எழுத்துரு அளவு Larger Font Smaller Font


தீபாவளி என்பது சிறிய சிறிய அணுகுண்டுகளைப் போட்டு சிறுகச்சிறுக உலகை அழிக்கும் வல்லமை கொண்ட பட்டாசுகளை வெடிக்கும் விழா!

மனிதர்களுக்கே ஒவ்வாத ஓசையைத் தரும் பட்டாசு

மனிதர்கள் தினசரி கேட்கும் ஓசையின் அளவு சராசரியாக 30 டெஸிபல். மனிதனால் 60 டெசிபல் வரை செவி களுக்கு பாதிப்பு ஏற்படாமல் கேட்க முடியும். பறவைகள் மற்றும் விலங்கு களில் கேட்கும் ஓசையின் ஒலி அளவு (டெசிபல்) இதைவிட குறைவாக இருக்கும்.

வெடித்துக் கரியாக்கும் பட்டாசின் ஒலி அளவு 80 முதல் 130 - சில வகை பட்டாசுகளில் சட்டவிரோதமாக 140 டெசிபல் கூட ஒலி அளவு இருக்கும், 125-டெசிபலுக்கு மேல் ஓசை இருக்கும் பட்டாசுகளைத் தயாரிப்பது சட்ட விரோதம். ஆனால் இதெல்லாம் யாரும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.

அபாயகரமான வேதிப்போருள்

பட்டாசில் உள்ள வேதிப்பொருட்கள் பட்டியல்: பொட்டாசியம், பாஸ்பரஸ், சல்பர், துத்தநாகம், ஆண்டிமோனி சல்பைடு, காட்மியம் காரீயம், நைட்ரேட், ஆர்செனிக், பேரியம், காப்பர் ஆக்சைடு காம்பவுண்ட், அலுமினியம் காம்பவுண்ட், ஹெக்சாகுளோரோபென்சின், நைட்ரஜன்டை ஆக்சைட், லித்தியம் காம்பவுண்ட், சோடியம், அலுமினியம் பவுடர், மேக்னீசியம் பவுடர், அயர்ன் பவுடர், பொட்டாசியம் நைட்ரேட், பொட் டாசியம் பெர்குலோரெட், ஸ்ட்ரோன் ஷியம் நைட்ரேட், பொட்டாசியம் குளாரேட். இந்த 21 வேதிப் பொருள்கள் ஒரே நேரத்தில் காற்று நீர்  மண்ணில் கலந்து பேராபத்தை உண்டுசெய்கிறது.

நீர்: பட்டாசு வெடித்தபின் அதன் கழிவுகள் நீரில் கலந்து செல்லும் இட மெல்லாம் சின்னாப்பின்னம் ஆக்கிவிடும். நீர்நிலைகளில் உள்ள உயிரினங்கள் அழிக்கப்படுகின்றன. நச்சுக்கள் நிலத்தடி நீரில் கலந்து நிலத்தடிநீர் மாசுபடுகிறது.

நிலம்: பட்டாசின் கழிவுகளை நிலத்தில் கொட்டுவதன் மூலம் நிலம் ஊறும் உயிர்கள் மற்றும் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள்  அழித்தொழிக்கப்படுகின்றன. இதன் மூலம் விவசாயம் பாதிக்கப்படுகிறது, மட்கும் குப்பையை கூட மக்க வைக்க முடியாத அளவிற்கு மண் மலடாகிறது.

நெருப்பு: பட்டாசு வெடிக்கும் போது உண்டாகும் வெப்ப மிகுதியால் சுற்றுச் சூழலின் தட்பவெட்ப நிலையில் மாற்றம் ஏற்பட்டு பாதிப்பு உண்டாகிறது.

காற்று: பட்டாசில் இருந்து வெளிப்படும் புகை மற்றும் இதன் கழிவுகளை எரிக்கும் போது ஏற்படும் புகையால் காற்று மண்டலம் மாசுபடுகிறது. இதன் மூலம் பறக்கும் இனங்களை இனப்படுகொலை செய்கிறோம்.

வானம்: 21 நச்சு இரசாயனங்கள் வளி மண்டலத்தில் நைட்ரஜன் ஆக்ஸைட், சல்பர் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக் ஸைடு போன்ற நச்சு வாயுக்களை  மிக அதிக அளவு உமிழ்கின்றன. இதனால் புவி வெப்பமயமாதல்,  ஓசோன் மண்டல ஓட்டை போன்ற பேராபத்து நிகழ்கின்றன.

பட்டாசால் மனிதனுக்கு ஏற்படும் பேராபத்துக்கள்.

கருவில் உள்ள குழந்தைகளை பாதிக் கும் நோய், காது கேளாமை, சளி, இருமல், தும்மல், ஆஸ்துமா, மூச்சுத்தினறல், நுரையீரல் புற்றுநோய், சொரியாஸிஸ், கண் பார்வை பாதிப்பு, தைராய்டு, மூளை செயல்பாடு பாதிப்பு, அனீமியா, சிறுநீரக கோளாறு, கல்லீரல் பாதிப்பு, வாந்தி, தலைவலி, வயிறுக் கோளாறுகள், சைனஸ், மூக்கு, தொண்டை பாதிப்பு, இரத்த அழுத்தம், மாரடைப்பு, தூக்கமின்மை, குழந்தையின்மை, புற்று நோய் போன்றவை பட்டாசுகளால் ஏற்படும் பேராபத்துகளாகும்.

இதர உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்பு

பறவையின் கரு கலைக்கப்படுகிறது. பறவை இனங்கள் இனப்படுகொலை செய்யப்படுகிறது. நிலஊர்வன உயிர்கள் அழிக்கப்படுகிறது. நிலத்தில் வாழும் பிற உயிர்கள் அழிக்கப்படுகிறது. நீர்நிலை உயிர்கள் அழிக்கப்படுகிறது ஒரு நாட்டின் வளமே பல்லுயிர்களால் தான் கட்டமைக் கப்படுகிறது. பல்லுயிர்களை அழித்து விட்டு நாடு எப்படி வளமாகும்.

இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் தீபாவளியை பட்டாசு வெடித்துக் கொண் டாட வேண்டுமா?

சிந்தித்துப் பாருங்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner