எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

-   வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

(நாடு சுதந்திரம் பெற்ற 70 ஆவது ஆண்டை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், அரசியல், சமூக சமத்துவம், கலாச்சாரம், உணவு பழக்க வழக் கங்கள் போன்ற வாழ்க்கையின் அனைத்து அம்சங் களையும் அரசு கட்டுப்படுத்தும் ஒரு போக்கு நாட்டில் வளர்ந்து வருவதை நாம் பார்க்கலாம். இதன் மிகப் பெரிய நோக்கமே தேர்தல் களத்திலும், சட்டமன்றங் களிலும், மாற்றுக் கருத்துகளை தெரிவிக்கும் கோட்பாட்டு நிலையிலும் எந்த வித எதிர்ப்புமே இல்லாத ஓர் அரசியல் ஆட்சியை உருவாக்குவதே ஆகும்.)

2017 ஆகஸ்ட் 5 அன்று நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிட்ட கோபாலகிருஷ்ண காந்தி, தேர்தலுக்கு சில நாட் களுக்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதி யிருந்த கடிதத்தில், இந்தியா சுதந்திரம் பெற்றபோது, வரலாறு படைத்த நான்கு முதுபெரும் தலைவர்கள் ஆற்றிய பேருரைகளையும், வெளியிட்ட அறிக்கை களையும் நினைவு படுத்தியிருந்தார். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு என்ற வரிசையில் அவர்களைப் பற்றி அவர் குறிப்பிட்டிருந்தது, 1947 ஆகஸ்ட்14-15 அன்று நாடு ஒரு புதிய வரலாற்று அத்தியாயத்தைத் தொடங்கிய போது, இந்த தலைவர்கள் சுதந்திர இந்தியாவைப் பற்றிய எத்தகைய கருத்தைக் கொண்டிருந்தனர் என்பதைக் காட்டுவதே அவரது நோக்கம். இந்தியத் திருநாட்டுக்கு ஒரு பேரொளி படைத்த எதிர்காலம் காத்திருக்கிறது என்ற நம்பிக்கை அவர்களது பேச்சில் பொதிந்திருத்து என்ற போதிலும்,  அவர்கள் ஒவ்வொருவரும் ஒருசில அச்சங் களையும் கொண்டுதான் இருந்தனர் என்பதையும் அவர் களது பேச்சில் இருந்து உணரலாம். ஒட்டு மொத்தமாக, அவர்களால் வெளிப்படுத்தப்பட்ட நம்பிக்கைகளும் அச்சங்களும், இத்தலைவர்களது தொலை நோக்குப் பார்வையையும், சிந்தனையையும் எடுத்துக் காட்டுவதாக இருந்தன. கடந்த 70 ஆண்டு கால சுதந்திர இந்தியாவின் செயல்பாடுகள் இத்தலைவர்களது எதிர்பார்ப்புகளை எந்த அளவுக்கு நிறைவேற்றியிருக்கிறது என்பதையும், அவர்களது கவலைகளை எந்த அளவுக்குப் போக்கி உள்ளது என்பதையும் திரும்பிப் பார்க்கச் செய்யும் முயற்சியே தனது கடிதம் என்று  கோபாலகிருஷ்ண காந்தி சுட்டிக் காட்டியிருந்தார். தங்களது கண்ணோட்டத்தில் அவர்கள் உணர்ந்த கவலைகள் பற்றியும், , சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் நிலவும் விவகாரங்கள் பற்றியுமான ஒரு விமர்சனமாகவே அது தோன்றுவது ஆர்வமளிப்பதாக இருக்கிறது.

ஆகஸ்ட் 14-15 நள்ளிரவில் நாடு சுதந்திரம் பெற்ற போது, பின்னர் நாட்டின் முதல் குடியரசுத் துணைத் தலை வராக வந்த ராதாகிருஷ்ணன் அரசமைப்பு சட்டமன்றத்தில் ஆற்றிய உரையில், ஒழுக்க அளவிலான நமது தேசியத் தவறுகள், நமது உள்நாட்டு யதேச்சதிகாரம்,  நமது சகிப்புத் தன்மையின்மை இவை அனைத்தும்   குறுகிய மனப் பான்மை,  பகுத்தறிவற்ற மூடநம்பிக்கை போன்ற பல்வேறு பட்ட  வகைகளிலான பிற்போக்குத் தனத்தை ஏற்றுக் கொள்வது, .  வளர்சிக்கும், வளமைக்கும் நமக்குள்ள வாய்ப் புகள் மிகப் பெரியவை என்ற போதிலும், . . . அதிகார ஆற் றலைக் குலைத்துவிடும் என்பதால், இருள் சூழ்ந்த நாட் களை நாம் எதிர்கொள்ள நேரும் என்று எச்சரித்தார்.  அதே இரவன்று உரையாற்றிய,  இந்திய அரசமைப்பு சட்டத்தின் தந்தை என்று போற்றப்படும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், மதக்கோட்பாட்டுக்கு மேலாக நாட்டின் நலனை இந்தியர்கள் போற்றிப் பாதுகாப்பார்களா அல்லது நாட்டின் நலன்களை விட தங்களது மதக்கோட்பாடே மேலானது என்று கருதுவார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால்,  நாட்டின் நலன்களை விட மதக் கோட்பாடே பெரிதென நமது நாட்டு அரசியல் கட்சிகள் கருதுவார்களேயானால், எப்போதுமே மீள முடியாத அளவில் மற்றுமொரு முறை நமது சுதந்திரம்  பேரிடரில் சிக்கிக் கொள்ளும் என்பதை மட்டும் நான் நிச்சயமாக அறிவேன், அவ்வாறு நேராமல் இருப்பதற்கு நாமனை வரும் உறுதியாகப் பாதுகாக்க வேண்டும் என்று தொலை நோக்குப் பார்வையுடன் பேசினார். அரசமைப்பு சட்டமன்றக் கூட்டம் டில்லியில் நடைபெற்றதற்கு ஒரு நாள் முன்னதாக கொல்கத்தாவில் பேசிய  மகாத்மா காந்தி, சுதந்திர இந்தியா எதிர்கொண்டுள்ள பிரிவினைவாத சக்திகளால் ஏற்படக்கூடிய பேரிடர்களுக்கு மக்களின் கவனத்தை ஈர்த்து நாளை முதல் ஆங்கிலேயர் ஆட்சியின் அடிமைத்தனத்திலிருந்து நாம் விடுபட்டிருப்போம். என்பதனால் கொண்டாடத் தகுந்த நாளாக நாளை இருந்த போதிலும்,  இன்று நள்ளிரவு முதல் நாடு பிரிந்து போகும் என்பதால் நாளை நமது துக்க நாளுமாகும். நம் மீது அது ஒரு பெரும் பொறுப்பை சுமத்தியுள்ளது. தகுதி நிறைந்த முறையில் அப்பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான பலத்தை நமக்குக் கொடுக்கட்டும்  என்று பேசியதைப் பற்றி கோபாலகிருஷ்ண காந்தி குறிப்பிட்டார். நாட்டின் சுதந்திரமும், ஆட்சி அதிகாரமும் நம் மீது கொண்டு வந்து வைத்துள்ள பொறுப்பைப் பற்றி வலியுறுத்திப் பேசிய  ஜவஹர்லால் நேரு, இந்தியக் குடிமக்களின் உயர் சுயஅதிகாரத்தைப் பிரதிபலிக்கும் சுயஅதிகாரம் கொண்ட ஓர் உயர் அமைப்பான இந்த சட்ட மன்றத்தின் மீது இந்தப் பொறுப்புகள் சுமத்தப்பட்டுள்ளன என்று கூறினார்.

இந்த நான்கு தலைவர்களும் , தேசிய சுதந்திரப் போராட்ட இயக்கத்துடன் இணைந்திருந்த பலதரப்பட்ட அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களாகவும், பல்வேறு கோட்பாடுகளைப் பின்பற்றியவர்களாகவும் இருந்தவர்கள்  ஆவர், ஆனால், நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்த அந்த நேரத்தில், நாட்டின் எதிர்கால அரசியல் நடைமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி அவர்களிடையே கருத்தொற்றுமை ஏற்பட்டது. அகன்ற பிரிவுகளாக அதனை வகைப் படுத்திய அவர்கள், பிற்போக்குத்தனம், சகிப்புத் தன்மை யின்மை, மூடநம்பிக்கை ஆகியவற்றைக் கைவிட்டுவிட்டு  சுதந்திரத்தையும் பொறுப்பையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை  வலியுறுத்தினர். இவை அனைத்துக்கும் இடையே,  எந்த விதமான மதக் கோட்பாட்டிற்கும் மேலாக நாட்டின் நலன்களையே அவர்கள் உறுதிப்படுத்தி வந்தனர்.

இந்த தீர்க்கதரிசிகளால் அடையாளம் காணப்பட்ட அடிப்படைக் கோட்பாடுகளை மீறிய அரசியல், சமூக, கலாச்சார போக்குகள் அவர்கள் காலத்திலேயே இந்தி யாவில் தலை தூக்கின. மகாத்மா காந்தியைப் பொறுத்த வரை இந்துத்துவ மதவெறி கொண்ட நாதுராம் கோட் சேயின் கைகளாலேயே அவருக்கு மரணம் ஏற்பட்டது. நாடு சுதந்திரம் பெற்று ஓர் ஆண்டு முடியும் முன்னேயே 1948 இல் காந்தியை அவன் சுட்டுக் கொன்றான். என்றாலும் சுதந்திர இந்தியாவின் தொடக்க நாட்களில்,  இந்தத் தலைவர்களால் அடையாளம் காணப்பட்ட கொள்கை களை நமது ஒட்டு மொத்த அரசியல் நடைமுறையின் ஒரு முக்கியமான பகுதியாக அவர்கள் வடிவமைத்தார்கள். இந்த நான்கு தலைவர்களில் கடைசியாக இறந்த எஸ்.ராதாகிருஷ்ணன் 1975 ஏப்ரலில் காலமானார். ஜனநாயகத்துக்கு பேரழிவை ஏற்படுத்திய, என்றுமே மறக்கமுடியாத நெருக்கடி நிலை, இந்திரா காந்தியால்  நாட்டில் அறிமுகப்படுத்துவதற்கு இன்னமும் இரண்டு மாத காலம் இருந்த நேரம் அது. இந்திய ஜனநாயகத்தின் 28 ஆண்டு கால வரலாற்றிலேயே மிகமிக மோசமான நிகழ்வாக 1975 ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை அமைந்தது என்பது சற்றும் அய்யத்திற்கே இடமற்ற கருத்தாகும். அதுவரை பின்பற்றப்பட்டு வந்த, நமது  நாட்டை உருவாக்கிய தலைவர்கள் பொன்னென போற்றி வந்த பேச்சு சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம், அமைப்பு அமைத்து செயல்படும் சுதந்திரம் உள்ளிட்ட குடிமக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்ட மறக்க இயலாத நேரமும் அதுவே. ஒரு யதேச்சதிகார ஆட்சியின் கீழ் சகிப்புத் தன்மையின்மையும், மூடநம்பிக்கையும் பிரச்சாரம் செய்யப்பட்ட நேரமும் அதுவே.  நமது நாட்டு வரலாற்றின் ஒரு முக்கிய  சந்திப்பான  மிகவும் வெறுக்கத்தக்க அந்தக் காலகட்டத்தில் இருந்து 40 ஆண்டுகள் கழிந்த பிறகு, நாட்டின் 70 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முக்கியமான பல அரசியல் நிகழ்வுகளில் இருந்து  மறுபடியும் வெளிப்படும் செய்தி என்னவென்றால்,  அரசமைப்பு சட்டத்தையும் அரசு, அரசியல் நடைமுறை களையும் உருவாக்கிய நமது முன்னோர்கள் முன்வைத்த அடிப்படைக் கொள்கைகள் மிகுந்த துணிவுடனும் வெளிப்படையாகவும்  மீறப்படும் போக்கு  தலை தூக்கி உள்ளது என்பதே ஆகும்.

சகிப்புத் தன்மை இன்மையும் மூர்க்கத்தனமான நாட்டுப் பற்றும்

கடந்த பல மாதங்களில் இதனைப் போன்ற நிகழ்ச்சிகள் ஏராளமாக நடந்தேறியுள்ளன. அவற்றில் சிலவற்றைப் பட்டியலிடும்போது, புதிய குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுடன் தொடர்புடைய நிகழ்வுகளை பார்க்கப்பட வேண்டியது அவசியம்.  குறிப்பாக, தனது பதவிக் காலம் முடிந்து செல்லும் ஹமித்அன்சாரி சில தலைவர்களாலும், ஆளுங்கட்சி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங் பரிவாரஅமைப்புகளைச் சேர்ந்த  சமூக ஊடகப் போராளிகள் என்று தங்களைக் கூறிக்கொள்வோராலும் எவ்வாறு நடத்தப்பட்டார் என்பதேயாகும் அது. அவரது பதவிக் கால முடிவு நெருங்கும் நிலையில் பொது நிகழ்ச்சிகளிலும், ஊடகத்தினருடன் பேசும்போதும்,  பொதுவாக நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்கள் படும் அவதிகள் பற்றியும்,  அண்மைக் காலமாக இத்தகைய சமூகங்களில் நிலவும்  அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பில்லாதது போன்ற உணர்வு வளர்ந்துள்ளது பற்றியும் சில கேள்விகளை ஹமித் அன்சாரி எழுப்பினார். நமது மக்களிடையே, குறிப்பாக தலித்துகள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள் ஆகி யோரிடையே பாதுகாப்பு இல்லாதது போன்ற அச்சங்கள் அதிகரித்துள்ளன என்பதை அவர் சுட்டிக் காட்டினார். தங்களது கலாச்சாரக் கோட்பாட்டினை மய்யமாகக் கொண்ட தேசியம் வழக்கமாகவே, பிற்போக்குத்தனம் கொண்டதும்,  தாராளமான எண்ணம் அற்றதுமாகவே இருப்பதுடன்,  அது சகிப்புத் தன்மை அற்ற மூர்க்கத் தனமான தேசியத்தை வளர்ப்பதுமாகவே இருக்கும் என்று அவர் கூறினார். மிகைப்படுத்தப்பட்ட தேசியம் என்று அதனைக் குறிப்பிட்ட அன்சாரி, மக்களின் மனங்களை  அது மூடிக் கொள்ளச் செய்வதால், இவ்வுலகில் ஒருவரது இடம் பாதுகாப்பு அற்றதாக இருப்பதை வெளிப்படுத்து வதாகவும் இருக்கிறது என்று கூறினார். முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியதை எடுத்துக் காட்டிப் பேசிய அன்சாரி, ஒரு ஜனநாயக நாடு சிறுபான்மை மக்களுக்கு அளிக்கும் பாதுகாப்பினால் மட்டுமே, மற்ற நாடுகளிடையே இருந்து பிரித்துப் பார்க்கப் படுகிறது. அரசின் கொள்கைகளை நியாயமாகவும், சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் எதிர் குழுக்கள் விமரிசிப்பதை அனுமதிக்காவிட்டால், கொடுங்கோலாட்சி என்ற நிலைக்கு நாடு  தாழ்ந்து விடும் என்று கூறினார்.

இக்கருத்துகளுக்கு எதிராக இந்துத்துவ சமூகப் போராளிக் குழுக்கள் வெளியிட்ட கருத்துகள் பகை உணர்வு மிகுந்தவையாகவும், சமூகப் பிரிவினை வாதம் நிறைந்தவையாகவும் இருந்தன. அன்சாரியின் கருத்து நாட்டின் மீதான ஒரு அவமதிப்பே என்றும், அது நாட்டின் நற்தோற்றத்தை சீரழித்துவிட்டது என்றும் பா.ஜ.க.யின் பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவார்கியா கூறி யுள்ளார். நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுகமாக வாவது நரேந்திர மோடியும், வெங்கைய நாயுடுவும் இந்த வசைமாரிக்குத் தூண்டுதலாக விளங்கியவர்கள் ஆவர்.  அன்சாரியின் பிரிவு உபசார விழாவில் பேசிய மோடி, உங்களுக்கும் ஒரு மாதிரியான அமைதி இன்மை இருந்திருக்கக் கூடும். ஆனால், இன்றிலிருந்து அந்த நெருக்கடியை நீங்கள் எதிர் கொள்ள வேண்டியதில்லை. என்று கூறினார்.  பா.ஜ.க. ஆட்சியின் கீழ்  அரசமைப்பு சட்ட பதவி ஒன்றை வகிப்பதில் உள்ள நெருக்கடியால் தனக்கு ஏற்பட்டுள்ள ஓர் அமைதியற்ற மனநிலையில் இருந்து மீளுவது பற்றி அன்சாரி பேசியதைக் குறித்த மோடியின் கருத்து இது என்றே பரவலாகக் கருதப்படுகிறது. அன்சாரி தெரிவித்த அனைத்துக் கவலைகளையும் வெங்கைய நாயுடு ஒட்டு மொத்தமாக ஒதுக்கித் தள்ளி விட்டார். அரசு மற்றும் அதன் அரசியல் கட்டமைப்புகளின் விவாதங்களில் பொதிந்துள்ள ஏமாற்று வேலை,  இரட்டை வேடம் பற்றி தங்களது கருத்துகளைத் தெரிவிக்கும்படி அடிமட்ட அளவிலிருந்து பல்வேறு அரசியல் கட்சிப் பிரிவினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். வாரணாசியில் உள்ள அடித்தள சமூகத் தொண்டரும் அரசியல் விமர்ச கரும்,   உத்தரபிரதேசத்தின் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தி வருபவருமான குமாரமங்கலம் அப்பு சிங் என்பவர்  ஒரு  சோதனையின் முன் பா.ஜ.க. தலைவர்களின் கருத்தால் உண்மை என நிமிர்ந்து நிற்கமுடியாது என்று கூறுகிறார். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால், அனைத்து உண்மைகளையும் மூடி மறைக்கப் பார்க்கிறார்கள்.   நாட்டில், குறிப்பாக வட இந்தியாவில்,  அடித்தள மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சரியான கவலைகளைத்தான் அன்சாரி வெளிப்படுத்தியுள்ளார். உண்மையைக் கூறுவ தானால், அன்சாரியைப் போன்றவர்களின் கருத்துகளுக்கு இவர்கள் பதிலளித்த விதமே,  நமது அரசியலிலும் சமூகத் திலும் நிலவும் வேறுபாடுகளின் அளவை வெளிப்படுத் துவதாக அமைந்துள்ளது என்று அவர் கூறுகிறார்.

நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்து வரும் அறிக்கைகள்  அன்சாரி சுட்டிக் காட்டியதை நிலை நாட்டுபவையாகவே உள்ளன. உத்தரப் பிரதேச டாட்ரி முதற்கொண்டு குஜராத் உனா, அரியானா பல்லாப்கர் வரை நடந்தேறிய நிகழ்ச்சிகள் இதனை திரும்பத் திரும்ப அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ஆனால் சங் பரிவாரத்தி னருக்குத் தேவையானதெல்லாம்,  அரசியல் மற்றும் சமூக அளவில் இந்துத்துவாவின் ஆதிக்கம் நீடிக்க வேண்டும் என்பதுதான். எந்த வித மாற்றுக் கருத்தும் அற்ற அரசியல் சமூக அமைப்பாக இந்த நாட்டை மாற்றுவதற்கு அனைத்து விதமான முயற்சிகளையும் அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர் கூறினார்.

இந்தியா தொடர்ந்து சுதந்திர நாடாக விளங்குவதற்கு ஒரு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்  என்று அம்பேத்கர் அஞ்சிய ஒரு சூழலை,  நாட்டின் நலன்களை விட மதக் கோட்பாடே பெரிது என்பதை வலியுறுத்தும், சுதந்திரத்துக்கு பேராபத்தை ஏற்படுத்தும் ஒரு சூழலை,  ஆளும் சக்திகள் ஏற்படுத்தி வருவதாகவே தோன்றுகிறது.   நாட்டை விட மதக் கோட்பாடே பெரிது என்ற அரசியல் நடைமுறையை திணிப்பதன் அடிப்படையில் ஒரு மறைமுகமான  அச்சம் இன்று நமது அரசியலை சூழ்ந்து வருகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கோபால கிருஷ்ண காந்தி, தொலைபேசியில் ஃப்ரன்ட் லைனுக்குத் தெரிவித்தார். அதை வலியுறுத்திய அவர்,  ஜனநாயகக் கருத்து பற்றிய  நேர்மையான ஒரு மதிப்பை வைத்திருக்கும் பெரும்பான்மையான மக்களையும் கூட, பெரும்பான்மையினரின் மத ஆதரவு என்னும் ஜனநாயக விரோத மனநிலைக்கு இது மாற்றிவிடுகிறது.

தொடர்ச்சி நாளை....

நன்றி: ஃப்ரன்ட் லைன் 03-09-2017

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner