எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

 

(பொறுப்பற்ற, பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்காத,கண்மூடித்தனமானகொள் கைகளின்விளைவால்நாட்டைஎதிர் கொண்டிருக்கும் மிகப் பெரிய அளவிலான பொருளாதார நெருக்கடி, மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. வையும், ஒட்டு மொத்த சங் பரிவாரத்தையும் நிலை குலையச் செய்துள்ளது.)

‘‘ஆட்சியாளர்களின் தவறுகள் வெளியே தெரியாத வண்ணம் தங்களது ஆட்சிக் கப்பலை  அமைதியாக மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் ஓட்டிக் கொண்டிருந்த காலம் முடிவுக்கு வந்துவிட்டது. அதனை சரி செய்வதற்கான நடைமுறைகளை மேற்கொண்டு, அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியது தவிர்க்க முடியாததாக ஆகிவிட்டது’’ என்பதுதான், விஜயதசமி அன்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆற்றிய உரையைப் பகுத்தாய்வு செய்த ஆர்.எஸ்.எஸ்., ஆசிரியர்களிள் இணைப்பு அமைப்பான அகில பாரதிய ராஷ்டிரிய ஷைக்ஷிக் மகா சங்கைச் சேர்ந்த, வாரணாசியைச் சேர்ந்த சங்பரிவார் தொண்டர்களின் கூட்டம் ஒன் றில் மிகமுக்கியமாகப் பேசப்பட்ட விஷயமாகும். மதுராவில்செப்டம்பர்மாதத்தொடக்கத்தில்நடை பெற்ற 40-க்கும் மேற்பட்ட சங் பரிவார் அமைப்பு களின் ஒத்துழைப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய போது மோகன் பகவத் அளித்திருந்த எச்சரிக்கைக் குறிப்புகளின் தொடர்ச்சி போன்றே அவரது பேச்சின் தொனியும், முக்கிய கருத்தும் அமைந்திருப்பது தெளி வாகத் தெரிவதாகவே உள்ளது என்று அவர்களில்  பலர் கருதுகின்றனர்.  வாஜ்பேயி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2004 மக்களவைத் தேர்தலில்  தோல்வி அடைந்தது போன்ற தோல்வியை 2019 மக்களவைத் தேர்தலிலும் அடைந்துவிடாமல் எச்சரிக்கையாக இருக்கும்படி பா.ஜ. கட்சியை, ஆர்.எஸ்.எஸ். தலைமை எச்சரித்து உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தியா ஒளிர்கிறது என்ற 2004 மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாமல் சென்றதால்,  வாஜ்பேயி அரசு தேர்தலில் அதிர்ச்சி அளிக்கும் அளவில் தோல்வி அடைந்தது பற்றி மதுராவில் நடந்த கூட்டத்தில் திரும்பத் திரும்பச் சுட்டிக் காட்டப்பட்ட நிலையில்,   சில குறிப்பிட்ட பிரச்சினைகளில் அரசின் செயல்பாடுகள் போதுமான அளவில் இல்லாதது பற்றி மோகன் பகவத் வெளிப்படையாகவே பேசினார்.

லஞ்சம் ஊழலை ஒழிக்கவும், நாடு விரைவான முன்னேற்றம் பெறவும் சில துணிவான நடவடிக்கை களை மோடி அரசு மேற்கொண்டது என்ற போதிலும், நாட்டின் பன்முகத் தன்மையையும், பல்வேறுபட்ட தேவைகளையும் நிறைவு செய்வதற்கான ஒருங் கிணைந்த தூய்மையான கொள்கை ஒன்றை அரசு பின்பற்ற வேண்டும் என்ற தேவை அதிக அளவில் உணரப்பட்டுள்ளது என்று மோகன் பகவத் கூறினார்.

தொழில் துறை, வர்த்தகத் துறை, விவசாயத்துறை, சுற்றுச்சூழல் துறை ஆகியவற்றின் தேவைகளை நிறைவு செய்வதாகவும், அதே நேரத்தில் பெரிய, நடுத்தர, குறுந்தொழில்கள் முதற்கொண்டு சில்லறை வியாபாரிகள், விவசாயிகள், நிலமற்ற விவசாயக் கூலிகள் வரையிலானவர்களின்  நலன்களைப் பாதுகாப்பதாகவும் இந்த தூய்மையான கொள்கை இருக்க வேண்டும் என்பதையும் பகவத் சுட்டிக் காட்டியுள்ளார். தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள உலக அளவிலான கொள்கைகளும், தரங்களும்  தவறானவையாகவும்,செயற்கைத்தன்மைகொண் டவையாகவும்,  வளமை என்னும் பொய்யானத் தோற் றத்தை உருவாக்குவதாகவும், ஒழுக்கம், சுற்றுச்சூழல், வேலை வாய்ப்பு, சுயசார்பு ஆகியவற்றைச் சீர்குலைப் பதாகவும் இருந்தபோதிலும், அக்கொள்கைகளைப் பின்பற்றி நடக்க வேண்டி இருக்கும் கட்டாயத்தை ஓரளவுக்குப்புரிந்துகொள்ளஇயலும்.ஆனாலும், இத்தகையகொள்கைகள்,தரங்கள்அனைத்தை யும்பற்றியமறுபரிசீலனைசெய்யப்படவேண்டும் என்பதும், அந்தந்த நாட்டுக்கும் ஏற்ற, பொருத்த மான முன்னேற்றத்திற்கான மாதிரித் திட்டங்கள் உருவாக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்பதும் உலகம் முழுவதிலும் உணர்ந்து ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.  அதே பழைய பொருளாதாரக் கோட் பாடுகளில் இருந்து நமது நிதி ஆயோக் மற்றும் அரசின் பொருளாதார ஆலோசகர்கள் வெளியே வந்து,  நமது நாட்டில் நிலவும் உண்மையான கள நிலவரத்தின் அடிப்படையில் இன்றுவரை  பெற்றுள்ள பொருளாதார அனுபவங்களை ஒருங்கிணைத்து ஒரு புதிய கொள்கையை உருவாக்கிப் பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமானது.

இவ்வாறு அரசின் கொள்கைகள், நிதிஆயோக் போன்ற  அமைப்புகளைப் பற்றி நேரடியாக பகவத் குறிப்பிட்டிருப்பது அரிதான செயல் என்ற வாரணாசி சங்பரிவார் தொண்டர்களின் கருத்தை நாட்டின் இதர பகுதிகளில் உள்ள சங் பரிவார் தொண்டர்களும் பகிர்ந்து கொள்கின்றனர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டத்தில்  நவராத்திரி விழாக்கள் மிகப் பெரிய முக்கியத்துவத்தைப் பெற்றவையாகும்.  ஆர்.எஸ்.எஸ்.சின் நாக்பூர் தலைமையிடத்தில் முதல் ஒன்பது நாட்கள் இரவும், பகலும் கொண்டாட்டங்களும், சடங்குகளும் மேற்கொள்ளப்படும். அதுவரை கடந்தாண்டில் அமைப்பு செயல்பட்டதைப் பற்றி அப்போது பகுத்தாய்வு மேற்கொள்ளப்படும். பத் தாம் நாளான விஜயதசமி அன்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஆற்றும் உரை அமைப்பின் எதிர்கால செயல்திட்டத்தைச் சுட்டிக் காட்டுவதாக இருக்கும். அமைப்பின் செயல்பாடுகள் பற்றிய மதிப்பீட்டில், சங்பரிவார் அமைப்புகளின் பல்வேறுபட்ட செயல் பாடுகளும், தேர்தல் அரசியலில் நேரடியாக ஈடு பட்டுள்ள  பா.ஜ.க.வின் தமையிலான அரசுகளின் செயல்பாடுகளும்  இடம் பெற்றிருக்கும். கடந்த மூன்று ஆண்டு கால மோடி ஆட்சியைப் பற்றிய அது போன்ற மதிப்பீடுகளும் மேற்கொள்ளப் பட்டன. ஆனால் இந்த ஆண்டு மோகன் பகவத் இது போன்று நேரிடையாகப் பேசி இருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்துத்துவா கூட்டமைப்பின் அரசியல் சமூக செயல்திட்டங்களை முன்னிலைப்படுத்துவதில், குறிப்பாக, மத அடிப்படையில் மக்களைப் பிளவு படுத்துவது, சிறுபான்மை இன மக்களை, குறிப்பாக முஸ்லிம்களை தனிமைப்படுத்துவது போன்ற செயல்பாடுகளில் மோடி-அமித்ஷா இணையர் நன்றாகவேசெயல்பட்டிருக்கின்றனர்என்றுகருதப் பட்ட போதிலும், பொருளாதாரத் துறையில் அர சின் செயல்பாடுகள், குறிப்பாக விசாயிகளின் பிரச் சினைகளுக்குத் தீர்வு காண்பது, நலிவடைந்து வரும் சிறு நடுத்தரத் தொழில் துறைகளைப் பாதுகாப்பது மற்றும் பொதுவாக ஏழை மக்களின் நலன்களைப் பாதுகாப்பதுபோன்ற விஷயங்களில் அரசின் செயல் பாடுகள் மன நிறைவளிப்பதாக இல்லை என்பதே, மோகன் பகவத்தின் பேச்சு மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள முன்னேற்றம்பற்றி சங்பரி வாரில் தற்போது நிலவி வரும் உணர்வாக இருக்கிறது.

பொருளாதார விவகாரங்களில் மோடி அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக பொதுமக்கள் பரவலாக அதிருப்தி அடைந்துள்ளனர் என்பதை சுட்டிக் காட்டும் அறிக்கைகள் பல மதுரா ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு முன்பே கிடைக்கப் பெற்றுள்ளன என்று சங்பரிவார் உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விவசாயிகளின் பிரச்சினைகளால் ஏற்பட்ட நெருக்கடி ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் கிராமப்புறப் பகுதிகளில் போராட்டங்கள் தூண்டுதல் பெற்றன. மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், அரியானா மாநிலங்களில் இத்தகைய விவசாயிகளின் போராட் டங்கள் ஒரு பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக உருவெடுக்கக்கூடும் என்ற உளவுத் துறை அறிக் கைகள் இம்மாநில பா.ஜ.க, அரசுகளுக்குக் கிடைத்து இருந்தன. சரக்கு மற்றும் சேவை வரி திட்டம்  போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. பா.ஜ.கட்சிக்கு பாரம்பரியமாக ஆதரவு அளித்து அடித்தளமாக விளங்கிய மக்களை, பா.ஜ.க. ஆதரவு நிலையைக் கைவிடச் செய்துள்ளதாகவும் அந்த அறிக்கைகள் தெரிவித்திருந்தன. சிறு மற்றும் நடுத்தர வணிகர்களிடையே இத்கைய ஆதரவு விலக்கல் மிகவும் தீவிரமாக இருந்தது என்றும் அந்த அறிக்கைகள் தெரிவித்திருந்தன. அம்பானிகள், அதானிகள் போன்ற பெருமுதலாளிகளின் நலன் களைப் பாதுகாத்து வளர்ப்பது என்பதுபற்றி மட் டுமே மோடியும் அவரது சகாக்களும் ஆர்வம் கொண்டுள்ளனர் என்று இந்த சிறு, நடுத்தர வணிகர்கள் வெளிப்படையாகத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

ஒத்துழைப்புக் குழுக் கூட்டத்திற்காக,  நாடு முழுவதிலும் இருந்து இத்தகைய அறிக்கைகள் திரட்டப்பட்டன. 2018 ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ள  குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களைப் பற்றிய குறிப்பிட்ட சில பொருள்கள் பற்றிய அறிக்கைகள் செப்டம்பர் மாத பிற்பகுதியில் ஆர்.எஸ்.எஸ். தலைவருக்குக் கிடைத்துள்ளன. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்து கிடைத்த அறிக் கைகள் எச்சரிக்கை மணி ஒலிப்பது போல இருந்தன என்று  ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் நெருக்கமாகப் பணியாற்றும் வாரணாசி கல்வியாளர் ஒருவர் கூறுகிறார். ‘‘இந்த இரு மாநிலங்களும் மிகப் பெரிய விவசாயப் போராட்டங்களை எதிர்கொள்ள நேர்ந்தன. அவர்களது கோரிக்கைளை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு மத்திய பிரதேச முதல்வர் சவுகானும், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராராஜேவும் உள்ளானார்கள். இன்னமும் கொள்கைகள் பிரச்சினை பற்றிய பா.ஜ.க அரசு மீதான விவசாயிகளின் கோபம் நீடித்து வருகிறது’’ என்று அவர் கூறுகிறார்.

மோடியின் தனித்தன்மையைச் சுற்றி உருவாகி யுள்ள குஜராத் கவுரவம் மற்றும் தேசிய அரசியலில் மோடிக்குக் கிடைத்துள்ள முக்கியத்துவம் பெருமள வில் உதவியாக இருந்த போதிலும்,  குஜராத் மாநிலத் திலும் பா.ஜ.கட்சிக்கு சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டே வருவதாக அவர் குறிப்பிடுகிறார். ஒட்டு மொத்தத்தில், தற்போது ஆட்சி செய்து வரும் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெறுவது பற்றிய பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.சின் தலைமையின் நம்பிக்கை, பெரிய அளவில் குறைந்து வருகிறது. இந்தப் பின்னணியில்தான், பொருளாதாரக் கொள்கை மாற்றத்தின் தேவைபற்றி பகவத்தின் பேச்சில் குறிப்பிடப்பட்டுள்ளது பார்க்கப்படவேண்டும்.

நன்றி: ‘ஃப்ரன்ட் லைன்’, 27.10.2017

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

(தொடரும்)

இதே பின்னணியில்தான், பகவத்தின் இந்தப் பேச்சு பற்றிய சங்பரிவாரத்திற்குள் நிகழும் விவாதங்கள், பா.ஜ.க.ஆட்சியின் தவறுகள் வெளியே தெரியாமல் போன காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்ற நிலையை எட்டியுள்ளது.

இதற்கு முன்பும் ஆர்.எஸ்.எஸ். எச்சரிக்கைகளை அளித்துள்ளதாக வேறு சில ஆர்.எஸ்.எஸ்.  உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அவையெல்லாம் அமைப்புகளுக்குள் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள்தானே அன்றி, பொதுமக்கள் அறியும்படி வெளிப்படையாக விடப்பட்டவை அல்ல. இது போன்றதொரு எச்சரிக்கையைப் பற்றி குறிப்பிட வேண்டுமானால், மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் விவசாயிகளுக்கும், ஏழைகளுக்கும் எதிரானவர்கள் என்ற பரவலான பொதுமக்களின் கருத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று  2015 ஏப்ரல் மாதத்தில் நிதின்  கட்காரி இல்லத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. உயர்நிலைத் தலைவர்களின் கூட்டுக் கூட்டத்தில், டில்லி ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவர் விடுத்த எச்சரிக்கையைக் குறிப்பிடலாம். ‘‘ஆனாலும், ஆலோசனை கூறப்பட்ட கொள்கை மாற்றங்களுக்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டு இருப்பதாக அரசின் கொள்கைகளோ செயல்திட்டங்களோ காட்டவில்லை என்று அவர் கூறுகிறார்.

பகவத்தின் விஜயதசமி பேச்சுக்கு முன்னர், பாஜ.க.வின் இரு மூத்த தலைவர்கள், முன்னாள்  அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹாவும் அரசின் பொருளாதாரக் கொள்கைகள் பற்றி தெரிவித்த விமர்சனம் மற்றும் கண்டனம் ஆர்வம் அளிப்பதாக இருந்தது. இந்தியாவின் பொருளாதார நிலை மாபெரும் சீரழிவுக்குச் சென்று கொண்டிருப்பதாகவும், விரைவில் அதனைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், நாட்டின் பொருளாதாரநிலையே நொடித்துப் போகும் என்று துணிவாகக்  கூறுவதற்கு சுப்பிரமணிய சாமி வார்த்தைகளை மெல்லவில்லை.  ‘‘நாட்டு பொருளாதார நிலையின் வால் ஆடிக்கொண்டிருக்கிறது. அது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நொறுங்கி விழுந்துவிடலாம். பொருளாதார நிலையை மறுமலர்ச்சி  அடையச்  செய்வதற்கு நாம் செய்ய வேண்டியவை அநேகம் உள்ளன. இந்த வாலாட்டத்தை நிறுத்தவும் முடியும்.  நீங்கள் எதுவுமே செய்யாமல் போனால், ஒரு மாபெரும் பொருளாதார நெருக்கடிக்கு நாம் உள்ளாவோம். வங்கிகள் திவால் ஆகலாம்; தொழிற்சாலைகள் மூடுவது தொடங்கலாம்’’ என்று அவர் அண்மையில் அளித்த தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியுள்ளார்.

‘‘இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அரசு கூறுவது போன்ற உயர் அளவில் இல்லை; குறைந்த அளவில்தான் இருக்கிறது. உங்களுக்குக் கூறப்பட்டதை விட மிகமிகக் குறைந்ததாகவே அது இருக்கிறது என்பதுடன் மேலும் அது சரியப் போகிறது. சாமுவேல்சன்=சாமி பொருளாதாரக் குறியீட்டு எண் கோட்பாடு சரியான பொருளாதாரக் குறியீட்டு எண்ணை எவ்வாறு கணக்கிடுவது என்பதை உங்களுக்குக் கூறுகிறது’’ என்று கூறிய சாமி,  அய்ந்து புயல் எச்சரிக்கைகள் இருப்பதை அரசுத் துறைப் புள்ளி விவரங்களே காட்டுகின்றன என்பதைக் கூறும் 16 பக்க கடிதம் ஒன்றை பிரதமர் மோடிக்குத் தான் கடந்த மே மாதத்தில் எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் எழுதிய கட்டுரை ஒன்றில் யஷ்வந்த் சின்ஹா வெளிப்படுத்தி இருந்த கருத்துகள், இந்த கட்டுரை வெளியான மூன்று நாட்களுக்குப் பிறகு பகவத் பேசிய பேச்சில் எழுப்பி இருந்த கருத்துகளுடன் நெருங்கிய தோற்றம் கொண்டவையாக இருந்தன. விவசாயத் துறையில் உள்ள நெருக்கடி, நடுத்தர, சிறு வணிகர்களின் பிரச்சினைகள்,  உற்பத்தி மற்றும் கட்டுமானத் தொழில்களின் ஒட்டு மொத்த அழிவு போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகள் பற்றி சின்ஹா தெரிவித்திருந்தார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம்,  வங்கிகளின் செயல்படாத சொத்துகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்வது போன்ற முக்கியமான பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றிய ஆய்வின் மீது அவர் கவனம் செலுத்தியிருந்தார். இவற்றின் மூலம் அரசின் திட்டமிடப்படாத செயல்பாடுகள் பற்றியும், திட்டங்கள் தவறாக நடைமுறைப்படுத்தப்பட்டது பற்றியும் வெளிப்படுத்திய சின்ஹா, இவை எல்லையற்ற பொருளாதாரப் பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளன என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இத்தகைய மனநிறைவின்மை கொண்ட கருத்து வெளிப்பாடுகளும், பொருளாதாரச் சீரழிவு சரி செய்யப்பட வேண்டும் என்பதற்கான அறை கூவலும், அருண் ஜெட்லி நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவுடன் முடிவுக்கு வந்துவிடும் என்று ஒரு மாதிரியான கருத்து நோக்கர்களிடையேயும், பா.ஜ. கட்சி மற்றும் பா.ஜ.க. அல்லாத கட்சியினரிடையேயும் நிலவி வருகிறது. அரசின் அனைத்துத் தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்காக அருண் ஜெட்லி பலி ஆடாக ஆக்கப்படுவார் என்றும், அதன் மூலம் மோடி தூய்மையானவர் என்று புதியதொரு தோற்றத்தில் காட்டப்பட்டு,  2018 சட்டமன்றத் தேர்தல்களையும், 2019 மக்களவை தேர்தலையும் எதிர் கொள்ளச் செய்யப்படுவார் என்றும் இக்கருத்து தெரிவிக்கிறது.

ஓரளவுக்கு இதில் உண்மை இருக்கலாம் என்ற போதிலும், சின்ஹா மற்றும் சுப்பிரமணியன்சாமி ஆகியோரின் குற்றச்சாட்டுகளை மறுத்து, அரசு மற்றும் ஜெட்லியின் பொருளாதாரச் செயல்பாடுகளை உறுதியாகப் பாதுகாத்து ஆதரிப்பதாகவே பா.ஜ.க.வின் தொடக்க கால மனநிலை இருந்தது. அரசின் கொள்கைகள் பற்றி எதிர்கட்சிகளாலும், பல்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுநர்களாலும் விமர்சனம் செய்யப்பட்ட போதெல்லாம், எவ்வளவு வெறுப்புடன் அமைச்சரவை அவற்றைக் கண்டித்த முறையில் இருந்து பல வகைகளில் மாறுபட்டுள்ளதைக் குறிப்பிடுவதாக  இந்தத் தாக்குதல் இருக்கிறது.

ராஜ்நாத் சிங், ரவிசங்கர்பிரசாத், பியூஷ் கோயல், போன்ற மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட   பா.ஜ.க. தலைவர்களைக் கொண்ட படையின் மூலம்  இத்தகைய தாக்குதல்   துவக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் குழுவில் தள்ளிவிடப்பட்ட யஷ்வந்த் சின்ஹாவின் மகள் ஜெயந்த் சின்ஹா தனது தந்தையின் கருத்துகள் ஒவ்வொன்றுக்கும் பதிலளிக்கப் பணிக்கப்பட்டார். பின்னர்; அருண்ஜெட்லியே யஹ்வந்த் சின்ஹா மீது தனிப்பட்ட முறையிலான ஒரு தாக்குதலை மேற்கொண்டார். யஷ்வந்த் சின்ஹா இதற்கு முன் நிதி அமைச்சராக இருந்தவர் அல்லர் என்று குறிப்பிட்ட ஜெட்லி தனது பதவியைக் கைப்பற்ற சின்ஹா முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார். மோடியும் இத்தாக்குதல் வரிசையில் சேர்ந்து கொண்டு, தங்களது ஏமாற்றத்தையும், வெறுப்பையும் வெளிப்படுத்தினால் மட்டுமே சிலருக்கு இரவில் தூக்கம் வரும் என்று கூறிய மோடி, நாட்டின் பொருளாதார நிலை சரியான பாதையிலேயே போய்க் கொண்டிருப்பதாகவும், தற்போது ஏற்பட்டுள்ள சிறிய பின்னடைவு தற்காலிகமான ஒன்றே  என்றும் கூறியுள்ளார்.

இவ்வாறு அனைவரும் ஒன்று சேர்ந்த தங்களது செயல்பாடுகளுக்கான நியாயத்தை நிலைநாட்ட மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்குப் பிறகும்,  பகவத் மற்றும் சங்கத்தின் இதர உயர்நிலைத் தலைவர்களை  மனநிறைவு அடையச் செய்வதற்கான முறைப்படியான முயற்சிகள் பா.ஜ.க.வினால் மேற்கொள்ளப்படுகின்றன என்பதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. பகவத்தின் உரையை இந்திய மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்த்து பா.ஜ.க. தலைவர் அமித் ஷா வெளியிட்டதே இந்த முயற்சிகளின் தொடக்கமாக அமைந்துள்ளது. இந்தக்கையேடு பா.ஜ.க. தொண்டர்களிடையே, ஒரு வழிகாட்டு நூல் போல வினியோகிக்கப்படும் என்று தெரிகிறது.

அரசியல் அளவில், பொருளாதாரக் கொள்கை பிரச்சினை காரணமாக பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை, பீகாரில் நிதிஷ் குமாருடனும், மகாராஷ்டிராவில் நாராயண ரானேயுடனும்  செய்து கொண்ட கூட்டணி ஏற்பாடு போல பிற மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் சரி செய்து கொள்ள முடியும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைமையின் முன் ஷா தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. எனினும், பொதுமக்களுடன் தொடர்பு கொள்வதில் மோடியைப் போன்ற ஆற்றல் பெற்ற எதிர்கட்சித் தலைவர்கள் எவரும் இல்லையென்பதும், மோடிக்கு நிகரான எதிர்கட்சித் தலைவர்கள் எவரும் இல்லை என்பதும் ஷாவின் நம்பிக்கையாகும். இந்த வாதங்களை சங்பரிவார் தலைமை ஏற்றுக் கொண்டதாக சில சங்பரிவார் உள்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்றாலும்,  பொருளாதாரக் கொள்கை மாற்றங்களுக்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதை சங்பரிவார் தலைமை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டுதான் இருக்கிறது. அத்தகைய மாற்றங்கள் ஏற்படுமா என்பது விடை காண எளிதாக இல்லாத கேள்வியாகும். அவ்வாறு மாற்றங்கள் நேர்ந்தாலும், எந்த முறையில் அந்த மாற்றங்கள் அமையப் போகின்றன என்பதையும் பார்க்க வேண்டும்.

பா.ஜ.க.வினால் மேற்கொள்ள இயன்ற இத்தகைய அனைத்து நடவடிக்கைகளுக்குப் பிறகும், தொடர்ச்சியாக நிகழ்ந்த இந்த நிகழ்ச்சிகள் எல்லாம், சற்றும் சந்தேகமற்ற முறையிலான ஓர் உண்மையை வெளிப்படுத்துவனவாக உள்ளன. நாட்டின் பொருளாதார நிலையைப் பற்றி பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள எதிர்ப்புணர்வு பா.ஜ. கட்சியையும் அகண்ட சங்பரிவாரத்தையும் நிலை குலையச் செய்துள்ளது என்பது மட்டும் உண்மையாகும்.

நன்றி: ‘ஃப்ரன்ட் லைன்’, 27.10.2017

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner