எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆனந்த் கே. சஹாய்


நாட்டின் பிரிவினைக்குப் பிறகு, மதக் கலவரங்களால் ரத்த ஆறு ஓடியபோது, முஸ்லிம்களிடம் ஓடிச் சென்ற காந்தி, அவர்களிடம் 'நன்றாக இருக்கிறீர்களா' என்று கேட்டார். பல இந்துக்கள் இதனை விரும்பவில்லை. "நான் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருக்கும் பாகிஸ்தானில் இருந்திருந்தால்,  இந்துக்களிடம் ஓடிச் சென்று  இதே கேள்வியைக் கேட்டிருந்திருப்பேன் என்று காந்தி அவர் களிடம் கூறினார்.

(பிரதமர் மோடி தனக்குத் தானே ஒரே ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.  பெரும்பான்மை சமூகத் தைச் சேர்ந்த மக்கள், சுதந்திரமாகத் திரியும் வன்முறைக் கலவரக் கும்ப லால்  இவ்வாறு தாக்கப்பட்டு, கொல் லப்பட்டிருந்தால், இது போலத்தான் எதுவும் கண்டித்துப் பேசாமலும், நட வடிக்கை மேற்கொள்ளாமலும் மோடி இருந்திருப்பாரா?)

இந்திய பிரதமராக கடந்த முறை லண்டனில் இருந்தபோது அங்கு ஏற்பட்ட அனுபவத்தில் இருந்து  மோடி ஒரு பாடம் கற்றுக் கொண்டார். எனவே, அண்மையில் வாஷிங்டன் சென்றபோது அவர் ஊட கத்தினரின் எந்த ஒரு கேள்விக்கும் பதில் அளிக்கப்போவதில்லை  என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அமெ ரிக்க அதிபர் மாளிகை அதிகாரிகள் ஏற் பாடு செய்த அதிபருடனான கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பு பின்னர் கை விடப்பட்டது.

ஒவ்வொரு தலைவரிடமும் ஒவ்வொரு கேள்வி மட்டுமே கேட்கப்படும் என்று வாஷிங்டன் ஆலோசனை கூறியது. அந்தக் கேள்வியையும் சந்திக்காமல் இருப்பதிலேயே மோடி குறியாக இருந்தார். லண்டனில் ஆங்கிலப் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் இந்துத்துவ விவகாரம் பற்றிய கேள்விக் கணைகளாகத் தொடுத்தே மோடியை கலங்கடித்து  விட்டார்.

இந்தியாவில் இந்துத்துவ முனையில் ஒரே நேரத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. இந்திய மக்கள் அனைவருக்கும் வேறுபாடு இன்றி முன்னேற்றத்தை அளிப்பேன் என்று இந்திய மக்களிடம் மோடி வழக்கமாக உறுதி  அளிக்கும்   மந்திரத்தால், மேற்கத்திய உறுதி நிறைந்த பத்திரிகையாளர்கள் ஏமாந்து போகமாட்டார்கள்.

அதனால்தான், கடந்த மூன்று ஆண்டு காலத்தில் பத்திரிகையாளர் சமூகத்தை பிரதமர் என்ற முறையில் ஒரு முறை கூட சந்திக்க மோடி ஆர்வம் காட்டவில்லை. மக்களுடன் தான் கொண்டிருக்கும் ஒரு வழி செய்தித் தொடர்பான தனது தொலைக்காட்சி, வானொலி, ஊடக நிகழ்ச்சிகளிலோ  அல்லது  அயல்நாடுகளில் வாழும் இந்திய மக்களின் முன் பேசுவதற்கு ஒலிபெருக்கியை கையில் எடுக்கும் போதோ, வழக்கமாக தான் பட்டியலிடும் தனது அரசின் சாதனைகளைப் பற்றி கூறுவதற்குக் கூட பத்திரிகையாளர்களை சந்திக்க அவர் முன்வரவில்லை.

நீங்கள் விரும்புகிறீர்களோ இல் லையோ இன்று இந்தியாவில் உங்கள் முன் நடைபெறும் ஜனநாயக நடைமுறை இதுதான். குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறி தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நட்சத்திர சாட்சியாளர் மேடைக்கே வரமாட்டேன் என்று கூறுகிறார்.

அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில்,  அரியானாவில் இருந்து வந்த 16 வயது ஜூனைடி கான் என்ற சிறுவன்,   மாட்டிறைச்சி உண்பவன் என்று முதலில் குற்றம் சாட்டப்பட்டு, ஓடும் ரயிலில் ஒரு கலவரக் கும்பலால் குத்திக் கொல்லப்பட்டு, வழியில் இருந்த ரயில் நிலைய நடைமேடையில் ரயிலில் இருந்து அவனது உயிரற்ற உடல் தூக்கி வெளியே எறியப்பட்ட காட்சி,  அமெரிக்காவில் பிரதமர் மோடி தரையிறங்கும்போது அவருக்கு பசுமையாக நினைவில் இருந்திருக்கும்.

மூன்று நாள்கள் கழித்து வர இருக்கும் முஸ்லிம்களின் பெரிய பண்டிகையான ரம்ஜானுக்காக உடைகள் வாங்க டில்லி சென்ற அந்த சிறுவன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தான். இந்த கொலை அதிர்ச்சி அளிப்பதாகவும், கொடுமை நிறைந்ததாகவும், உண்மை அற்றது போலவும் தோன்றினாலும், சிசிடிவி கேமிராவை சிலர் செயலிழக்கச் செய்த போதிலும், அந்த உண்மை மறைக்கப்பட இயலவில்லை. எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் சரி, இந்த கொலையைப் பற்றி கேள்விப்பட்ட அனைவரிடமிருந்தும் ஒரு பெருமூச்சே வெளிப்பட்டது. ஆனால், இந்திய அரசு மட்டும் எதைப் பற்றியும் கேள்விப்படவில்லை. சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மட்டும் இதற்கு விதிவிலக்கு. அவர் ஒருவர் மட்டுமே கோபமும், அதிர்ச்சியும் அடைந்தவராக, ஒரு நாகரிக மனிதரைப் போல ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

ஞாயிற்றுக் கிழமைகளில் ஒலிபரப் பப்படும் தனது மாதாந்திர மான்கிபாத் சொற்பொழிவில் இந்தக் கொலை பற்றி ஒரு வார்த்தையும் பேசாமல் மோடி மிகமிக அமைதியாக இருந்தார். ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் உண்ணாநோன்பை அனுசரிப்பதன் புனிதத்தைப் பாராட்டி அவர் பேசினார். உத்தரப் பிரதேச மாநில கிராமம் ஒன்றின் முஸ்லிம் மக்கள், அரசின் நிதி உதவி இன்றி, தாங்களே பொதுக் கழிப்பறைகளைக் கட்டிக் கொண்டதை அவர் புகழ்ந்தார். ஆனால், ரம்ஜானுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு முஸ்லிம் இளைஞன் ஒருவன் இவ்வாறு பட்டப்பகலில், பலரும் காண கொடூரமாகக் கொல்லப்பட்டதைப் பற்றி அவர் ஒரு வார்த்தையும் பேசாமல், அந்த நிகழ்ச்சி பற்றி மவுனம் காத்தார்.

இவ்வளவுக்கும், சந்தர்ப்பம் வாய்க்கும் போதும், வாய்க்காத போதும்,  இந்தியாவில் இருக்கும் போதும், வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும்போதும், தன்னைப் பற்றியே புகழ்ந்து கொண்டும், எதிர்க் கட்சியினரை மரியாதை இன்றி, கேலி யும் கிண்டலுமாக இழிவாகப் பேசும் பிரதமர் மோடி, ஆழ்ந்த கவலை அளிக்கும் வகையில், முஸ்லிம்களும், தலித்துகளும் கொல்லப்படும்போதும், விவசாயிகள் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்படும்போதும், அவற்றைப் பற்றி எந்த வகையில் குறிப்பிடுவதையும் மிகவும் தந்திரமாக அவர் தவிர்த்துவிடுகிறார்.

என்றாலும் ஜூன் 29 அன்று சபர்மதி காந்தி ஆசிரமத்தில் பேசும்போது, இந்தப் படுகொலை பற்றி  பேசவேண்டிய கட்டாயத் துக்கு பிரதமர் மோடி உள்ளாக்கப்பட்டார். அதற்கு முந்தைய நாள் இரவில்தான், டில்லி உள்ளிட்ட இந்தியாவின் பெரிய பெரிய நகரங்களிலும், தொலைதூரத்தில் லண்டனில் உள்ள புகழ் பெற்ற இந்திய - ஆப்பிரிக்க ஆய்வுப் பள்ளியிலும்,  சமூகத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த சாதாரணமான இந்திய மக்கள் பெருமளவில் கூடி, ஜூனைடியின் படு கொலையைக் கண்டித்து மாபெரும் பேரணிகளை எனது பெயரில் இல்லாத என்ற இயக்கத்தின்  சார்பில் நடத்தி, பசுபாதுகாப்பு என்ற பெயரில் இந்திய முஸ்லிம்கள் கலவரக் கும்பல்களால் கொல்லப்படுவதைக் கண்டித்துக் குரல் எழுப்பினர்.

இறுதியாக மோடி காந்தி ஆசிரமத்தில் பேசினார். என்றாலும் அவர் பேசி யது எதுவும் பயன் தரத்தக்கதாக இருக்க வில்லை. "பசுபக்தி என்ற பெயரால் மக்கள் கொல்லப்படுவதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது; பொறுத்துக் கொள்ளவும் முடியாது" என்ற அளவில் மட்டுமே அவர் பேசினார். இது பற்றி என்ன தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பற்றியோ, அதற்குப் பொறுப்பானவர்களைத் தண்டிப்பது பற்றியோ அவர் எதுவும் பேசவில்லை.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பசுபாதுகாப்பு பெயரில் கொலை செய்பவர்களை சமூக விரோதிகள் என்று மோடி அழைத்தார். இவ்வாறு இத்தகைய கொலைகளுக்கு ஒரு புதிய அடையாளத்தை அவர் தந்தார், அவ்வளவுதான்.  கொலைகாரர்கள் இதனால் பெரிய அளவில் கவலைப்படவே இல்லை. உண்மையில் மோடி தங்களைக் கண்டிக்கவில்லை என்பதையும், ஒரு கடமைக்காக அச்சுறுத்தும்படி அவர் பேசியுள்ளார் என்பதையும் கொலை காரர்கள் நன்கு அறிந்தே உள்ளனர்.

பிரதமர் தனக்குத் தானே ஒரே ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.  "பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்கள், சுதந்திரமாகத் திரியும் வன்முறைக் கலவரக் கும்பலால்  இவ்வாறு தாக்கப்பட்டு, கொல்லப்பட்டிருந்தால், இது போலத்தான் எதுவும் கண்டித்துப் பேசாமலும், நடவடிக்கை மேற்கொள்ளாமலும் மோடி இருந்திருப்பாரா?"

நாட்டில் நடைபெற்றுக் கொண் டிருப்பவைகளை காந்தி ஏற்றுக் கொண் டிருக்கமாட்டார் என்றும், காந்தியின் போதனைகளைப் பின்பற்றி நாம் நடக்க வேண்டும் என்று நம்மை வலியுறுத்தியும் சபர்மதி ஆசிரமத்தில் மோடி பேசியது நன்றாகவே இருந்தது. தான் கூறுவது உண்மையானது என்று பிரதமர் நினைத்தால், தனது பதின்ம வயது முதல் தான் விசுவாசமாக இருந்து வரும்,  இந்து மதவாத அரசியலின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தன் கடையைக் கட்டிக் கொண்டு செல்லும்படி அவர்கூறவேண்டும். இதன் காரணமே காந்தியும், ஆர்.எஸ்.எஸ். சும் எதிர் எதிர் துருவங்களாக விளங்கியவர்கள் என்பதுதான். காந்தியைக் கொலை செய்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். சின் இந்து மத அரசியல் கோட்பாடுகளால் கவரப்பட்டு அதனைப் பின்பற்றியவர்கள் ஆவர்.

செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில் உலக வர்த்தக மய்யங்கள் தீவிரவாதிகளால் இடிக்கப் பட்ட போது,  பிரெஞ்ச் நாடு,  "இன்று நாம் அனைவரும் அமெரிக்கர்கள்" என்று   உலக மக்களை அறை கூவி அழைத்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நிற்பதைத் தெரிவிக்கும் கட்டாயமான வெளிப்பாடு இது. அது நம்மையெல்லாம் தட்டி எழுப்பியது. இப்போது காந்தி உயிருடன் இருந்தால்,  அவரது புகழ் பெற்ற அடையாளமான, உண்ணா நோன்பை மேற்கொண்டு இருந்திருப்பார் என்பதுடன். "இன்று நாம் அனைவரும் முஸ்லிம்கள்" என்று கூறியுமிருப்பார்.

அதனை மோடியால் புரிந்து கொள்ள முடியுமா? அவரது கட்சியால் முடியுமா? ஆர்.எஸ்.எஸ் சினால் முடியுமா? இந்தக் கேள்வி முக்கியமானது. இவர்கள்தான் அதிகாரத்தில் இருப்பவர்கள் என்பதுதான் அதன் காரணம்.

நாட்டின் பிரிவினைக்குப் பிறகு, மதக் கலவரங்களால் ரத்த ஆறு ஓடியபோது, முஸ்லிம்களிடம் ஓடிச் சென்ற காந்தி, அவர்களிடம் 'நன்றாக இருக்கிறீர்களா' என்று கேட்டார். பல இந்துக்கள் இதனை விரும்பவில்லை. "நான் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருக்கும் பாகிஸ் தானில் இருந்திருந்தால்,  இந்துக்களிடம் ஓடிச் சென்று  இதே கேள்வியைக் கேட்டிருந்திருப்பேன் என்று காந்தி அவர் களிடம் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களிடம் கருணை காட்டுவது காந்தியின் இயல்பு. உண் மையான உணர்வில், பன்முகத் தன்மை மற்றும் ஜனநாயகத்தின் சாரமும் இதுதான். தனது பயிற்சியில் இருந்தோ அல்லது உணர்விலிருந்தோ மோடி இதனை அறிந்திருக்கவில்லை என்றே தோன்றுகிறது. அவர் பிரதமராக இருப்பதால், அதனைக் கற்றுக் கொள்ள இனியாவது அவர் முயலவேண்டும்.

நன்றி: "தி டெக்கான் கிரானிகிள்'' 03-07-2017
தமிழில் : த.க.பாலகிருட்டிணன்தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner