எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

நேற்றையத் தொடர்ச்சி...

எதேச்சதிகாரம் கொண்ட பாசிச ஆட்சி, அதன் வகைப்பாடுகளும் உத்திகளும் எவ்வ ளவு  நுணுக்கமானவையாக இருந்தாலும் சரி,  உரு வாக்கப்படுவதற்கு மிகவும் பொருத்தமான வையாகவே இத்தகைய அளவுகோல்கள் அமைந்து இருக்கின்றன என்பதை அடிப்படை அரசியல் அறிவு கொண்ட எவர் ஒருவராலும்  புரிந்து கொள்ள முடியும் என்ற கருத்தை பன்வார் தெரிவித்தார்.

மாற்று சிந்தனைகள் மீதான அடக்குமுறை

அரசியலில் ஆகட்டும், சமூக சமத்துவத்திலா கட்டும், கலாச்சாரத்திலாகட்டும்,  உணவுப் பழக்க வழக்கங்களி லாகட்டும், வாழ்வின் அனைத்து அம் சங்களையும் கட்டுப்படுத்தும் போக்கு தற்போதைய ஆட்சியில் வளர்ந்து வருவதைக் காண முடிவதாக வரலாற்றாசிரியர் எம்.ஜி.எஸ். நாராயணனும் கூறு கிறார். கருத்து மாறுபடுவது ஒரு புறமிருக்கட்டும்; எளிமையாகக் கூறுவதானால் அது அனைத்து வகை யான மாற்று சிந்தனைகள மீதான அடக்கு முறை என்றுதான் கூறவேண்டும் என்று அவர் கூறுகிறார். நாராயணனைப் பொருத்த வரை,  இந்திய அரசியலில் மாறுபட்ட அளவுகளில் செல்வாக்கு செலுத்தி வந்த அனைத்து வண்ணங்கள் கொண்ட அரசியல் நடை முறைதான், நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கழிந்த பிறகு இன்று நாம் காணும் நிலையில் இருப்பதற்கான காரணமாகும்.

அவர் கூறுகிறார்:

மத்திய அரசின் தொடக்க நாள்களில் காங்கிரஸ் கட்சி பின் பற்றிய அரசியல், சமூக நிலைப்பாடுகள் அனைத்தும்கூர்மையாககூர் தீட்டப்பட்டு, மிகைப் படுத்தப் பட்டு,  பெரும்பாலும் அரசியல் ரீதியில் பரி சளிக்கும் மேடை களாக சங் பரிவார அமைப்புகளால் மாற்றப்பட்டுவிட்டன. இவற்றில், இந்து மத அடை யாளத்தில்  தேசியத்தை அடை யாளப்படுத்தி பின் பற்றுவதும் அடங்கும்.  தாங்கள்தான் சமூக நீதியை வலியுறுத்துபவர்கள் என்று  கூறும் மார்க்சிஸ்ட், சம தர்மம் போன்ற கட்சிகளின் அரசியலைத் தொடர்ந்து, அக்கோட்பாடுகளும் பல்வேறு அளவுகளில்  சங் பரிவார அமைப்புகளால் தங்களது கோட்பாடாக பொருத்தமாக மாற்றிப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. இந்த நடைமுறை வளர வளர, இத்தகைய அரசியல் சக்திகள் அரசு அமைப்புகளை வெட்டிக் கூறு போட்டுக் கொள்வதற்கு உதவின.

சங் பரிவாரம் அரசியல் அதிகாரத்துக்கும், சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் மட்டுமே அரசியல் நடத்தவில்லை என்றும்,  ஒரு ஹிந்து ராஷ்டிராவை  அமைப்பது என்ற ஓர்  இலட்சியத்தை எட்டும் நோக்கத் துடன்தான் அரசியல் செய்து வருகிறது என்றும், 1980, 1990 களில் மேற்கொள்ளப் பட்ட அயோத்தி ராமர் கோயில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு முக்கிய  தலைவரான  காலம் சென்ற மஹந்த ராமச்சந்திர பரமஹம்ஸ், இக்கட்டுரை ஆசிரி யருக்குத் திரும்பத் திரும்ப விளக்கிக் கூறியுள்ளார். இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக நீதி சார்ந்த உரிமை கோரலே சங் பரிவாரத்துக்கு எதிராக உள்ள மிகப் பெரிய சவால் என்றும்,  1990 களின் இறுதியில், இத்தகைய அச்சுறுத் தல்களை வெல்வ தற்கான திட்டவட்டமான உறுதியான செயல் திட்டங் களை சங் பரிவாரம் உருவாக்கிக் கொண்டு விட்டது என்றும், 2004 ஆம் ஆண்டில் காலமான பரமஹம்ஸ் கருதினார்.  உண்மைதான் . அந்த திட்டவட்ட மான, உறுதியான செயல்பாட்டை நடைமுறைப் படுத்து வதற்கு பா.ஜ.கட்சிக்கு இன்னொரு பத்தாண்டு காலம் தேவைப்பட்டது  போலும்.

முதலாளித்துவம், இனவெறி, குழு மனப்பான்மையே இந்துத்துவாவின் மூலதனம்

தனது அரசியல் திட்டத்தையும், உண்மையான அரசியலையும், தேர்தல் வெளிப்பாடுகளையும் முன் னெடுத்துச் செல்வதற்காக சங் பரிவாரம் பின்பற்றிய தந்திரங்களும், உத்திகளும், பாசிசம் என்னும் தனது நூலில் டேவ் ரென்டான் பகுத்துக் கூறியுள்ள பாசிச அரசியல் மற்றும் அமைப்புகளின் நடைமுறைகளின் வரலாற்றுடன் நன்றாகவே ஒத்துப்போகின்றன. வேலை யின்மையையும், நெருக்கடிகளையும் அடிக்கடி முதலாளித்துவம் ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் உருவாகும் கசப்புணர்வாலும், அந்நியப்படுத்தும் தன் மையாலும் பாசிசம் செழித்து வளர்கிறது.  இது ஏமாற்றம் மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டிவிடுவதால் பாசிசம் மேலும் மேலும் நன்றாக வளர்கிறது . இனவெறி, பாலியல் வன்முறைகள், ஆதிக்கம் செலுத்துவதற்கு அதிக உரிமை படைத்த குழு மனப்பான்மை  ஆகியவற்றின் மூலம் பாசிசம் வாழ்ந்து வளர்கிறது. அதே நேரத்தில் முதலாளித்துவம் தனது சொந்த விருப்பு வெறுப்பு களை வளர்த்துக் கொண்டு, அவற்றை பொது அறிவு நம்பிக்கைகள் என்று வேடம் போட்டுக்கொண்டு,  இந்த நடைமுறைக்கு மக்கள் சவால்விடாமல் அவர்களை தடுத்து நிறுத்தும் நேரத்தில், மக்களின் அனுபவங்கள் அதனுடன் பொருந்திப் போவதாகவே தோன்றுகின்றன. முதலாளித்துவம் உற்பத்தி செய்யும் இனவெறி மற்றும் ஆதிக்கம் செலுத்து வதற்கு அதிக உரிமை படைத்த குழு மனப்பான்மை  ஆகிய மயக்கங்களை பாசிஸ்டுகள் தங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இத்தாலி போன்ற நாடு களின் அனுபவங்களைச் சுட்டிக்காட்டும் ரென்டன், அரசியல் ஏதிலிகளுக்கும், சமூக அளவில் வேரறுக்கப்பட்ட மக்களுக்கும், ஏமாற் றம்  அடைந்த மக்களுக்கும் அடைக்கலம் கொடுப்பது போன்ற மிகமிகத் தீவிரமான உறுதி மொழிகளை வழங்கும் தனது ஆற்றலின்மூலம் தன்னைத் தானே ஒரு சுதந்திரமான சக்தியாக கட்டமைத்துக் கொள்ள பாசிசத்தால் இயல்கிறது என்று கூறுகிறார்.

என்றாலும், கடந்த கால, தற்கால பாசிச அமைப்புகள் அனைத்தும் அளிக்கும் இத்தகைய உறுதிமொழிகள் ஏட்டளவில்தான் இருக்கும். பாசிசம் உருவாகி வளர்வதற்கு பொருளாதார வசதி செய்து தரும் முதன்மையான அமைப்பே முதலாளித்துவம்தான். மென்மையான தந்திரம் கொண்ட பாசிசம் வெவ்வேறு வடிவங்களில் மீண்டும் தலைதூக்குவதற்கான அறி குறிகள் உலகெங்கும் தென்படுகின்றன. போலி முதலாளித்துவம் உள்ளிட்ட புதிய வடிவிலான முதலாளித்துவம், இத்தகைய வெவ்வேறு வடி விலான பாசிசத்தை உருவாக்கி வளர்க்க உதவுகின்றன”.

உலகலாவிய இத்தகைய நேர்மையற்ற  நடைமுறை களை பின்பற்றுபவர்களிடையே இந்தியாவில் சங்பரி வாரத்தால் கடைபிடிக்கப்படும் பாசிச அரசியல் நடை முறைகள்தான் அமைப்பு ரீதியாக நன்கு பலப் படுத்தப்பட்டது என்றும், நன்கு ஆழமாக வேரூன்றியது என்றும், பயன் நிறைந்தது என்றும் கூட ஒருவரால் கூறமுடியும். ஊழல் மலிந்த அது முதலாளித்துவத்துடன், சிறப்பாக போலி முதலாளித்துவ முகவர்களுடன்  அடையாள ரீதியிலான உறவு கொண்டதாகும்  என்று அவர் கூறுகிறார். போலி முதலாளித்துவத்துடன் கொண்டுள்ள இத்தகைய உறவுக்குப் பின்னும், அனைத்து அரசியல் எதிர்ப்பாளர்கள் மீதும், மாறுபட்ட குரலை எழுப்புபவர்கள் மீதும் பா.ஜ.க.-சங்பரிவார் அமைப்பு தொடர்ந்து பல்வேறுபட்ட லஞ்சஊழல் குற்றச் சாட்டுகளை எறிந்து கொண்டே இருக்கும் என்று முதிர்ந்த பீகார் அரசியல்வாதியும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான சிவானந்த திவாரி கருத்து தெரிவிக்கிறார்.

எனவே, சங்பரிவார், பா.ஜ.க. தலைமையின், அரசின் மற்றும்  அவை நடத்தும் நிறுவனங்களின்  லஞ்ச ஊழல்கள்,  தவறுகள் அனைத்தையும்  வெளிப் படுத்துவதன் மூலமாக மட்டுமே அவர்களின் இந்த செயல் பாட்டுக்கான தடையை உருவாக்கிக் கட்டமைக்க முடியும். அதற்கு, கடுமையான நிர்பந்தத்திற்கும் வளைந்து கொடுக்காத உறுதித்  தன்மை கொண்டதும்,  அதிகார ஆசையினால் தடம் புரளாமல் இருக்க இயன்ற உறுதியான தலைமையும் தேவை என்று அவர் கூறினார். அத்தகைய ஓர் இயக்கமும், தலைமையும்  உருவானால் மட்டுமே, அரசமைப்பு சட்டத்தை உரு வாக்கிய நமது முன்னோர்கள் கனவு கண்ட புத்துணர்வு கொண்ட ஜனநாயக ஆட்சி மீண்டும் மலர முடியும் என்ற கருத்தில் திவாரி உறுதியாக இருந்தார்.

நன்றி: 'ஃப்ரன்ட் லைன்' 03.09.2017

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

(நிறைவு)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner