எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கடந்த சில வாரங்களாக பெரும் பான்மை இந்திய செய்திச் சேனல்களில் மோடியின் அமெரிக்கபயணம் தான் முக்கியச்செய்தியாக உள்ளது. மோடியின் அமெரிக்க பயணம் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் மாளிகை, வணிக ஒப்பந்தங்கள் பற்றியும், அமெரிக்க-இந்திய உறவுகள் குறித்தும் எதுவும் பேசப் போவதில்லை, இது ஒரு பொதுவான சந்திப்பே என்று கூறிவிட்டது.

பாகிஸ்தானுடனான அமெரிக்க உறவு வியாபாரத்தைத் தவிர்த்து பல விதங்களில் தேவையான ஒன்றாக உள்ளது, ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு சந்தையாகவே பார்க்கிறது, வியாபாரம் டல் ஆனால் கடையை மூடிவிடவும் அமெரிக்கா தயங்காது

இந்திய ஊடகங்கள் ஒன்றை மறந்து விட்டன. டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டவுடன் அமெரிக்க வாழ் இந்தியர்களின் நிலை, பணி நிமித்தமாக அமெரிக்கா செல்பவர்களின் நிலை அமெரிக்காவில் உள்ள இந்திய நிறு வனங்களின் நிலை கேள்விக்குறியாகி விட்டது. டிரம்ப் அதிபரானதும் ஒரு உண்மை விளங்கியது. இந்தியாவை எந்த பார்வையில் ஒபாமா பார்த்தாரோ அதே பார்வைக்கு முற்றிலும் மாறான பார் வையை டிரம்ப் முன்வைத்தார். இந்திய நிறுவனங்கள் நேரடியாக தங்களது வர்த்தக தேக்கத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்தான் காரணம் என்று கூறிகொண்டி ருக்கும்போது மோடி-டிரம்ப் சந்திப்பு நடந்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது, ஆனால் இங்கு ஒன்று மட்டும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். மோடி - டிரம்ப் சந்திப்பிற்கு பிறகு ஒபாமா காலத் தில் இருந்தது போன்ற பல நல்ல அறி விப்புகள் எதுவும் வரவில்லை,

ஒபாமா காலத்தில் அமெரிக்க அரசு இந்தியாவை மத்திய தெற்காசியப் பிர தேசங்களின் பாதுகாவலரணாக இந்தி யாவைப் பார்த்தது, அதற்கு ஒரு காரணமும் இருந்தது. சீனா இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் தன் பலத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலக வர்த்தகத் திற்கு இந்தியப் பெருங்கடல் பாதை முதுகெலும்பு போன்றது, அது யார்வசம் இருக்கிறதோ அவர்தான் இந்த உலகின் உண்மையான அதிபதி. 500 ஆண்டு களுக்கு முன்பு அய்ரோப்பியர்கள் இந் தியப் பெருங்கடல் பாதையை கையில் கொண்டுவந்த காரணத்தால் தான் உலகம் முழுவதும் டச்சு, பிரெஞ்சு, ஆங்கிலேயர் களின் காலனி ஆதிக்கம் தொன்றியது.

இன்றுவரை இந்தியப் பெருங்கடலில் உள்ள ரியூனியன், செசலிஸ், கோகாஸ், கொமரஸ், உள்ளிட்ட பல தீவுகள் ஆங்கி லேய, பிரான்சு நாடுகளின் ஆளுமைக்குக் கீழ் வருகிறது,  இது மறைமுகமாக இந்தியப் பெருங்கடல் வணிகப்பாதையை கண் காணிக்கும் பணியாகத்தான் அந்த தீவுகளில் தங்கள் ஆட்சியை நடத்துகின்றன. ஆனால் 1950-களுக்குப் பிறகு அய்ரோப்பிய நாடு களின் பலம் முழுவதும் குறைந்து அமெரிக்க, ரஷ்யா நாடுகளின் பலன் அதிகரித்ததால் 40 ஆண்டுகாலம் இந்திய பெருங்கடல் வணிகப்பாதையில் யாருடைய ஆதிக்கமும் இல்லாமல் அமைதியாக இருந்தது, இருப்பினும் அவ்வப்போது சீனா இந்த வணிகப்பாதையில் தனது ஆதிக்கத்தை செலுத்த முயன்று வந்தது, இந்த நிலையில் அமெரிக்க 1990-களுக்குப் பிறகு உலகப் பொருளாதாரத்தில் தலையிடும் ஒரு நிலை உருவாகியதால் அமெரிக்க, இந்தியப் பெருங்கடல் பாதையில் தனது ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தது, இதற்கு ஒரு முக்கிய கூட்டாளியாக இந்தியாவைப் பார்க்கத் தொடங்கியது, இந்தியாவின் மீதான அமெரிக்காவின் பரிவான பார்வைக்குக் காரணமும் இதுதான்.

இதற்காகத்தான் இலங்கையில் ராஜபக்சே அரசு தன் மக்களை இனப்படுகொலைக்கு ஆளாக்கிய போது அமைதிகாத்து இந்தியா விற்கு சாதகமான முடிவையே எடுத்தது. காரணம் இலங்கையை இந்தியா மூலம் தன் கைவசம் ஆக்கிக்கொள்ளலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பே ஆகும். ஆனால் சீனா இதை எதிர்பார்த்து இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவிற்குவந்த உடனே இலங்கைக்கு தேவையான பல உதவிகளைச் செய்து இலங்கையின் நட்புறவைச் சம்பாதித்துக் கொண்டுவிட்டது.

இருப்பினும் இந்தியா சீனாவிற்கு இணையான ஒரு சக்தியாக வரும் என்ற நினைப்பில் ஒபாமா அரசு நினைத்தது, ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்பட்ட இந்தியாவின் வகுப்புவாத சக்தி களின் பெருக்கம், வகுப்புவாதக் கல வரங்கள், தொழில் வளர்ச்சியின்மை, பொருளாதாரச்சரிவு மற்றும் வேலைவாய்ப்பு இன்மை போன்ற பல பிரச்சினைகளால் இந்தியாவின் வளர்ச்சி மிகவும் வேகமாக பின்வாங்கிச்சென்றது,

இதை அமெரிக்க அரசு கவனத்தில் கொண்டு வந்த வேளையில் அமெரிக்கா வில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது, இந்தியா விற்கு எதிரான மனநிலையைக் கொண்ட டொனால்ட் டிரம்ப் ஆட்சியில் அமர்ந்தார். அவர் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த உட னேயே இந்தியாவைப் பற்றி பல விதங் களில் சொற்களால் தாக்கிவந்தார். முக் கியமாக அமெரிக்கர்களின் வேலையை இந்தியர்கள் பறித்துக் கொள்கின்றனர் என்று கூறினார். சமீபத்தில் கூட வர்த் தகர்கள் விழா ஒன்றில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப். “சாரிட்டிக்களிடம் கையேந் தும் ஒன்றுமில்லாதவர்களின் நிலையில் இந்தியா உள்ளது” என்று வசைபாடினார்

ஆனால் அமெரிக்காவில் எத்தனை ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் பாகிஸ்தானுட னான நட்புறவில் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்பது டிரம்ப் மூலம் மீண்டும் உறுதியாகியுள்ளது, ஜார்ஜ் புஷ், பில்கிளிண்டன், ஜூனியர் ஜார்ஜ்புஷ், ஒபாமா தற்போது டிரம்ப் என கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்கா பாகிஸ்தானு டன் நல்லிணக்கத்தையே மேற்கொண்டு வந்துள்ளது, அதற்கு காரணமும் உண்டு. முக்கியமாக மத்திய கிழக்கு ஆசியாவை தனது கட்டுப்பாட்டில் வைக்க நிலையற்ற ஆட்சி நடக்கும் ஆப்கானை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரும் நோக்கம், அதற்கு பெரிதும் உதவியாக இருக்கும் பாகிஸ்தானின் நட்பு அமெரிக்காவிற்கு மிகத்தேவையான ஒன்று. பாகிஸ்தானின் உளவுத்துறையின் உதவி அமெரிக்காவிற்கு மிகத்தேவையான ஒன்றாக இருப்பதால் அமெரிக்காவின் பாகிஸ்தான் பாசம்  அவ்வளவு சாமானியத்தில் இந்தியப் பாசமாக மாறாது.

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மோடி நாங்கள் அமெரிக்காவுடன் நிபந்தனையில் லாமலேயே ஒட்டிவுறவாடுவோம் என்று பல இடங்களில் சுட்டிக்காட்டிய பிறகும் அமெரிக்கா இதை நம்பத் தயாராக இல்லை. காரணம் இந்தியாவின் வளர்ச்சி தனது நாட்டிற்கு போட்டியாகிவிடக்கூடாது என் பதிலும் அமெரிக்கா கவனமாக இருக்கிறது,

கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்க பொருளாதார சரிவிற்கு இந்தியா முக்கிய காரணமாக இருந்துள்ளது. அமெ ரிக்க பொருளாதார நிபுணர்கள் அமைப்பு வெளியிட்ட இரண்டு ஆண்டு வரவு - செலவு அறிக்கையில் சுமார் நாற்பதாயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இந்த அமைப்பின் முக்கிய ஆலோசனைக் குழு தலைவராக அமெ ரிக்க அதிபர் இருக்கிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மோடியின் அமெரிக்க பயணம் நடைபெற்றுள்ளது. இந்த அமெரிக்க பயணத்தின் போது அமெரிக்க அரசின் சார்பில் ஒரு நடைமுறை பொது வான சந்திப்பாகவே இருக்கும், இந்த சந்திப்பில் எந்த ஒரு ஒப்பந்தமும் போடப் படாது என்று முன்பே கூறிவிட்டார்.  ஏற்கெனவே டிரம்ப் தன்னுடைய நட்பு நாடுகள் பட்டியலில் சீனா, ரஷ்யா, மற்றும் அரசு நாடுகளை வைத்துள்ளார். சமீபத்தில் அரபு நாடுகளுக்குப் பயணம் செய்த டிரம்பிற்கு பெருமளவில் வணிக ஒப்பந் தங்கள் கிடைத்தது. அது போல் சீனாவு டனான பல ஒப்பந்தங்கள் போடப்பட் டுள்ளன. தொழில் நுட்பத்தில் ரஷ்யாவு டனான ஒப்பந்தங்கள் என டிரம்ப் லாபத்தை முன்னோக்கிய தனது நட்பு வலையை வீசி வருகிறார்.

இந்த நிலையில் அமெரிக்காவிற்கு பெருத்த இழப்பை தரும் ஒரு தலைவர் வருவதை, வேண்டா விருந்தாளியாகத்தான் டிரம்ப் பார்க்கிறார். அதைத்தான் அமெரிக் காவும் மோடியின் வருகைக்கு முன்பே சுட்டிக்காட்டிவிட்டது. டிரம்பைப் பொறுத்த வரை இந்தியாவை வியாபார ரீதியில் மட்டுமே அணுகுகிறார். தனக்கு பயனில் லாவிட்டால் இந்தியாவை அமெரிக்க நட்பு பட்டியலில் இருந்து மட்டுமல்ல வியாபார ஒப்பந்தப் பட்டியலில் இருந்து துடைத் தெரியவும் தயங்கமாட்டார்.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்பட்ட இந்தியாவின் வகுப்புவாத சக்திகளின் பெருக்கம், வகுப்புவாதக்

கலவரங்கள், தொழில்வளர்ச்சியின்மை, பொருளாதாரச்சரிவு மற்றும் வேலைவாய்ப்பு இன்மை போன்ற பல பிரச்சினைகளால் இந்தியாவின் வளர்ச்சி மிகவும் வேகமாக பின்வாங்கிச் சென்றது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner