எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

- வெங்கடேஷ் ராமகிருஷ்ணன்

(பொறுப்பற்ற,பின்விளைவுகளைப்பற்றி சிந்திக்காத,கண்மூடித்தனமானகொள் கைகளின்விளைவால்நாட்டைஎதிர் கொண்டிருக்கும் மிகப் பெரிய அளவிலான பொருளாதார நெருக்கடி, மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. வையும், ஒட்டு மொத்த சங் பரிவாரத்தையும் நிலை குலையச் செய்துள்ளது.)

24.10.2017 வெளிவந்த கட்டுரையின் தொடர்ச்சி..

இதே பின்னணியில்தான், பகவத்தின் இந்தப் பேச்சு பற்றிய சங்பரிவாரத்திற்குள் நிகழும் விவாதங்கள், பா.ஜ.க.ஆட்சியின் தவறுகள் வெளியே தெரியாமல் போன காலம் முடிவுக்கு வந்துவிட்டது என்ற நிலையை எட்டியுள்ளது.

இதற்கு முன்பும் ஆர்.எஸ்.எஸ். எச்சரிக்கைகளை அளித்துள்ளதாகவேறுசிலஆர்.எஸ்.எஸ்.உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அவை யெல்லாம் அமைப்புகளுக்குள் விடுக்கப்பட்ட எச்சரிக் கைகள்தானே அன்றி, பொதுமக்கள் அறியும்படி வெளிப்படையாக விடப்பட்டவை அல்ல. இது போன்றதொரு எச்சரிக்கையைப் பற்றி குறிப்பிட வேண்டுமானால், மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் விவசாயிகளுக்கும், ஏழைகளுக்கும் எதிரானவர்கள் என்ற பரவலான பொதுமக்களின் கருத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகளைமேற் கொள்ள வேண்டும் என்று  2015 ஏப்ரல் மாதத் தில் நிதின்  கட்காரி இல்லத்தில் நடைபெற்ற

ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க. உயர்நிலைத் தலைவர்களின் கூட்டுக் கூட்டத்தில், டில்லி ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ஒருவர் விடுத்த எச்சரிக்கையைக் குறிப்பிடலாம். ‘‘ஆனாலும், ஆலோசனை கூறப்பட்ட கொள்கை மாற்றங்களுக்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டு இருப்பதாக அரசின் கொள்கைகளோ செயல்திட்டங்களோ காட்டவில்லை என்று அவர் கூறுகிறார்.

பகவத்தின் விஜயதசமி பேச்சுக்கு முன்னர், பாஜ.க.வின் இரு மூத்த தலைவர்கள், முன்னாள்  அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹாவும் அரசின் பொருளாதாரக் கொள்கைகள் பற்றி தெரிவித்த விமர்சனம் மற்றும் கண்டனம் ஆர்வம் அளிப்பதாக இருந்தது. இந்தியாவின் பொருளாதார நிலை மாபெரும் சீரழிவுக்குச் சென்று கொண்டிருப்பதாகவும், விரைவில் அதனைச் சரி செய்வதற்கான நடவடிக் கைகளை மேற்கொள்ளாவிட்டால், நாட்டின் பொருளாதார நிலையே நொடித்துப் போகும் என்று துணிவாகக்  கூறுவதற்கு சுப்பிரமணிய சாமி வார்த்தைகளை மெல்லவில்லை.  ‘‘நாட்டு பொருளாதார நிலையின் வால் ஆடிக்கொண்டிருக்கிறது. அது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நொறுங்கி விழுந்துவிடலாம். பொருளாதார நிலையை மறுமலர்ச்சி  அடையச்  செய்வதற்கு நாம் செய்ய வேண்டியவை அநேகம் உள்ளன. இந்த வாலாட்டத்தை நிறுத்தவும் முடியும்.  நீங்கள் எதுவுமே செய்யாமல் போனால், ஒரு மாபெரும் பொருளாதார நெருக்கடிக்கு நாம் உள்ளாவோம். வங்கிகள் திவால் ஆகலாம்; தொழிற்சாலைகள் மூடுவது தொடங்கலாம்’’ என்று அவர் அண்மையில் அளித்த தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியுள்ளார்.

‘‘இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அரசு கூறுவது போன்ற உயர் அளவில் இல்லை; குறைந்த அளவில்தான் இருக்கிறது. உங்களுக்குக் கூறப்பட்டதை விட மிகமிகக் குறைந்ததாகவே அது இருக்கிறது என்பதுடன் மேலும் அது சரியப் போகிறது. சாமுவேல்சன்=சாமி பொருளாதாரக் குறியீட்டு எண் கோட்பாடு சரியான பொருளாதாரக் குறியீட்டு எண்ணை எவ்வாறு கணக்கிடுவது என்பதை உங்களுக்குக் கூறுகிறது’’ என்று கூறிய சாமி,  அய்ந்து புயல் எச்சரிக்கைகள் இருப்பதை அரசுத் துறைப் புள்ளி விவரங்களே காட்டுகின்றன என்பதைக் கூறும் 16 பக்க கடிதம் ஒன்றை பிரதமர் மோடிக்குத் தான் கடந்த மே மாதத்தில் எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் எழுதிய கட்டுரை ஒன்றில் யஷ்வந்த் சின்ஹா வெளிப்படுத்தி இருந்த கருத்துகள், இந்த கட்டுரை வெளியான மூன்று நாட்களுக்குப் பிறகு பகவத் பேசிய பேச்சில் எழுப்பி இருந்த கருத்துகளுடன் நெருங்கிய தோற்றம் கொண்டவையாக இருந்தன. விவசாயத் துறையில் உள்ள நெருக்கடி, நடுத்தர, சிறு வணிகர்களின் பிரச்சி னைகள்,  உற்பத்தி மற்றும் கட்டுமானத் தொழில்களின் ஒட்டு மொத்த அழிவு போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகள் பற்றி சின்ஹா தெரிவித்திருந்தார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம்,  வங்கிகளின் செயல்படாத சொத்துகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்வது போன்ற முக்கியமான பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றிய ஆய்வின் மீது அவர் கவனம் செலுத்தியிருந்தார். இவற்றின் மூலம் அரசின் திட்டமிடப்படாத செயல்பாடுகள் பற்றியும், திட்டங்கள் தவறாக நடைமுறைப்படுத்தப்பட்டது பற்றியும் வெளிப்படுத்திய சின்ஹா, இவை எல்லையற்ற பொருளாதாரப் பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளன என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இத்தகைய மனநிறைவின்மை கொண்ட கருத்து வெளிப்பாடுகளும், பொருளாதாரச் சீரழிவு சரி செய் யப்பட வேண்டும் என்பதற்கான அறை கூவலும், அருண் ஜெட்லி நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவுடன் முடிவுக்கு வந்துவிடும் என்று ஒரு மாதிரியான கருத்து நோக்கர்களிடையேயும், பா.ஜ. கட்சி மற்றும் பா.ஜ.க. அல்லாத கட்சியினரிடையேயும் நிலவி வருகிறது. அரசின் அனைத்துத் தவறான பொருளாதாரக் கொள்கைகளுக்காக அருண் ஜெட்லி பலி ஆடாக ஆக்கப்படுவார் என்றும், அதன் மூலம் மோடி தூய்மையானவர் என்று புதியதொரு தோற்றத்தில் காட்டப்பட்டு,  2018 சட்டமன்றத் தேர்தல்களையும், 2019 மக்களவை தேர்தலையும் எதிர் கொள்ளச் செய்யப்படுவார் என்றும் இக்கருத்து தெரிவிக்கிறது.

ஓரளவுக்கு இதில் உண்மை இருக்கலாம் என்ற போதிலும், சின்ஹா மற்றும் சுப்பிரமணியன்சாமி ஆகியோரின் குற்றச்சாட்டுகளை மறுத்து, அரசு மற்றும் ஜெட்லியின் பொருளாதாரச் செயல்பாடுகளை உறுதியாகப் பாதுகாத்து ஆதரிப்பதாகவே பா.ஜ.க.வின் தொடக்க கால மனநிலை இருந்தது. அரசின் கொள்கைகள் பற்றி எதிர்கட்சிகளாலும், பல்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுநர்களாலும் விமர்சனம் செய்யப்பட்ட போதெல்லாம், எவ்வளவு வெறுப்புடன் அமைச்சரவை அவற்றைக் கண்டித்த முறையில் இருந்து பல வகைகளில் மாறுபட்டுள்ளதைக் குறிப்பிடுவதாக  இந்தத் தாக்குதல் இருக்கிறது.

ராஜ்நாத் சிங், ரவிசங்கர்பிரசாத், பியூஷ் கோயல், போன்ற மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட   பா.ஜ.க. தலைவர்களைக் கொண்ட படையின் மூலம்  இத்தகைய தாக்குதல்   துவக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் குழுவில் தள்ளிவிடப்பட்ட யஷ்வந்த் சின்ஹாவின் மகள் ஜெயந்த் சின்ஹா தனது தந்தையின் கருத்துகள் ஒவ்வொன்றுக்கும் பதிலளிக்கப் பணிக்கப்பட்டார். பின்னர்; அருண்ஜெட்லியே யஹ்வந்த் சின்ஹா மீது தனிப்பட்ட முறையிலான ஒரு தாக்குதலை மேற்கொண்டார். யஷ்வந்த் சின்ஹா இதற்கு முன் நிதி அமைச்சராக இருந்தவர் அல்லர் என்று குறிப்பிட்ட ஜெட்லி தனது பதவியைக் கைப்பற்ற சின்ஹா முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார். மோடியும் இத்தாக்குதல் வரிசையில் சேர்ந்து கொண்டு, தங்களது ஏமாற்றத்தையும், வெறுப்பையும் வெளிப்படுத்தினால் மட்டுமே சிலருக்கு இரவில் தூக்கம் வரும் என்று கூறிய மோடி, நாட்டின் பொருளாதார நிலை சரியான பாதையிலேயே போய்க் கொண்டிருப்பதாகவும், தற்போது ஏற்பட்டுள்ள சிறிய பின்னடைவு தற்காலிக மான ஒன்றே  என்றும் கூறியுள்ளார்.

இவ்வாறு அனைவரும் ஒன்று சேர்ந்த தங்களது செயல்பாடுகளுக்கான நியாயத்தை நிலைநாட்ட மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்குப் பிறகும்,  பகவத் மற்றும் சங்கத்தின் இதர உயர்நிலைத் தலைவர்களை  மனநிறைவு அடையச் செய்வதற்கான முறைப்படியான முயற்சிகள் பா.ஜ.க.வினால் மேற்கொள்ளப்படுகின்றன என்பதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. பகவத்தின் உரையை இந்திய மொழிகள் அனைத் திலும் மொழி பெயர்த்து பா.ஜ.க. தலைவர் அமித் ஷா வெளியிட்டதே இந்த முயற்சிகளின் தொடக்கமாக அமைந்துள்ளது.இந்தக்கையேடுபா.ஜ.க.தொண்டர் களிடையே, ஒரு வழிகாட்டு நூல் போல விநியோ கிக்கப்படும் என்று தெரிகிறது.

அரசியல் அளவில், பொருளாதாரக் கொள்கை பிரச்சினை காரணமாக பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை, பீகாரில் நிதிஷ் குமாருடனும், மகாராஷ்டிராவில் நாராயண ரானேயுடனும்  செய்து கொண்ட கூட்டணி ஏற்பாடு போல பிற மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் சரி செய்து கொள்ள முடியும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைமையின் முன் ஷா தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. எனினும், பொதுமக்களுடன் தொடர்பு கொள்வதில் மோடியைப் போன்ற ஆற்றல் பெற்ற எதிர்கட்சித் தலைவர்கள் எவரும் இல்லையென்பதும், மோடிக்கு நிகரான எதிர்கட்சித் தலைவர்கள் எவரும் இல்லை என்பதும் ஷாவின் நம்பிக்கையாகும். இந்த வாதங்களை சங்பரிவார் தலைமை ஏற்றுக் கொண்டதாக சில சங்பரிவார் உள்வட்டாரங்கள் தெரி விக்கின்றன. என்றாலும்,  பொருளாதாரக் கொள்கை மாற்றங்களுக்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதை சங்பரிவார் தலைமை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டுதான் இருக்கிறது. அத்தகைய மாற்றங்கள் ஏற்படுமா என்பது விடை காண எளிதாக இல்லாத கேள்வியாகும். அவ்வாறு மாற்றங்கள் நேர்ந் தாலும், எந்த முறையில் அந்த மாற்றங்கள் அமையப் போகின்றன என்பதையும் பார்க்க வேண்டும்.

பா.ஜ.க.வினால் மேற்கொள்ள இயன்ற இத்தகைய அனைத்து நடவடிக்கைகளுக்குப் பிறகும், தொடர்ச் சியாக நிகழ்ந்த இந்த நிகழ்ச்சிகள் எல்லாம், சற்றும் சந்தேகமற்ற முறையிலான ஓர் உண்மையை வெளிப் படுத்துவனவாக உள்ளன. நாட்டின் பொருளாதார நிலையைப் பற்றி பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள எதிர்ப்புணர்வு பா.ஜ. கட்சியையும் அகண்ட சங்பரி வாரத்தையும் நிலை குலையச் செய்துள்ளது என்பது மட்டும் உண்மையாகும்.

நன்றி: ‘ஃப்ரன்ட் லைன்’, 27.10.2017

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

(நிறைவு)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner