எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- சரவணா ராஜேந்திரன்

ஜி.எஸ்.டி. மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் வாரணாசியில் உலகப் புகழ்பெற்ற பட்டுநெசவாளர்களின் தொழில் முற்றிலும் வீழ்ச்சி அடைந் துள்ளது. வீழ்ச்சி அடைந்த பட்டு நெசவுத் தொழில் மீண்டும் துளிர்விடும் என்ற நம்பிக்கையை இழந்த நெசவாளர்கள் பலர் கை ரிக்ஷா ஓட்டச் சென்றுவிட்டனர்.

வாரணாசி நகரம் பனாரஸ் புடவை களுக்கு பெயர் பெற்ற நகரமாகும். 16ஆம் நூற்றாண்டில் உருவான இந்தப் பட்டுப் புடவை நெசவுத் தொழிலில் கைத்தறி மூலம் கலைநயத்துடன் கூடிய பனாரஸ் புட வைகள் தயார் செய்யப்பட்டு நாடு முழு வதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப் படுகின்றன.

இந்த தொழிலில் குடும்பம் குடும்பமாக பரம்பரை பரம்பரையாக ஈடுபட்டு வரு கின்றனர். குடிசை தொழில் என்ற அளவில் இருந்து பனாரஸ் பட்டுப் புடவைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பணமதிப் பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியால் இந்த தொழில் தற்போது ஆட்டம் கண்டுள்ளது.

இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ரஹ்மான் என்பவர் கூறுகையில், "நான் சாப்பாடு வாங்கவே மிகவும் கஷ்டப்படுகிறேன். நான்கு பேர் உள்ள எனது குடும்பத்தில் நான் மட்டுமே சம்பாதித்து வந்தேன். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பனாரஸ் புடவைகள் நெய்வதன் மூலம் வாரத்திற்கு ரூ.800 முதல் ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்தேன்.

ஆனால் தற்போது வாரத்துக்கு ரூ. 400 கிடைத்தாலே நல்ல வருவாய் என்ற நிலை உள்ளது. இது மேலும், ரூ. 300 வரை குறை யும் என்ற நிலையும் உள்ளது. எதிர்காலம் மேலும் இருளும் என்ற சூழ்நிலையிலும் உள்ளேன்" என்றார்.

சோராப் அலி என்ற நெசவாளர் கூறு கையில், "வாரணாசி ஜெயின்புரா மற்றும் சோரா நெசவாளர் காலனியில் இருந்த தறிக் கூடங்களை அனைத்து நெசவாளர்களும் மூடிவிட்டனர். அவர்கள்  ரிக்ஷா மிதிக்கத் தொடங்கி விட்டனர். கடந்த ஆண்டு செப்டம்பர் வரை எச்ஏஆர் பட்டுநூல் உற்பத்தி நிறுவனத்தை எனது மாமா அப்துல் ஹசல் நடத்தி வந்தார். 40 நெச வாளர்கள் பணியாற்றி வந்தனர். தற்போது இங்கு 10 முதல் 15 பேர் மட்டுமே உள்ளனர்" என்றார்.

16ஆம் நூற்றாண்டில் இருந்து இந்த நகரில் புடவை தொழில் பாரம்பரியமாக நடந்து வருகிறது. மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களின் கொள்கை முடிவால் கடந்த ஒரு ஆண்டாக இந்த தொழில் முடங்கிவிட்டது. கடந்த நவம்பரில் பண மதிப்பிழப்பு அறிவிப்பும், ஜூலையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதும் தான் இதற்குக் காரணமாகும்.

பனாரஸ் ஆடை உற்பத்தி மற்றும் வர்த்தக சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜன் பெகல் கூறுகையில், "இத் தொழில் தற்போது 50 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆண்டிற்கு பனாரஸ் புடவை தொழில் வர்த்தகம் ரூ.5 ஆயிரம் கோடி வரை நடக்கும். வாரணாசி மாவட் டத்தில் மட்டும் 5-லட்சத்துக்கும் மேற்பட் டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்" என்றார்.

இங்கு தயாரிக்கப்படும் புடவை அதிக பட்சமாக ரூ.2 லட்சம் வரை விற்பனையாகும். இங்கு ரூ.300 முதல் மலிவு விலையில் விசைத்தறியில் தயாரிக்கப்பட்ட சின்தெடிக் ஃபைபர் புடவைகள் கிடைக்கும். தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகைகளைக் கொண்டு தயாரான புடவைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும். ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனையாகும் ஒரு புடவையை ஒரு நெசவாளர் தயாரிக்க 3 முதல் 4 நாள்கள் வரை ஆகும்.

கடந்த நவம்பர் மாதம் ஒரே இரவில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த பண மதிப்பிழப்பு தான் இந்த தொழிலை தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டது. இங்கு பெரும்பாலான வர்த்தகம் ரொக்கத் தின் அடிப்படையில் தான் நடந்து வந்தது. இதனால் வாரணாசியே முற்றிலும் செய லிழந்த நிலைக்கு உருவாகிவிட்டது. மீண் டும் புத்துயிர் பெறும் என்று இருந்த நம் பிக்கைக்கான வாய்ப்புகளையும் ஜிஎஸ்டி பொய்யாக்கிவிட்டது.

ஜிஎஸ்டி விதிப்படி ஒரு நிறுவனம் மாதத்திற்கு 3 முறை விற்பனை, கொள் முதல், வரி விதிப்பு, பணம் கொடுத்த விவரங்களுக்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். இது போன்ற விதி முறைகள் பாரம்பரியமாக நடந்து வந்த இந்த சிறு தொழிலுக்கு பெரும் சவாலாக அமைந்து விட்டன. தொழி லுக்குத் தேவை யான கச்சா பொருட்கள், தயாரிப்புகள் போன்று அனைத்தும் கடன் மூலமே கொடுக்கல் வாங்கல் நடக்கும். முறையான ரசீதுகள் மூலம் இந்த தொழிலை மேற் கொள்வது கடினமான விஷயம்.

மேலும், பெகல் கூறுகையில், "இந்த தொழில் முழுக்க முழுக்க 90 சதவீதம் வரை அமைப்பு சாரா தொழிலாகும். கல்வி அறிவு இல்லாத மக்களும், தொழில்நுட்பத்தை கையாள தெரியாத நெசவாளர்களும் தான் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பனாரசி புடவை களை நெசவாளர்களிடம் இருந்து வாங்கி நாடு முழுவதும் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்யும் மொத்த விற்பனை யாளர்களும் தடுமாற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் வரை அடக்க விலையை பராமரிப்பதற்காக இவர்கள் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித வரியை யும் விதிக்கவில்லை. தற்போது வாடிக்கையா ளர்களுக்கு வரி விதித்தால் 20 சதவீதம் வரை விலை உயரும். அதனால் ஜிஎஸ்டி.யில் இருந்து விலக்கு அளிக்கும் வரை இந்த தொழில் புத்துயிர் பெற வாய்ப்பு இல்லை" என்றார்.

ஜவுளி தொழிலுக்கு ஜிஎஸ்டி விதிக்கப் படுமென என்று அரசு முடிவு எடுத்ததை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் வாரணாசி நெசவாளர்கள், வர்த்தகர்கள் இதை எதிர்த்து 8 நாள்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டனர். அவர்களது குறைகளை தீர்க்க யாரும் முன் வரவில்லை.

இதை தொடர்ந்து ஜூலை 9ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரதமர் மோடி இந்த விவகாரம் தொடர்பாக வர்த்தக சங்க நிர்வாகிகளை சந்திக்க மறுத்துவிட்டார்.

சோரா பகுதியை சேர்ந்த பெரும்பாலான நெசவாளர்கள் அவர்கள் மூதாதையர்களின் பாராம்பரிய தொழிலை செய்து வருகின் றனர். அதே போல் வாரணாசி சவுக்கு பகுதியில் மொத்த விற்பனையாளர்கள் 4 முதல் 5ஆவது தலைமுறையாக இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஹர்திராத் ராம் தயா ராம் என்ற மொத்த விற்பனை மற்றும் ஏற்றுமதி நிறுவனம் 110ஆவது ஆண்டாக செயல்படுகிறது.  நூல் விநியோகஸ்தரான ராம்ஜிலால் சந்தக்கின் விற்பனை நிலையமும் 80 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கியதாகும்.

ஜெய்த்பூர், சோரா நெசவாளர்கள், சவுக் வர்த்தகர்கள் மற்றும் இதோடு இணைந்த நூல் தயாரிப்பு, சாயம் பூசூதல் உள்ளிட்ட 12 வகையான உப தொழில்களில் பெரும் பாலானவர்கள் பல தலைமுறைகளாக ஈடுபட்டு வருகின்றனர். இவை அனைத்தும் நம்பிக்கை அல்லது கடன் அடிப் படையிலேயே நடந்து வருகிறது. இவை அனைத்தும் சிறு மற்றும் குடும்ப தொழிலாக எவ்வித சேமிப்பும் இன்றி நடந்து வருகிறது.

நெசவாளர்களுக்கு தேவைப்படும் கச்சா பொருளான நூல் போன்றவற்றை அதன் விநியோகஸ்தரிடம் இருந்து பெற்று, புடவையை தயாரித்து கொடுத்து மொத்த விற்பனையாளரிடம் இருந்து பணம் பெற்ற பிறகே நூல்களுக்கு பணம் செலுத்தும் நடைமுறை தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் சில்லரை வர்த்தகர்களும் கொள்முதல் செய்துவிட்டு, அவை விற் பனையான பிறகு ஒரு மாதம் கழித்து தான் மொத்த விற்பனையாளர்களுக்கு பணம் கொடுப்பார்கள். யாருடைய கைக்கும் உட னடியாக பணம் கிடைக்காது. பணம் பெறும் தேதி, நாள்கள் என்பது நிரந்தரம் கிடையாது.

ஜிஎஸ்டி முறையில் ஒவ்வொரு பரி மாற்றத்திற்கும் உடனடியாக ரசீது தேவைப் படும். இந்த முறை தான் புடவை தொழில் நடைமுறையை முடக்கி போட்டுள்ளது. இதனால் நெசவாளர்கள் முதல் வர்த்தகர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஃபைபர், தங்கம், வெள்ளி ஜரிகை விநியோகஸ்தர்கள் நெசவாளர்களுக்கு கடன் மூலம் பொருட்கள் வழங்குவதை நிறுத்திவிட்டனர். உடனடியாக பணம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் நெச வாளர்களை நிர்பந்தம் செய்கின்றனர். இதனால் தொழிலின் உடனடி வீழ்ச்சிக்கு இவை காரணமாக அமைந்துள்ளது. இது குறித்து நூல் விநியோகஸ்தர் ராம்ஜிலால் சந்தக் கூறுகையில், "நாங்கள் எப்படி கொடுக்க முடியும். மாதத்திற்கு 3 முறை கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அனைத்து ரசீதுகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என்ற சூழ்நிலை உருவாகி யுள்ளது என்றார். மேலும், அவர் கூறுகை யில், "உடனடியாக பணம் கொடுத்து நூல்களை வாங்க நெசவாளர்களிடம் உபரி வருவாய் எதுவும் கிடையாது. பல்வேறு பொருட்கள் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி நெசவாளர்களுக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பருத்தி மற்றும் பட்டுக்கு 5 சதவீதம், ஜரிகை அல்லது தங்க நூல் களுக்கு 12 சதவீதம், பாலிஸ்டருக்கு 18 சத வீதம் வரி விதிக்கப்படுகிறது. நெசவாளர் களால் அடிக்கடி பயன்படுத்தப்படும் பாலிஸ்டருக்கு அதிகபட்ச வரி விதிக்கப் பட்டுள்ளது. இது நெசவு தொழிலுக்குத் கச்சா பொருட்களின் விலையை கணிசமாக அதிகரிக்க செய்துள்ளது" என்றார்.

"நூல் கொள்முதல் அளவு குறைந் துள்ளது. ஆனால், உற்பத்தி செலவு அதி கரித்துள்ளது. இதனால் கடந்த மாதம் 60 சதவீத தொழில் குறைந்துவிட்டது. குறைந்த அளவு நெசவாளர்கள் மட்டுமே இதில் தற்போது ஈடுபடுகின்றனர். பெரும்பாலான வர்கள் ஜிஎஸ்டி.யை தொல்லையாக கருதுகின்றனர்" என்றார். வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பின் பல வாரங்களாக சோராவில் உள்ள 500 தறிக் கூடங்களும் இயங்காமல் அமைதியாகிவிட்டன. சில கூடங்களை இயக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. ஹசன் என்பவர் ஜிஎஸ்டி.க்கு பதிவு செய்துள்ளார். ஆனால், அவர் கூறுகையில்,  வாரத்தில் சில நாள்கள் மட் டுமே நெசவாளர்கள் பணியாற்றுகின்றனர். 60 சதவீதம் தொழில் வீழ்ச்சியடைந்துள்ளது. ஜிஎஸ்டி.க்கு ஆகஸ்டில் பதிவு செய்தேன்.

இது வரை ஒரு முறை கூட ஜிஎஸ்டி.க்கு கணக்கு தாக்கல் செய்யவில்லை. ஏற்கெனவே உள்ள பணியோடு சேர்த்து ஆவண பராமரிப்பையும் மேற்கொள்ள முடியவில்லை. எப்போது ரசீது பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. எவ்வளவு ஜிஎஸ்டி பொருந்தும். யாரிடம் இதை விதிப் பது என்றும் தெரியவில்லை. ஏற்கெனவே வங்கிகளுக்கு அலைவதிலேயே பல மணி நேரம் வீணாகிறது. ஆவணங்களை நகல் எடுப்பதற்கே காலைப் பொழுது முழுவதும் சரியாக இருக்கிறது. எனது தொடர்பில் உள்ள டீலர்கள் ஜிஎஸ்டி.க்கு பதிவு செய் துள்ளனர். அவர்கள் எப்போது ரசீது எடுப்பார்கள் என்பது தெரியவில்லை" என்றார். ஹசன் தம்பி நூர் அலிக்கு மற்றொரு பிரச்சினை உருவாகியுள்ளது.

பருத்தி மற்றும் பாலிஸ்டர் இணைந்து தயாரிக்கப்படும் பிரபல மலிவான விசைத்தறி புடவைக்கு எவ்வாறு ஜிஎஸ்டி கணக்கீடு செய்வது என்ற பிரச்சினை எழுந்துள்ளது. பாலிஸ்டருக்கு 18 சதவீதம் வரி விதிக்க வேண்டும். ஒவ்வொரு கட் டத்திற்கும் வரி விதிக்கப்படுவதால் செலவு அதிகமாகிறது. விசைத்தறி இயக்குபவர்கள் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றனர். ஜமீல் அகமது என்பவர் வாரத்திற்கு ஆயி ரத்து 500 ரூபாய் சம்பாதித்தார். ஜிஎஸ்டி.க்கு பிறகு இது ரூ.700 ஆக குறைந்துவிட்டது.

ஹசன் மேலும் கூறுகையில்,  "எனது நிறுவனத்திற்கு கடந்த செப்டம்பரில் ஒரு ஆடிட்டரை நியமனம் செய்துள்ளேன்.அவர் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 6 ஆயிரம் வரை கட்டணம் வசூல் செய்கிறார். இது ஃபேப்ரிக்ஸ் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் சுமையாக அமைந்துவிட்டது. 95 சதவீத நெசவாளர்கள் ரசீது கொடுப்ப தில்லை. அவர்கள் ஜிஎஸ்டி.க்கு பதிவு செய்யவும் இல்லை என்றார். கல்வி அறிவு இல்லாத நெசவாளர்கள் மட்டும் ஜிஎஸ்டி.யை சவாலாகக் கருதவில்லை. கடந்த மாதம் 27ஆம் தேதி பெகல் தனது நிறுவனத்தின் ஜிஎஸ்டி கணக்குக்கு வங்கி மூலம் ரூ. 15,092 செலுத்தினார். இதற்கு ரசீதும் வழங்கப்பட்டது.

ஆனால், மறுநாள் பணம் வங்கிக்கு திரும்பி வந்துவிட்டது என்று வங்கியில் இருந்து மெசேஜ் வந்துள்ளது. அடுத்த 4 நாள்களுக்கு வங்கி விடுமுறை. இதனால் எங்களுக்கு தற்போது அபராதம் விதிக்கப் பட்டுள்ளது" என்றார் பெகல். இந்த அமைப்பு சாரா தொழிலில் அமைப்பு சார்ந்தது என் றால் அது மொத்த விற்பனை மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் தான். இந்த தொழிலில் ஈடுபட்டு வரும் வரும் சஞ்சய் வாகி என்பவர் கூறுகையில், "இந்த தொழில் முழுக்க முழுக்க விட்டுக்கொடுத்தல் அடிப் படையிலேயே நடக்கும். நெசவாளர்களுக்கு ஜிஎஸ்டி விதிப்பதற்கும் நானே செலுத்த வேண்டும். பின்னர் நான் விற்பனை செய் யும் போது ஒரே புடவைக்கு மீண்டும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்" என்றார். முதலில் செலுத்துவது உள்ளே வந்த பொருளுக்கான ஜிஎஸ்டி. இரண்டாவது முறை வித்தியாச தொகைக்கு மட்டுமே ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். விநியோகஸ் தர்களுக்கான ஜிஎஸ்டி.யை செலுத்த சில் லரை விற்பனையாளர்களிடம் மூலதனம் இல்லை. ஆண்டுதோறும் வழக்கமாக கைத்தறி துறைக்கு மத்திய அரசு ரூ. 6 ஆயிரம் கோடியை மானியமாக வழங்கும். ஆனால், இந்த தொகை எந்த வழியிலும் நெசவாளர் கைக்கு வந்து சேராது. இந்த தொகையை திரும்பப் பெற்றுக் கொண்டு ஜிஎஸ்டி.யில் விலக்கு அளிக்க வேண்டும். இல்லை என்றால் கலை நயம் மிக்க பனாரசி புடவை அழிவை சந்திக்கும்  என்றார். இவரது மகன் சிரே கூறுகையில், ஜிஎஸ்டி.யால் உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பால் எம்பிராயிடரி புடவைகளில் இருந்து நெய்யப்படும் புடவைகளுக்கு ஏற்பட்டுள்ள பேஷன் மாற்றத்தை பயன் படுத்திக் கொள்ள முடியாமல் போய்விட்டது என்றார். பெருத்த நம்பிக்கையில், ஊடக மாயையில் சிக்கிய மக்கள் மோடிக்கு வாக்களித்த பலனை(சொந்த தொழிலை விட்டுவிட்டு ரிக்ஷா ஓட்டும்) அனுபவிக்க ஆரம்பித்துவிட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner