எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

மாநில செயலாளர்,

திராவிடர் மாணவர் கழகம்

(‘புதிய தலைமுறை' (அக்.5, 2017) இதழில் வெளிவந்த பள்ளிகளில் கட்டாய  யோகா குறித்த கட்டுரையின் முழு வடிவம்)

மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு வந்ததிலிருந்தே யோகாவை அனைத்து இடங்களிலும் கொண்டுவந்துவிட வேண்டும் என் பதில் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது. உலக அரங்கில் யோகாவுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகச் சொல்லி ஆர்.எஸ்.எஸ்.சின் நிறுவனத் தலைவரான (சர்சங்சாலக்) ஹெட்கேவர் நினைவுநாளை உலக யோகா நாள் என்று அறிவித்தது. அதற்கென பெரும் நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் செய்யப் பட்டு பிரதமர் மோடி முதல் கடைக்கோடி சங் பரிவார் சேவக்குகள் வரை குதூ கலமாகக் கொண்டாடினார்கள் அரசுப் பணத்தில்!

மன அமைதி, வாழும் கலை என்று யோகாவைக் கற்றுக் கொடுப்பவர்கள் தான் மத்திய பா.ஜ.க. அரசால் ‘போஷித்து’ வளர்க்கப்படும் இன்றைய ‘மாடர்ன் குரு’க்கள். அவர்களின் வியாபாரத்திற்கும், இயற்கை வளங்கள் அழிப்புக்கும் மத்திய அரசு எப்படி வசதி செய்து கொடுக்கிறது என்பதையும் இந்த மூன்றாண்டு காலத்தில் பார்த்து வருகிறோம். இந்தப் பின்புலத்தில் தான் அனைத்துப் பள்ளிகளிலும் யோகா கட்டாயம் என்ற தமிழ்நாடு முதல மைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பைப் பார்க்க வேண்டியிருக் கிறது.

ஏனெனில், கல்வித் துறையை முற் றிலும் தங்கள் காவிச் சிந்தனைகளை விதைக்கும் கூடமாக மாற்றும் முயற்சி தொடக்கம் முதலே ஆர்.எஸ்.எஸ்.சால் செய்யப்பட்டுவருகிறது. புதிய கல்விக் கொள்கை, குரு உத்சவ், யோகா நாள், பாடத் திட்டங்களில் மதக் கருத்துகள் - வரலாற்றுப் புரட்டுகள் திணிப்பு, இந்தி- சமஸ்கிருதத் திணிப்பு, ஆசிரமங் களுடன் பள்ளிகளை இணைக்க நட வடிக்கை என்று கவனம் செலுத்திவரும் வரிசையில், ஆட்சிக்கு வந்த தொடக் கத்திலேயே என்.எஸ்.எஸ், ஸ்கவுட் போன்ற அமைப்புகளை தங்களின் ஷாகா பயிற்சியாக்கும் முயற்சியையும் அவர்கள் தொடங்கினார்கள். அதன் நீட்சியாகத் தான் தமிழ்நாடு சாரணர் இயக்கத்தின் தலைவர் பதவிக்கு ஹெச்.ராஜா போட்டியிட்டதைப் பார்க்க வேண்டும்.

இப்படியான தொடர் முயற்சிகளின் இன்னொரு பரிணாமம் தான் பள்ளி களில் யோகா கட்டாயம் என்னும் அறிவிப்பு. பள்ளிகளில் ஷாகா கட்டா யம் என்றால் எதிர்ப்பு வரும் என்பதால் தான், அதற்கு இனிப்புப் பூச்சுப் பூசி யோகா கட்டாயம் என்று அறிவித்திருக் கிறது மத்திய அரசின் கைப் பாவையாக செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி அரசு.

சமூக, அரசியல் ரீதியாக நாம் இதனை எதிர்கொள்வது ஒருபுறம் என்றால், அறிவியல், தனிமனித உரிமை,  ஒழுக்கம் சார்ந்தும் யோகா என்பது அவசியமானதா என்னும் கேள்வியை எழுப்பியும் நாம் விடைகாண வேண் டும். யோகாவை சர்வரோக நிவாரணி யாகக் காட்ட முயன்று, அதனை மாற்று மருத்துவத்தில் ஒன்றாக (கிசீஹிஷிபி என் பதில் சீ - யோகாவைக் குறிப்பதாகும்) முன்னிறுத்துகிறார்கள். அதை அறிவி யல் ஏற்காது. மூச்சுப் பயிற்சி, ஆச னங்கள் போன்றவை உடற்பயிற்சியுடன் சார்ந்தவை. யோகாவினால் நோய்கள் குணமாகும் என்பது ஏமாற்று வேலையே! அதன் சாத்தியங்கள் கடு மையான உடல்வருத்தும், உடற்பயிற்சி செய்ய இயலாதோருக்கான உடற்பயிற்சி என்ற அளவிலேயே!

யோகாவைத் தியானத்துடன் இணைத்தும் பல இடங்களில் பேசுகி றார்கள்; அப்படித்தான் கற்பிக்கிறார்கள். யோகாவின் சூரிய நமஸ்காரம் போன்ற ஆசனங்கள் பிற நம்பிக்கையாளர்களா லும், பகுத்தறிவாளர்களாலும் ஏற்கப்பட முடியாத ஒன்று. இது தனிமனித உரிமை சார்ந்தது. கட்டாயப்படுத்துகின்ற எது வொன்றும் தனிமனிதத் தேர்வுக்கு எதிரானதே!

யோகா தனி மனித ஒழுக்கத்தையும் கற்பிப்பதில்லை என்பதை சிறைக்குப் போகும் சாமியார்களின் எண்ணிக்கை யும், யோகா கற்றுத் தருவதாகச் சொல்லி பிரஞ்சுப் பெண் மீதான பாலியல் சீண்டல் குற்றச்சாட்டில் கைதாகியிருக் கும் யோகா ஆசிரியர் வரை வரும் செய்திகளும் நிரூபிக்கும்.

யோகா பயிற்றுநர்கள் என்ற பெயரில் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவாரத்தினர் நியமிக்கப்படுவர். பள் ளிக்கூடங்கள் பஜனை மடங்களாகும். பிஞ்சு மனதிலேயே மதவாத நஞ்சு விதைக்கப்படுவதற்கான மூல ஏற்பாடே இது என்பதால் தான் மதச் சார்பற்ற வர்கள், கல்வியாளர்கள் இதை எதிர்க் கின்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner