எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- பத்ரலேகா சட்டர்யு

(எனக்குத் தெரிந்த பலர் பேய், பிசாசுகளை நம்புபவர்களாக உள்ளனர்; மந்திரதந்திரக்காரர்களையும், சூன்யக்காரர்களையும் குழந்தைகள் நம்புகின்றனர். அதனால் மட்டுமே இவற்றைக் கற்பிப்பதற்கான கல்வி நிறுவனங்களை அரசே தொடங்கி நடத்தலாமா?)

இந்தியாவின் மிகப் பெரிய விஞ்ஞானி யும் கல்வியாளருமான யஷ்பால் இந்த வாரத்தில் காலமடைந்தார். 2006 இல் நடை பெற்ற அவரது 80 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவின்போது, அப்போதைய குடிய ரசுத் தவைர் அப்துல் கலாம் அவருக்கு, இந்திய தேசிய அறிவியல் நிறுவனம் ஏற் பாடு செய்து நடத்திய கருத்தரங்கு ஒன்றில்  ஒரு சிறப்பு பாராட்டு வழங்கினார். நாட்டின் மிகப் பெரிய அறிவியலாளர்களும், பத்திரி கையாளர்களும் அந்த நிகழ்ச்சிக்கு வந் திருந்தனர்.

அறிவியலுக்கே தனது வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்த அவருக்கு இந்தியாவில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பாராட்டுகள் பல குவிந்தன. ஆனாலும், அவர் அப்போது மகிழ்ச்சியாக இல்லை; அப்போது  அவர் கூறியது இன் னும் மனதில் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது. “அறிவியலும் தொழில்நுட் பமும் வளர்ந்து வரும் போது, மக்களின் அறிவியல் மனப்பான்மை மட்டும் குறைந்து கொண்டே வருகிறது. அதனால்தான், ஜோதி டம் போன்ற அனைத்து முட்டாள் தனங் களும் பரவலாகப் புகழ் பெற்று வருகின் றன” என்று அவர் கூறினார்.

அவர் இப்போது உயிருடன் இல்லை; என்றாலும் அவரது செய்தி இன்று நமது நாட்டின் நிலைக்கு வெகு பொருத்தமான தாக இருக்கிறது. அறிவியல் மனப்பான் மைக்கு எதிரான விஷயங்கள் விருப்பத்து டன் முன்னெடுத்துச் செல்லப்படும்போது, அறிவியல் மனப்பான்மையை நம்மால் வளர்க்க முடியுமா?

மத்திய பிரதேச மருத்துவ மனைகளின் புறநோயாளி பகுதியில் செயல்படும் ஜோதி டப் பிரிவுகளில் ஜோதிடர்கள் நியமிக்கப்படு வார்கள் என்று பா.ஜ.க. முதல்வர் சிவராஜ் சவுஹானின் அறிவிப்பு பற்றிய செய்திகள் சில நாட்களுக்கு முன் செய்தி இதழ்களில் வெளிவந்தது. ஒரு தேசிய ஊடகம் இந்தக் கதையை ஒளிபரப்பியது. உடனே, அரசு அது போன்ற எந்த முடிவும் மேற்கொள்ள வில்லை என்று மாநில பா.ஜ.க.வைச் சேர்ந்த சுகாதார அமைச்சர் ருஸ்தம் சிங் தெரி வித்தார். அரசினால் நடத்தப்படும் பதஞ்சலி மகரிஷி சமஸ்கிருத சன்ஸ்தானில் பணி யாற்றும் அலுவலர் ஒருவரது அறிக்கை யினால் ஏற்பட்டதே இந்த பிரச்சினை. அரசு மருத்துவ மனைகளின் புறநோயாளி கள் பிரிவில், நோயாளிகள் கலந்தாலோசிப் பதற்காக ஜோதிடர்களும், குறி சொல் பவர்களும் நியமிக்கப்படுவார்கள் என்று அந்த அதிகாரி கூறியதாக சொல்லப்படு கிறது.

எந்த வித அடிப்படைஆதாரமும் இல்லாத செய்தி இது என்று ஊடகங்களை மாநில அரசு சாடியுள்ளது. போபாலில் உள்ள ஒரு யோகா மய்யத்தில் ஜோதிடம் பற்றிய ஆலோசனை வழங்கும் ஒரு திட்டம்தான் இது என்றும், மக்கள் ஜோதி டர்களிமிருந்தும், வாஸ்து நிபுணர்களிடம் இருந்தும் ஆலோசனைகளைப் பெறலாம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்த கலந்தாலோசனை உடல் நலத்துடன் தொடர்புடையது அல்ல. திருமணம், கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றுடன் தொடர் புடையதாக இருக்கும். நோயாளிகளுக்கு அறிவுரை வழங்க அரசு மருத்துவமனை களுக்கு ஜோதிடர்கள் கொண்டு வரப்படப் போவதில்லை என்று அரசு அறிவித்ததை அறிய மகிழ்ச்சி.

ஆனால், ஒரு கேள்வி மட்டும் நமது மனதில் நெருடிக்கொண்டே இருக்கிறது. அரசே ஜோதிடத்தை வளர்க்கலாமா என் பதுதான் அந்தக் கேள்வி. மாநிலத்தின் 140 அரசு பள்ளிகளில் சமஸ் கிருத மொழியைக் கற்பிக்கும் பணியை செய்து வருகிறது என்றும் வரும் ஆண்டில் இருந்து ஜோதிடத்தில் ஒரு பட்டயப் படிப்பு வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும்  ஒரு ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. ஜோதிடக் கல்வியை அரசே கற்பிக்கும் மாநிலமாக மத்திய பிரதேச மாநிலம் மட்டுமே விளங்க வில்லை.  சிறீ லால் பகதூர் சாஸ்திரி ராஷ் டிரிய சமஸ்கிருத வித்யாபீடம் என்ற தன் னாட்சி பெற்ற பல்கலைக் கழகம் ஒன்று டில்லியில் மனிதவளமேம்பாட்டுத் துறை யின் கீழ் செயல்பட்டு வருகிறது. மருத்துவ ஜோதிடம்  உள்ளிட்ட பல்வேறுபட்ட ஜோதிட பாடங்களை அது  கற்பித்து வரு கிறது.

இவையெல்லாம் நரேந்திர மோடியின் ஆட்சியில் தொடங்கப்பட்டவை அல்ல. “கடவுளின் சந்தை உலக மயமாக்கல் எவ் வாறு இந்தியாவை இந்து மயமாக்கியுள்ளது” என்ற 2009 இல் வெளியான பத்திரிகை கட்டுரை ஒன்றில் அதன் ஆசிரியர் மீரா நந்தா, ஜோதிர் விஞ்ஞானம் என்னும் வேத ஜோதிடம், கர்ம காண்டம் ஆகிய பாடங் கள் இடைநிலைக் கல்விக்குப் பிறகு பயில் வதற்காக அறிமுகப்படுத்துவது என்று 2001 இல் பல்கலைக் கழக மான்யக் குழு மேற் கொண்டமோசமான முடிவுக்குப் பிறகுதான் ஜோதிட பாட போதனை வேகம் பெற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழியில் முன்பு இருந்த பா.ஜ.க. தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணி அரசு இத்தகைய நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களின் தொகுப்பு ஒன்றை உருவாக்கி, அவற்றின் மூலம் இந்து மத சடங்குகள் பற்றிய பயிற்சியை நேரடியா கவும், மறைமுகமாகவும் தொடர்ந்து அளித்து வந்துள்ளது. அப்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை  அமைச் சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி முதன் முதலாக இந்தக் கருத்தைத் தெரி வித்தார். பல்கலைக் கழக மான்யக் குழு அதனை பெரும் விருப்பத்துடன் நடை முறைப்படுத்த எடுத்துக் கொண்டது.

பல்கலைக் கழகத்தின் இந்த முடிவு இந் தியாவெங்கும் இருந்த மூத்த கல்வியா ளர்கள், குறிப்பாக அறிவியலாளர்களி டையே ஒரு பெரும் கலவரத்தைத் தூண் டியது.  100க்கும் மேற்பட்ட அறிவியலாளர் களும், 300 க்கும் மேற்பட்ட அரசியல் மற்றும் சமூகவியலாளர்களும் சேர்ந்து  அர சுக்கு கண்டன, எதிர்ப்புக் கடிதம் எழுதினர். ஆனால் அதனால் எந்த வித பயனும் ஏற்படவில்லை. அதுதான் அதன் ஆரம்ப மாகும்.

கிரகங்களின் நிலை மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது பற்றிய ஆய்வு  ஒன்றுக்கு பல்கலைக் கழக மான்யக் குழு நிதி உதவி செய்துள்ளது என்று 2006 இல் வெளிவந்த பத்திரிகை செய்தி ஒன்று நம்மையெல்லாம் திகைக்கச் செய்தது. டில்லி சிறீ லால் பகதூர்  சாஸ்திரி ராஷ்டிரிய சமஸ்கிருத வித்யாபீடம் என்ற தன்னாட்சி பெற்ற பல்கலைக் கழகத்தின் மருத்துவ ஜோதிடத் துறை இந்த ஆய்வை மேற்கொண்டது. பல்கலைக் கழக மான்யக் குழு என்பது அரசமைப்பு சட்டப்படி இந் திய அரசால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்பதும், உயர் கல்வியின் தரத்தை தீர்மானித்து, நிலை நிறுத்துவதற்காக ஒருங் கிணைக்கும் பணி அதற்கு அளிக்கப்பட்டு உள்ளது என்பதும் அனைவரும் அறிந்த ஒரு செய்தியாகும்.

யோகாவையோ, சமஸ்கிருதத்தையோ வளர்ப்பதில் எவருக்கும் எந்த மறுப்பும் இல்லை. ஆனால், ஜோதிடத்தை வளர்ப்பது என்பது முற்றிலும் வேறுபட்ட ஒரு விஷ யமாகும். 2009 ஆம் ஆண்டு பத்திரிகையில் வெளியான தனது கட்டுரையில் நந்தா “இந்து மதத்தின் சடங்கு அம்சங்களுடன் சமஸ்கிருதம் பிரிக்க இயலாதபடி இரண் டறக் கலந்திருப்பது என்பது உண்மையாக இருந்தாலும் கூட, சமஸ்கிருத யஜூர் வேதத்தில் ஒரு பட்டம் பெறுவதற்கு, ஒரு யாகம் அல்லது பூஜையை செய்யக் கற்றுக் கொள்வது ஒன்று மட்டும்தான் செய்முறைத் தேர்வாகும். ஆனால், சமஸ்கிருத மொழி யில் எழுதப்பட்டிருக்கும் மத இலக்கியங் களைக் கற்பிப்பதற்கும், சடங்குகளைக்   கற்பிப்பதற்கும் இடையே ஓர் எல்லைக் கோட்டை வரையும் முயற்சியை மேற் கொள்வதற்கு மாறாக, இந்திய அரசின் கல்வித் துறை வேறொரு வழியைப் பின் பற்றியுள்ளது. சமஸ்கிருதத்தையும், இந்து தத்துவத்தையும் கற்பிக்கிறோம் என்ற போர்வையில் இந்து மத சடங்குகளைக் கற்பிப்பதற்கு, மக்களின் வரிப்பணத்தை தவறாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

ஒரு சில அறிவியலாளர்கள் உள்ளிட்ட பல இந்தியர்கள் ஜோதிடத்தை நம்புகின்ற னர் என்பதால், அரசு அதனை வளர்ப்பதில் தவறேதுமில்லை என்று வாதிடுபவர்களும் இருக்கின்றனர். எனக்குத் தெரிந்த பலர் பேய், பிசாசுகளை நம்புபவர்களாக உள்ள னர்; மந்திர தந்திரக்காரர்களையும், சூன்யக் காரர்களையும் குழந்தைகள் நம்புகின்றனர். அதனால் மட்டுமே இவற்றைக் கற்பிப்ப தற்கான கல்வி நிறுவனங்களை அரசே தொடங்கி நடத்தலாமா?

ஜோதிடமும், கைரேகை சாஸ்திரமும் ஒன்றும் இந்தியாவில் மட்டுமே இருப்ப வையல்ல. இந்தப் பாடங்களில் கல்வி கற்பிக்கும் பல நிறுவனங்கள் உலகெங்கும் உள்ளன. ஆனால், அவற்றிற்கு அந்த நாட்டு அரசுகள் எந்தவிதமான உதவியை யும் செய்வதில்லை.

பெரும்பாலான அரசு பள்ளிகளில் அறி வியல் சோதனைச் சாலைகளும், கற்பிப்பு உபகரணங்களும் இல்லாமல் இருக்கும் ஒரு நாடான இந்தியாவில் ஜோதிடத்தை வளர்ப்பதற்கு அரசு தனது அரிய நிதியைச் செலவிடலாமா? பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதகாக முறை யான செயல் திட்டம் இல்லாத, மூடநம் பிக்கையும், போலி மருத்துவர்களும்  மலிந் துள்ள  இந்தியா போன்ற ஒரு நாட்டில், நட்சத்திரங்களின் நிலையைக் கணக்கிடும் ஜோதிடத்தை வளர்ப்பதற்கு அரசே முன்வரலாமா?

பேராசிரியர் பாலின் மறைவு குறித்து நாம் வருந்தும்போது,  இந்தக் கேள்வி களைப் பற்றியெல்லாம் நாம் சிந்திக்க வேண்டும்.

நன்றி: தி டெக்கான் கிரானிகிள் 27.07.2017

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner