எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

-   சர்மிஷ்டா முகர்ஜி

1893 இல் சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் விவேகானந்தர் ஆற்றிய  பேருரையின் 124 ஆவது ஆண்டு விழாவில் இந்திய இளைஞர் களிடையே பேசிய நரேந்திர மோடி,  அவரின் சிந்தனைகளாலும், தத்துவத் தாலும் எவ்வாறு தான் பல நேரங்களில் தூண்டுதல் பெற்றதைப் பற்றி குறிப்பி ட்டார்.  2014 -  மக்களவை தேர்தல் பிரச் சாரத்தின்போது, தனது அதிக ஓய்வற்ற சுற்றுப் பயணத்திற்கு இடையேயும் நேரத்தை ஏற்படுத்திக் கொண்ட மோடி  பேளூர் மடத்திற்கு சென்று அங்கு, கங்கை நதியின் கிளை நதியான ஹூக்ளியின் பரந்த நீர்ப் பரப்புக்கு எதிராக  அமைந் திருந்த விவேகானந்தரின்அறையில் தியானம் செய்தார்.  அந்த அமைதியான தூய சூழ் நிலையில், விவேகானந்தரின் சொற்களை மோடி நினைத்துப் பார்த் தாரா?  இந்திய பிரதமராகத் தான் தேர்ந்து எடுக்கப்பட்டால், அந்த மாபெரும் பொறுப்பை எவ்வாறு  ஏற்று நிறை வேற்றப் போகிறோம் என்பதை அப் போது அவர் எண்ணிப் பார்த்தாரா? விவேகானந்தரின் தத்துவத்தை செயல் திட்டமாக மாற்றுவதற்கான வழி முறை களைப் பற்றி அப்போது அவர் சிந்தித்துப் பார்த்தாரா?  அவ்வாறெல்லாம் அவர் செய்திருந்தால்,  அவரின் தத்துவத்தை அரசின் கொள்கைகளாக மாற்றுவதற்கு பிரதமராகத் தான் எந்த அளவுக்கு மோச மாகத் தவறிவிட்டோம் என்பது மட்டு மல்லாமல், அவரது கட்சியும், அதன் கோட்பாட்டு ஊற்றுக் கண்ணான ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், விவே கானந்தர் எவற்றுக்கெல்லாம் ஆதரவாக நின்றாரோ, அவற்றிற்கு எதிராகத் தங் களால் செய்ய முடிந்த அளவுக்கு அழிவை ஏற்படுத்தி இருப்பது  அப்போது அவருக்குத் தெரிய வந்திருக்கும்.

மதக் கலவரங்கள் இந்தியாவிற்கு ஒன்றும் புதியவை அல்ல என்றாலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆளும் கட்சி உறுப்பினர்கள், அகண்ட சங் பரிவார அமைப்புகள் ஆற்றிய   பேச்சு மற்றும் விடுத்த அறிக்கைகள் மூலம் இந்த அளவுக்கு வெளிப்படை யாகவும், ஏதோ ஒரு நோக்கத்துடனும் கலவரங்கள் இதற்கு முன் எப்போதுமே தூண்டிவிடப்பட்டதில்லை. பசு பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவி மக்கள் வெட்டிக் கொல்லப்படுவது சர்வ சாதாரணமானதாக ஆகிவிட்டது. சகிப்புத் தன்மை இல்லாத சூழ்நிலை வளர்ந்து வரும் நிலையில், தனது பாதுகாப்பு அற்ற உணர்வு பற்றி சிறுபான்மை மதத்தைச் சார்ந்த எவராவது பேசினால்,  உடனடியாக அவரை தேசத் துரோகி என்று முத்திரை குத்தி அவரை பாகிஸ்தானுக்குச் செல்லும்படி கூறப் படுகிறது. இத்தகைய அவமானத்துக்கு இந்தியாவின் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் அன்சாரியும் உள்ளாக நேர்ந்தது;  பா.ஜ.க.வின் காவிப்படை அவரை கிழித்துத் தொங்கவிட்டுவிட்டது. விவேகானந்தரின் தத்துவத்திற்கு நேர் மாறாக, மக்களிடையே மதவெறுப்பையும், பகை உணர்வையும்  உருவாக்கி வளர்க் கும் தனது கட்சியினர், சங் பரிவாரத்தினர் மீது பலம் நிறைந்த பிரதமர் எனப்படும் மோடி ஏன் கடுமையான நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார் என்பது பற்றியும் எவர் ஒருவரும் வியப்படையவே செய் கின்றனர். தான் போதிப்பதற்கும், தனது செயல்பாடுகளுக்கும் இடையே உள்ள வெளிப்படையாகத் தெரியும் வேறு பாடுகள், பிரதமரின் பேச்சை எந்தவித நோக்கமும் அற்ற, வெறும்  ஆரவாரக் கூச்சல் என்பதையே காட்டுகின்றன. அல்லது அவரைப் பின்பற்றுவோர் எண் ணுவது போல அவர் பலம் வாய்ந்த பிரதமராக இல்லாமலும் இருக்கக்கூடும். படைப்பாற்றலுக்கும், கண்டுபிடிப்புகளுக் கும் பல்கலைக் கழக வளாகங்களை விட மேலான இடம் எதுவும் இல்லை. படைப் பாற்றல் இன்றி உயிர் வாழ்க்கையே இல்லை.

நமது படைப்பாற்றலின் வழி நமது நாட்டை மேலும் பலப்படுத்தி, நமது மக்களின் எதிர்பார்ப்புகளையும், விழைவு களையும் நிறைவேற்றுவோமாக! என்று மோடி தனது பேச்சில் குறிப்பிட்டார். படைப்பாற்றலுக்கும், கண்டுபிடிப்புகளுக் கும் மிகமிக முக்கியமாகத் தேவைப் படுபவை சுதந்திர உணர்வும், தேடி அறியும் தாகத்துக்கான சுதந்திரம், எத னையும் கேள்வி கேட்பதற்கான சுதந் திரம்,  நிலைநாட்டப்பட்ட கோட்பாடு களும், மதிப்பீடுகளும், இளைஞரிடையே மிகச் சிறந்த முறையில் வெளிப்படும் சுதந்திரம் ஆகியவையே. மாணவர்களின் வாசகர் வட்டங்களைத் தடை செய்வது பற்றியோ, தற்போதைய ஆட்சியாளரின் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ளாத  மாணவர்களைத் துன்புறுத்துவது பற்றியோ, பல்கலை வளாகங்களுக்குள் காவல்துறையினரை நுழைய அனுமதிப் பதைப் பற்றியோ மோடியின் முன்னாள் மனிதவளமேம்பாட்டுத் துறை அமைச்சர் இரண்டாவது முறை சிந்திக்காமலேயே செயல்பட்டிருக்கிறார். படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான உணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்துவது பற்றி மோடி பேசுகிறார். ஆனால், அவரது அரசோ இளைஞர்களிடையே நிலவும் சுதந்திரமாக எதனையும் கேள்வி கேட்கும் உணர்வையும், சுதந்திரத்தையும் மாய்த்து வருவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தற்போதைய ஆட்சியின் கீழ் படைப்பாற்றலும், கண்டுபிடிப்புகளும் ஒரே ஒரு அச்சில், ஆளும்கட்சியினால் நிர்ணயிக்கப்பட்ட கோட்பாட்டு அச்சில்  மட்டுமே வார்க்க முடியும் போலத் தெரிகிறது. படைப்பாளிகள்தான் ஒரு கலாச்சாரத்தின் உயிர் போன்றவர்களும், சமூகத்தின் மனச் சாட்சியைக் காப்பவர் களும் ஆவர். பல பகுத்தறிவாளர்கள் படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து தங்களுக்கு அரசால் வழங்கப்பட்ட விருதுகளைத் திருப்பி அனுப்பும் கலை ஞர்கள், எழுத்தாளர்களின் போராட்டம்,  அரசின் உணர்வைப் புண்படுத்தும் ஒரு முயற்சி என்று பார்க்கப்பட்டதே அல் லாமல், தங்களது சாதனைகள் மூலம் நாட்டிற்கு பெருமை தேடித் தந்த இக் கலைஞர்கள், எழுத்தாளர்கள் கேலி செய்யப்பட்டு, இழிவு படுத்தப்பட்டனர்.

எந்த ஒரு எதிர்ப்பையும் தேச விரோதம்  என ஆளும் கட்சியினர் ஒதுக்கித் தள்ளும் ஒரு சூழ்நிலையில், தங்களது மனத் துன்பத்தையும், அச்சத் தையும் வெளிப்படுத்தும் ஒரு நியாயமான அமைதியான வழியாகத்தான், வன்முறை யற்ற இத்தகைய போராட்டத்தை மேற் கொள்ள அவர்கள் முடிவு செய்தார்கள்.  நாட்டில் நிலவும் குறைபாடுகளைக் கண்டிக்கவும் விவேகானந்தர் தயங்க வில்லை என்று  பிரதமர் தனது பேச்சில் மிகச் சரியாகக் குறிப்பிட்டுள்ளார். இன்று நம் நாட்டில் நிலவும் மோசமான சூழ் நிலையில்,  விவேகானந்தர் மட்டும் உயிரோடு இருந்திருந்தால், பிரதமரைப் பின்தொடரும் இந்த மோசமான காவிப் படையினரால், தேச துரோகி என்றே அழைக்கப்பட்டிருப்பார்.

தனது பேச்சில் மோடி ரவீந்திரநாத் தாகூரையும் குறிப்பிட்டிருந்தார். மேற்கு வங்காளத்துப் பள்ளிகளில்  பிரதமரின் பேச்சை நேரடியாக ஒளிபரப்புவது குறித்து பல்கலைக் கழக மானியக் குழுவின் அறிவுரைகளைப் பின்பற்ற அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மறுத்துவிட்ட காரணத்துக்காக அவரை கேலி செய்வதற்காக, நோபல் பரிசு பெற்று இந்தியாவுக்கு தாகூர் எவ்வாறு பெருமை சேர்த்தார் என்பதைப் பற்றியும், தாகூரும், விவேகானந்தரும் வங்காளிகள் என்ப தையும் பற்றியும் மோடி குறிப்பிட்டுப் பேசினார். ஆனால் நோபல் பரிசு பெற்ற மற்றொரு வங்காளியான அமர்த்தியா சென் பற்றி  எதுவும் பேச மோடி மறந்து விட்டார். கலவரக் காவிப் படையினராலும், ஆளும்கட்சியின் செய்தித் தொடர்பாளர் களாலும், அரசை சென் விமர்சித்தார் என்ற காரணத்துக்காக  தொடர்ந்து அவர் மீது தாக்குதல் நடத்தி, வேட்டையாடினர்.

ஆளும் கட்சியின் கோட்பாட்டாளர் களால் பின்பற்றப்படும் தேசியம் என்னும் குறுகிய கண்ணோட்டத்திற்கு எதிரான தாக இருக்கும்  ரவீந்திரநாத் தாகூரின் அனைத்துலகக் கோட்பாடு, மோடி பக்தர்கள்  வெறுப்பதாகும். அதே போல, நாட்டில் இன்று நிலவும் மிகைப்படுத் தப்பட்ட தேசியத்தை தாகூர் பார்த்திருப் பாரேயானால், அவரும் பேரதிர்ச்சி அடைந்திருப்பார். தேசிய சுதந்திரப் போராட்டத்துக்கு இடையேயும் நிலவிய மிகைப்படுத்தப்பட்ட தேசியத்தைப் பற்றி தாகூர் தனது கால பைரவன் என்ற புதினத்தில் குறிப்பிட்டுள்ளார். ஸ்டெம் செல் தொழில் நுட்பத்திலிருந்து ஆட்டோ மொபைல் தொழில் வரை  அனைத்துப் பெருமைகளும் வேதகால கண்டுபிடிப்பே என்று பறைசாற்றும் தீனானந்த் மித்ராவின் நூல்கள் பா.ஜ.க. ஆளும் குஜராத், அரி யானா மாநிலப் பள்ளிகளின் பாடநூல் களாகக் கற்பிக்கப்படுகின்றன. பள்ளிப் பாட நூல்களில் இருந்து தாகூரின் பாடத்தை நீக்குவது பற்றிய ஆலோ சனையும் அளிக்கப்பட்டுள்ளது. ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், இந்த மோடி பக்தர்கள் ரவீந்திரநாத் தாகூரையும் தேசத் துரோகியாக ஆக்கிவிடுவார்கள். அவ்வாறு நேர்ந்தால், மேற்கு வங்காளத் தில் அவர்கள் காண விரும்பும் காவிகளின் ஆட்சி பகற்கனவாகவே ஆகிவிடும்.

மோடி ஆட்சி அதிகாரத்துக்கு வந்து இப்போது மூன்று ஆண்டுகளாகிவிட்டன. வறட்டு ஜம்பம் பேசுவதை விட்டு விட்டு,  தனது கட்சியின் முன்னாள் பிரதமர் வாஜ்பேயி மோடிக்கு முன்னொரு முறை நினைவுபடுத்தியது போல,  அரசியல் நெறிகளை இப்போதிலிருந்தாவது  நரேந் திர மோடி பின்பற்றத் தொடங்கட்டும். நரேந்திர மோடி உண்மையான ஒரு  அரசியல் ஆளுமையாளராகஇருந்தால், தான் ஒரு அரசியல் கட்சியின் பிரதமர் அல்ல என்பதையும், இந்திய நாட்டின் பிரதமர் என்பதையும் அவர் இந்த நேரத்திலாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.

நன்றி: 'தி டெக்கான் கிரானிகிள்' 13-09-2017

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner