எழுத்துரு அளவு Larger Font Smaller Font


வழக்குரைஞர் ச.இன்பலாதன்

சீனாக்காரர்கள் சாப்பிடும் முறை, ஒவ்வொரு கையிலும், ஒவ்வொரு குச்சியை வைத்துக் கொண்டு, சோறை வேக, வேகமாக குச்சியால் குத்தி சாப்பிட்டு விடுவார்கள்,

ஆனால் நம்மிடம் குச்சிகளை கொடுத்து சோறை சாப்பிடச் சொன்னால், நம்மால், குச்சியால், சோறை குத்தவும் தெரியாது, குச்சியால் சாப்பிடவும் முடியாது நாக்கில் குத்திக் கொள்வோம்.

ஆனால் நம்மை கையால் சாப்பிடச் சொன்னால் கவளம், கவளமாக சோறை சாப்பிட்டுவிடுவோம்.

அதே மாதிரி தான் படிப்பு முறையும், படிப்புமுறை கலாச்சாரத்தை கொண்டது.

"நீட்" என்பது எல்லோருக்கும் குச்சி மூலம் சாப்பிடச் சொன்னமாதிரி. அதனால் தான் நம் மாணவர்கள் நம் கல்வி முறையில் நம் கலாச்சாரப்படி படித்தவர்களால், குச்சி மூலம் சாப்பிட முடியாமல் ஆக்கப்பட்டுவிட்டார்கள்.

சிபிஎஸ்இ மூலம் படித்தவர்கள் குச்சி மூலம் சுலபமாக சாப்பிட்டுவிட்டார்கள். என்ன தான் பழகினாலும் நம்மால் குச்சி மூலம் சாப்பிட முடியாது.

தமிழ்மொழி திராவிடர் கலாச்சாரப்படி உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், வல் லினம், மெல்லினம், இடையினம் ஆகிய எழுத்துக்கள் அனைத்தும் தொண்டைக்கு மேலிருந்து தான் ஒலிகள் வரும். ஆனால், இந்தி, சமஸ்கிருதம், வடமொழி எழுத்துக் களின் ஒலி அடிவயிற்றிலிருந்து ஒலி வருபவைகளாக இருக்கும். நமது உடல் வாகே "நீட்" தேர்வுக்கு எதிர்ப்பானது.

- - - - -

எப்பொழுதும் பார்ப்பான் நீதி, தர்மம், நியாயம் என்று சொல்லி பார்ப்பனரல்லாதாருடைய உரிமைகளை பறித்துக் கொள்வான்.

பார்ப்பனரல்லாதருடைய உரிமைகளை பறிப்பதற்காகவே, நியாயப்படுத்துவான், ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஊழல் ஒழிப்பு, நாட்டில் தெருவில் உள்ள குப்பைகளை சுத்தப்படுத்துதல், எல்லாமே மற்ற மொழிகள், மற்ற கலாச்சாரங்களை ஒழிப்பதற்குரிய நியாயங்களாகும். நாட்டில் தெருவில் உள்ள குப்பை என்பதேபார்ப்பனரல்லாதாரை குப்பைகளாக பார்க்கிறேன் என்று பார்ப்பனர்களுக்கு சமிக்ஞை கொடுக்கிறார்கள்.

- - - - -

"நீட்" என்று சொல்லும் பொழுதே பார்ப்பனரல்லாதார் அனைவரும் "நீட்"டாக இல்லாதது போலவும், பார்ப்பனர்கள் மட்டும் தான் "நீட்"டாக இருக்கிறார்கள் என்ற தர்மத்தை நியாயப்படுத்துகிறார்கள்.

"நீட்" என்ற பதமே பார்ப்பன தர்மப்படி பார்ப்பனரை மட்டும் தான் குறிக்கும். "தெருவிற்குள் "நுழையாதே" "கழுத்தில் சட்டையை மாட்டிக்கொண்டு எச்சில் துப்பிசெல்" "தொட்டால் தீட்டு" இன்னும் பல சொல்ல வாய் கூசும் அளவிற்கு பார்ப்பனரல்லாதாரை ஒவ்வொரு அடுக்காக ஒதுக்கி வைத்துவிட்டு பார்ப்பனர் மட்டும் பார்ப்பனரல்லாதாரின் உரிமைகளை "நீட்" டா பிடுங்கி ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள்.

இப்பொழுதுள்ள காலகட்டத்தில் அதையெல்லாம் பார்ப்பனர்களால் செய்ய முடியாது. இந்த காலகட்டத்திற்கு ஏற்றார்போல், குலக்கல்வி என்று பார்ப்பனரல்லாதாரின் உரிமைகளை பறிக்க முடியாது. மனு தர்மப்படி பார்ப்பனரல்லாதாருக்கு படிப்பு என்பது குற்றமான செயலாகும். படிப்பிற்காக நாக்கை அறுத்துவிடுவார்கள். படிப்பை கேட்டதற்காக காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றி விடுவார்கள். அதனால் தான் பெரியார் வருவதற்கு முன் பார்ப்பனரல்லாதார் அனைவரும் கைநாட்டு போடுபவர்களாக ஊருக்கு பெரிய மனிதர்களாக இருந்தாலும், பத்திரப்பதிவு அலுவலகத்தில் கைநாட்டு போடுபவர்களாகத்தான் இருப்பார்கள்.

இப்பொழுது பார்ப்பனரல்லாதாரின் படிப்புரிமையை பறிப்பதற்கு, பக்குவமான பதமாக "நீட்" என்று வைத்திருக்கிறார்கள். "நீட்" என்ற வார்த்தையை கேட்கும்பொழுதே நியாய உணர்வு ஏற்படுவது போல் இந்த காலத்திற்கேற்றார் போல் வைத்திருக்கிறார்கள். படிப்பை "நீட்" டாக்கி படிப்பிற்கு "நீட்" மூலம் தேர்வு செய்கிறேன் என்றால் பார்ப்பனரல்லாதாரை படிப்பிலிருந்து நீக்கி படிப்பை "நீட்" ஆக்குகிறேன் என்றுதான் அர்த்தம்.

"நீட்" டாக இருக்க வேண்டும் என்றால் பார்ப் பனர்கள் மட்டும் தான் "நீட்"டாக இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

"நீட்"ட்டாக இல்லை என்றால் பார்ப்பனரல்லாதார்கள் "நீட்"டாக இருக்க மாட்டார்கள் என்று அர்த்தம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner