எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

இந்தித் திணிப்பை 1938இல் கொண்டு வந்தபோது இது சமஸ்கிருத திணிப்புக்கு ஒரு முன்னோட்டம் தான் என்றார் ‘குல்லூகபட்டர்’ ராஜாஜி. தந்தை பெரியார் கிளர்ந்தெழுந்தார். பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார். தாளமுத்து, நடராசன் ஆகியோரை களப்பலி கொடுத்து தடுத்து நிறுத்தினோம்.

1952இல் குலக்கல்வி திட்டத்தை கொண்டுவந்தபோது தந்தை பெரியார் அறைகூவல் விடுத்தார். பெட்ரோலும், தீப்பந்தமும் தயாராகட்டும் என்றபோது ராஜாஜி பதவி விலகி ஓடினார். குலக்கல்வி திட்டத்தை அரை நேரம் பள்ளி, அரை நேரம் அப்பன் தொழிலை செய்ய வேண் டும் என்ற நிலைப்பாட்டை காமராஜர் ஒழித்தார். மூடிய 6000 பள்ளிகளை திறந்ததோடு மட்டுமல்லாமல் மேலும் ஆயிரக்கணக்கான பள்ளிகளை திறந்தார்.

மருத்துவக் கல்லூரிகளில் சேர சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை நீதிக்கட்சி ஆட்சியில் பனகல் அரசர் 1925இல் ஒழித்தார். 1920இல் தொடங்கி மருத்துவக் கல்லூரிகளை படிப்படியாக அதிகரித்து அரசு மருத்துவக் கல்லூரிகளே 29 என்ற நிலையில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத உயர்நிலையில் அற்புதமாக வளர்ந்தோங்கி இருக்கிறது.

பள்ளிகளில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளை ஒழித்து சமச்சீர்கல்வி முறையை அமலாக்கினால் சிஙிஷிணி  பாடத்திட்டத்தை கொண்டு வருகிறார்கள்.

சிஙிஷிணி பாடத்திட்டம் இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பிற்கு வழிவகுக்கின்றது. இந்தியை, சமஸ்கிருதத்தை வேரறுத்து இருமொழிக்கொள்கையை 1967இல் அறிஞர் அண்ணா அவர்கள் கொண்டு வந்த ஆணைக்கு எதிராக திட்டமிட்டு சூழ்ச்சியாக கொண்டு வருகிறார்கள். இன்றைக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு நாங்கள் சிஙிஷிணி பாடத்திட்டத்தை எங்கள் பள்ளியில் நடத்துகிறோம் என்று கூவிக்கூவி அழைக்கிறார்கள். அதனால் இந்தித் திணிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தடுத்து நிறுத்தப்படாவிட்டால் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்றவர்களுக்கு துரோகமிழைத்தவர்களாவோம்.

நுழைவுத் தேர்வு என்பதே தேவைற்றது என்பதுதான் தந்தை பெரியாரின் கொள்கை. கலைஞர் அமைச்சரவையில் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் கல்வி அமைச்சராக இருந்த நிலையில் மருத்துவக் கல்லூரிகளில் சேர 60 விழுக்காடு தகுதி மதிப்பெண் என்றிருந்ததை 70 விழுக்காடாக உயர்த்தியதை கண்டித்து விடுதலையில் அறிக்கை எழுதச்செய்து அந்த ஆணை பின் திரும்ப வாங்கப்பட்டது. 35 மதிப்பெண்ணுக்கு தேர்ச்சி என்றால் அவர்கள் உயர்படிப்புப் படிக்க தகுதியானவர்கள் அல்லவா? அவர்களுக்கு விரும்பிய கல்வியை வழங்க வேண்டியது யோக்கியப் பொறுப்புள்ள நாணயமான அரசின் கடமை என்றார் தந்தை பெரியார். ஆனால் இன்றைய நிலை என்ன?

பொறியியல் கல்லூரிகளில் 520க்கு மேல் தமிழகத்தில் உள்ள நிலையில் இன்றைக்கு தந்தை பெரியாரின் எண்ணவோட்டம் சாத்தியம் என்ற நிலைக்கு வந்துள்ளது. அதற்கும் அடுத்த ஆண்டு முதல் ழிணிணிஜி தேர்வு என்று சொன்னால் நம்முடைய நிலை என்ன? இப்பொழுதே வெளிமாநிலத்தவர் அதிகம் பொறியியல் கல்லூரியில் பயிலும் நிலை என்றால் தமிழ் மக்களின் வரிப்பணத்தில் முதலீட்டில், உழைப்பில் உருவாக்கப்பட்டதெல்லாம் அடுத்தவன் வயிற்றில் அறுத்து வைக்கவா?

கல்வி மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியலுக்கு (சிஷீஸீநீuக்ஷீக்ஷீமீஸீt றீவீst) அவசர நிலை காலத்தில் கொண்டு செல்லப்பட்டது. அதன் அவலம் அல்லவா? மாநில அரசின் ஒப்புதல் பெற வேண்டாமா?

1928இல் முத்தையா முதலியார் அவர்களால் கொண்டு வரப்பட்ட இடஒதுக்கீடு இன்றைக்கு படிப்படியாக வளர்ந்து 69 (50+18+1) விழுக்காடாக இருக்கக்கூடிய நிலையில் இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் பின்பற்றப்பட்டு உள்ளது. இது அடுத்த ஆண்டு தொடருமா? மருத்துவக்கல்லூரிகளில் சமூகநீதி உண்டா?

நீதிக்கட்சித் தலைவர்களும் அதனைத் தொடர்ந்து வந்த திராவிடர் இயக்கப் பெருமக்களும், போராடிப்பெற்றுத்தந்த பேணிக்காத்த சமூகநீதி குழிதோண்டி புதைக்கப்படலாமா?

ழிணிணிஜி தேர்வின்படி வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் 9 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ளனர். எவ்வளவு பெரிய அநீதி? ழிணிணிஜி தேர்வுப் பட்டியலில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை தமிழக அரசின் சமச்சீர்க் கல்வித்திட்ட பாடத்தில் வினாத்தாள் வழங்கப்பட்டால் அவர்களில் எவ்வளவு பேர் தேறுவார்கள்? இந்த பாடத்திட்டம் மோசமானது தரமற்றது என்று கூறுபவர்களே இதற்கு தயார்தானா?

வடஅமெரிக்காவைப் பற்றி பாடம் நடத்திவிட்டு, தென் அமெரிக்காவைப் பற்றி கேள்வி கேட்டால் என்ன நிலையோ அதுதானே இந்த நிலை.

+2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு என்ன அளவு கோல்? அது எதற்கும் பயனற்றது என்றால் அதனை ஏன் நடத்த வேண்டும்?

இந்தியா ஒரே நாடு என்றால் இங்குள்ள மக்கள் அனைவரும் ஒரே மொழி, பண்பாடு, கலாச்சாரம் கொண்டவர்களா? இந்தியா என்பது துணைக்கண்டம். நாடு அல்ல.

மற்ற மாநிலங்கள் எதிர்க்கவில்லை என்றால் அவனுக்கு நட்டமில்லை! எங்களுக்கல்லவா வலிக்கிறது. எங்களு டைய வலி பெரிது. நூறாண்டு கால வளர்ச்சியை ஒரு நொடியில் தூக்கிக் குப்பைக் கூடையில் கசக்கிப் போட்டது போன்றது. சிஙிஷிணி கல்வியை சாதாரண கிராமப்புற மாணவன் படிக்க முடியுமா? அதற்கான கல்விக் கட்டணம் என்ன என்பது ஏதாவது மோடிக்கும் அவருடைய பரிவாரங்களுக்கும் தெரியுமா? உப்பரிகையில் வாழும் உல்லாசபுரி வாசிகள் அவர்கள்.

ழிணிணிஜி தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி நடத்தும் கோச்சிங் சென்டர்களில் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் சேர்ந்து படிக்க முடியுமா? அப்படித்தான் நடத்தினீர்களே அதிலாவது உங்களிடம் நேர்மையுண்டா? குஜராத்துக்கு ஒரு வினாத்தாள் ஆங்கில மொழிக்கு ஒரு வினாத்தாள் என்று - ஓரவஞ்சனையல்லவா செய்துள்ளீர்கள். அதிலாவது நாணயமாக நடந்து கொள்வீர்கள் என்றால் இல்லை. +2வில் அனிதா பெற்ற மதிப்பெண்கள் 1,176; மருத்துவக் கலந்தாய்வுக்கு கட்ஆப் மதிப்பெண் 196.5 ஆகும். நாம் என்ன தேர்வில் தோல்வியுற்றவர்களுக்கா இடம் கேட்கிறோம். அய்ந்தாயிரத்திற்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் பதறித்துடித்துக் கண்ணீரும் கம்பலையுமாய் நிற்பதைப் பார்க்கிறோம். செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். வஞ்சகர்கள் கடைசிவரை நம்ப வைத்துக் கழுத்தறுத்து விட்டனர்.

ஓட்டைச்சட்டியென்றாலும் பரவாயில்லை கொழுக்கட்டை வெந்தால் சரி என்று இருந்தோம், ஆனால் மாவையே காணோம்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை.

இந்தி, சமஸ்கிருதத் திணிப்புக்கு எதிராக, ழிணிணிஜி நுழைவுத் தேர்வுக்கு நிரந்தர விலக்குக்கோரி, சமூகநீதியைக் காத்திட, மாநில உரிமையை நிலைநாட்டிட, சிஙிஷிணி கல்விக்கெதிராக போராட, கிராமப்புற ஏழை மாணவர்கள் நலன் காக்க ஒன்று பட்டு ஓரணியில் அணிதிரள்வோம்.

வெளி மாநிலத்துக்காரர் ஒருவர் தமிழகத்தில் மருத்துவம் பயின்றால் அவர் சார்ந்த மாநிலம், மக்களுக்கே பயன்படும். தமிழ்நாட்டில் மருத்துவர் பற்றாக்குறை ஏற்படும். எனவே இதனை பொதுநலப் பார்வையோடு அணுக வேண்டும்.

எங்கள் குலக்கொழுந்து அனிதா பெய ரால் இறுதிவரை போராட அணி திரள் வோம். வெற்றி கிட்டும் வரை போராடு வோம்.

வீரவணக்கம்! வீரவணக்கம்!! அனிதா வுக்கு வீரவணக்கம்!!!

 

- உரத்தநாடு கை.முகிலன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner