எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- அஸ்கார் படேல்

சில நாள்களுக்கு முன்னர், செய்தித்துறை சேவைக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அற்புதமான என்.டி. தொலைக்காட்சி நிறுவனத்தின் தோற்றுநர் பிரனாய் ராயுடன், பல செய்திகளைப் பற்றி நான் பேசிக் கொண்டிருந்தபோது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட அரசியல்வாதியைப் பற்றி குறிப்பிட்டுப் பேசினார்.  சகித்துக் கொள்ள முடியாத ஆணவம் படைத்தவர் அவர் என்பதை நாங்கள் இருவரும் ஒப்புக் கொண்டோம்.

அந்த ஆணவத்தின் பெரும் பகுதி இப்போது பா.ஜ.கட்சிக்கு வந்துவிட்டது என்பதை நம்மால் காண முடிகிறது. முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும், இன்றைய நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் ஒருவர்மீது ஒருவர் மேற்கொண்ட தாக் குதல்களில் இருந்து இது வெளிப்பட்டது.அவர்கள் எதனைப் பற்றி பேசினார்கள் என்பது பற்றி கவலைப் படாமல் இதற்காக இருவர் மீதும் குறை கூறலாம்.

பிரதமர் நான்கு இலாக்காக்களை ஒதுக்கிக் கொடுக்கும் அளவுக்கு சூப்பர் மேனாக கருதப்பட்ட அருண்ஜெட்லி, நிதி அமைச்சராகத் தனது கடமையில் இருந்து தவறிவிட்டார் என்று காட்டமான கட்டுரை ஒன்றை பத்திரிகையில் யஷ்வந்த் சின்ஹா எழுதி யதில் இருந்து இந்த சொற்போர் தொடங்கியது. மோடியின் அரசு கைவிட்டுவிட்ட, ஜி.டி.பி. கணக் கிடும் முறையின்படி, நடப்பு காலாண்டுக்கான ஜி.டி.பி.யின் வளர்ச்சி 3.7 சதவிகிதம் மட்டுமே என்ற திடுக்கிடச் செய்யும் வாதத்தை முன்வைத்த சின்ஹா பொருளாதாரத் துறையில் நிலவும் பல் வேறு பிரச்சினைகளைப் பட்டியலிட்டிருந்தார். கீழ்க் கண்ட சொற்களுடன் அக் கட்டுரையை சின்ஹா முடித்திருந்தார்.

‘‘வறுமையைத் தான் மிகவும் நெருங்கிய நிலையில் சந்தித்து இருப்பதாக பிரதமர் மோடி பெருமைப்பட்டுக் கொள்கிறார். அதே போல அனைத்து இந்திய மக் களும் வறுமையை மிகமிக நெருக்கமாக சந்திக்கச் செய்யப்பட வேண்டும் என்பதற்காக அவரது நிதி அமைச்சர் அதிக நேரம் வேலை செய்கிறார்.''

சின்ஹா கூறியதுபற்றி எனக்குள்ள ஒரு கருத் தைப் பற்றி பின்னர் யோசிப்போம். இப்போது இதற்கு அருண் ஜெட்லி என்ன பதிலளித்தார் என்பதைப் பார்ப்போம். தனது 80 ஆவது வயதில் சின்ஹா வேலை தேடிக்கொண்டிருக்கிறார் என்று கூறிய அருண் ஜெட்லி,  சின்ஹா நிதியமைச்சராக இருந்தபோது, அவரது செயல்பாடுகளும்கூட ஒன்றும் சிறப்பாக இருந்துவிடவில்லை என்றும், 1998-2002 ஆண்டுகளில் சின்ஹா நினைத்தவை எல்லாம் எவ்வாறு தவறாக ஆகிப்போயின என்றும் பட்டியலிட்டுக் காட்டியிருந்தார்.

ஆட்களைப்பற்றி மட்டுமே பேசிவிட்டு, பிரச்சி னைகள் பற்றி பேசாமல் விட்டுவிடுவதுதான் மிக எளிதாகச் செய்யப்படுகிறது  என்பதால், பிரச்சினைகள் மீது மட்டுமே தாக்குதல் மேற்கொள்ளவேண்டும்; தனிப்பட்ட நபர்கள் மீது மேற்கொள்ளக்கூடாது என்று எல்.கே.அத்வானி கூறிய அறிவுரையைக் குறிப்பிட்டு அருண்ஜெட்லி பேசினார்.

அத்வானியிடம் இருந்து ஜெட்லி எதையுமே கற்றுக் கொள்ளவில்லை என்று சின்ஹா கூறியதுபற்றி நான் அதிர்ச்சி அடைந்தேன். வேலை தேடித் திரியும் வயதானவர் என்று சின்ஹா என்ற தனிப்பட்ட நபரைத் தாக்கியே அருண் ஜெட்லி பேசியுள்ளார். அருண் ஜெட்லி என்ன செய்திருக்க வேண்டும் என்றால்,  சின்ஹாவுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று விரும்பியிருந்தால், சின்ஹா பட்டியலிட்ட பிரச்சினைகளுக்கு அருண் ஜெட்லி பதிலளித்திருக்க வேண்டும். அருண் ஜெட்லியின் கண்காணிப்பில் தொடர்ந்து ஆறு காலாண்டுகளாக ஜி.டி.பி.யின் வளர்ச்சி வீழ்ச்சி அடைந்துள்ளது என்பது உண்மை அல்லவா? அதற்கு ஒரு நல்ல காரணமும் இருந்திருக்க  கூடும்; அவ்வாறு இருந்தால் அதனை விளக்கிக் கூறியிருக்க வேண்டிய பொறுப்பு ஜெட்லிக்கு உள்ளது. பழைய கணக்கீட்டு முறைப்படி, நடப்புக் காலாண்டின் ஜி.டி.பி. வளர்ச்சி 3.7 சதவிகிதம் என்று சின்ஹா கூறுவது சரி என்று நான் கருதவில்லை.  ஜெட்லியால் எழுப்ப இயன்ற  ஒரு நல்ல பிரச்சினையாக இது இருந்திருக்கும். பழைய முறை கணக்கீட்டின் படி நமது ஜி.டி.பி. வளர்ச்சி குறைந்துள்ளது என்றாலும், அது 5 சதவிகிதமாக இருக்கிறது, 3.7 சதவிகிதமாக இல்லை என்பதை அமெரிக்க வங்கி போன்ற மற்றவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஆனால், அதற்கு பதிலாக சின்ஹாவைப் பற்றி பேசுவதற்கு அவர் தேர்ந்தெடுத்தவை தேவையற்றதும் பொருத்தமற்றதுமாகும். சின்ஹாவைப் பொருத்தவரை, பிரச்சினையை அவர் வெளிப்படுத்திய விதம் நாகரிகமாக இல்லை என்றே நான் நினைக்கிறேன். ஜெட்லி மீதான அவரது தாக்குதல், மோடி அரசால் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான கொள்கை முடிவுகளில் பிரதமருக்கு உள்ள பொறுப்பை நீக்கி விட்டது என்பதையே காட்டுகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை அருண் ஜெட்லி மேற்கொண்ட முடிவு அல்ல என்பதையும்,  கடைசி நேரத்தில்தான் அவ ருக்கு அது தெரிவிக்கப்பட்டது என்பதையும் அதிகார பூர்வமாக நான் அறிவேன். சின்ஹாவும் அதனை அறிந்திருப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். பிரதமரின் பங்களிப்பு இன்றி ஒரு நிதியமைச்சரின் செயல்பாடுகளைப் பற்றி கண்டித்து எழுதுவது முன்யோசனையுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய செயலாகும். அதற்கு சின்ஹாவின் வழியிலேயே, பிரதமரைப் பற்றி குறிப்பிடாமல்  ஜெட்லி பதிலளித்திருப்பது ஏன் என்பதை அறிந்து கொள்வது எளிதானதே.

இதன் மூலம் நான் முக்கியமாகக் குறிப்பிட விரும் புவது இதுதான். தங்களது செயல்பாடுகளுக்காக, பொது மக்களுக்கு ஆகட்டும், தங்கள் கட்சிக்காரர்களுக்கே கூட ஆகட்டும்,  எந்தவித விளக்கம் அளிக்கும் பொறுப்பும் தங்களுக்கு இல்லை என்பது போலவே நமது அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் நீண்ட காலமாகவே கருதி, நடந்து கொண்டு வந்துள்ளனர். அது மாற்றப்பட வேண்டும். உலகெங்கும் உள்ள மக்களைப் போலவே இந்தியர்களாலும் உண்மைகளைக் கண்டு புரிந்து கொள்ள முடியும். அதில் ஏதேனும் ஒரு சின்ன சிக்கல் இருந்தாலும், அதனையும் நம்மால் அறிந்து கொள்ள முடியும். ஒருவருக்கு 80 வயது ஆகிவிட்டது என்ற காரணத்தினால்  அவரது விமர்சனத்தை பரி சீலனைக்கு எடுத்துக் கொள்ளாமல் ஒதுக்கிவிட வேண்டும் என்று நம்மிடம் கூறப்படுவது, நம்மை அவமானப்படுத்துவது ஆகும். பொது வாழ்வில் ஒரு பிரச்சினையில் பதில் அளிப்பதில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒரே விஷயம் அப்பிரச்சினையைப் பற்றிய உண்மைகள்தான்.

சின்ஹாவும் ஜெட்லியும் செய்ததுபோல, ஆணவத்தையோ, விருப்பு- வெறுப்பு, பகை உணர்வையோ வெளிப்படுத்த வேண்டிய தேவையே இல்லை.

நன்றி: ‘‘தி டெக்கான் கிரானிகிள்'', 02.10.2017

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner