. இந்தப் போராட்டத்தின் மய்யமாக விளங்கிய மண்டசூரில், காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் அய்ந்து விவசாயிகள் கொல்லப்பட்டனர். விவசாயிகளை சந்திக்க மண்டசூருக்கு எதிர்கட்சித் தலைவர்கள் செல்வ தற்கு தடை விதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 144 ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதால்,  எந்த போராட்டமோ, பேரணியோ அனுமதிக்கப்படவில்லை. இத்தகைய தடைகள்  பல நாட்களுக்கு நடைமுறையில் இருந்தன.

இதே போல,  தலித் மற்றும், தாகூர் சமூகத்துக்கிடையே நடைபெற்ற சண்டையில் ஒருவர் கொல்லப்பட்ட பிறகு, ஷாரன்பூரிலும் இந்திய குற்றவியல் சட்ட 144 ஆவது பிரிவின்படி ஊரடங்கு சட்டம் காவல் துறையினராலும், நிர்வாகத்தினராலும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இங்கும் எதிர்கட்சித் தலைவர்கள் வருவது தடை செய் யப்பட்டது.  போராட்டம் நடத்தப்படும் இடத்துக்கு செல் லவும், போராட்டங்களை ஏற்பாடு செய்து நடத்தவும் பொது மக்களுக்கு காவல் துறையினரால் தடை விதிக்கப்பட்டது.

மூன்றாவது வழக்கில்,  இந்த மாத தொடக்கத்தில், ஒரு சில லக்னோ பல்கலைக் கழக மாணவர்கள், லக்னோ பல்கலைக் கழக நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்திய நாத்தின் வாகனங் களை வழி மறுத்து, அவருக்குக் கருப்புக் கொடி காட்டினர். முதலமைச்சருக்கான பாதுகாப்பு நடவடிக்கை களுக்கு குந்தகம் விளைவித்ததாக கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு பிணை வழங்கவும் மறுக்கப்பட்டது. போராட்டத்தில் கலந்துகொண்டு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அனைவரும் தேசவிரோதிகள் அல்லது நக்சலைட்டுகள் என்று முத்திரை குத்தப்பட்டனர். இவ்வாறு செய்வது, உண்மையில் பா.ஜ.க. அரசின் சமூக, பொருளாதாரத் தோல்விகளை மூடி மறைத்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகத்தான்.

எதிர்ப்புப் போராட்டங்களுக்கு தடை விதிப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக,  முன் எப்போதும் இல்லாத அளவில் எதிர்கட்சி அரசியல் மீது தாக்குதல் நடத்தும்  இத்தகைய எதிர்மறை போக்குகள் வளர்ச்சி அடைந்து கூர்மையடைந்துள்ளன என்ற உணர்வு மக்களிடையே நிலவுகிறது. போராட்ட இயக்கங்களுக்குக் கடந்த காங்கிரஸ் அரசும் கூட தடை விதித்துள்ளது. தங்களது லஞ்ச ஊழல் எதிர்ப்பு போராட்டத்தினை மய்யமான இடங்களில் நடத்துவதற்கு அந்த இயக்கம் அனுமதி பெறுவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. கருப்புப் பண விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய பாபா ராம்தேவ் டில்லி ராம்லீலா மைதானத்தில் 2011 ஜூன் மாத நள்ளிரவு ஒன்றில் கைது செய்யப்பட்டது, அரசின் மிகைப்படுத்தப்பட்ட நடவடிக்கையை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இந்தக் கைதுக்காக, மத்திய அரசுக்கும், டில்லி காவல்துறைக்கும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. எதிர்ப்பு தெரிவிப்பதோ, போராட்டம் செய்வதோ, அவற்றில் கலந்து கொள்வதோ பேச்சு சுதந்திரத்தின் முக்கியமான ஒரு பகுதி என்று சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், போரா டுவதற்கு மக்கள் கூடுவதற்கு உரிமை உள்ளது என்று தீர்ப்பு அளித்தது. இத்தகைய போராட்டங்களைப் பயன் உள்ளவையாக மாற்றும் கடமை அரசுக்கு உள்ளது என்றும்,  மக்கள் கூடுவதற்கு தடை விதித்து கட்டுப்படுத்தக் கூடாது என்றும் உச்ச நீதி மன்றம் வாதிட்டது. அப்போது மாநிலங்களவையில் எதிர்கட்சித் தலைவராக இருந்த அருண்ஜெட்லி அந்தத் தீர்ப்பினை வரலாறு படைக்கும் தீர்ப்பு என்று கூறி வரவேற்றதில் வியப்பேதுமில்லை. ஆனால்,  சட்டப்படியான 144 தடை உத்தரவிற்கு கட்டுப் படாமல் போனதாக பாபா ராம்தேவின் மீது உச்சநீதிமன்றம் குற்றம் சாட்டியபோது மட்டும், அவ்வாறு கட்டுப்படுவது போராடுவதற்கான தனது உரிமையையே சரண் செய்வது போலாகும் என்று ஜெட்லி வாதாடினார். வேறு சொற்களில் கூறுவதானால், போராட்டம் நடத்துவது அவர்களது உரிமையாக இருக்கும்போது, போராடுவதைத் தடுக்கும் ஆணைக்குக் கீழ்படியாமல் இருப்பதும் அவர்களது உரிமை என்றே கூறலாம்.

காலம் மாறிப் போச்சு

ஆனால், தற்போதைய ஆளும் கட்சிக்கு எதிராக ஏற்பாடு செய்து நடத்தப்படும் போராட்டங்களுக்கு மட்டும் இந்த உயர்ந்த கொள்கைகள் பொருந்தாது என்பது போலவே தோன்றுகிறது. அரசை கேள்வி கேட்கும் ஒவ்வொருவர் மீதும் தேசதுரோகக் குற்றச்சாட்டை சுமத்த முடிவு செய்யும் அரசின் யதேச்சதிகாரத்தினால் மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு நிர்பந்திக் கப்படுகிறார்கள். போராட்டம் நடத்தப்படும் இடங்களை சென்றடைவதில் இருந்து மக்களை தடுத்து நிறுத்துவதற்காக, பொது அமைதியைக் குலைப்பதாக அவர்கள் மீது காவல் துறையினரால் வழக்கமாக குற்றம் சாட்டப்படுகிறது.

அண்மையில் அரியானா மாநிலம் கர்நல் என்ற இடத்தில் தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் 15 தலித்துகள் கைது செய்யப்பட்டனர். மூன்று மாதங்களுக்கு முன்பு அம்பாலா என்ற கிராமத்தில் ஜாதியினரிடையே நடைபெற்ற மோதலில் ஒருவர் கொல்லப்பட்டதற்காக கைது செய்யப்பட்ட நான்கு தலித்துகளை விடுவிக்க வேண்டும் என்பதே அந்தப் போராட்டம். ஜாதிகளுக்கு இடையேயான சண்டைகள் பற்றி ஒரு நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று முதல்வரை சந்தித்து இந்த போராட்டக்காரர்கள் கோரினர். ஆனால்,  அவர்கள் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு பதிவு செய்த தன் மூலம், அரசைக் குறை கூறுவதோ அல்லது போராட் டத்திற்காக மக்கள் கூடுவதோ சட்டப்படி தவறானது என்று காவல்துறை தனது செயல் மூலம் அறிவித்துள்ளது.

இந்த நேரத்தில், சிக்கல் இல்லாத தேசியம் என்னும் காய்ச்சல் நாட்டில் அதிகமாகும்போது,  இத்தகைய யதேச்சதிகாரச் செயல்கள், அரசமைப்பு சட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ள, ஒருங்கிணைந்த பகுதியான போராடுவதற்கான உரிமையைப் பயன்படுத்துவதையும் கடினமானதாக ஆக்கிவிடுகின்றன.

அப்படியானால், மக்களாட்சி என்ற பிரச்சினையை இது எங்கே கொண்டு செல்கிறது? இந்த இடத்தில்தான்  கருத்து மாறுபாடும், மக்களாட்சியும் தங்களுக்கிடையேயான தொடர்பை ஏற்படுத்திக் கொள்கின்றன. கருத்து வெளிப் பாட்டு சுதந்திரமும், அதன் விளைவாகத் தோன்றும் கருத்து மாறுபடுவதற்கான உரிமை என்ற கோட்பாடும்  மக்களாட்சிக்கு இன்றியமையாதவை ஆகும். ஆட் சேபணை தெரிவிக்கவும், எதிர்க்கவும், போராடவும்,  தடுப்பதற்குமான மக்களாட்சி உரிமை என்பதிலேயே பொதிந்திருக்கும் ஒரு கோட்பாடு அது. முடிவாக, கருத்து மாறுபடுவதை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கு, 1993 ஆம் ஆண்டு தான் நிகழ்த்திய தொடர் பேருரைகளில் ‘‘அதிகார வர்க்கத்தினருடன் உண்மை பேசுவது  என்று  எட்வர்ட் சையத் அழைத்ததைக் கடைபிடிக்கப்  பழகிக்கொள்ள வேண்டும். அல்லது அவர் கூறியபடி,  அனைத்துப் பிரச் சினைகளைப் பற்றியும், எல்லா நேரத்திலும் ஒருவரால் பேசமுடியாது. ஆனால், பாகுபாடு காட்டுவது, அடக்கு முறை,  கூட்டுக் கொடுமை என்ற திட்டமிட்ட ஒரு செயல் திட்டத்திலோ அல்லது ஒருவரது சொந்த சமூகத்தின் அரசமைப்பு சட்டத்தினால் அளிக்கப்பட்டுள்ள  அதிகா ரங்களைப் பயன்படுத்தும்போது, குறிப்பாக அளவுக்கு அதிகமான, பொருத்தமற்ற,  நெறியற்ற ஒரு போரில் பயன்படுத்துவதாகத் தோன்றும்போது, மக்களுக்கு பதில் கூறவேண்டிய கடமை அத்தகைய அதிகாரங்களைப் பயன் படுத்துவோருக்கு இருக்கிறது என்றே நான் நம்புகிறேன்.

நன்றி: ‘தி இந்து’, 26.06.2017

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner