எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- மா.பால்ராசேந்திரம்

‘மௌண்ட்யம் ப்ராணந்தி கோதண்டா

ப்ராஹ்மணானாம் வீதியதே

இதரோஷம்து, வர்ணனாம் தண்ட;

ப்ராணந்தி கோபவேத’

என்கிறது மனுநீதி. அதாவது, ‘சூத்திரன் செத்தால் மயிர் போச்சு’ என்னும் பார்ப்பனர் கூற்று உண்மையே. சூத்திர னைக் கொன்ற பார்ப்பனக் கொலை காரர்க்கு அவர்தம் தலை மயிரை மட்டுமே சிரைத்து தண்டனை தந்தனர் நம் மன்னர்கள். மற்றைய வருணத்தார்க்குத் தூக்குத்தண்டனை வழங்கி வெகுமக்களின் விரோதிகளாய் மன்னர்கள் வலம் வந்தனர்.

மன்னர்கள் சிலரின் பார்ப்பனியம்சார்ந்த கொடுநிலையை இங்கு சான்றுக்குக் காண்போம்.

நேபாள நாட்டு மன்னர்கள், சூத்திரர் கல்வி கற்கவும், பொருளீட்டவும் உரிமை கிடையாதென வைத்திருந்தனர். நல்ல உணவு, நல்ல ஆடை, நல்ல வீடு, நல்ல அணிகள் எதுவும் உழைக்கும் சூத்திர மக்களுக்கு ஆகாதெனச்சட்டம் செய்து நடைமுறைப்படுத்தினர். பால் குடித்த தற்காகச் சூத்திரன் தண்டிக்கப்பட்டிருக் கிறான் என்றால் கொடுமைக்கு அள வெங்கே?

போஜராஜ மன்னன் என்பான் சூத்தி ரரைக் கடுமையாக வேலை வாங்கி அன்ன சத்திரம், வேத பாடசாலை, கோவில்கள் எனக் கட்டுவித்தான். யாருக்காக? பார்ப்பனர்கள் நோவாது, துவழாது பசிதீர வாய்ப்பேற்படுத்தினான். பார்ப்பனர்க்குச் செய்யும் பணிவிடை யென்பது சொர்க்கம் போகும் பணி என ஏமாற்றிச் சூத்திரரை வேலை வாங்கியி ருக்கிறான்.

வங்காளத்தில் நிலம் குத்தகை எடுக்கச் சாதி வாரியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நிலத்தின் தன்மையை முன்னிலைப்படுத் தாமல், தீண்டத்தகாதோரா! அவர்கள் அதிகதொகை தந்தால்தான் குத்தகைக்கு விடப்படுமெனச் சட்டம்செய்து நடை முறைப்படுத்தினர் மன்னரென்போர்.

மராட்டிய மன்னன் வீரசிவாஜியோ, வீரத்தைச் சுருக்கிப் பார்ப்பனரிடம் கோழை யடிமையாகவே நடந்து காட்டினான்.

“ஆரியர் புலையருக் கடிமைக ளாயினர்

மற்றிதைப் பொறுத்து வாழ்வதோ வாழ்க்கை?”

பொறுப்பில்லாது வாழ்ந்த பாரதியே தன் இனத்தின் மீது பற்றுக்கொண்டு பொறுப் போடு கவிதை வரைந்துள்ளானே! அவனளவில் அது சரியானதே. மன்னன் சிவாஜி சிந்தித்தானா? இல்லையே! ஆரியர், புலையருக்குக் கீழா! எனச் சிவாஜியும் வெகுண்டான். விளைவு? தனக்கு முன் ஆண்ட துலுக்கர் ஆட்சியில் வேத சாஸ்திரம் பயின்றிருந்த நாற்பது பார்ப்பன ரல்லாதோரை வாயில் பத்து அங்குல இருப்பாணியைப் பழுக்கச் காய்ச்சிச் செலுத்திக் கொன்றான். ‘இது முறையன்று’, எனத்தட்டிக் கேட்ட எழுநூறு சூத்திரரை வெட்டிக் கொன்றான். ஏன் கொன்றான்? மனுதர்மம் அரசனுக்குரிய அறமாக” சூத்திரர், நாத்திகர் மிகுந்து, பிராமணர் நலியும் நாடு வறுமையில் அழியும்”. இந்த அச்சம் போதாதா வீரனுக்கு? வெட்டினான், கொன்றான்.

வேதனை தெரிந்தத் தமிழ்க்கவிஞன் பாடினான்,

“சிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுது போக்கும்

சிறியகதை நமக்கெல்லாம் உயிரின் வாதை” என்று.

மேலும், பார்ப்பானின் பெயரை, அவனின் குலப்பெயரை உச்சரித்த சூத்திரனுக்கும் அதே தலை வெட்டி தண்டனை வழங்கினான். விஸ்வகர்மாக்கள் எனத்தம்மைக் கூறிக் கொண்ட பொற்கொல்லர் பலர், மந்திரம் ஓதியதால் தர்மம் கெட்டதெனப்பார்ப்பனர் சொல்லக்கேட்டு ஓதிய நாவையெல்லாம் ஒட்ட வெட்டி எறிந்தான். பார்ப்பான் தவறாக வாவது ஓதியிருந்தால் தர்மம் கெடுமல்லவா? தர்மம் கெட்டாலும் கூடப் “பார்ப்பனரைக் காயப்படுத்தக் கூடாது” என்பது மனு, மன் னர்க்கு உரைத்திடும் அறமாகும். தீண்டத் தகாதோர் தம் கழுத்தில் கறுப்புக்கயிறு கட்டிக் கொண்டு தம் இழிவால் ஒதுங்கிச் சென்றிட உத்திரவிட்டான் மன்னன் சிவாஜி; கயிறு எதற்கு?

‘வேதாச் சாரணே ஜிஹ்வாச்சே

தோதாரணே சரீர பேத’ என்ற மனுவின் சட்டப்படி வேதத்தைச் சொல்கிற சூத்திரனின் நாக்கை அறுத்தெறிய வேண்டும். அதன் பொருளை உணர்ந்தவன் நெஞ்சைப் பிளக்க வேண்டும். இதைத் தலைமேல் கொண்டுதான் மதுரை திருமலை மன்னன், ‘ஸஹஸ்ர சீர்ஷர புருஷ’ எனும் வடமொழிச் சுலோகத்தை உச்சரித்தத் தமிழ்ப்புலவனுக்குத் தண்டனை வழங்கினான். என்ன தண்டனை? யாரால் வழங்கினான்? தமிழன் வாய் வடமொழி மந்திரம் மொழிவதா! பொறுக்குமா ஆரியம்? ‘தம் குல ஒழுக்கமற்ற பார்ப்பனன், நீதி உரைக் கலாம்’ என்பது மனுநீதி. ஒழுக்கங்கெட்டப் பார்ப்பனனிடம் செங்கோலையும், அரிய ணையும் தந்து நீதியுரைக்கச் செய்தான். அந்தப் பார்ப்பனனோ தமிழ்ப்புலவனைக் கழுவேற்றிக் கொன்றிடக் கட்டளையிட்டான். மதுரையம் பதியிலே பத்தாயிரம் பார்ப்பனச் சிறுவர்க்கு மட்டுமே பாடசாலையமைத்து வட மொழியைக் கற்றுக் கொடுத்த மாமன்னன் திருமலை; அநியாயக்காரன்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனும் பரந்துபட்ட மானிடர் உறவால் தமிழர்கள் பலர், பவுத்தத்தைத் தழுவிடும் நிலை உருவானது. கூட்டங்கூட்டமாக மக்கள் பவுத்தம் புகுந்தனர். அரசர்கள் விகாரைகள், பள்ளிகள் அவர்க்கு அமைத்து நிலபுலங் களையும் தானம் தந்தனர். பொறுக்குமா ஆரியத்துக்கு? மிருகங்களைப் பலியிட்ட வைதீக மதச்சொந்தக்காரன், பார்ப்பான், அசோகன் பேரன் பிரகத்திரனைச் சூழ்ச்சி யால் கொன்று புஷ்யமித்திரன் எனும் பார்ப்பான் தளபதியாய், மன்னனாய் ஆட்சி யிலமர்ந்தான். அவனால் கொல்லப்பட்டப் பவுத்தர்களான தமிழர்கள் பல்லாயிரம் பேராவர். அன்றே அவன், தலை ஒன்றுக்கு நூறு பணம் தரப்படும் என அறிவிப்புச் செய்தான். அதே நிலை இன்றும் காவிகளாம் வேதாந்திகளிடம் குடிகொண்டு, வன்முறை அறிவிப்பு இடச்செய்கிறது.

உழவு, ‘நீசத்தொழில்’ ஆரியன் மேற் கொள்வது அநாகரிகம்; ‘ஜாதிப் பிரஷ்டம்’ தண்டனை என்று விதி செய்து கொண்டனர். அதே வேளை 1000 ஏர் உழவு கொண்ட 100 கிராமங்களை ஹர்ஷவர்த்தனன் எனும் மன்னன் தானமாகத் தூக்கித்தரப் பெற்றுக் கொண்டனர் பார்ப்பனர். மன்னன் வைசி யனே! சூத்திரர்த் துரோகி! ‘ஆவ்ருத்தாநாம் குருகுலாத் விப்ராணாம் பூஜகோ பவேத்! ந்ருபாணாம க்ஷ யோஹ்யேஷ நிதிர் ப்ரஹ்மோ அபிதீயதே!!’

மனுதர்மம் அத்யாயம் 7 சுலோகம் 82 கூறுவது. ‘குருகுலத்தில் படிப்பை முடித்த பார்ப்பனருக்குத் தேவையான தன தானியங்களை வழங்கிக் கவுரவித்தால் அர சனுக்கு எப்போதும் குறையாத நன்மைகளை அது தரும்’. ஏமாந்த மன்னன் விடுவானா? இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், உம்பற் காட்டு அய்நூறு ஊர்களைப் பிரமதாயமாகப் பார்ப்பனர்க்குத்தந்து பாதுகாத்தான். பதிற்றுப்பத்தின் ஆறாம் பத்துக்குரியவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன். இவன், இமயவரம்பனின் உடன் பிறந்தவன். இவனின் ஆட்சிக்காலம் சேரன் செங்குட்டுவனுக்கு முந்தியதாகும். இவன் கேரளத்தில் ஒவ்வொரு பார்ப்பனருக்கும் ஒரு பசுவும், ஓர் ஊரையும் தானமாகத் தந்து பெருமை கொண்டான்.

பிற்காலப் பல்லவர்கள் பெரும்பாலும் சைவ மதத்துக்கும், சிறுபான்மை வைணவத் துக்கும் ஆதரவு தந்து பல கோவில்களையே கட்டுவித்தார்கள். சமஸ்கிருத வளர்ச்சிக்கே உதவினர். தமிழின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யவில்லையென்பது பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையாரின் முடிவு.

இராசராசன் காலத்தில் அதிகச் சலுகை அனுபவித்தவர்கள் பார்ப்பனரும், வேளாள ருமே. இவ்விருவரையும் எதிர்ப்போர்க்கு இருபதினாயிரம் காசுகள் தண்டம் வசூலிக் கப்பட்டது. செலுத்தத் தவறியோரின் நில உரிமை பறிக்கப்பட்டது. மனுவுக்கு மண்டி யிடும் மன்னன் மக்களை நினைப்பானா? அத் 7 - சுலோ 134: கூறுகிறதே,

‘யஸ்ய ராக்ஞஸ்து விஷயே ஸ்ரோத்ரிய: சீததிக்ஷீதா!

தஸ்யா அபிதத் க்ஷீதா ராஷ்ட்ரமசி ரேணைவ சீததி!!

‘வேதமோதுபவன் பசியால் வாடுகிற நாட்டில் பஞ்சம் தலை விரித்தாடும்; மக்களும் பசியால் வாடுவார்கள்’. இந்தப் பயமுறுத்தல் ஒன்று போதாதா, உதைத்து வைத்துப் பிடுங்குவது போல் மன்னன் மூலம் பறித்துக் கொழுத்தனர் பார்ப்பனர்.

தென்கோடித் திருவிதாங்கூர் மன்னன் வாஞ்சி மார்த்தாண்டப்பெருமான், பார்ப்பனத் தாசனாய் விளங்கினான். ‘ஊட்டுப்புரை’ வைத்துப் பார்ப்பனர்க்கேக் கொட்டினான். கொழுத்துத் திரிந்த பார்ப்பனர், ஒரு ஈழவனின் நிழல் தம் மீது விழக்கூடாதென அகந்தையோடு கூறினர். 1895 வரை எந்தப் பள்ளியிலும் இடங்கொடுக்கக் கூடாது. ஈழவர்க்கென மன்னனை அச்சுறுத்தி வந்தனர். கீழ்ச்சாதிப் பெண்களை ரவிக்கை அணியக்கூடாதெனச் சட்டமியற்றி வைத்தனர்.

“பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்

எழுபது கோடிஉறும்” - குறள் 639

எந்த மக்களை மன்னன் வெறுத்தானோ அவர்களை அருகில் வைத்திருந்தால் தான் சார்ந்த இனத்துக்கு வந்தேறிகளால் இத்தனை வரலாறு இயம்பிடும் கேடுகள் வந்திருக்குமா?

கி.பி. 9 முதல் 13ஆம் நூற்றாண்டுகளின் கல்வெட்டுகளின் படி ‘சூத்திரன் ஏதாவது பொருளீட்டினால் அது பார்ப்பனர்க்குரியதே’ என்ற யக்ஞவல்கியரின் (அ) நீதிப்படித் தஞ்சாவூர்ப் பகுதிவிவசாயிகளான குறவர், வேடர், புலையர், இடையர், வில்லவர் நிலங்களெல்லாம் மன்னர்களால் உழுதலைச் செய்யாத பார்ப்பனர்க்கு வாரி வழங்கப் பட்டன.

இவையெல்லாம் குறைவான சான்றுகளே. வரலாற்றை ஆய்ந்து படிக்கின் ஏராளமான செய்திகள் கிடைக்கும். நம் உழைப்பெல்லாம் மன்னர் வழி, அட்டைகளாய் இருந்து ஆரியப் பார்ப்பனர்களால் உறிஞ்சப்பட்டது.

‘உயவல் ஊர்திப் பயலைப் பார்ப்பான்

எல்லி வந்து நில்லாது புக்குச்

சொல்லிய சொல்லோ சிலவே’  - புறம் 305.

‘ஒவ்வொரு பார்ப்பனச் சிறு பயல் களுக்கும் அஞ்சும் அளவுக்குத் தமிழ் வேந்தர்களின் ஒழுக்கக்கேடு நிறைந்து விட்டது’. பார்ப்பான் போட்டதே சட்டம் என்றாகியது.

பாதிப்பிக்குள்ளாகிய வெகுமக்கள், உழைப்பாளிகள், மன்னர்களை விரோதி களாய்க் கருதினர். மன்னர்களும் தாம் பார்ப்பனர்க்காகவேப் பிறப்பெடுத்ததாய் நினைத்து வெகுமக்களின் விரோதிகளாய்க் கோலோச்சினர். குடியாட்சியிலும் நாடும், ஆட்சியும் நமக்கேயென எண்ணி ஆட்சி யாளர்களை வளைத்திடும் செயல் தொடர் கிறது. அந்த ஆரியப் பார்ப்பன ஆதிக்கத் தைத் தமிழர் தலைவர் தலைமையிலே ஒழித்திட இளைஞர்களே அணி சேர்வீர்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner