எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

- ஆர்.விஜயசங்கர்,

ஆசிரியர், ‘ஃப்ரன்ட் லைன்'

(தனது 70 ஆவது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடிக் கொண்டிருக்கும் போது,  தனது மக்களுக்கு நீதியையும், சுதந் திரத்தையும், சமத்துவத்தையும், சகோதரத் துவத்தையும் பெற்றுத் தந்து பாதுகாப்பதாக அரசமைப்புச் சட்டத்தில்   அளித்திருந்த உறுதி மொழியை அதன் தலைவர்கள்  நிறைவேற்றி யுள்ளனரா?)

தனது பயணப்பாதையில் வேறு ஒரு பாதை வந்து குறுக்கிடும்போது, எந்தப் பாதையில் தொடர்ந்து பயணிப்பது என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு நேரம் ஒவ்வொரு நாட்டின் வாழ்விலும் வரத்தான் செய்யும்.

- லால் பகதூர் சாஸ்திரி

70 ஆண்டுகளுக்கு முன்னர் நாடு சுதந்திரம் பெற்ற போது,  தனது பயணத்தில் குறுக்கிடும் பாதைகளில் எந்தப் பாதையில் பயணிப்பது என்று  முடிவெடுக்க வேண்டிய நேரத்தில், இந்தியா தேர்ந்தெடுத்த கோட் பாடுகள், கொள்கைகள், லட்சியங்கள்  ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு அது ஏற்றுக் கொண்ட அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இன்று இந்தியா அயல்நாட்டு ஆட்சியின் கீழ் இல்லாமல் சுதந்திர நாடாக இருப்பதால், அதன் தொழிலாளர்களும், விவசாயிகளும் வர்க்கம் மற்றும் ஜாதி அடக்குமுறைகளில் இருந்து விடுதலை பெற்று வாழ்வதற்கான ஒரு வழியையே  அது தேர்ந்தெடுத் திருக்க வேண்டும்.

விவசாயிகளையும், தொழிலாளிகளையும் பலியாக்குவதா?

எம்.என்.ராய் அறிவுரை!

நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் தொடக்க காலத்தில், வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்களின் கட்சியாகவே இந்திய தேசிய காங்கிரஸ்  தொடர்ந்து இருக்கும் என்பது பற்றிய போதுமான எச்சரிக்கை அளிக்கப்பட்டது. 1921 இல் அகமதாபாத்தில் நடை பெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், புதியதாக தோற்றம் பெற்ற இடதுசாரிகளின் தலைவரான எம்.என்.ராய் பேசியதாவது:

விவசாயிகளையும், தொழிலாளிகளையும் தன் பின்பலமாக  காங்கிரஸ் கட்சி வைத்திருக்க வேண்டும். அவர்களை பலி கொடுப்பதை அது நிறுத்திக் கொள் ளும் போதுதான் அவர்களது ஆழ்ந்த நம்பிக்கையை அதனால் பெற இயலும். தேசிய நலன் என்றழைக்கப் படும் ஓர் உயர்ந்த லட்சியத்திற்காக அவர்கள் பலியிடப்படுவதாகக் காரணம் கூறிக் கொண்டாலும், உண்மையில் வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்களின்  பொருளாதார மேம்பாட்டுக்காகவே அவர்கள் பலி கொடுக்கப்படுகிறார்கள்.  நாடு தன் பின் நிற்கவேண்டும் என்று காங்கிரஸ் விரும்பினால்,  ஒரு சிறு வர்க்கத் தினரின் நலன்களுக்காக அது பார்வையற்றதாக  ஆகிவிடக்கூடாது...  வியாபாரிகள் மற்றும் தொழில திபர்களின் கண்களுக்குத் தெரியாத கைகள் வழி நடத்துவதாக காங்கிரஸ் கட்சி ஆகிவிடக்கூடாது.

இந்த எச்சரிக்கையில் பொதிந்திருந்த உண்மையை காங்கிரஸ் உணர்ந்து கொண்டது. சுதந்திரத்துக்கான இந்தியாவின் போராட்டம் என்ற தனது நூலில் பிபன் சந்திரா  இளைஞர்களுடன் தொழிலாளர்களும், விவசாயிகளும் பெரும் அளவில் இடதுசாரிகளாக மாறிக் கொண்டு வருகின்றனர். அதனால் ஒட்டு மொத்த தேசிய இயக்கமும், அதன் பொருளாதார, அரசியல் செயல்திட்டங்கள் மற்றும் கொள்கைகளில் தன்னை தீவிரப்படுத்திக் கொண்டு வருகிறது என்று கூறினார். அடிப்படை உரிமைகள் மற்றும் தேசிய பொருளாதார செயல்திட்டம் பற்றி 1931 ஆம் ஆண்டு கராச்சி அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இதுவே காரணம் என்பது நன்கு விளங்கும். பேச்சு சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், மக்கள் கூடுவதற்கான சுதந்திரம், சங்கம் அமைத்துக் கொள்வதற்கான சுதந்திரம், அனைவருக் கும் சம உரிமை, வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை,  கட்டாய தொடக்கக்கல்வி, சிறுபான்மை யினரின் கலாச்சாரப் பாரம்பரியப் பாதுகாப்பு போன்ற  அடிப்படை உரிமைகளை குடிமக்களுக்கு வழங்கு வதாக அத்தீர்மானத்தில் உறுதி அளிக்கப்பட்டது. பொருளாதாரத் துறையில்,  விவசாயக் கடன்களில் இருந்து நிவாரணம், நிலகுத்தகை குறைப்பு, நிலவரி குறைப்பு, பணி செய்வோர் பணியாற்றுவதற்கான மேலான சூழ்நிலை, வரையறுக்கப்பட்ட வேலை நேரம், வாழ்வாதாரத்திற்குத் தேவையான  கூலி நிர்ணயம் மற்றும்  தொழிற்சங்கங்கள் அமைத்துக் கொள்வதற்கான உரிமை ஆகிய உறுதிகள் அளிக்கப் பட்டன.

தந்தை பெரியாரின் சமூகநீதியை ஏற்கத் தயங்கிய காங்கிரசு கட்சி

இடதுசாரிகளின் சமதர்மக் கண்ணோட்டம் பற்றிய ஒருசில கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட காங்கிரஸ் கட்சி, வர்ணாஸ்ரமதர்ம ஜாதி நடைமுறையின் அடக்குமுறைக்கு எதிரான பெரியார் ஈ.வெ. ராமசாமி போன்ற தலைவர்களின் சமூக நீதிக் கண்ணோட் டத்தை ஏற்றுக் கொள்ளத் தயங்கியது. அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் காங்கிரஸ் புதியதாகக் காட்டியுள்ள தீவிரம் பற்றி பிபன் சந்திரா, நிலச்சுவான்தாரர்களின் நலன்களை வெளிப்படை யாகப் பாதுகாப்பது என்பது இனியும் முடியாது என்பதால், ஜமீன்தார்கள், ஜாகீர்தார்கள், மிட்டா மிராசுதார்கள் இப்போது பெரும் அளவில், தங்களது வர்க்கத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மதவாதத் திற்கு மாறிவிட்டார்கள் என்று கூறியிருந்தார்.

பொதுவான பொருளாதார அரசியல் நலன்களை நோக்கமாகக் கொண்ட, வரலாறு முழுவதிலும் ஒருவருடன் மற்றவர் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டே இருக்கும்,  ஒரே மாதிரியான இரு குழுக்கள் என்றே இந்துக்களையும், முஸ்லிம்களையும் எடுத்துக் காட்டும் முயற்சியை இந்த மதவாத செயல்திட்டத் தலைவர்கள் மேற்கொண்டனர். அவர்களைப் பொறுத்தவரை, காலனி ஆதிக்கத்துக்கும், தேசியத் துக்கும் இடையேயான முரண்பாடுகளோ, முதலாளி களுக்கும், தொழிலாளிகளுக்கும் இடையேயான முரண்பாடுகளோ, நிலச்சுவான்தாரர்களுக்கும், விவ சாயிகளுக்கும், விவசாயக் கூலிகளுக்கும் இடையே யான முரண்பாடுகளோ, ஜாதி நடைமுறை என்னும் ஏற்றத் தாழ்வு மிகுந்த சமூகப் பிரிவினுள்ளேயே இருக்கும் மேல் ஜாதியினருக்கும்,  கீழ் நிலையில் உள்ளவர்களுக்கும்,  வெளியே இருக்கும் அவர்ணர் களுக்கும் இடையேயான முரண்பாடுகளோ முக்கிய மான முரண்பாடுகள் அல்ல; ஆனால், இந்து - முஸ்லிம் மக்களுக்கு இடையேயான முரண்பாடுகளே, முக்கியமான முரண்பாடுகளாகும். என்றாலும், மதச் சார்பின்மை என்னும் உண்மை நிலை, அன்றாட வாழ்க்கையில் நிலவும் வர்க்கச் சுரண்டல், தேசியம் பற்றிய ஊசலாட்டம் ஆகியவை, இத்தகைய பெரும் பாலான மத சமூக மக்களை மதவாதப் பொறியில் விழுந்துவிடாமல் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தன.

அடிமைப்பட்டவர்களாக வாழுங்கள்; கோல்வால்கரின் வரையறை

மத அடிப்படையிலான தேசியம், மதத்தின் அடிப் படையில் உருவாக்கப்பட்ட ஒரு நாடு ஆகியவற்றின் போலித் தன்மைக்கு பாகிஸ்தானின் அனுபவமே ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த ஒரு விஷயத்தில் மட்டும் தங்களின் பரம விரோ திகளான முஸ்லிம்களைவிட அதிக அளவில் ஆர்வம் கொண்டவர்களாக இந்து வலதுசாரிகள் இருக்கின்றனர். மத அடிப்படையில் இந்து ராஷ்டிரா என்னும்  இந்து மதம் சார்ந்த நாடாக இந்தியாவை மாற்றுவதையே தங்களது நோக்கமாகக் கொண்ட வர்கள் இந்த இந்துமத வாதிகள். ஹிட்லரின் நாசிசத்தைக் கண்டு வியந்து போற்றிய அவர்களது குருவான கோல்வால்கர் இது பற்றி பேசும்போது, வார்த்தைகளை மென்று விழுங்காமல், மிகத் தெளி வாகவே பேசியுள்ளார். ஹிந்துஸ்தானத்தில் இருக்கும் இந்து மதத்தைச் சாராத மக்கள்  இந்து கலாச்சாரத் தையும், மொழியையும்  ஏற்றுக் கொண்டும், இந்து மதத்திற்கு மரியாதை செலுத்துவதற்குக் கற்றுக் கொண்டும், இந்து மதம் மற்றும் கலாச்சாரத்தின் பெருமைகளைப் புகழ்ந்து பேசுவதைத் தவிர  வேறு எந்தக் கருத்துக்கும் இடம் கொடுக்காமல் இருக்க வேண்டும்...  ஒரே வார்த்தையில் கூறுவதானால், அவர்கள் அந்நியர்கள் என்ற நிலையைக் கைவிட்டு விட்டு, இந்த நாட்டில் தொடர்ந்து வசிக்க வேண்டும் அல்லது இந்து தேசத்திற்கு முழுவதும் அடிமைப் பட்டவர்களாக, குடியுரிமை உள்ளிட்ட எந்தவித உரிமைகளையும் கோராமல், எந்தவித சலுகைக்கும் உரியவர்களாக இல்லாமல், எந்த விதத்திலும் சிறப்பாக நடத்தப்படாதவர்களாகவும்  இந்த இந்து ராஷ்டிரத்தில் வாழவேண்டும் என்று பேசியுள்ளார்.

இந்திய வலதுசாரிகளின் இந்த குறுகிய கலாச்சார தேசியத்துக்கு முதலில் பலியான முக்கியமானவர், நாட்டின் தந்தை என்று அழைக்கப்படும்  காந்தி யார்தான்.  காந்தியாரின் படுகொலைக்குப் பின்னர் இந்திய அரசியலின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட  இந்த வலதுசாரிகளின் பிரதிநிதிகளாகவும், தலைவர் களாகவும்  ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கமும், அதன் அரசியல் அவதாரமான பா.ஜ.கட்சியும் தங்களை அறிவித்துக் கொண்டன.

தான், இந்திய மக்களுக்கு அளித்த பல உறுதிமொழிகளையும் காப்பாற்ற வேண்டிய கடமை நேருவுக்கு இருந்தது. பாமர இந்தியக் குடிமகனுக்கு, விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு,  சுதந்திரத் தையும், வாய்ப்பையும் கொண்டு வந்து தருவதாகவும்,  வறுமை, அறியாமை மற்றும் நோய் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வருவதாகவும்,  முற்போக்குக் கருத்து கொண்ட வளமான ஜனநாயக நாட்டை உருவாக்கித் தருவதாகவும், ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும்  நீதியையும், முழுமையான வாழ்க் கையையும் அளிக்க இயல்வதை உறுதிப் படுத்திக் கொள்ளும் சமூக, பொருளாதார, அரசியல் அமைப்பு களை உருவாக்கித் தருவதாகவும்  இந்தியா நள்ளிரவில் சுதந்திரம் பெற்றபோது நேரு உறுதி அளித்துப் பேசினார்.

இந்திய குடிமக்கள்மீதான

பா.ஜ.க.வின் தாக்குதல்கள்

அதில் இருந்த பிரச்சினை என்னவென்றால், ஜாதிப் பாகுபாட்டினால் சீரழிந்து போயிருந்த வர் ணாசிரம  நடைமுறையை உடைத்தெறியாமலேயே, முக்கியமாக முதலாளித்துவ எல்லைகளுக்கு உள் ளேயே தனது உறுதி மொழிகளைக் காப்பாற்றுவதற்கே நேரு முயற்சி செய்தார். நேருவுக்குப் பிறகு தொடங்கிய இந்தச் சீரழிவு,  1991 இல்  மக்களுக்கு அளிக்கப்பட்ட  உறுதி மொழிகளுக்கு எதிராக  புதிய பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்தியதுடன்  முற்றுப் பெற்றது. மக்களிடையே சமத்துவத்தை நிலை நாட்ட வேண்டும் என்ற எந்தவித சுமையையும், கடமையை யும் ஏற்றுக் கொள்ளாத பா.ஜ.கட்சி இப்போது ஆட்சியில் இருக்கிறது. பேராசிரியர் ஹிர்பான் ஹபீப் கூறியது போன்று, பா.ஜ.க.வின் ஆட்சியில் சுதந்திர இந்திய குடிமக்கள்,  புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கை மற்றும் தீவிர மதவாதம் என்னும் இருமுனைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

தேச விடுதலைக்காகவும், சமதர்மம் மற்றும் சமூக நீதிக்காகவும் பாடுபட்டதன் விளைவாகக் கிடைத்த ஆதாயங்களும், பயன்களும் சீரழிவை எதிர்கொண் டுள்ளன. 70 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா விரும்பி தேர்ந்தெடுத்துக் கொண்ட லட்சியங்கள் சீரழிந்து போனதால், இந்தியா மறுபடியும் ஒரு முறை குறுக்குப் பாதைகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் 70 ஆண்டு சுதந்திர காலத்தில் நாம் வென்றடைந்தவை, சாதித்தவை என்னென்ன என்பதைப் பற்றிய ஒரு சுருக்கமான கண்ணோட் டத்தை அளிக்கும் நோக்கத்துடன் இந்த ஃப்ரன்ட் லைனின் இந்த சிறப்பிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

நன்றி: ‘ஃப்ரன்ட் லைன்', 03.09.2017

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner