எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

-  சரவணா ராஜேந்திரன்

மிக மோசமான பொருளாதாரச் சூழலை எதிர்கொள்ள முடியாமலும், தனது தோல் வியை மறைக்கும் வித மாகவும் பிரதமர் மோடி தொடர்ந்து பொய்க்குமேல் பொய் களைக் கூறி வருகிறார். இது நாட்டிற்கு கேடாக முடியப் போகிறது! பிரதமர் மோடி கொடுத்த புள்ளி விவரங்கள் அனைத்தும் அவ ராகவே திரித்து கூறியவைகளாகும்.

"ஹப்போஸ்ட்" என்ற ஆங்கில பத்திரி கையில் பிரபல பொருளாதார ஆலோசகர் விவேக் கவுல்  விரிவாக ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

"நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலை யில் இருக்கிறது. இது குறித்து யாரும் கவலை அடையத் தேவையில்லை" என் மோடி பேசியுள்ளார். மோடி எப்போதும் தனது வார்த்தையை உண்மையாக்குவதற் குப் பல பொய்களை அள்ளிவீசுவார்.

அவர் வீசிய பொய் புள்ளி விவரங்கள்:

நிதி பற்றாகுறை குறைந்திருப்பது உண்மைதான். கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி தான் இதற்கு காரணம். 2014ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி  மோடி பிரதமராகப் பொறுப்பேற்றார். அப்போது ஒரு பேரல் விலை 108.1 டாலராக இருந்தது. இது கடந்த 4ஆம் தேதி அன்று 55 டாலராக குறைந்துள்ளது. அதிகபட்சமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பல காரணங் களால் எண்ணைய் விலை உயர்வதும், குறைவதும் இயல்பு. இதில் மோடியின் பங்களிப்பு எதுவும் இல்லை.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி விதிப்பை அதிகரித்து கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பயனை மத்திய அரசு நன்றாக பயன்படுத்திக் கொண்டுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு வருவாய் அதிகரித்து நிதி பற்றாகுறை குறைந் துள்ளது.  "2013-2014 ஆம் ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாகுறை நாட்டின் மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) -1.7 சதவீதமாக இருந்தது. 2016-2017ஆம் ஆண்டில் இது -0.7 சதவீதமாக குறைந்துள்ளது" என்று மோடி தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு கணக்கு பற்றாகுறை என்பது இறக்குமதியின் மதிப்பு மற்றும் ஏற்றுமதி யின் மொத்த மதிப்பு மற்றும் அந்நிய செலா வணியின் மொத்த வரவு ஆகிய வற்றை அடிப்படையாகக் கொண்டது. சாதாரண மாக சொல்ல வேண்டும் என் றால் ஏற்றுமதி மூலம் வெளியேறும் அளவு, இறக்குமதி மூலம் உள்ளே வந்த அளவு மற்றும் அந்நிய செலாவணியை கொண்டதாகும்

சில தகவல்களை குறிப்பிட வேண்டும் என்றால், நாட்டின் மொத்த உற்பத்தியில் இறக்குமதியின் பங்கு எதிர்மறையான கணக்கீட்டில் உள்ளது. இறக்குமதி குறைந் தால் மொத்த உற்பத்தி தாமாக அதி கரிக்கும். மோடி ஆட்சியில் எண்ணெய் இறக்குமதி குறைந்ததுதான் மொத்த உற்பத்தி அதி கரித்ததற்கு முக்கிய காரணம். மோடி பதவி ஏற்றபோது அந்நிய செலாவணி பரிமாற்ற கையிருப்பு சுமார் 60 பில்லியன் டாலராக இருந்தது. மன் மோகன் சிங் பிரதமராக இருந்தபோது இது சமநிலையில் இருந்தது.

இது தொடர்பாக மோடி வெளியிட்ட புள்ளிவிவரங்கள் 2011-2012ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்டது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த 2003-2004ஆம் ஆண்டு முதல் இந்த புள்ளி விவரங்கள் எடுக்கப் பட்டால் நிலை என்னவாக இருக்கும். 2004ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை அந்நிய செலாவணி கையிருப்பு 113 பில்லியன் டாலராகும். 2014ஆம் ஆண்டு மார்ச்சில் இது 304 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதன் மூலம் 10.4 சத வீதம் சாரசரியாக உயர்ந்துள்ளது.

2014 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2017 செப்டம்பர் வரை அந்நிய செலாவணி கையிருப்பு ஆண்டிற்கு 8.3 சதவீதம் மட்டுமே சராசரியாக வளர்ச்சி அடைந் துள்ளது. மன்மோகன் சிங் ஆட்சியில் அந்நிய செலாவணி கையிருப்பு மிக வேகமாக வளர்ந்துள்ளது. இதில் பெரும் பாலான ஆதாயம் முதல் 5 ஆண்டு கால ஆட்சியில் கிடைத்துள்ளது. 17.4 சதவீத அடிப்படையில் வளர்ச்சி இருந்துள்ளது. 2009-2014 ஆம் ஆண்டு காலகட்டத்தில் காங்கிரசு தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பொருளாதாரம் குழப்பமான சூழ்நிலை யில் இருந்துள்ளது. ஆண்டிற்கு 3.8 சதவீதம் என்ற அடிப்படையில் அந்நிய செலாவணி குறைந்துள்ளது. இதன் மூலம் மன்மோகன் சிங் திறமையாக செயல்பட்டுள்ளாரா? அல்லது மோடி திறமையாக செயல்பட்டுள் ளாரா? என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அரசு செலுத்தும் கடனுக் கான வட்டி 2013-2014ஆம் ஆண்டில் 8.45 சதவீதமாக இருந்தது. இது 2016-2017ஆம் ஆண்டில் 7.16 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த வீழ்ச்சிக்கு 2 காரணங்கள் உள்ளன. நிதி பற்றாகுறையின் வீழ்ச்சி நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்ப கடன் வாங்கும் அளவை குறைக்கும். கடன் வாங்குவது குறைந்தால் வட்டி விகிதம் குறையும்.

தற்போது நிதி பற்றாகுறை வீழ்ச்சி அடைந்திருப்பதற்கு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி விதிப்பை அதிகரித்து, எண்ணெய் விலை வீழ்ச்சியை முழுமை யாக கைப்பற்றிக் கொண்டதால் தான் கடன் வாங்கும் அளவு குறைந்துள்ளது என்பதை மறந்துவிடக் கூடாது.

பணமதிப்பிழப்புக்கு பின் ஒரு குறிப் பிட்ட அளவு பணம் வங்கியில் டெபாசிட் ஆகியுள்ளது. இது அரசாங்க பத்திரங் களில் மறுமுதலீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசு பத்திரங்கள் மீதான வட்டி விகிதம் குறைந்துள்ளது.

உணவு பணவீக்கம் எதிர்மறையான நிலையில் இருப்பதாக மோடி குறிப்பிட் டுள்ளார். இது நல்ல அறிகுறியா?. ஏன் உணவு பணவீக்கம் எதிர்மறையான நிலையில் இருக்கிறது?. இதற்கு விவசாயி களது உற்பத்திக்கு உரிய விலை கிடைக் காதது தான் காரணம். இதை ஒரு நிலை யாக வைத்துக் கொள்ளலாம்.

பணமதிப்பிழப்புக்கு பின் வேளாண் விநியோக தொடர் சங்கிலி முற்றிலும் நிலை குலைந்துள்ளது. இதனால் விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருட்களை அடிமட்ட விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

உணவு பொருள்களுக்கு விலை கிடைக்காததால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும் என்று ஒவ் வொரு மாநிலங்களிலும் போராட்டம் நடக்கிறது. இதை ஈடுகட்ட மாநில அரசுகள் வங்கிகளுக்கு ரூ. 2 லட்சம் கோடி வழங்கி யுள்ளன. இதுவும் நாட்டிற்கான செலவு தான். இதற்கு அடுத்ததாக நுகர்வோரின் வாங்கும் திறன் குறித்த சில புள்ளி விவரங் களை தெரிவித்துள்ளார். கார், டூவீலர் விற்பனை, டிராக்டர் விற் பனை ஆகியவை கடந்த ஜூன் முதல் விற்பனை அதிகரித் துள்ளன. இதனால் அனைத்தும் நன்றாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். எண்ணெய், தங்கம், வெள்ளி அல்லாத பொருள்களின் இறக்குமதி பண மதிப் பிழப்புக்கு பின் அதிகரித்துள்ளன என்பதை பிரதமர் சொல்ல வில்லை. இறக்குமதி என்பது நுகர்வோரின் தேவையை பொருத் தது. இந்த தேவை மொத்த உற்பத்திக்கு பயனளிக்காது. உதாரணமாக ஒரு இந்தியன் ஒவ்வொரு முறையும் சீனாவின் எலெக்ட் ரானிக் பொருளை வாங்கினால், அது நுகர்வோரின் தேவை தொடர்பானது. இது மொத்த உற்பத்தியில் சேராது. இது சீனா வின் மொத்த உற்பத்தியில்தான் சேரும். ஏற்றுமதி என்பது மட்டுமே மொத்த உற்பத்திக்கு ஆதாயமாக இருக்கும்.

எண்ணெய், தங்கம், வெள்ளி ஆகிய வற்றை மொத்த இறக்குமதி பட்டியலில் இருந்து எடுத்துவிட்டால் என்ன மீதம் இருக்குமோ அதுதான் நுகர்வோரின் தேவையை சுட்டிக் காட்டும். 2016 ஆம் ஆண்டு அக்டோபருக்குப் பின் எண் ணெய், தங்கம், வெள்ளி அல்லாத பொருள் களின் இறக்குமதி வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த வேகம் உள்ளது. அப்படி என்றால், இங்கே என்ன நடக்கிறது?

பண மதிப்பிழப்பு உள்நாட்டு விநி யோக தொடர் சங்கிலியை நிலை குலை யச் செய்துள்ளது. இந்த தொடர் சங்கிலி இல்லை என்றால் பொருட்கள் நகராது. இந்த இடைவெளியை இறக்குமதி பொருட்கள் நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. அதோடு இந்திய அளிவிலும் விநியோக தொடர் சங்கிலி அழிந்துவிட்டது. இதனால் பெரிய அளவில் வேலை இழப்பு கள் ஏற்பட்டுள்ளன. சரக்குகள் நகரவில்லை என்றால் மேற்கொண்டு உற்பத்தி செய் வதில் என்ன பயன்? இதனால் பல நிறு வனங்கள் மூடப்பட்டுள்ளன. பெரிய அளவில் வேலை இழப்புகளும் ஏற்பட்டுள் ளன. ஏற்கனவே இந்தியாவில் உற்பத்தி செய்த பொருட்களையும் தற்போது இறக்கு மதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. வெளி நாட்டில் இருக்கும் தயாரிப்பு தொழிலுக்கு நாம் உதவி செய்து வருகிறோம். அங்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவும் நாம் உதவி செய்கிறோம்.

மோடி மறைத்த உண்மைகள்!

* கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை யிலான வங்கிகள் வழங்கும் கடன் அளவு சுருங்கியுள்ளது. சில்லரை கடன்கள் மட் டுமே வளர்ச்சி அடைந் துள்ளது. தொழிற் சாலை, விவசாயம் மற்றும் சேவைகளுக் கான கடன் வழங்குவது சுருங்கியுள்ளது. இதனால் வட்டி வகிதமும் வீழ்ச்சி அடைந் துள்ளது. இதன் மூலம் பொருளாதாரத்தின் பெரிய பிரிவு நல்ல நிலையில் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகிறது. அவர்கள் கடன் பெறவும் தயாராக இல்லை. இது நல்ல தல்ல.

* கடந்த மார்ச் 31ஆம் தேதி வரை 27 பொதுத்துறை வங்கிகளில் 22 இல் வராக் கடன் அளவு 10 சதவீதத்திற்கு மேல் அதி கரித்துள்ளது. அப்படி என்றால் இந்த வங் கிகள் கொடுத்த ஒவ்வொரு 100 ரூபாய் கடனுக்கும் 10 ரூபாய்க்கு மேல் திரும்பி வரவில்லை.இதில் 5 வங்கிகளின் வராக் கடன் 20 சதவீதத்துக்கு மேல் உள் ளது. இந்த வங்கிகள் வழங்கிய 5இல் ஒரு பங்கு கடன் வராக்கடனாக உள்ளது. இந்த விதமான பிரச்சினைகள் மட்டுமே மோடி ஆட்சியில் வளர்ச்சி அடைந் துள்ளது. இதன் மீது தான் மோடியும், அவரது அரசும் உட்கார்ந்து கொண்டு முந்தைய அரசை குறை கூறிக் கொண்டிருக் கின்றனர்.

* கறுப்பு பணம் மீதான தாக்குதலானது ரியல் எஸ்டேட் விலையில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விலை உயரவில்லை என்பது வீழ்ச்சி கிடையாது. வீடு என்பது பெரும்பாலான மக்களுக்கு இன்னும் எட்டாக் கனியாகத் தான் உள்ளது.

* பணமதிப்பிழப்பு மற்றும் தவறாக அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி ஆகியவை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை எவ் வாறு பாதித்துள்ளன என்பது குறித்த பேச்சு இல்லை. இந்த நிறுவனங்கள் செயல்பட வில்லை என்றால் எப்படி நாட்டில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்? இந்த துறையில் மட்டும் ஆண்டுதோறும் ஒரு மில்லியன் இந்தியர்கள் வேலைக்காக நுழைந்து வந்த னர். இந்த மக்களுக்கு தற்போது வேலை எங்கே?

* நமது ஆரம்ப கல்வி முறை தொடர்ந்து குழப்ப நிலையிலேயே இருக்கிறது. பெரும் பாலான குழந்தைகள் எழுத, படிக்க தெரி யாமலும், அடிப்படை கணக்கு தெரியாத நிலையிலும் உள்ளனர். மோடி பதவியேற்று 40 மாதங்கள் முடிந்து விட்ட நிலையிலும், இந்த அவல நிலையை போக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

* அரசு சாராத மொத்த உற்பத்தி 4.3 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. நாட் டின் பொருளாதாரத்தில் இதன் பங்களிப்பு 90 சதவீதமாகும்.

* பொது தொழிற்சாலைகள், உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையும் கடந்த 5 ஆண்டுகளாக குறைந்து காணப்படுகின் றன. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை உற்பத்தி தொழிற்சாலைகளின் வளர்ச்சி 1.17 சதவீதம் மட்டுமே. கட்டுமானத் துறை 2 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள் ளது. இந்த இரு துறைகளும் இணைந்து 82 முதல் 85 சதவீதம் வரையிலான பங் களிப்பை அளிக்கிறது. முக்கிய 2 துறை களுமே தற்போது தள்ளாட்டத்தில் இருந் தால் எப்படி வேலை வாய்ப்பு உருவாகும்?

நாட்டின் பொருளாதார நிலை குறித்து விளக்கவேண்டும் என்றால் நேரமும், இடமும் போதாது. அனைத்து சமயங்களி லும் புத்திசாலித்தனமாக இருக்க முயற்சி செய்வதை விட்டுவிட்டு பிரச்சினைகளை கண்டறிந்து செயலாற்றும் வரை நாடு எதை நோக்கியும் செல்ல முடியாது. முதலில் பிரச்சினைகளை தீர்க்க நட வடிக்கை எடுத்தாலே விடிவு பிறந்துவிடும். பொரு ளாதாரம் தற்போது மோசமான நிலையில் உள்ளது. இதை உணர்ந்து அதை எதிர் கொள்ள அரசு பணியாற்ற வேண்டும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner