எழுத்துரு அளவு Larger Font Smaller Font

-  நிலஞ்சன் முகாபாத்தியோயா

மாநில சட்ட மன்றங்களுக்கான மற்றொரு சுற்று தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில்,  பா.ஜ.கட்சியின் தேர்தல் வெற்றிக்கு பெரிய ஆபத்து எதுவும் இருப்பதாகத் தோன்றாவிட்டாலும், நிச்சயமற்ற தன்மை காணப்படவே செய்கிறது. குஜராத், இமாசல பிரதேச மாநில சட்ட மன்றங்களின் பதவிக் காலம்  2018 ஜனவரியில் முடிய உள்ளது. இமாசல பிரதேச மாநிலத்தின் மேல்பகுதிகளில் பனிப் பொழிவு இருக்கும் என்பதால் அங்கு 2017 நவம்பர் மாதத்திலேயே தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. ஆனால் குஜராத் சட்டமன்றத் தேர்தல்கள் 2017 டிசம்பரில் தான் நடைபெறும். என்றாலும் குஜராத் தேர்தல் முடிந்த பிறகுதான் இரண்டு மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை ஒன்றாக மேற்கொள்ளப்படும். இரண்டு மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் அட்டவணை ஒரே நேரத்தில் வெளியிடப் பட்டதால், குஜராத் மாநில தேர்தல் பிரச்சார காலம், இமாசல பிரதேச மாநில தேர்தல் பிரச்சாரத்தை விட நீண்டதாக இருக்கும். இமாசல பிரதேச மாநிலத்தில் மொத்தமே 4 நாடாளுமன்றத் தொகுதிகள் மட்டுமே உள்ளன.

மோடியும், அமித் ஷாவும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இம்மாநில தேர்தல் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். 2014 மக்களை தேர் தலில் வாரணாசியிலும், வதோதராவிலும் வெற்றி பெற்ற மோடி அரசியல் நிர்பந் தங்கள் காரணமாக வதோதரா தொகுதி யின் மக்களவை உறுப்பினர் பதவியை துறக்க முடிவு செய்தார். அது முதல் தன்னை ஒரு உத்தரப்  பிரதேசத்துக்காரன் என்றே அவர் அழைத்துக் கொள்கிறார். என்றாலும், அவரது அரசியல் தாயகம்  குஜராத்துதான் என்பது மறுக்கமுடியாதது. உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. பெற்ற வெற்றியை விட அதிகமாக இல்லா விட்டாலும், அந்த அளவுக்கு சமமான வெற்றியையாவது குஜராத்தில் பெறுவது அவசியம் எனக் கருதப்படுகிறது; அதை விடக் குறைந்த அளவில் பெறும் வெற்றி, மோடி அலை தேய்ந்து வருவதற்கான அடையாளம் என்றே பார்க்கப்படும். இட ஒதுக்கீட்டுக் காக படேல்கள் மேற்கொண்ட போராட் டத்தை சமாளிக்கவும், தலித்துகளின் போராட்டங்களைக் கட்டுப்படுத்தவும் தவறிய ஆனந்தி பென், விஜய் ருபானி இருவரின்  தலைமையும்  பலவீனமானதாக இருந்த போதிலும்,  குஜராத்தில் பா.ஜ.க. வின் ஆதிக்கம் நீடித்து வருகிறது என்பதை நிலை நாட்ட வேண்டிய தேவை பா.ஜ.க.வுக்கு உள்ளது. 49.85 சதவிகித வாக்குகள் பெற்று 2002 தேர் தலில் 127 தொகுதிகளில் பெற்ற வெற்றி யையும் தாண்டி இந்த முறை வெற்றி பெறுவதன் மூலம் இதனை நிறைவு செய்ய இயலும். மோடி முதல்வராக இருந்த 2007 தேர்தலில் 49.12 சதவிகித வாக்குகள் பெற்று  117 தொகுதிகளிலும், 2012 இல் 47.85 சதவிகித வாக்குகள் பெற்று 112 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றது. மேலும், தங்களது வெற்றி இலக்கை அமித் ஷா 150 க்கு உயர்த்தி யுள்ளார். தாங்கள் தங்களுக்கு நிர்ணயித் துக் கொண்ட இலக்கை எட்ட தவறி விடுவது, ஷாவுக்கும் அவரது எஜமான ருக்கும் அரசியல் ரீதியான அவமானம் தருவதாகும்.

மீண்டும் எளிதாகப் பதவிக்கு வருவ தற்காக ஷா தனது தேர்தல் பிரச்சாரத்தை செப்டம்பர் 10 அன்றே, அகமதாபாத்  நகர் மன்ற அரங்கில்  துவக்கிவிட்டார். அதனைத் தொடர்ந்து முகநூலிலும், டிவிட்டரிலும், கட்சி இணைய தளத்திலும் கேள்விக் கணைகள் நிரம்பி வழிந்தன. அவரை மிஞ்சும் வகையில்,  ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபியை தன்னுடன் இழுத்துக் கொண்டு ஒரு மிகப் பெரிய திருவிழாவையே மோடி இரண்டு நாட்கள் நடத்திக் காட்டினார். வரலாற்றில் முதன் முறையாக இந்தியாவுக்கு வருகை தந்த மற்றொரு நாட்டு அதிபர் தலைநகர் டில்லி யில் காலடி வைக்காமலேயே சென்றுள் ளார். சீன அதிபர் ஜி ஜின்பெங்கை தாஜா செய்ய மோடி மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்த பிறகு மூன்று ஆண் டுகள் கழித்து, அபியின் அகமதாபாத் பயண திட்டம் மோடிக்குள்ள தேர்தல் நிர்பந்தங்களை அடிக்கோடிட்டுக் காட்டு வதாக உள்ளது. அதிவேக புல்லட் ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டதே  குஜராத் வாக் காளர்களின் மனதைக் கவர்வதற்காகத் தான். சித்தி சையத் மசூதிக்கு செல்வது என்ற முன் எப்போதுமே மேற்கொள்ளாத முடிவினை மோடி இப்போது மேற் கொண்டது வியப்பளிப்பதாக இருந்தது. 2011 இல் சத்பவனா திட்டத்தை மோடி மேற்கொண்ட போது,  ஒரு முஸ்லிம் மவுல்வி அளித்த தொப்பியை அணிய மோடி மறுத்துவிட்டது ஒரு தேசிய அள விலான பெரிய விவாதத்தை உருவாக் கியது. சிறுபான்மை மதத்தினர் பற்றி உணர்ச்சி அற்றவராக மோடி இருப்பதாக பல விமர்சகர்களும் குற்றம் சாட்டினர். இந்தியாவில் அரசியல் தலைவர்கள் அவ்வப்போது தலையில் தொப்பியையும், நெற்றியில் திலகத்தையும் தரித்துக் கொள்ளத்தான் வேண்டும் என்று, இப் போது மோடி முகாமில் இருக்கும் நிதிஷ் குமார் அப்போது கூறியதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. ஆனால் மசூதிக்குள் மோடி இது போன்ற எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை. அகமதாபாத்தின் பாரம்பரியத்தைக் காட் டும் வேறு எந்த ஒரு நினைவுச் சின் னத்துக்கு வேண்டுமானாலும் தன்னால் அழைத்துச் சென்றிருக்க முடியும்  என்று மோடி உணர்த்தியதற்கான அறிகுறியை காணாமல் இருக்க முடியாது.

கடந்த 15 ஆண்டுகளில் குஜராத்தில் பா.ஜ.க.வுக்கான ஆதரவு மெல்ல மெல்ல வளர்ந்து வந்துள்ளது என்பதை ஆய் வுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆதரவு பரவலாக இல்லை என்ற போதிலும்,  இதனால் பா.ஜ.க.வுக்கு ஆதாயம் இருக் கிறது என்பதை உணர்ந்துதான் மோடி மசூதிக்கு சென்றுள்ளார். ஆனால், முசு லிம்களுக்கு மோடி அனுப்பிய மெல்லிய சமிக்ஞை, தனது முக்கிய ஆதரவாளர் களைப் பொருத்த வரை,  பலவீனமான அடித்தளத்தில் இருப்பதை அவர் உணர்ந் துள்ளதை வெளிப்படுத்துவதாக இருந்தது. அபியுடன் குஜராத்துக்கு சென்றதைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை மோடி மற்றொரு முறை சர்தார் சரோவர் அணையைத் திறந்து வைப்பதற்காக குஜராத் சென்றார். ஹர்திக் படேல் தாக் குதல் நடத்தும் முக்கியமான சவுராஷ்டிரா பகுதியில் இருக்கும் அம்ரேயில் ஒரு பொதுக் கூட்டத்திலும் மோடி பேசினார். இந்த இரண்டு கூட்டங்களுமே அரசு விழாக்கள் என்ற போதிலும், மோடி தெரி விக்கும் அரசியல் செய்தி சந்தேகத்திற்கு இடமில்லாதது ஆகும். அணையைத் திறந்து வைத்து மோடி பேசிய பேச்சில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டி யவை மூன்று அம்சங்களாகும். முதலாவ தாக அவர் பழங்குடியினர் பற்றி பேசி யுள்ளது. அணையின் உயரம் உயர்த்தப் பட்டதால்,  புலம் பெயர வேண்டி நேரிட்ட பழங்குடியின மக்களின் எதிர்மறை உணர்வுகளை மோடி அறிந்திருக்கிறார் என்பதை அது சுட்டிக் காட்டுகிறது. மொத்த மக்கள் தொகையில் 15 விழுக்காடு அளவுள்ள பழங்குடியின மக்கள் பாரம் பரியமாகவே காங்கிரசுக்கு வாக்களிப்ப வர்கள் ஆவர்.   கிறித்தவ மத சமூகத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மீது 1998 இல் தாக்குதல் மேற்கொள்ளப் பட்ட பிறகு, அவர்களிடமிருந்து பா.ஜ.க. அன்னியப் பட்டுப் போனது அதிகரித்தது. என்றாலும் 2007 இல் மோடி அவர்களது ஆதரவைப் பெறுவதில்  வெற்றி பெற்றார். இப்போது மோடி பழங்குடியின மக்களைப் பற்றி பேசியிருப்பதன் காரணம், அவர்கள் திரும்பவும் காங்கிரசுக்குச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான்.

மோடியின் பேச்சில் அடங்கியிருந்த இரண்டாவது அம்சம்,  சர்தார் சரோவர் அணை கட்டப்படுவதற்கு தான்தான் காரணம் என்பது போல மோடி காட்டிக் கொண்டு,  அணையை எதிர்த்த சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், அவர்களது ஆதரவாளாகளும் குஜராத்தின் எதிரிகள் என்று வண்ணம் தீட்டிக் காட்டினார். சுற்றுச் சூழல் பற்றிய கவலைகளை எழுப்பியதன் மூலம், காங்கிரசும், உலக வங்கியும் குஜராத்தின் முன்னேற்றத்திற்கு எதிராக இருந்தனர் என்று மோடி கூறினார். மூன்றாவதாக கடந்த காலத்தில் தான் நிர்ணயித்துக் கொண்ட இலக்குகள், நோக்கங்கள், அளித்த உறுதிமொழிகள் எதைப் பற்றியும் குறிப்பிடாமல், எதிர் காலக் கனவுகளைப் பற்றியே மோடி பேசினார். மக்களுக்கு வேலை வாய்ப் புகள் வழங்கும் ஆற்றல் கொண்ட மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

வேலை வாய்ப்புகள் உருவாக்கு வதைப் பற்றி பேசாமல்  தூய்மை இந்தியா, அவரது அண்மைக் கால கனவுத் திட்ட மான நியூ இந்தியா பற்றி மோடி வலி யுறுத்தினார்.

கடந்த கால தேர்தல்களில் காட்டியது போன்ற நம்பிக்கையை மோடி இதுவரை வெளிப்படுத்தவில்லை. மற்ற மாநிலங் களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தேர் தல் பிரச்சாரத்தில் வெகு சீக்கிரமாகவே மோடி சேர்ந்து கொண்டார்.  பொருளாதார வளர்ச்சியின் வீழ்ச்சி, சரக்கு மற்றும் சேவை வரி திட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு இல்லாதது ஆகியவற்றை அறிந்திருப்பதற்கான அறிகுறிகளை மோடி வெளிப்படுத்துகிறார். இவை அவரது தேர்தல் பாதையை கடினம் மிகுந்ததாக ஆக்குகின்றன. மனநிறை வளிக்கும் வெற்றியைப் பெறாமல், ஒரு சாதாரணமான வெற்றியை பெறும் மோடியை அரசியல் ரீதியாக சங்கடப் படுத்துவதற்கு எதிர்கட்சிகளுக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பாகும். மேற்கிலிருந்து மோடியை நோக்கி எதிர் காற்று வீசத் தொடங்கியுள்ளது தெளிவாகத் தெரிகிறது என்பதால் அதன் பாதிப்பை இம்முறை அவர் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

நன்றி: 'தி டெக்கான் கிரானிகிள்' 22-09-2017

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner