எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

இந்துத்துவா அமைப்பின் பாரம்பரியக் கொண்டாட்டமானவிஜயதசமியன்று  ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பக வத் பேசியது நாட்டில் பேரச்சத்தை ஏற் படுத்துவதாகவே இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வன் முறைக் கொலை வெறியாட்டம் ஆடி வரும் நாட்டில் உள்ள பசு பாதுகாப்புப் படைகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், சற்றும் சந்தேகத்திற்கு இடமின்றி ஆதரவும், பாதுகாப்பும் அளித்து அவர் பேசியுள்ளார். இதற்கான விலையை மதசிறுபான்மையினரான முசுலிம்களும், தலித்துகளும் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர்.

பட்டப் பகலில் பொதுமக்கள் அனை வரும் பார்க்கும் வகையில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை வெட்டிக் கொலை செய்து, வன்முறைத் தாக்குதல்களை மேற் கொள்ளும் குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசமைப்புச் சட்டமே மாற்றப்படுகிறது; திரித்து விளக்கம் அளிக்கப்படுகிறது. இவற் றிற்கு எதிராக நாடெங்கிலும் எதிர்ப்புப் போராட்டங்கள்மேற்கொள்ளப்பட்டன. ஆனால், காவியுடை சகோதரர்கள்  அத னைப் பற்றி சற்றும் கவலைப்படவே இல்லை.

இதன் முக்கிய காரணமே இந்தக் காவிப் படையினர்தான் மத்தியிலும், பல மாநிலங்களிலும் ஆட்சி செய்கின்றனர் என்பதுதான். இதன் பின்னணியில்தான் தனது தொண்டர்களுக்குத் துணிவை ஏற் படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த விஜயதசமி கொண்டாட்டத்தை மோகன் பகவத் பயன்படுத்திக் கொண்டதைப் பார்க்க வேண்டும்.

பக்தியும், பண்புகளும் கொண்ட பசு பாதுகாப்புப் படையினர், அரசின் உயர் அதிகாரத்தில் உள்ளவர்கள் கூறுவதைக் கேட்டுப் பின்பற்றவேண்டும் என்றோ அல்லதுஉயர்நீதிமன்றம்அளிக்கும்தீர்ப்பு கள் பற்றி கவலைப்படவோ தேவையில்லை என்று தங்களது நாக்பூர் தலைமையகத்தில் இருந்துஆர்.எஸ்.எஸ்.தலைவர்சற்றும் சந்தேகத்துக்கு இடமின்றி அறிவித்துவிட் டார்.

இந்த பசு பாதுகாப்புப் படையினர், அரசமைப்புச் சட்டத்தை சிறிதும் மதிக் காமல், மக்கள் மீது மேற்கொண்டு வரும் கொலை, வன்முறைத் தாக்குதல் நம் நாட்டு ஜனநாயக நடைமுறை மீதே களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரிகள், நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுகமாகவாவது இந்த பசு பாதுகாப்புப் படையினரின் வன்முறைகளை, மென்மை யான சொற்களிலாவது கண்டிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக நேர்ந்துள்ளது.  அரசமைப்பு நடைமுறைக்கு ஒரு கெட்ட பெயரை அது உண்டாக்கும் என்ற அச்சம் தான் அதன் காரணம். ஆனாலும், இத்தகைய நாகரிகத்தை பகத் முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டார்.

ஒரு விஜயதசமி அன்றுதான்

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டது. அப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஆற்றும் உரை அமைப்பின் தொண்டர்களால், அவர்களது எதிர்கால வழிகாட்டுதலுக்காக, முக்கியமானதாகக் கருதி எதிர் பார்க்கப் படுகிறது. பா.ஜ.க. ஆட்சியில் இல்லாதபோது, அரசமைப்பு சட்டத்தையோ, ஜனநாயக நடைமுறையையோ மீறுவது பற்றிய எந்த வித மறைமுக ஆலோசனையையும் தெரி விப்பதையும் கூட ஆர்.எஸ்.எஸ். தலைவர் முற்றிலுமாகத் தவிர்த்தே வந்துள்ளார். அந்தக் கட்டுப்பாட்டை இப்போது அவர் கைவிட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது.

இந்திய கூட்டமைப்பு உணர்வில் காஷ் மீர் மக்களை இணைத்துக் கொள்வதற்காக அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று பகத் கேட்பது, காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கும் அரசமைப்பு சட்டத்தின் 370 ஆவது பிரிவை நீக்கவேண்டும் என்ற அவர்களது வழக்கமான கோரிக்கைதான். அரசமைப்புச் சட்ட சொற்களில் கூறுவதா னால், சுதந்திரத்துக்குப் பிறகு இந்தய கூட்ட மைப்பில் முன்னாள் ஜம்மு-காஷ்மீர் சமஸ்தானம் இணைந்தது பற்றிய பிரிவு இது. அனைத்து ரோஹிங்கியா ஏதிலிகளும் தீவிரவாதிகள் என்று பகத் கூறியிருப்பதும் மோடி அரசின் கருத்தை ஒத்த கருத்துதான்.

நன்றி: ‘தி டெக்கான் கிரானிகிள்’, தலையங்கம், 02.10.2017

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner