எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கவுரி லங்கேஷ் பெங்களூருவில் ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள அவரு டைய வீட்டில் இரு சக்கர வண்டி களில் வந்தவர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கவுரி லங்கேஷ் படுகொலை அறிந்த ஊடகவியலாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் அதிர்ச்சியையும் வருத் தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.

கருநாடக முதல்வர் சித்தராமய்யா

தலைசிறந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டதை அறிந்து பெரிதும் அதிர்ச்சி அடைந்தேன். இந்த கொடுங்குற்றத்தைக் கண்டிப்பதற்கு வார்த்தைகளே இல்லை. உண்மையில் இது ஒரு ஜனநாயகப் படுகொலையாகும். அவர் மறைவால், கருநாடகா வலிமை யான முற்போக்கான குரலை இழந்து விட்டது. நான் என் நண்பரை இழந்துவிட்டேன்.
கேரள முதல்வர் பினராய் விஜயன்

இது ஒரு ஜனநாயகப் படுகொலை யாகும். உங்களுக்கு எதிராக குரல் எழுப்புபவர்களை ஒழிக்க வேண்டும் என்பது ஜனநாயக விரோதமானது. இன்று கருநாடகாவில் நடப்பது நாளை எங்கு வேண்டுமானாலும் நடக்கலாம். மக்க ளுக்கு கருத்துரிமை இல்லையென்றால், ஜனநாயகத்துக்கு முடிவாக அமைந்து விடும்.

ஜாவீத் அக்தர்

தபோல்கர், பன்சாரே, கல்புர்கி மற்றும் இப்போது கவுரி லங்கேஷ். ஒரு தரப்பி லான மக்கள் கொல்லப்படு கிறார்கள் என் றால், கொலையாளிகளாக உள்ளவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள்?

ராஜ்தீப் சர்தேசாய்

உடனடிச் செய்தியில் கவுரி லங்கேஷ், ஊடகவியலாளர் மற்றும் இந்துத்துவ அரசியலை கடுமையாக விமர்சிப்பவர் பெங்களூருவில் சுட்டுக்கொல்லப்பட்டுள் ளார். மிகவும் வேதனைக்குரியது.

தெக்சீன் பூனவாலா

வலதுசாரி அமைப்புகள் தடுக்கின்றன. நம்முடைய சுதந்திரம் மற்றும அரசமைப்பு ஆகியவை நேரடியாகவே அச்சுறுத்த லுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

ரானா அய்யூப்

நாடுமுழுவதும் ஒவ்வொரு தெருக் களிலும் கோட்சேக்கள் உள்ளனர். வலது சாரி குழுக்களின் அச்சுறுத்தலை கவுரி லங்கேஷ் தொடர்ந்து பெற்று வந்தவர். இன்னமும் வெட்கப்பட வேண்டிய நிலையில்தான் இந்தியா உள்ளது.

சகார்திகா கோஸ்

உடனடியாக நம்பமுடியவில்லை. இந்துத்துவா அரசியலுக்கு எதிரான அச்சமற்ற துணிவான குரல் அவருடையது. பயங்கரமான செய்தியால் நிலைகுலைந்தேன்.

திக்விஜய்சிங்

வலதுசாரி மத அடிப்படைவாதிகளுக்கு எதிரான உள்ளவர்களை ஒழிப்பதில் அவர் கள் தீவிரமாக செயல்பட்டுவருகிறார்கள்.
ஜிக்னேஷ் மேவானி

கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட இந்த நாள் இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள். நான், கன்னய்யாகுமார், உமர் காலித், ஷேக்லா ரஷீத் ஆகியோர் அவருடைய பிள்ளைகள். இந்துத்துவா சக்திகளை எதிர்த்து அயராது எழுதிவந்தார். சங் பரிவார, பாஜகவுக்கு எதிராக துல்லியமாக அச்சமின்றி போராடி, அதற்கான விலையை கொடுத்துள் ளார். தாங்கமுடியாத சோகத்தில் நாடு மூழ்கியுள்ளது. பாசிச சக்திகளால் ஒவ்வொரு வராக குறிவைத்து கொன்று வருகிறது. எதிர்ப்புக்கருத்துகளை முடக்க பார்க்கிறது. நாட்டையே சுடுகாடாக்குகிறார்கள்.  என் னால் நம்ப முடியவில்லை. எப்போதும் இல்லாத அளவுக்கு நான் அதிர்ச்சி அடைந் துள்ளேன். அவருடன் மிகவும் நெருக்கமாக தொடர்பிலேயே இருந்துவந்துள்ளேன். மாநிலம் முழுவதும் உள்ள கருத்தொரு மித்தவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருந்துவந்தார். அவர் மறைவு கருநாடக மக்களுக்கு மாபெரும் இழப்பாகும். ஜனநாயகம் மற்றும் பகுத்தறிவின்மீதான படுகொலையாகும். எப்போதும் எங்கள் நெஞ்சங்களில் நீங்காமல் இருப்பார்.

உமர் காலித்

கவுரி அவர்களே, கொலையாளிகளின் குண்டுகள் உங்களின் கொள்கைகளை ஒழித்துவிட முடியாது. இந்துத்துவ பாசிச சக்திகளுக்கு எதிராக தொடர்ச்சியான விமர்சனத்தை செய்து வந்த கவுரி படு கொலை செய்யப்பட்டார். பத்திரிகையாளர் என்பதைவிட ஜேஎன்யூ மாணவர் இயக் கத்துக்கு உற்ற துணையாக விளங்கியவர். நண்பர்களாக பாவித்து, எங்களை (நான், அனிருபன், கன்னய்யா, ஜிக்னேஷ் மேவானி) மகன்கள் என்றே அழைத்து வந்தவர். சிறந்த நண்பர், தோழர், தாய் ஓய்ந்துவிட்டார்.

ஷேக்லா ரஷீத்

கவுரி லங்கேஷ் படுகொலை புலனாய் வில் சங் பரிவார தீவிரவாத வலைப் பின்னல்களைக்கொண்ட அபினவ் பாரத் போன்றவர்களின் செயல்களை வெளிப் படுத்த வேண்டும். வருத்தமானது என்ன வெனில், எந்த புலனாய்வு அமைப்பும் அப்படி செய்வதில்லை.

கன்னய்யாகுமார்

நீங்கள் இறக்கவில்லை. நாங்கள் அச்சப்பட மாட்டோம். முழுவலிமையுடன் போராடித் தீரவேண்டும் என்ற உறுதியை எங்களுக்கு அளித்துள்ளது.

கவுரி லங்கேஷ் மாணவர் இயக்கங் களுக்கு தீவிரமாக  ஆதரவளித்தவர். கோழைகளின் கொலையால் கடும் அதிர்ச்சி, வருத்தம் அடைந்துள்ளோம். எங்கள் இதயங்களில் என்றென்றும் வாழ்ந்துகொண் டிருப்பார். உண்மைக்கு உள்ள வலிமையை எங்களுக்கு கற்றுக்கொடுத்தார். வெறுப் புணர்ச்சிகளுக்கு எதிரான போராட்டத்தை அச்சமின்றி தொடர்ந்தவர். அவருடைய போராட்டங்களை நாங்கள் தொடர்ந்து செய்வோம்.

கவுரி லங்கேஷ் பேட்டிகள்

வீட்டிலேயே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட கவுரி லங்கேஷ் அளித்த ஊடகங்களுக்கு அளித்த துணிவான பேட்டிகள்:
17 ஆண்டுகளுக்கு முன்பாக (2000) ஊடகவியலாளரிடம் நேர்காணலின்போது, அச்சுறுத்தல்கள் குறித்து கவுரி லங்கேஷ் கூறியதாவது:

உடல்ரீதியிலான தாக்குதல்கள் குறித்து நான் அச்சப்படவில்லை. 15 நாள்களுக்கு முன்னர்வரை பல நாள் அதிகாலை 3 மணியளவில் தனியாகவே வீட்டுக்கு சென்றுள்ளேன். ஒரு நாள் சாலையின் நடுவில் சேலை சுற்றிக்கொண்டு ஒருவன் படுத்திருந்தான். அதைக்கண்டபின்னர் தனியே செல்வதைத் தவிர்த்தேன்.    அதிலி ருந்து ஓட்டுநருடன் மட்டுமே காரில் சென்று வருகிறேன். எப்போதுமே தொலைபேசியில் வெற்று அழைப்புகள் எனக்கு வந்ததில்லை. இரு தொலைபேசி அழைப்புகள் மட்டும் பிளாக் மெயில் நோக்கத்தில் பத்திரிகை யாளர்கள் பெயரில் சிலரிடமிருந்து வந்தது. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைகுறித்து வெளியிடப்போவதாகக் கூறினார்கள். அப்போது, என்னைப்பற்றி எதைவேண்டு மானாலும் எழுதுங்கள்,   நான் தவறாக எதையும் செய்யவில்லை, அதனால் வெளியே ஏதோ தெரிந்து விடுமோ என்கிற அச்சமும் கிடையாது என்று கூறியதிலி ருந்து அதுபோன்ற தொலைபேசி அழைப்பு கள் வருவதில்லை என்றார் கவுரி லங்கேஷ்.

கவுரி லங்கேஷ் அரசியல் போக்கு

கடந்த ஆண்டு டிசம்பரில்  "நாரதா நியூஸ்" இதழுக்கு அளித்த பேட்டியில் பாஜக, சங்பரிவார செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனம் செய்பவரான கவுரி கூறியதாவது:

இந்திய குடிமகள் என்கிற முறையில் பாஜகவின் பாசிசம் மற்றும் வகுப்புவாத அரசியலை நான் எதிர்த்து வருகிறேன். இந்து தர்மத்தின் கொள்கை என்பதுகுறித்த தவறான விளக்கத்தை நான் ஏற்காமல் எதிர்க்கிறேன். இந்து தர்மம் கூறுகின்ற ஜாதிய முறையை நான் எதிர்க்கிறேன். ஜாதிய முறை நியாயமற்றது. நீதியற்றது. பாலின பாகுபாடுகளைக் கொண்டது. எல்.கே.அத்வானியின் ராமன் கோயில் யாத்திரையையும், மோடியின் 2002ஆம் ஆண்டு இனப்படுகொலையையும் நான் எதிர்க்கிறேன்.

என்னுடைய அரசமைப்புச்சட்டம் மதசார்பற்ற குடிமகளாக இருக்க எனக்கு கற்பித்துள்ளதே தவிர, வகுப்புவாதத்துடன் இருக்குமாறு கூறவில்லை. இதுபோன்ற வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக போராடு வதற்கான உரிமை எனக்கு உள்ளது. ஜாதி சமத்துவமின்மைக்கும், சமுதாயத்தில் அநீதிகளுக்கும்  எதிரானவரான பசவா வைக் கொடுத்த கருநாடக மாநிலத் திலிருந்து நான் வந்துள்ளேன். டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் எழுதிய அரசமைப்புச் சட்டத்தின்படியான குடிமகள் ஆவேன். வகுப்புவாதத்துக்கு எதிராக போராடியவர் அம்பேத்கர். தனிப்பட்ட முறையில் என் னால் இயன்ற அளவுக்கு அநீதிக்கு எதிராக போராடி வருவதைத் தொடர்ந்து செய்து வருகிறேன். ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளேன். அதனாலேயே நான் விமர்சனங்களை முன்வைத்து வருகிறேன். பாஜகவுக்கு எதி ரானவள் என்றோ, மோடிக்கு எதிரானவள் என்றோ என்னை அழைக்க விரும்புப வர்கள் அழைக்கலாம்.

என்னுடைய கருத்துகளை சொல்வதற்கு எனக்கு உள்ள சுதந்திரத்தைப் போல், அவர்கள் தங்களுடைய கருத்துகளை சொல்வதற்கும் சுதந்திரம் உண்டு

- இவ்வாறு கவுரி லங்கேஷ் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner